Thursday, 26 September 2013

Photo: சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்… (கண்டிப்பாக படிக்கவும் !!!)

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்… (கண்டிப்பாக படிக்கவும் !!!)

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...

5450 Posts Group D by RRC Chennai iroams.com 2013 Railway Recruitment

Railway recruitment cell RRC Chennai / government of India published the recruitment notification No RRC 02/2013 on 21 September 2013 for the recruitment of Group D posts in Southern Railway SR and integral coach factory under the pay grade of rs 1800, pay band 1 rs 5200-20200 . RRC Chennai now introduces online application form Submission facility for the recruitment of Group D posts.
Application form gor RRC Chennai invited online this time. Group D RRC online application form submitted at the official website of IROAMS / Indian railway online application management system of Southern railway.
Application form Submission for Group D posts in Southern railway SR and ICF will be start from 21 September 2013. 
Last date of online application form submission is 21 September 2013

RRC Chennai Group D recruitment Details as are follows 
Trackman Engg : 1,539 Posts
Helper Electl : 642 Posts
Helper S & T : 118 Posts
SCP/Porter Optg & Comml : 847 Posts
Helper Mechl : 588 Posts
Peon Gen l : 102 Posts
Safaiwala Medical : 132 Posts
Store Khalasi Stores : 92 Posts
Helper WS (M) : 757 Posts
Helper WS (E) : 107 Posts
Helper TMU : 261 Posts
Peon/Mali/ Sanitary Cleaner/ Vendor/ Helper Gr. II : 252 Posts
Track Maintainer Gr. IV : 13 Posts

Eligibility Criteria : 
Age Limit: minimum age 18 year maximum age 33 year .
Education Qualification : High school pass or ITI certificate

Selection Procedure : written exam and PET test

Application form fee : rs 100 , no application form fee for SC /ST/ PWD / minorities , EBC candidates .

How to Apply: candidates can fill application form online as well as offline in prescribed application form format .

Address where to send Print out / Dully filled application form of RRC group D Chennai Vacancy
    Assistant Personnel Officer/ Recruitment, RRC, Southern Railway, No. 5, 3rd floor, Dr. P.V. Cherian Crescent Road, Egmore, Chennai – 600008

Official website : www.rrcchennai.org.in http://www.iroams.com
Fill online application form
http://www.iroams.com/V1/applicationHome

Download notification in PDF file
 http://www.rrcchennai.org.in/admin/download/1370863980_RRC-AD-1.pdf

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம்

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது
அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய
தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக
கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரிwww.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று

click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும்
பக்கத்தில்

பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை
எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும்
பக்கத்தில்

உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number
Create ஆகிவிடும்.

குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save
கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து
கொள்ளலாம்.

குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number : RPD2013M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM )
பதிவு செய்த ஆண்டு : 2013
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID : RPD2013M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..

அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம் தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரிwww.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில் உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Create ஆகிவிடும். குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும். குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம். குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம். குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம். Renewal செய்வதற்கான குறிப்பு : உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும். Register Number : RPD2013M00007502 வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM ) பதிவு செய்த ஆண்டு : 2013 ஆண் / பெண் : M பதிவு எண் : 7502 பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும். User ID : RPD2013M00007502 Password : dd / mm / yyyy கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும். உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்.. அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Friday, 6 September 2013

இந்த பதிவு ரஜினி யை அவமதிக்கும் நோக்கோடு போடபட்டதல்ல...ரஜினி சிறந்த நடிகர்...ஆனால் சிறந்த இந்தியரா?

யார் சிறந்த இந்தியர்....முதல் படமா அல்லது இரண்டாவது படமா...

கார்பரேட் ஊடகங்களின் கருத்தின் படி 25 ஆண்டுகளில் சிறந்த இந்தியர் பட்டியலில் முதலிடம் ரஜினி அவர்களுக்கு கிடைத்துள்ளது..இவர் அப்படி என்ன சாதனை செய்துள்ளார் என்று தான தெரியவில்லை..சரி கதைக்கு வருவோம்..

1,முதல் படத்தில் இருப்பவரின் பெயர் சாதவ் பயேங்க் (Jadav Payeng) ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் பிரம்மபுத்திரா நதி அருகே தனி ஒரு மனிதராக ஒரு வனத்தையே உருவாக்கியுள்ளார். அப்பகுதிக்கு இவருடைய செல்லப்பெயரான முலாய் என்பதினை இட்டு, முலாய் வனப்பகுதி என்று அழைக்கின்றனர். இது இந்தியாவிலுள்ள அசாமில், கோகிலாமுக் என்ற இடத்திற்கு அருகே 100 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள வனப்பகுதியாகும். 1979-களின் துவக்கத்தில் ஆரம்பித்த இவருடைய மரம் நடுதல் தற்போது ஐந்து புலி, மூன்று காண்டாமிருகம், ஊர்வன, பறவைகள் உள்ளிட்ட என்னற்ற விலங்குகளின் வாழ்விடமாக மாற்றியிருக்கிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மர வகைகளையும் நட்டு வளர்த்துள்ளார். இவருடைய எதிர்காலத் திட்டம் இவ்வனப்பகுதியை உலகின் மிகப்பெரிய நதிக்கரைத் தீவாக மாற்றுவதாகும்.அதுவும் ஒரு ரூபாய் லாபமிலாமல் தனது உடல் உழைப்பின் மூலம் இந்த காட்டை உருவாக்கியுள்ளார்..

2 , இரண்டாவது படத்தில் இருக்கும் நபர் ரஜினி அவர்கள் ..கார்பரேட் ஊடகங்களால் சிறந்த இந்தியர் என்று புகழப்படும் இவர் சினிமா நடிகர் , மக்களை புகைக்கு அடிமையாக்கியத்தை தவிர வேறு எந்த சாதனையை செய்தார் என்று தெரியவில்லை...

நாட்டில் மாசுகளை உண்டாக்கும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் புகைக்கு முக்கியத்துவம் கொடுத்த ரஜினி சிறந்தவரா அல்லது இன்று உலகில் காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் தனி ஒரு மனிதராக ஒரு வனத்தையே உருவாக்கிய சாதவ் பயேங்க் சிறந்தவரா...இதில் வேடிக்கை என்னவென்றால் 100 பேர் பட்டியலில் சாதவ் பயேங்க் பெயர் இருப்பதாகவே தெரியவில்லை..மாறாக பெயர்களில் பெரும்பாலும் பணத்தை நோக்கத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் சினிமா , கிரிக்கெட் பிரபலங்கள் தான் ...!#aru