Friday, 29 November 2013

குரங்கிலிருந்து வந்தவனா மனிதன்?

குரங்கிலிருந்து வந்தவனா மனிதன்? ( வேதாகம அறிவியல் - 01 )


மனிதனை தேவனே படைத்தார் என வேதாகமம் கூறுகின்றது.

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.ஆதியாகமம்-2:7

ஆனால் விஞ்ஞானமோ குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்னம் பொய்யை கூறிவருகிறது.

மனிதக் குரங்கு என்று அழைக்கப்படும் குரங்குகினங்களுக்கும் மனிதனுக்கும் மற்ற விலங்கினங்களை விட சற்று அதிகமான உருவ ஒற்றுமை இருப்பதால் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பது சரியானதன்று. 

1.   ஜெர்மனியிலுள்ள நீண்டர் பள்ளத்தாக்கில் அகழ்வாராய்ச்சியின் போது 1856 இல் கண்டுபிடிக்கப்பட்ட சில எலும்புக் கூடுகளை மனிதனுக்கும் குரங்கிற்கும் இடையேயான ஒரு விலங்கினுடையவை என்று கூறி உலகெங்கும் பரபரப்பு உண்டாக்கினர்.

குரங்கு போன்ற தோற்றம் தரக்கூடியதாக அந்த எலும்புக் கூட்டை மாற்றம் செய்யும் வண்ணமாக தோல், முடி ஆகியவற்றைக் கற்பனையாக சித்தரித்து நீண்டர்தால் பெயர் சூட்டினர்.

அப்படி  நீண்டர்தால் மனிதன் என்று அழைக்கப்பட்டவரகள் சாதரண மனிதர்கள்தான் என்பது பின்னர் நிருபிக்கப்பட்டுவிட்டது. ஆனால், நீண்டர்தால் மனிதனைப் பற்றி இன்றும் பாடசாலைகளில் கற்றுத்தருகின்றனர். இவ்வாறு உண்மையை திசை திருப்பவது சரியோ?

ஜாவா, சீனா ஆகிய இடங்களில் மனித எலும்புக்கூடுகள் அருகில் குரங்குகளின் எலும்புக் கூடுகளைக் கண்டுபிடித்தனர். உடனடியாக தங்களுக்கு ஆதாரம் இருப்பதாக அவர்கள் கூறினர். ஆனால் அந்தக் குரங்குகளின் தலை எலும்புகள் உடைக்கப்பட்டிருந்தன. குரங்குகளின் மூளையை விரும்பி உண்ணும் வழக்கம் அங்கு இருந்ததால்தான் இவ்வாறு இருந்தது என்பது பின்னர் தெரிய வந்தது. இவ்வாறு உண்ணும் வழக்கம் இந்நாடுகளில் இன்றும் உள்ளது.

மனிதனின் மட்டையோட்டுடன் குரங்கின் கீழ்தாடையில் மாற்றங்கள் செய்து பொருத்தி பில்ட்டவுன் மனிதன் என்று பொய்யாகக் கூறினார் சார்லஸ் டாசன் என்பவர். இவரது பொய் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இதுவரை குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட நிலையிலான விலங்கின் எலும்புக் கூடு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

2. குரங்கு மற்றும் ஏனைய விலங்குள் ஆகியவை குட்டிகளுக்கு கொடுக்கும் பாலையும் மனிதப் பாலையும் சோதித்து பார்த்ததில்  மனிதப்பாலுக்கு மிகவும் ஒத்திருப்பது கழுதையின் பால் என்பது தெரிகிறது. குரங்கின் பாலல்ல.

3.   இரத்தத்தில் இருக்கும் ஒற்றுமையைக் கவனித்தால் புலியின் இரத்தம் திமிங்கிலத்தின் இரத்தத்துடனும், கிளியின் இரத்தம் தீக்கோழியின் இரத்தத்துடனும் ஒத்திருக்கின்றன என்பது உண்மை. இவை ஒன்றிலிருந்து மற்றறொன்று வந்தது என்று கூறுவது சரியா?

மனித இரத்தத்தின் வீத எடைமானம் (Specitic Gravity) 1059.
பன்றிக்கு 1060.
முயலுக்கு 1060.
தவளைக்கு 1055-1056.
பாம்பிற்கு 1055.
குரங்கிற்கு 1054.
மனிதனுக்கும் குரங்கிற்கும் உள்ள உறவு எங்கே? பன்றியும் முயலுமல்லவா மனிதனின் அருகாமையில் உள்ளன. 

4. மனிதனுக்கு இருப்பது போன்று தந்தை என்ற பொறுப்பு குரங்கினங்களில் இல்லை. மற்ற விலங்குகளில் நரி (GoldenFox) என்ற சில விலங்குகளிலும் புறா, காகம் போன்ற பறவைகளிலும் உண்டு.

5.  மனிதனைப் போன்று இல்லாமல் குரங்குகள் சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இனச்சேர்க்கையுடையவை. 
  

6.     மனிதனின் மரபணுவிற்குக் (Gene) குரங்கின் மரபணுவிடம் இருக்கும் ஒற்றுமையானது, நாயின் மரபணுவுடனும் இருக்கின்றது என்று 2000-2001 இல் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் குரங்கின் ஒற்றுமையைப் பற்றி மட்டும் மீண்டும் மீண்டும் கூறுவது ஏன்?
---------------------------------------------------------------------------------------------------------------------------------வாழ்வியல் விளக்க வேதாகமம்.

மண்ணான மனிதன்

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் மனுஷன் ஜீவாத்துமாவானான்.(ஆதி 2.7)
எல்லா மாம்சமும் ஒரே விதமான மாம்சமல்ல. மனுஷனுடைய மாம்சம் வேறே மிருகங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே (1கொரி 15.19)

மனிதனை கடவுள் மண்ணினாலேயா படைத்தைார் என்பதை அறிய ஆராய்ந்த போது இன்று மண்ணிலிருந்து கிடைக்கும் கனியவளங்களுடன் மனித உடலில் சம்பந்தம் வைத்திருக்கிறதை அறிய முடிகிறது.

உலகமெங்குமுள்ள மனிதர்கள் ஏதாவது ஓரு மண்ணின் நிறத்தில்தான் இருக்கின்றனர். (பிரௌன்)(Brown) மனித சரீரத்தின் முக்கிய மூலகங்களான நைட்ரஜன்கார்பன்ஆக்சிஜன்,கால்சியம்தண்ணீர் போன்றவை மண்ணிலும் இருக்கிறது என்பதை விஞ்ஞான உலகம்கண்டுபிடித்த உண்மைபரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் வார்த்தைகள் கட்டுக்கதைகள்அல்ல.

1.            1.   துப்பாக்கியில் ஒரு முறை சுடுவதற்கு பயன்படுத்தும் அளவிலான கரி   மருந்து.
2.      ஏழு துண்டு சோப்பு செய்யப் போதுமான கொழுப்பு
3.      ஒரு பெரிய ஆணி செய்யப் போதுமான இரும்பு
4.      ஒரு நாயின் மேலுள்ள பேன்களைப் போக்க போதுமான கந்தகம்
5.      ஒரு சிறு கோழிக் கூட்டை வெள்ளையடிக்க போதுமான சுண்ணாம்பு
6.      வயிற்றுக் கோளாற்றைக் கண்டுபிடிப்பதற்கு போதுமான உப்பு
7.      2.200 தீக்குச்சிகளைச் செய்யப் போதுமான வெடிமருந்து.

இவ்வளவு கனிப்பொருள்கள் மனித உடலில் இருப்பதை பின்னாளில் சார்லஸ் H மேயர் எனும் மருத்துவ நிபுணர் விஞ்ஞான வாயிலாக கண்டுபிடித்தார்.

வேதாகமம் தேவனுடைய புத்தகம் என்பதை மனிதன் அறிந்து கொள்ளும்படி வேதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் வைத்துவிட்டுப்போன உறவைப் பற்றி எண்ணிப் பார்ப்பதற்கு எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது

கிறிஸ்தவனே கவனி மாட்டிக் கொண்டாயோ FACEBOOK ல்?

கிறிஸ்தவனே கவனி மாட்டிக் கொண்டாயோ FACEBOOK ல்?



இன்று அதிகமாக எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கம் “பேஸ்புக்” (Facebook) ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. பூமியில் வயது வரம்பின்றி அநேகர் இதினால் கவரப்பட்டுள்ளனர்.

“காம்ஸ்கோர்-”ன் ஆய்வின்படி, தற்போது இந்தியர்கள் தேசங்களின் வரிசையிலானபேஸ்புக் புள்ளி விபரத்தின் படி 4.5 கோடி நபர்கள் உபயோகிப்பதால் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளனர். 

மேலும் இக்காலத்து வாலிபர்களின் சமீபகால வழக்கம், நிஜ மனிதர்களோடு நேரம் செலவழிப்பதை தவிர்த்து, “பேஸ்புக்” இல் மூழ்கி இருப்பதே. ஒரு மாதத்திற்கு சராசரியாக 80.3 மணிநேரங்கள் “பேஸ்புக்” இல் செலவிடப்படுகிறது என்ற அறிவிப்பு விழிப்பை உண்டாக்குகின்றது. இந்த ஆய்வுகளெல்லாம், இதன் அதிகமான பயனை எல்லோரும் பெற்றக்கொள்ள விரும்புகின்றனர் என்ற ஒரு காரியத்தை தெளிவாக விளங்கப்பண்ணுகின்றன.

மக்கள் மேலும் மேலும் ஒரு சமூகத் தொடர்பு மென்பொருளுக்குத் திரும்பவும், தங்கள் முகங்களைபேஸ்புக் இல் பதிக்கவும் என்ன காரணம்? மக்கள் உணர்வு பூர்வமான தங்கள் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் என்று விரும்புவதே இதற்கு அடிப்படையான காரணம். மனிதர் அன்பு, சுய மதிப்பு மற்றும் சொந்தப் பாராட்டுதல் ஆகிய மூன்று விதமான உணர்வு பூர்வமான தேவைகளைக் கொண்டிருப்பதால் தங்கள் புகைப்படங்களையும் செயல்களையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதின் மூலம் திருப்தியடைய முயற்சிக்கின்றனர். பகிரங்கமாக இதை வெளிப்படுத்தாவிட்டாலும் மறுக்க முடியாது மறைந்த உண்மை என்னவெனில் அவர்கள், கவனிப்பையும் சொந்தம் பாராட்டுதலையும் நாடுகிறார்கள் அவர்கள் இருதயத்தின் அடி ஆழத்தில் மக்கள் தங்களை கவனிக்க வேண்டும் என்ற தணியாத ஏக்கம் காணப்படுகிறது. எனவே மக்கள் தங்கள் பதிவுகளைக் கண்டு கருத்தக்களை அனுப்பும் போது, சற்று உற்சாகமடைகின்றனர் இல்லையா?

நியுயார்க் பல்கலைக்கழகம் 2010ம் ஆண்டின் ஆய்வில் இந்த உண்மையை ஆமோதிக்கின்றது. இதில் வெளிப்படுத்தப்பட்ட காரியம், ஆண்கள் “என்னைப் பற்றி” என்ற தலைப்பில் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ளவும் பெண்கள் உடலழகை வெளிப்படுத்தும் அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்களைச் சேர்க்கவும் விரும்புகின்றனர் என்பதே.

இதை உற்றுக் கவனித்தோமானால்பேஸ்புக் நம்மை சுயநலம் சார்ந்த மக்களாக மாற்றுகிறது என்பதை கண்டுகொள்ளலாம் மெய்யாகவே அது நம்மைச் சுயத்தை மையமாக கொண்டவர்களாக உருவாக்குகிறது. பவுல் தீமேத்தேயுவுக்கு எழுதின நிருபத்தில் குறிப்பிட்டுள்ள கடைசிகால கொடிய காரியங்கள் பலவற்றில், முதலில் காணப்படுவது,“மனிதர்கள் தற்பிரியர்களாக இருப்பார்கள்” என்பதே (2தீமோ 3.1). பரிசேயர் ஜனங்களின் புகழ்ச்சியை நாடினதை இயேசு வன்மையாகக் கண்டித்ததை நமக்கு இது ஞபகப் படுத்துகின்றது.

ஜனங்கள் தங்கள் நற்காரியங்களை காணவேண்டும், பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அநேக நற்காரியங்களைச் செய்தனர். நண்பனே பரிசேயரின் புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கை – புதிதியாய் பிசைந்த மாவை ஒரு துளி புளித்த மா புளிக்கப்பண்ணி விடுமே! அதபோலத்தான் ஒரு புகைப்படத்தை போடுவதோ கருத்தை பரிமாறிக் கொள்வதோ மக்கள் நம்மை ரசிக்க வேண்டும், புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் செய்தால், நம் வாழ்க்கையில் சரி செய்ய முடியாத சேதங்கள் ஏற்படும்.

இதற்கு மேலாக பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துவதால் மனநிலை பாதிப்புக் கூட ஏற்பட வாய்ப்புண்டு. சமீபத்தில் மனோதத்துவ நிபுணர்கள் Facebook Addiction Disorder (FAD) என்ற பிரிவைத் துவங்கி, அதிகமானபேஸ்புக் உபயோகத்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துகிறார்கள். நாம் ஜாக்கிரதையோடு பேஸ்புக்கை உபயோகிப்பதற்கு இது நமக்கு விழப்புணர்வைத் தரும் ஒரு அழைப்பாய் இருக்கிறது,

நாம் ஃபேஸ்புக்கிற்கு அடிமையாகி விட்டோமா இல்லையா என்பதை அறிய இதோ ஒரு சில தன்னாய்வுக் குறிப்பகள் – உண்மையான பதில்களைக் கீழ்கண்ட கேள்விகளுக்குத் தந்து உங்களை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

  எந்த வேலையும் இல்லாமல் நீங்கள் தனிமையாய் இருக்கும் எல்லா சூழ்நிலைகளிளும்பேஸ்புக்கில் இருக்கிறீர்களா?

  நீங்கள் உங்கள் சொந்த தகவல்களை அடிக்கடி பேஸ்புக்கில் பதிவு செய்யும் பழக்கம் உள்ளவரா?  

   நீங்கள் பேஸ்புக்கில் நாளொன்றுக்கு ஒரு முறைக்கு மேல் உங்கள் தன்னிலைக் குறிப்புகளை பதிவு செய்கிறீர்களா?

  நீங்கள் அறியாத ஒரு நபரின் பேஸ்புக் நட்பு அழைப்பிற்கு இணங்கி விடுகிறீர்களா? (அது பொய்யான தனிநபர் விபரமாக இருக்காது என்ற யூகத்தில்)

  தேவனோடு தரமான நேரத்தை செலவிடாமல், உங்கள் பெறுப்பக்களை சரிவர நிறைவேற்றாமல், பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுகிறீர்களா?

  மற்றவர் உங்களை புகழவும், ரசிக்கவும் வேண்டுமென்று அடிகடி உங்கள் புகைப்படங்களைப் பதிவு செய்கிறீர்களா?

  மற்றவர்களுடைய வாழ்வில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்களா?

   நடு இரவில் கூட பேஸ்புக்கில் என்ன பதிவுகள் உள்ளன என்று பார்க்க தோன்றுகிறதா?

    உங்கள் தோற்றம், சாதனைகள், கடந்தகால நிகழ்வுகளைச் சார்ந்த உங்கள் அடையாளத்தைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா?

   ஒவ்வொரு நாள் காலையிலும் எழுந்தவுடன் பேஸ்புக்கில் புது பதிவுகள் உண்டா என்று பார்க்க ஆர்வமாக உள்ளீர்களா?

முடிவாக “பேஸ்புக்கிற்கு நான் எதிர்த்து நிற்பவன்” என்று தவறாக எண்ண வேண்டாம். நானும் அதைப் பயன்படுத்துகிறேன். உங்கள் குடும்பத்தினருடன் மற்றும் நண்பருடன் போதுமான நேரத்தை செலவிடுங்கள். மற்ற பொழுதுபோக்குகளான, புத்தகம் வாசித்தல், இசையை கேட்டல், விளையாட்டு ஒன்றில் பங்கு பெறுதல் என மற்ற வழிகளை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்வை, மற்றவர்கள் காண வெட்ட வெளிச்சமாகாதீர்கள். பின்னாட்களில் மனம் வருந்த நேரிடும்.

நீங்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள் உங்களை திருப்தி செய்வதாக இல்லாமல், சிறந்த மதிப்புடையதாக இருக்க வேண்டும். உங்கள் பேஸ்புக் கணக்கில்  சென்று, பதிவு செய்த புகைப்படங்கள் எத்தனை உங்களுடையதல்லாதது, நல்ல நோக்கத்தோடு உள்ளன என்று ஆராய்ந்து பாருங்கள். ஒரு சில வாரங்கள் பேஸ்புக்கிலிருந்து விலகியிருக்க முயற்சி செய்து, அது உங்கள் மன அமைதியை பாதிக்கிறதா என்று பாருங்கள்.

நாம் இயேசுவுக்கு நண்பர்கள், ஆதலால் நாம் அவரை நம் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக பேஸ்புக்கை பயன்படுத்த வேண்டும். உங்கள் பதிவுகளை அநேகர் விரும்பவில்லை என்றால் வருந்த வேண்டாம், தொடர்ந்து தேவனை மகிமைப்படுத்த பேஸ்புக்கை உபயோகியுங்கள்.

எவரும், எதுவும் உங்கள் வாழ்க்கையை ஆண்டுகொள்ள விடாதீர்கள். தங்களை சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி, “தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள்” என்ற வசனத்தின் படி எல்லாச் சூழ்சிலைகளிலும் வெற்றி காண்பீர்கள். (ஏசா 14.2)

நான் புத்தகங்களின் புத்தகத்தையே வாசிப்பேன்
அவருடைய முகத்தையே நோக்கவேன்
மற்றவர்களின் விருப்புகளையோ குறிப்புகளையோ
சார்தல்ல அவருடைய அநாதி கிருபையாலேயே இரட்சிக்கப்பட்டடேன். 

ஆபாச இணையதளங்கள்

ஆபாச இணையதளங்கள் - திகைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்!

இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் அதன் முடிவில் கூறப்பட்டுள்ள ஒரு தீர்மானத்தை கட்டாயமாக எடுக்க வேண்டும் 


அறிவியல் கண்டுபிடிப்பு என்பது எப்போதுமே கத்தியை போன்றது. இரண்டையுமே  நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம் அல்லது கெட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம். அது பயன்படுத்துபவரை பொறுத்தது. அறிவியலின் இணையற்ற கண்டுபிடிப்பான இணையமும
அதற்கு விதிவிலக்கல்ல. நவீன போக்குவரத்தின் மூலம் சிறிதாக்கப்பட்ட உலகம் இணையத்தின் மூலம் மிகச் சிறிதாக்கப்பட்டது. உலகத்தையே நம் வீட்டின் சிறிய அறைக்குள் கொண்டு வந்துவிட்டோம். அதன் கூடவே வேண்டாத குப்பைகளையும்  நம் வீட்டிற்குள் கொண்டு வந்து விடும் சூழ்நிலை இன்று உள்ளது.
நாளுக்கு நாள் ஆபாச இணையதளங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு காரணம் அத்தளங்களுக்கு உள்ள மக்கள் ஆதரவுதான். இணையத்தை பயன்படுத்தும்போது நம் அனுமதி இல்லாமலேயே கூட  நாம் ஆபாச இணைய தளங்களுக்கு கடத்தப்படலாம். ஆபாச தளங்கள் பற்றிய சில புள்ளி விவரங்கள் நமக்கு எல்லாவற்றையும் விட மிகப் பெரிய ஆச்சரியத்தை தருகின்றன. அதற்கு முன் ஒரு விஷயம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள்  பெரும்பாலானவற்றில் ஆபாச சினிமாக்கள், இணையதளங்கள் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டவை ஆகும். மேலும் இங்கு தரப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் உலக அளவிலானவை. 
இனி புள்ளி விவரங்களை ஜாலியாக பார்க்கலாமா !?
1) ஒவ்வொரு வினாடியும் ஆபாச தளங்களை பார்வையிட   3,075.64 அமெரிக்கன் டாலர் செலவிடப்படுகிறது.
2) ஒவ்வொரு வினாடியும் ஆபாச தளங்களை 28,258 பேர்  பயன்படுத்துகின்றனர். அதே ஒவ்வொரு வினாடியிலும் 372 பேர் கூகிள் போன்ற தேடுதல் பொறிகளில் செக்ஸ் சம்பந்தப்பட்ட வார்த்தைகளை தட்டச்சு செய்து ஆபாச தளங்களைப் பற்றிய விவரங்களை தேடுகின்றனர்.
3) ஒவ்வொரு 39 நிமிடத்திற்கும் ஒரு புதிய ஆபாச காணொளி அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிறது.
4) ஆபாச இணையதளங்களின் மொத்த வியாபாரம், Microsoft, Google, Amazon, eBay, Yahoo, Apple EarthLink. and Netflix ஆகிய நிறுவனங்களின் மொத்த கூடுதல் வியாபாரத்தை விட அதிகம். 2006- ஆம் ஆண்டில் ஆபாச இணையதளங்களின் மொத்த வருமானம்  $97.06பில்லியன் ஆகும்.
ஆபாச இணையதள வருமானத்தில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகள்.
     தரம் (Rank)
   நாடு
வருமானம் (பில்லியனில்)
1
சீனா
$27.40
2
தென் கொரியா
$25.73
3
ஜப்பான்
$19.98
4
அமெரிக்கா
$13.33
5
ஆஸ்திரேலியா
$2.00
6
இங்கிலாந்து
$1.97
7
இத்தாலி
$1.40
8
கனடா
$1.00
9
பிலிப்பைன்ஸ்
$1.00
10
தைவான்
$1.00
முதல் 10 இடங்களில்,  5 இடங்களை ஆசிய நாடுகளே  பெற்றுள்ளன இந்த அட்டவணையில் இந்தியாவின் பெயர் இடம் பெறாதது நமக்கு சந்தோஷம்தான்.


 
ஆபாச இணையதள புள்ளிவிவரங்கள்
ஆபாச இணையதளங்கள்
4.2 மில்லியன் (மொத்த எண்ணிக்கையில் 12%)
ஆபாச இணைய பக்கங்கள்
420 மில்லியன்
தேடுபொறிகளில் தினசரி ஆபாச தேடல்களின் எண்ணிக்கைகள் 
68 மில்லியன்  (மொத்த தேடல்களில் 25% )
தினசரி ஆபாச இ-மெயில்கள்
2.5 பில்லியன் (மொத்த மெயில்களில் 8% )
இணையத்தை பயன்படுத்துவோரில் ஆபாச தளங்களை பார்வையிடுவோர்
42.7%
விருப்பம்  இல்லாமலேயே ஆபாச தகவல்களை வலுக்கட்டாயமாக பெறுவோர்
34%
ஒரு மாதத்தில் ஆபாச டவுன்லோட் எண்ணிக்கைகள் (Peer-to-peer)
1.5 பில்லியன்  
(மொத்த டவுன் லோடில் 35%)
சிறுவர் ஆபாச தளங்கள் (Child pornography) பற்றிய தினசரி தேடல்கள் (search)
116,000
சட்டவிரோத சிறுவர் ஆபாச தளங்கள் (Child pornography)எண்ணிக்கை
100,000
ஆபாச தளங்களை பார்வையிடுவோர்
72 மில்லியன்/மாதம்
ஆபாச இணையதளங்கள் மூலம் செக்ஸ் சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம்
$4.9 பில்லியன்
ஆபாச தளங்களை முதன் முதலாக பயன்படுத்த ஆரம்பிக்கும் சராசரி வயது
11 வயது
ஆபாச இணையதளங்களை அதிகமாக பயன்படுத்துவோர்
35 - 49 வயது பிரிவை சார்ந்தவர்கள்
அலுவலக நேரங்களில் ஆபாச    தளங்களை பார்வையிடுவதை
ஏற்றுக்கொண்டவர்கள்
20%
ஆபாச தளங்களுக்கு அடிமையாகி விட்டதை ஏற்றுக்கொண்டவர்கள்
10%
ஆபாச தளங்களை பார்வையிடுவதில் ஆண், பெண் சதவிகிதம்
ஆண் -72% 
பெண் - 28%
பெண்களும், ஆபாச இணைய தளங்களும்
இணையதள நடவடிக்கைகளை ரகசியமாக வைத்திருக்கும் பெண்கள்
70%
அலுவலக நேரங்களில் ஆபாச    தளங்களை பார்வையிடுவதை
ஏற்றுக்கொண்டவர்கள்
13%
ஆபாச தளங்களுக்கு அடிமையாகி விட்டதை ஏற்றுக்கொண்டவர்கள்
17%
ஆபாச தளங்களை பார்வையிடுவோர்
9.4 மில்லியன்/மாதம்
ஆபாச இணையதளங்களை தடை செய்த முக்கிய நாடுகள்
சவூதி அரேபியா, ஈரான், சிரியா, பஹ்ரைன், எகிப்து, UAE,  குவைத், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், கென்யா, இந்தியா, கியுபா, சீனா

நாடுகள் வாரியாக ஆபாச இணைய பக்கங்களின் எண்ணிக்கை  
 நாடு
ஆபாச இணைய பக்கங்கள்
அமெரிக்கா 
244,661,900
ஜெர்மனி 
10,030,200
இங்கிலாந்து 
8,506,800
ஆஸ்திரேலியா 
5,655,800
ஜப்பான் 
2,700,800
நெதர்லாந்து 
1,883,800
ரஷ்யா 
1,080,600
போலந்து 
1,049,600
ஸ்பெயின 
852,800
இணையத்தை மிகப் பெரிய அளவில் ஆக்கிரமித்துள்ள ஆபாச இணைய தளங்களை சிறுவர்கள் கூட இன்று செல்போனில் பார்வையிடுகிறார்கள் பல்வேறு மென்பொருட்கள் மூலம் பாதுகாப்பான இணையத்தை நாம் வீட்டில் பயன்படுத்த முடியும் என்றாலும், பள்ளி செல்லும் சிறுவர்கள், இளைஞர்கள் புதிய விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆசையில் ஆபாச தளங்களை பார்வையிடுவதை சட்டப்படி தடுப்பது என்பது இயலாத காரியம் ஆகும். ஆனால் ஆபாச படங்களை பார்ப்பதின் மூலம் மாணவர்களின் மனமும், படிப்பும், எதிர்காலமும் கெடுகிறது என்பது மட்டும் நிச்சயம். 

இப்போது என்ன சொல்கிறீர்கள்?  உங்கள் பிள்ளைகளுக்கு செல் போன் உம் கணணியும் வாங்கிகொடுத்து இன்டர்நெட் கனெக்ஷனும் செய்து கொடுக்க போகிறீர்களா?   நீங்களே தீர்மானியுங்கள். 

Thursday, 26 September 2013

Photo: சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்… (கண்டிப்பாக படிக்கவும் !!!)

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்… (கண்டிப்பாக படிக்கவும் !!!)

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...

5450 Posts Group D by RRC Chennai iroams.com 2013 Railway Recruitment

Railway recruitment cell RRC Chennai / government of India published the recruitment notification No RRC 02/2013 on 21 September 2013 for the recruitment of Group D posts in Southern Railway SR and integral coach factory under the pay grade of rs 1800, pay band 1 rs 5200-20200 . RRC Chennai now introduces online application form Submission facility for the recruitment of Group D posts.
Application form gor RRC Chennai invited online this time. Group D RRC online application form submitted at the official website of IROAMS / Indian railway online application management system of Southern railway.
Application form Submission for Group D posts in Southern railway SR and ICF will be start from 21 September 2013. 
Last date of online application form submission is 21 September 2013

RRC Chennai Group D recruitment Details as are follows 
Trackman Engg : 1,539 Posts
Helper Electl : 642 Posts
Helper S & T : 118 Posts
SCP/Porter Optg & Comml : 847 Posts
Helper Mechl : 588 Posts
Peon Gen l : 102 Posts
Safaiwala Medical : 132 Posts
Store Khalasi Stores : 92 Posts
Helper WS (M) : 757 Posts
Helper WS (E) : 107 Posts
Helper TMU : 261 Posts
Peon/Mali/ Sanitary Cleaner/ Vendor/ Helper Gr. II : 252 Posts
Track Maintainer Gr. IV : 13 Posts

Eligibility Criteria : 
Age Limit: minimum age 18 year maximum age 33 year .
Education Qualification : High school pass or ITI certificate

Selection Procedure : written exam and PET test

Application form fee : rs 100 , no application form fee for SC /ST/ PWD / minorities , EBC candidates .

How to Apply: candidates can fill application form online as well as offline in prescribed application form format .

Address where to send Print out / Dully filled application form of RRC group D Chennai Vacancy
    Assistant Personnel Officer/ Recruitment, RRC, Southern Railway, No. 5, 3rd floor, Dr. P.V. Cherian Crescent Road, Egmore, Chennai – 600008

Official website : www.rrcchennai.org.in http://www.iroams.com
Fill online application form
http://www.iroams.com/V1/applicationHome

Download notification in PDF file
 http://www.rrcchennai.org.in/admin/download/1370863980_RRC-AD-1.pdf

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம்

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது
அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய
தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக
கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரிwww.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று

click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும்
பக்கத்தில்

பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை
எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும்
பக்கத்தில்

உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number
Create ஆகிவிடும்.

குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save
கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து
கொள்ளலாம்.

குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number : RPD2013M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM )
பதிவு செய்த ஆண்டு : 2013
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID : RPD2013M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..

அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம் தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரிwww.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில் உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Create ஆகிவிடும். குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும். குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம். குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம். குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம். Renewal செய்வதற்கான குறிப்பு : உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும். Register Number : RPD2013M00007502 வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM ) பதிவு செய்த ஆண்டு : 2013 ஆண் / பெண் : M பதிவு எண் : 7502 பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும். User ID : RPD2013M00007502 Password : dd / mm / yyyy கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும். உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்.. அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Friday, 6 September 2013

இந்த பதிவு ரஜினி யை அவமதிக்கும் நோக்கோடு போடபட்டதல்ல...ரஜினி சிறந்த நடிகர்...ஆனால் சிறந்த இந்தியரா?

யார் சிறந்த இந்தியர்....முதல் படமா அல்லது இரண்டாவது படமா...

கார்பரேட் ஊடகங்களின் கருத்தின் படி 25 ஆண்டுகளில் சிறந்த இந்தியர் பட்டியலில் முதலிடம் ரஜினி அவர்களுக்கு கிடைத்துள்ளது..இவர் அப்படி என்ன சாதனை செய்துள்ளார் என்று தான தெரியவில்லை..சரி கதைக்கு வருவோம்..

1,முதல் படத்தில் இருப்பவரின் பெயர் சாதவ் பயேங்க் (Jadav Payeng) ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் பிரம்மபுத்திரா நதி அருகே தனி ஒரு மனிதராக ஒரு வனத்தையே உருவாக்கியுள்ளார். அப்பகுதிக்கு இவருடைய செல்லப்பெயரான முலாய் என்பதினை இட்டு, முலாய் வனப்பகுதி என்று அழைக்கின்றனர். இது இந்தியாவிலுள்ள அசாமில், கோகிலாமுக் என்ற இடத்திற்கு அருகே 100 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள வனப்பகுதியாகும். 1979-களின் துவக்கத்தில் ஆரம்பித்த இவருடைய மரம் நடுதல் தற்போது ஐந்து புலி, மூன்று காண்டாமிருகம், ஊர்வன, பறவைகள் உள்ளிட்ட என்னற்ற விலங்குகளின் வாழ்விடமாக மாற்றியிருக்கிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மர வகைகளையும் நட்டு வளர்த்துள்ளார். இவருடைய எதிர்காலத் திட்டம் இவ்வனப்பகுதியை உலகின் மிகப்பெரிய நதிக்கரைத் தீவாக மாற்றுவதாகும்.அதுவும் ஒரு ரூபாய் லாபமிலாமல் தனது உடல் உழைப்பின் மூலம் இந்த காட்டை உருவாக்கியுள்ளார்..

2 , இரண்டாவது படத்தில் இருக்கும் நபர் ரஜினி அவர்கள் ..கார்பரேட் ஊடகங்களால் சிறந்த இந்தியர் என்று புகழப்படும் இவர் சினிமா நடிகர் , மக்களை புகைக்கு அடிமையாக்கியத்தை தவிர வேறு எந்த சாதனையை செய்தார் என்று தெரியவில்லை...

நாட்டில் மாசுகளை உண்டாக்கும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் புகைக்கு முக்கியத்துவம் கொடுத்த ரஜினி சிறந்தவரா அல்லது இன்று உலகில் காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் தனி ஒரு மனிதராக ஒரு வனத்தையே உருவாக்கிய சாதவ் பயேங்க் சிறந்தவரா...இதில் வேடிக்கை என்னவென்றால் 100 பேர் பட்டியலில் சாதவ் பயேங்க் பெயர் இருப்பதாகவே தெரியவில்லை..மாறாக பெயர்களில் பெரும்பாலும் பணத்தை நோக்கத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் சினிமா , கிரிக்கெட் பிரபலங்கள் தான் ...!#aru