நிசேயா விசுவாசப் பிரமாணம்
வானத்தையும் பூமியையும் காணப்படுகிறதும் காணப்படாததுமான எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன்.
ஒரே கர்த்தருமாய், தேவனுடைய ஒரே பேறான குமாரனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்; அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே தமது பிதாவினாலே ஜெனிப்பிக்கப்பட்டவர்; தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர், மெய்த்தேவனில் மெய்த்தேவனானவர், உண்டாக்கப்படாமல் ஜெனிப்பிக்கப்பட்டவர், பிதாவோடே ஒரே தன்மையுடையவர், சகலத்தையும் உண்டாக்கினவர்; மனிதராகிய நமக்காகவும் நமக்கு இரட்சிப்பு உண்டாகவும் பரமண்டலத்திலிருந்து இறங்கி, பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் அவதரித்து மனிதனானார்; நமக்காக பொந்தியுபிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, அடக்கம் பண்ணப்பட்டார்; வேத வாக்கியங்களின் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்; பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க மகிமையோடே திரும்ப வருவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை.
கர்த்தருமாய் ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும்கூட தொழுது தோத்தரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பொதுவான அப்போஸ்தல திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும் மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன். ஆமென்.

நிசேயா விசுவாச அறிவிக்கை:
நிசேயா விசுவாச அறிக்கைக்கும் ஒரு வரலாறு உள்ளது. லிபியாவைச் சேர்ந்தவர் ஆரியுஸ் என்பவர். இவர் ஒரு போதகர். ஆரியுஸ், இயேசுவின் கடவுள் தன்மையை மறுத்தார். இயேசு தெய்வந்தான். இருப்பினும் கடவுளால் படைக்கப்பட்டவர். இயேசு இல்லாத காலம் ஒன்று இருந்தது. இயேசு பிதாவைவிட குறைவானவர். இப்படிப்பட்ட தவறான போதனையை அரியூஸ் சொல்லிவந்தார்.
நிசேயா பேரவை:
ஆரியுஸின் தவறான போதனை அன்றைய திருச்சபையில் பெரிய கொந்தளிப்பினை ஏற்படுத்தியது. எனவே நிசேயா பெருநகரில் திருச்சபைகளின் ஐக்கியப் பேரவை கூடியது.

கி.பி.325ல் கூடிய பேரவை இயேசுவின் தெய்வீகத்தை நிலைநாட்டியது. இயேசு, கடவுள் என்ற வார்த்தையை பயன்படுத்தியது. இந்த முதல் கூடுகையில் தொகுக்கப்பட்ட விசுவாச அறிக்கை, பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறேன் என
முடிந்தது. அதன்பின்பு அதோடு சில சாப வார்த்தைகள் சேர்க்கப்பட்டிருந்தன.
இந்த விசுவாச அறிக்கையின் பின்னணியில் பற்றி பல மரபுகள் உள்ளன.
அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த போப் அதனாசியஸ்-1 தான் இதன் ஆக்கியோன். இது கோப்டிக் என்ற
திருச்சபையின் மரபு. ஆதிகால கிறிஸ்தவர்களுக்கு செசரியா முக்கிய இடமாக
இருந்தது. இங்குள்ள திருச்சபை இந்த விசுவாச அறிக்கையை ஏற்கனவே பயன்படுத்தி
வந்தது. இதனை செசரியாவின் யுசிபியஸ் என்பவர் இப்பேரவையில் சமர்ப்பித்தார்
என்பது மற்றொரு மரபு.
நிசேயா- கான்ஸ்டாண்டிநோபிள் விசுவாச அறிக்கை -கி.பி.381.
ரோமப்
பேரரசராக இருந்தவர். கான்ஸ்டன்டைன். இவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்.
திருச்சபையில் நிலவிவந்த இப்படிப்பட்ட விசுவாச குழப்பத்தை நிவிர்த்திச்
செய்திடபாடுபட்டார். 325ல் கூடிய பேரவையில் தனது செல்வாக்கை
பயன்படுத்தினார்.

சிறப்பு: நிசேயா விசுவாச அறிக்கையை விசுவாசத்தின் அடையாளம் (Symbol of Faith) எனக் கூறுவர். இந்த விசுவாச அறிக்கை உண்மையான கிறிஸ்தவ விசுவாசத்தின் உரைக்கல் எனவும் குறிப்பிடுவர். பொதுவாக ஞானஸ்நானம் நடைபெறும் சமயத்தில் அப்போஸ்தல விசுவாச அறிக்கையைதிருச்சபைகள் பயன்படுத்துகின்றன.