Tuesday, 16 July 2013

ஈர விழிகளுடன் ரகசின்

அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!
உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே... சில விஷயங்களை மனசைவிட்டு Description: http://www.vikatan.com/jv/2010/sep/08092010/p3a.JPGதங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, 'தலைவா' என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.
நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! 'போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்' என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!
இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர

ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்ணீர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், 'உள்ளே வராதே' என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.
அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்... கட்-அவுட் வேண்டும்... டிக்கெட் காசு வேண்டும்... நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்... உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே... தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்...... உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, 'இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு' என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!
நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது... நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்துவிடுவீர்கள். கடந்த முறை 'குசேலன்' படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, 'என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.' என்று சொல்லி, கோடம் பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!
உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் Description: http://www.vikatan.com/jv/2010/sep/08092010/p2b.JPGஇருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது 'என்னாச்சு?' என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடி, திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி 'எங்க பவர் புரியுதா?' என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!
'பாபா' படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க... பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை... ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! 'பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்' என்றும் 'நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்' என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்... ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்ணீர் வடிகிறதே!
எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!
இப்படிக்கு
   ஈர விழிகளுடன்,
உங்களின் ர
சின்
 

Sunday, 14 July 2013

Dr. Jaisankar (BYM Missionary) lost in Naxalite Area: He went to a medical program in Orissa on 11/7/2013 morning 8 O ' clock from Jeypore (town in Orissa) by two wheeler. But he had not reached the camp. Orissa Missionaries told in between the road way is hilly and thick forest area, The area is under the control of Naxalites. All Missionaries are searching him from yesterday afternoon.His wife Mrs. Florence and children are in Bhopal. We need your prayers....Please Pray...Funeral of BYM Missionary Dr. Jaisankar, 47, at 3pm, 14 July, at Ramagiri, an interior village in Odisha, where he started his ministry early 90s.











Tuesday, 9 July 2013

அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து சீனா நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த கப்பல். மாலை வேளையில் கப்பலின் மேல் தட்டில் ஒரு கிறிஸ்தவ குருவானவரும், ஒரு வியாபாரியும் உரையாடி கொண்டிருந்தனர்.

வியாபாரி கேட்டார், 'சீனாவிற்கு என்ன விஷயமாக போகிறீர்கள்?'என்று. 'இயேசுவை அறிவிக்க போகிறேன்' என்றார் குருவானவர்.

ஒரு நிமிடம் அதிர்ந்து போன வியாபாரி, 'சீனாவுக்கு மிஷனெரிகள் செல்வது வீண். ஒரு முறை மர்பி என்ற குரு சென்றிருந்தார். ஒரு நாள் அவரை தூக்கிக் கொண்டு போய் அவரது கையின் மூன்று விரல்களை துண்டித்து விட்டனர். அவர் இப்போது அமெரிக்காவிலிருக்கிறார். இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரிந்திருந்தால் சீனாவிற்கு போக துணிந்திருக்க மாட்டீர்கள்'எனறார்.

குரு அமைதியாக சிரித்துக் கொண்டார். பின்பு பல காரியங்களை பகிர்ந்து கொண்டனர். சற்று நேரத்தில் அவர்களுக்கு தேநீர் பரிமாறப்பட்டது.

தேநீரை வாங்கிய குருவின் கையை கண்ட வியாபாரி திகைத்துப் போனார், ஏனென்றால் அவரது கையில் மூன்று விரல்கள் இல்லை. ஆம், அன்று சீனாவுக்கு சென்ற மர்பி இவரே!

யாரை நான் அனுப்புவேன், யார் என் காரியமாய் போவான் என்ற கேள்வியை தேவன் தன்னிடம் கேட்பதாக உணரும் யாராலும் அமைதியாய் இருக்க முடியாது.

ஆகவே தான் பவுலின் வாழ்விலே காவல்களும், அடியும், உதையும், கல்லெறிதலும், சேதமும், மோசங்களும், சொந்த ஜனங்களால் வந்த உபத்திரவங்களும் பசியும், தாகமும் வந்த போதிலும் அவைகள் ஒன்றுமே அவரை ஊழியம் செய்வதிலிருந்து சோர்ந்த போக செய்யவே இல்லை.

'நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல, மரிக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன்' என்று சவாலிட்டார்.

விரல் போனால் என்ன? என்று மீண்டும் அம்மக்களை தேடிச் சென்ற மர்பி போதகரைப் போல, அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுலைப் போல கிறிஸ்துவுக்காக ஆவியில் வைராக்கியம் கொண்டு ஊழியம் செய்யும் ஊழியர்கள் இந்நாட்களில் தேவனுக்கு தேவை.
தேவன் ஒருபோதும் நம்மைவிட்டு விலகுவதில்லை நாம் தான் அவரை விட்டு தூரம் செல்கிறோம். _யாரோ. கடவுளோடு நெருங்கி ஜீவித்தவர்கள் எவரும் வாழ்க்கையை வீணடித்தவர்கள் அல்ல. _ ஹோடியஸ் போனர்.
ஒற்றுமையாய் செயல்படுவோம்
....
நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. - (யோவான் 15:12).


இன்றைய திருச்சபைகளில் பிரசங்கிக்கப்படும் வார்த்தைகளில் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தை இனி காலம் செல்லாது. கடைசி காலம் இது என்பதே. கடைசி காலத்தை பற்றியும் வருகையை பற்றியும் பேசுகிற சபைகளில் காணப்படும் பெரும் குறை என்னவென்றால் கிறிஸ்தவர்கள் மத்தியில் அன்பு தாழ்ச்சியும், சண்டையும், தர்க்கமும்தான். நம் மத்தியில் காணப்படும் பிரிவினைகளும், போட்டிகளும், பொறாமைகளும் தேவனுடைய உள்ளத்தை மிகவும் வருத்தமடைய செய்கின்றன. ஒரு சபை பரிவினருக்கும், இன்னொரு சபை பரிவினருக்கும் இடையே எத்தனை போட்டிகள், சண்டைகள், பிசாசு இதை பயன்படுத்தி கொண்டு நம்மில் அநேகரை தனக்கு இரையாக்கி கொண்டிருக்கிறான். நாமோ அறியாதவர்களாயிருக்கிறோம்.

.

ஒரு சபைக்கும் மற்றொரு சபைக்கும் இடையில் மாத்திரமல்ல, ஒரே சபைக்குள்ளே ஒருவருக்கொருவர் பேசி கொள்ளாமை, அன்பு தாழ்ச்சி, ஐக்கியமின்மை அதிகமாக காணப்படுகிறது. 'மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு' - (2 தீமோத்தேயு 3:1-5) என்று வேதம் வெகு தெளிவாக கடைசி கால நிகழ்ச்சிகளை குறித்தும், கடைசி கால மனிதர்களை குறித்தும் கூறுகிறது. இந்த வசனங்களில் காணப்படும் 20 காரியங்களும், வெளி உலகத்தில் மாத்திரமல்ல, சபைகளுக்குள்ளும் அதிகமாக காணப்படுகிறது. இந்த பட்டியலில் நம்மிடத்தில் எந்த குணமாவது காணப்படுகிறதா என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போமா?

.

சபையில் ஒருவர் செய்கிற மற்றவருக்கு எதிராக செய்யும் தவறான காரியத்தை மற்றவர்களால் பொறுத்து கொள்ள முடிவதில்லை. கர்த்தர் அன்பாகவே இருக்கிறார் என்றும், ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க வேண்டுமென்று இயேசுகிறிஸ்து போதித்திருக்கிறார் என்றும் நன்கு அறிந்திருந்தாலும், மற்றவர் குறையை நாம் பொறுத்து போவதில்லை. சரி, பேசியாவது தீர்த்து கொள்ள முடியுமா என்று பார்த்தால், பேச ஆரம்பித்தால் அது சண்டையில் தான் போய் முடிகிறதாயிருக்கிறது. எல்லாருக்கும் எல்லாமும் நிறைவாய் இருப்பதால் யாரும் யாருக்கும் தாழ்ந்து போக முடிவதில்லை. அவன் என்ன சொல்வது, நான் யார் தெரியுமா என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

.

நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள். - (1 கொரிந்தியர் 12:27) என்று வேதம் நமக்கு கூறுகிறது. கிறிஸ்து தலையாகவும், சபையில் இருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனியே அவயவங்களாகவும் இருக்கிறோம். உதாரணத்திற்கு நீங்கள் வலது கையின் ஒரு விரலாக இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அந்த விரல் இல்லாவிட்டால் சரீரம் முழுமையாக காணப்பட முடியுமா? இல்லை, ஒரு உறுப்பு இல்லாவிட்டாலும் அந்த சரீரம் முழுமையடைய முடியாது. அதுபோல நீங்கள் சபையில் ஒரு அவயவமாக இருக்கும்போது, நீங்கள் இல்லாமல் அந்த சபை முழுமை பெற முடியாது. சுபையில் நாம் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். யாரும் விசேஷித்தவர்கள் இல்லை, அனைவருமே முக்கியமானவர்கள். வலது கையின் விரல், இடது கையின் விரலை பார்த்து, நீ ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதவன், உன்னால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கூறமுடியுமா? எல்லா அவயவமும் முக்கியமானதே! ஓன்று இல்லாவிட்டாலும் மற்றதற்கு பிரச்சனை வரத்தான் செய்யும்.

.

ஒரு Zigzag Puzzle என்று சொல்லப்படும் விளையாட்டில் ஒரு படம் அநேக சிறு சிறு அட்டைகள் விதவிதமான விதத்தில் அமைந்திருக்கும். அவற்றை அது அது இருக்க வேண்டிய இடத்தில் சரியாக சேர்த்து வைத்து பார்க்கும்போது, அது முழுமையான படமாக தெரியும். ஆதில் ஒரு சிறு அட்டை இல்லாவிட்டாலும் அது முழுமையான படமாக தெரியாது. அதுப்போல சபையில் தாழ்மையான ஆத்துமாவாயிருந்தாலும், சபைக்காக உழைக்கிற ஆத்துமாவாக இருந்தாலும், ஒருவர் இல்லாவிட்டாலும் அந்த சபை முழுமை பெற முடியாது.

.

ஒருவருக்கொருவர் கடித்து, வழக்கிட்டு கொண்டு இராதபடி, இந்த கடைசி நாட்களில் ஒற்றுமையோடு செயல்படுவோம். இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். - (வெளிப்படுத்தின விசேஷம் 7:9) என்று அப்போஸ்தலனாகிய யோவான் கண்ட தரிசனத்தின்படி, சிங்காசனத்திற்கு முன்பாக நாம் அனைவரும் நின்று கர்த்தரை துதிக்கபோகிறோம். இடையில் நமக்குள்ளே எந்த பிரச்சனையும் பிரிவினையும் வேண்டாம். ஆவைகளை தகர்த்து, கர்த்தருடைய மந்தையில் ஒரே குடும்பமாக நாம் வாழ்ந்து, கர்த்தருக்கு மகிமையாக ஜீவிப்போம். அவரது நாமம் மாத்திரம் மகிமைப்படும்படியாக வாழ்ந்து அவருக்கே சாட்சியாக இருப்போம் ஆமென் அல்லேலூயா!

.

விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு

அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு

ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு

என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்

...

திறவுண்ட வாசல் அடைபடுமுன்

நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்

நாட்கள் கொடியதாய் மாறிடுதே

காலத்தை ஆதாயம் செய்திடுவோம்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக பிதாவே, இந்த கடைசி நாட்களில் சபையின் ஒற்றுமையை குலைக்கும்படியாக சத்துருவானவன் திட்டமிட்டு, அதன்படி சபைகளில் குழப்பத்தையும், பிரிவினைகளையும் கொண்டு வருகிறதை தேவன் அறிந்திருக்கிறபடியால், சத்துருவின் திட்டங்களை குலைத்து போடுவீராக. விசுவாசிகளுக்குள் அன்பை ஊற்றும். ஒற்றுமையை தாரும். ஒரு மனதை தாரும். ஒன்றாக தேவனுக்கு என்று உழைக்கவும், செயல்படவும்; கிருபை தருவீராக. சத்துருவின் மேல் ஜெயம் எடுக்கவும், கடைசி காலங்களில் மனிதர்கள் மத்தியில் காணப்படும் கொடுமையான குணங்களுக்கு தப்பி, உமக்கென்று வாழ கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.












Billy Graham's Prayer at 95 yrs old

From a man the media has never been able to throw dirt on.....amazing!
He has certainly hit the "world" on the head!

Billy Graham's Prayer For Our Nation

THIS MAN SURE HAS A GOOD VIEW OF WHAT'S HAPPENING TO OUR COUNTRY!

'Heavenly Father, we come before you today to ask your forgiveness and to seek your direction and guidance. We know Your Word says, 'Woe to those who call evil good,' but that is exactly what we have done. We have lost our spiritual equilibrium and reversed our values. We have exploited the poor and called it the lottery. We have rewarded laziness and called it welfare. We have killed our unborn and called it choice. We have shot abortionists and called it justifiable. We have neglected to discipline our children and called it building self esteem. We have abused power and called it politics. We have coveted our neighbor's possessions and called it ambition. We have polluted the air with profanity and pornography and called it freedom of expression. We have ridiculed the time-honored values of our forefathers and called it enlightenment. Search us, Oh God, and know our hearts today; cleanse us from sin and set us free. Amen!'

With the Lord's help, may this prayer sweep over our nation and wholeheartedly become our desire so that we once again can be called 'One nation under God!'
Think about this: If you forward this prayer to everyone on your e-mail list, in less than 30 days it would be heard by the world.

(It's worth a try!)
'One Nation Under God!'
உங்கள்சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும். - (நீதிமொழிகள் 12:19).

.

ஆப்பிரிக்காவில் ஒரு இனத்தவரிடம் ஒரு வினோத பழக்கம் உண்டு. யாராவது ஏதாவது தவறு செய்தால் அங்குள்ள வைத்தியர் அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரிடம் கேள்விகள் கேட்பார். ஆனால் யாரும் தங்கள் தவறை ஒப்புக் கொள்ளவில்லை என்றால், யாரையெல்லாம் சந்தேகப்படுகிறார்களோ அவர்களை அழைத்து, அவர்கள் முன்பாக ஒரு ஈட்டியின் முனையானது சூடுபடுத்தப்படும். அது நன்கு சூடாகும்போது அதை கொண்டு வந்து சந்தேகப்படுபவர்களின் நாவில் வைக்கப்படும். தவறு செய்தவன் நாவில் வைக்கும்போது அவன் வலியில் துடிப்பான். மற்றவர்கள் நாவில் வைக்கும்போது அது ஒன்றும் செய்யாது என்பது அவர்களின் நம்பிக்கை.

.
அந்த சூடாக்கப்பட்ட ஈட்டி தங்கள் வாயின் அருகில் வர இருக்கும்போது தவறு செய்தவர்கள் காட்டிற்குள் ஓடி ஒளிவார்கள். ஏனெனில் பொய் சொன்னவர்களின் நாவை அந்த சூடு பொசுக்கி விடும் என்று பயந்து. ஆனால் மற்றவர்களின் நாவுக்கு அந்த சூடு ஒன்றும் செய்யாது.
இது ஒரு குருட்டு நம்பிக்கை என்று நாம் நினைக்கலாம், ஆனால் அறிவியற்பூர்வமாக தவறு செய்யாதவர்கள் பதறாதபடியால், அவர்கள் நாவு ஈரமாயிருக்கும். அதனால் அந்த நாவு ஒரளவு சூட்டை தாங்க முடியும். ஆனால் தவறு செய்தவர்களின் நாவு வறண்டு போய் இருக்கும். சூடு வைக்கப்படும்போது அது பொசுங்கி போகும் என்று கூறப்படுகிறது. ஆதலால் அந்த கிராமத்தில் யாரும் தவறு செய்யவோ, பொய் பேசவோ பயப்படுவார்கள்.
.
கர்த்தருக்கு அருவருப்பான ஆறு காரியங்களில் பொய் நாவும் ஒன்று வேதம் கூறுகிறது. 'ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே' (நீதிமொழிகள் 6:16- 19). கர்த்தர் வெறுக்கும் இந்த ஆறு காரியங்களில் பொய் நாவு இரண்டாவதாக வருகிறது.
.
சிலருக்கு பொய் என்பது சரளமாக வரும். ஏன் விசுவாசிகள் என்று சொல்பவர்களுக்கும் பொய் சொல்வது என்பது ஒரு குற்றமாகவோ, பாவமாகவோ தெரிவதில்லை. சும்மா ஒரு சிறிய பொய் தானே சொன்னேன் என்று பொய் சொல்வதை மிகவும் எளிதாக எடுத்துக் கொள்ளுகிறவர்களும் உண்டு. கர்த்தர் பொய் நாவை அருவருக்கிறார் என்று வேதம் சொல்கிறது.
.
ஊழியர்களும் தங்களுக்கு பெயரும் புகழும் வேண்டும் என்று தங்களுடைய ஊழியத்தை குறித்து வெளிநாடுகளிலோ, வேறு இடங்களுக்கு ஊழியம் செல்லும்போது, கர்த்தர் அவர் மூலமாய் ஒரு காரியத்தை செய்திருந்தால், பத்து காரியங்கள் நடந்தது என்று துணிகரமாக பொய் சொல்வார்கள். சிலர் தேவனோடு இப்போது தான் பரலோகத்திற்கு சென்று பேசி விட்டு வந்தேன் என்று அநியாயமாக பொய் கூறுவார்கள். வேதத்தை அறிந்திராத ஜனங்கள் அவர்கள் சொல்வது எல்லாம் மெய் என்று நினைத்து, அவர்களை கடவுளின் அடுத்த பிரதிநிதியாக வைப்பார்கள். எங்கள் சபைக்கு வந்திருந்த ஊழியர் ஒருவர், தான் தன் கையை விரித்து ஜெபிக்கும்போதெல்லாம் பரலோகத்திற்கு போவதாகவும், இயேசுகிறிஸ்துவின் மேல் கைப்போட்டு, அங்கிருந்த தோட்டத்தில் உலாவி விட்டு வருவதாகவும் கூறினார். உடனே நாங்கள் கண்டு கொண்டோம், அவர் கள்ள தீர்க்கதரிசி என்று. கர்த்தர் வெறுக்கிற காரியத்தை அவருடைய ஊழியர்களே செய்தால் கர்த்தர் எப்படி தாங்கி கொள்வார்?
.
பிரியமானவர்களே, கர்த்தர் அருவருக்கிற பொய் நாவை நாம் எப்பொழுதும் பேசக்கூடாது. என்ன தான் நடந்தாலும் நான் உண்மையை மட்டுமே பேசுவேன் என்று நாம் கர்த்தருக்கு முன் உறுதி எடுக்க வேண்டும். பொய் பேசி பழகியவர்கள், காலையில் எழுந்தவுடன், 'ஆண்டவரே, இந்த நாளில் நான் பொய் பேசாதபடி என் நாவை காத்தருளும்' என்று சொல்லி ஜெபித்து, அந்த நாளில் பொய் பேசாதபடி, கர்த்தரின் கிருபையோடு நாவைக் காத்துக் கொள்ள வேண்டும்.
.
'பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்' (வெளிப்படுத்தின விசேஷம் 21:8). இயேசுகிறிஸ்து யார் யார் பரலோகத்தில் வரமாட்டார்கள் என்றும், யார் யார் நரகத்தில் பங்கடைவார்கள் என்றும் குறிப்பிடும்போது, பொய்யர்களும் அதில் பங்கடைவார்கள் என்று சொல்வதைப் பார்க்கும்போது, நாம் பொய் பேசாதபடி எத்தனை கவனமாய் இருக்க வேண்டும்? நாம் மற்றவர்களிடம் பேசும்போது எப்போதும் உண்மையையே பேசுவோம். கர்த்தர் அருவருக்கிற பொய்யை பேசாதபடி நம்மைக் கர்த்தருக்குள் காத்துக் கொள்வோம். உண்மையுள்ள மனுஷனே கர்த்தருடைய பரிபூரண ஆசீர்வாதத்தை பெறுவான். ஆமென் அல்லேலூயா! 
.