Saturday, 21 June 2014

ஆஷ் துரை எனும் கொடுங்கோலனை வீரவாஞ்சி சுட்டு சாய்த்தான்,இது வரலாற்றுப் பதிவு.
ஆனால் மறைக்கப்பட்ட வரலாறு என்று இணையதளம் முழுவதும் வேறு மாதிரியாக செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன,அயோத்திதாச பண்டிதரும் அவ்வாறே பதிவு செய்துள்ளாராம்.
குறிப்பிட்ட சாதியினரும்,கடவுள் சிலைகளும் மட்டுமே குற்றால அருவியில் குளிக்கலாம் என்ற நிலையை மாற்றி,இயற்கையை அனுபவிப்பதில் என்ன பாகுபாடு என்று கேட்டு எல்லோரையும் அருவியில் குளிக்க அனுமதிக்க உத்தரவிட்டாராம்.
தன்னுடைய அலுவலக சிப்பந்திகள் வர்ண அடிப்படையில் பிரிந்து அமர்ந்து உணவு உண்பதை மறுத்து ஒன்றாக அமர்ந்து உண்ணுமாறு உத்தரவிட்டார்.
அலுவலகத்தில் எல்லோருக்கும் பொதுவாக குடிநீர் பாத்திரம் ஏற்பாடு செய்தார்.
பிரசவ வலியால் துடித்த அருந்ததியினப் பெண்ணைக் காப்பாற்ற பலத்த எதிர்ப்பை மீறி அக்ரகாரம் வழியே அப்பெண்ணை ஆஷ்துரையும் அவர் மனைவியும் கொண்டு சென்றனர்,குதிரை வண்டியை மறித்த இளைஞர்களை சாட்டையால் விளாசினார்,அடிவாங்கி ஓடிய இளைஞர்களுள் ஒருவர் வாஞ்சிநாதன் என்கிறது ஒரு செய்தி.
வாஞ்சியின் இறுதிக் கடிதத்தில் இருக்கும் பஞ்சமன்,கோமாமிசம் உண்ணும் மிலேச்சன் போன்ற வார்த்தைகளும் வாஞ்சியின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மேலே கூறிய செய்திகள் உண்மையாக இருப்பின் ஆஷ்துரையை சிறப்பிக்க சமத்துவநாயகன் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் புலப்படவில்லை.
இன்று ஆஷ்துரையின் நினைவு நாள்,சமத்துவ நாயகனை போற்றி வணங்குகிறேன். Prince Ennares Periyar திராவிடப் புரட்சி