Wednesday, 7 May 2014

நீங்கள் எந்த வகை கிறிஸ்தவர்கள்?
கிறிஸ்தவர்களில் பல வகுப்பார் உண்டு.
(பற்பல நோக்கங்களோடு சபையில்
சேருகிறவர்களால்
தேவமகிமை குன்றிப்போகிறது)
1. பிறப்பு கிறிஸ்தவர்கள்.
2. கல்வி கிறிஸ்தவர்கள்.
3. உத்தியோகக் கிறிஸ்தவர்கள்.
4. பிழைப்பு கிறிஸ்தவர்கள்.
5. ஞானஸ்நான கிறிஸ்தவர்கள்.
6. இராபோஜன கிறிஸ்தவர்கள்.
7. கலியாண கிறிஸ்தவர்கள்.
8. மீண்டும் பழைய வாழ்க்கை திரும்பும்
(பன்றிக்) கிறிஸ்தவர்கள்.
9. கல்லறைக் கிறிஸ்தவர்கள்.
10. பாரம்பரிய (பரம்பரையான)
கிறிஸ்தவர்கள்.
11. பெருமை கிறிஸ்தவர்கள்.
12. வாரத்தில் ஒரு நாள் கிறிஸ்தவர்கள்.
13. வருடத்தில் வரும்
பண்டிகை கிறிஸ்தவர்கள்.
14. சபைகளில் பதவி கிறிஸ்தவர்கள்.
15. பெயர் கிறிஸ்தவர்கள்.
16. மனமாறாத (பழைய
குணத்தோடு வாழும்) கிறிஸ்தவர்கள்.
17.தினமும் வேதம் மட்டும்
வாசித்து வேறு எதையு செய்யாத
கிறிஸ்தவர்கள்.
18. தினமும் ஜெபம் மட்டும் செய்து ,
வேறு எதும் செய்யாத கிறிஸ்தவர்கள்.
19. மனிதர் காண
பார்வைக்கு கிறிஸ்தவர்கள்.
20. கிறிஸ்தவனை போல வேஷம் போடும்
கிறிஸ்தவர்கள்.
21. வேதத்தின்படி நடக்காத
கிறிஸ்தவர்கள்.
22. ஆலயத்தில் மட்டும் கிறிஸ்தவர்கள்.
23.விருந்து கிறிஸ்தவர்கள்.
24. அற்புதம் அடையாள கிறிஸ்தவர்கள்.
25. கிறிஸ்தற்ற (சபையில் சேர்ந்தும்
கிறிஸ்துவோடே சேராத) கிறிஸ்தவர்கள்.
இதில் எழுதாத இன்னும் பல
கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்.. நாம்
இதில் எந்த இடத்தில் இருக்கிறோம்
என்று சிந்தித்து,
வாழ்வது ஒரு வாழ்க்கை அதை முழுமையாக
இயேசுவுக்காக அர்ப்பணித்து வாழ்வோம்..
நாம் கிறிஸ்துவுக்குள் இருக்க
முயற்சி செய்வோம்.. 2கொரி5:17.
நம்மை பார்ப்பவர்கள் மற்றும் நம்மிடத்தில்
பழகுகிறவர்களும்
இயேசு கிறிஸ்துவை கற்றுக்
(அறிந்துக்) கொள்ளவேண்டும்...
நாம் ஆயத்தமாவோம் மற்றவரையும்
ஆயத்தப்படுத்துவோம்... ஆமென்...

Saturday, 3 May 2014

தமிழகத்தை துளைத்த தோட்டாக்களும்...சிதறடித்த வெடிகுண்டுகளும்!
Posted Date : 17:12 (02/05/2014)Last updated : 18:00 (02/05/2014)
இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் எப்போதும் அமைதிப்பூங்காதான். ஆனால், விதி(Rule) என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கும் இருக்கும் அல்லவா? அதற்கேற்ப, இந்த அமைதிப்பூங்காவும் சமயங்களில் தோட்டாக்களின் சீற்றத்தினாலும் வெடிகுண்டுகளின் கோரத்தினாலும் காயம்பட்ட வரலாறு நிறைய இருக்கிறது. சமயங்களில் இங்கு நடந்த கோரங்கள், உலகின் பார்வையைக்கூட தமிழகத்தின் பக்கம் திருப்பி உள்ளது. அப்படி நடந்த சில சம்பவங்கள்..

இலங்கைக்கு வைத்த குறி...மீனம்பாக்கத்தை சிதைத்த சூட்கேஸ் பாம்!


1984 ஆம் வருடம், தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அண்டை நாடான இலங்கையில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. இனக் கலவரமும் அதற்கு எதிரான போராளிக் குழுக்களின் தீவிர எதிர் நடவடிக்கைகளும் உச்சத்தில் இருந்த நேரம் அது. அப்போது இலங்கையில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த தமிழ் ஈழ ராணுவம் (Tamil Eelam Army)  என்ற அமைப்பைச் சேர்ந்த 130 பேர், அங்கு நிலைமை மோசமானதால், தமிழகத்தில் தஞ்சமடைந்து இருந்தனர்.
அவர்களில் கதிரேசன் என்பவர் சென்னையில் இருந்து செயல்பட்டு வந்தார். தம்பிராஜா, சரவண பவன், லோகநாதன், விஜயகுமார் போன்ற தமிழ் ஈழ ராணுவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இயங்கிய ஏர் லங்கா விமானசேவை நிறுவனத்தில் வேலை பார்த்தனர்.

இவர்கள் கூட்டாக சேர்ந்து, இலங்கை விமான நிலையத்தை தகர்ப்பதற்காக ஒரு திட்டம் வகுத்தனர். சென்னை விமானநிலையத்தில் இருந்து இரவு 8.10 மணிக்குக் கிளம்பும் ஏர் லங்கா விமானம், இரவு 11 மணிக்கு கொழும்பு விமான நிலையத்தை அடையும். அதற்கு ஏற்றவாறு, நேரத்தை கணக்கிட்டு ஒரு டைம்பாம்மை செட் செய்து சூட்கே¬ஸில் வைத்து ஏர் லங்கா விமானத்தில் அனுப்பிவிட்டால், அது கொழும்பு விமானநிலையத்தை 11 மணிக்கு சென்றடைந்ததும் வெடிக்கும். அந்த நேரத்தில் கொழும்பு விமானநிலையத்தில் நிற்கும் ஆறு விமானங்களும் இந்த விபத்தில் வெடித்துவிடும். அப்படி நடந்தால், கொழும்பு நகரில் பாதி தீக்கிரையாகிவிடும் என்பது அவர்களின் திட்டம்.

அதன்படி கதிரேசன் ஏர் லங்கா விமானத்தில் பயணம் செய்வதற்கு டிக்கெட் எடுத்துக் கொண்டார். திட்டப்படி 11 மணிக்கு நேரம் குறிக்கப்பட்ட டைம்பாம் சூட்கேஸை தயார் செய்தார். தன்னுடைய நண்பர்கள் மூலம் சூட்கேஸை ஏர் லங்கா விமானத்திற்குள் அனுப்பினார். ஆனால், அந்த சூட்கேஸ் கிளியரன்ஸுக்காக போனபோது, மாறிப்போய் லங்கா விமானத்திற்கு திரும்பாமல், லண்டன் விமானத்திற்கு சென்றது. ஆனால், அந்த விமானத்தில் சூட்கேஸுக்கான பயணி இல்லை என்று சொல்லி அவர்கள் கஸ்டம்ஸ் வசம் ஒப்படைத்தனர்.

இந்த குளறுபடிகளுக்கு இடையே லங்கா விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு கிளம்பிச் சென்றுவிட்டது. விமான நிலையத்திற்குள் இருந்து இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கதிரேசன், தன் திட்டப்படி டைம் பாம் சூட்கேஸ் ஏர் லங்கா விமானத்தில் செல்லவில்லையே, இப்போது சென்னை விமான நிலையத்திலேயே வெடிக்கப்போகிறதே என்று பதறியபடியே, விமான நிலையத்தைவிட்டு வெளியேறினார்.

அங்கிருந்து வேகமாக கிண்டி சென்றவர், தொலைபேசி மூலம் போலீஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, சூட்கேஸ் விவகாரத்தைச் சொன்னார். சரியாக பதினோரு மணிக்கு அதில் இருக்கும் டைம் பாம் வெடித்துவிடும் என்ற தகவலையும் சொன்னார். இதையடுத்து, விமானநிலையத்திற்கு தகவல் சொன்ன போலீஸ்காரர்கள், உடனடியாக அங்கு கிளம்பிப் போகவும் செய்தனர். கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் நேரில் பார்த்து தகவலைச் சொன்னபோது, அவர்கள் நம்ப மறுத்ததுடன் தங்க பிஸ்கெட் கடத்துவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது.

இந்த சூட்கேஸில் இருப்பது தங்க பிஸ்கட்டாகக்கூட இருக்கலாம். அதனால், எங்களுடைய சோதனைகளை முடித்துவிட்டு உங்களுக்குச் சொல்கிறோம். அதன்பிறகு வந்து சூட்கேஸை வாங்கிக்கொள்ளுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருந்த போது, கடிகார முட்கள் 11-ஐ சுட்டிக்காட்ட, டைம் பாம் வெடித்துச் சிதறியது. இதில், 33 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 27 பேர் படுகாயமடைந்தனர். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், 5 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

சூளைமேட்டை சூறையாடிய டக்ளஸ் தேவானந்தா

1986-ம் வருடம், இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சென்னை சூளைமேட்டில் வீடு எடுத்துதங்கியிருந்தனர். அவர்கள் அனைவரும் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற தமிழ் போராளிக் குழுவைச் சேர்ந்தவர்கள். டக்ளஸ் தேவானந்தா என்பவர்தான் அந்த இளைஞர்களுக்குத் தலைவன். இவர்கள் தங்கியிருந்த, சூளைமேடு இருளர் காலனியில் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வந்தவர் திருநாவுக்கரசு. அந்தப் பகுதி மக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், திருநாவுக்கரசுதான் ஓடிவந்து முன்னால் நிற்பார். மக்களும் அவரைத்தான் முதலில் நாடிப்போவார்கள்.

அந்த வருடம் நவம்பர் 1-ம் தேதி தீபாவளி. காலையில் இருந்து தீபாவளிக் கொண்டாட்டங்கள் பட்டாசு சத்தங்கள் என அமர்க்களப்பட்ட ஏரியா, மதியத்திற்கு மேல் வெறிச்சோடியது. அந்த நேரத்தில், நன்றாக குடித்துவிட்டு போதையில் வந்த ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்க இளைஞர்கள், பெட்டிக் கடையில் வாழைப்பழம் வாங்கிவிட்டு காசு தராமல் போனார்கள். இதை கடைக்காரர் தட்டிக் கேட்டதும் தகராறு மூண்டது.

கடைக்காரருக்கு ஆதரவாக அந்தப் பகுதியில் இருந்த சிலர் திரள, நிலைமை களேபரம் ஆனாது. காலனியினருக்கும், ஈ.பி.ஆர்.எல்.எப். இளைஞர்களுக்கும் தகராறு பெரிதானது. சத்தம் கேட்டு காலனி மக்களில் பெரும்பகுதியினர், வீட்டை விட்டு வெளியில் வந்து அந்த இளைஞர்களைத் தாக்க முற்பட, பயந்துபோன அவர்கள் தங்கள் அறைக்குச் சென்று ஏ.கே. 47 உள்ளிட்ட துப்பாக்கிகளை கையில் எடுத்து வந்து மக்களை நோக்கி சுட ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் பட்டாசுச் சத்தம் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே இருந்தவர்கள்கூட பொதுமக்களின் அலறல் கேட்டு வீதிக்கு வந்தனர். அவர்களில் திருநாவுக்கரசு மட்டும், அந்த இளைஞர்களை நோக்கி சுடாதீர்கள்... சுடாதீர்கள்... என்று சொல்லிக் கொண்டே முன்னேறிப்போனார். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாத டக்ளஸ் தேவனாந்தாவின் ஏ.கே.47-ல் இருந்து சீறிய தோட்டாக்கள், திருநாவுக்கரசின் உயிரைப் பறித்தன. அருகில் இருந்த சுவரில் பாய்ந்த ஒரு தோட்டா, அதில் அரையடிக்கு பள்ளத்தை ஏற்படுத்தியது என்றால், அதன் வீரியத்தை உணரலாம். அதன் பிறகு அவர்கள் மொட்டை மாடியில் ஏறி, பொதுமக்களை மிரட்டிக் கொண்டு இருந்தனர்.

இந்தத் தகவல் பரவி, அந்தப் பகுதி முழுவதும் கூட்டம் கூடியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஒரு வேன் நிறைய போலீஸ்காரர்கள் வந்தனர். அந்த வேனையும் ஈ.பி.ஆர்.எல்.எப். இளைஞர்கள் குறிவைத்து சுட ஆரம்பித்ததும், போலீஸ் வேன் அங்கிருந்து மாயமானது. அதன்பிறகு நூற்றுக்கணக்கில் வந்து குவிந்த போலீஸ்காரர்கள் ஏரியா மக்கள் அனைவரையும் வெளியில் அனுப்பிவிட்டு மொத்தமாக அந்த ஏரியாவை தங்களின் கண்ட்ரோலுக்கு கொண்டுவந்தனர்.

துப்பாக்கிகளுடன் மொட்டை  மாடியில் நின்று கொண்டிருந்த இளைஞர்களை சரண் அடையச் சொன்னது போலீஸ். ஆனால், அவர்கள் போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் முன்னிலையில்தான் சரணடைவோம் என்று கோரிக்கை வைத்தனர். அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு வால்டர் தேவாரம் வந்தார். அவர் முன்னிலையில் பத்து பேரும் சரணடைந்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு ஜாமீன் பெற்று வெளியில் வந்தவர்கள், இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார்கள். திருநாவுக்கரசை சுட்டுக்கொன்ற டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தற்போது இலங்கையில் அமைச்சராகி, அரசு விருந்தினராக இந்தியா வந்தபோது கூட டக்ளஸ் தேவானந்தா தலைமறைவுக் குற்றவாளிதான்.

முற்றிலும் முடியாத கதை மனித வெடிகுண்டு-பெல்ட் பாம்-ராஜிவ் காந்தி

பனைமரங்கள் அடர்ந்த, வளர்ச்சியடையாத தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தை நோக்கியே அன்று ஒட்டுமொத்த உலகத்தின் பார்வை இருந்தது. உலக அரசியலில் சில அதிர்வுகளை, தெற்காசிய பிராந்தியத்தில் பல முக்கிய முடிவுகளை, இந்திய அரசியலில் பல திருப்பங்களை ஏற்படுத்த காரணமாக இருந்த இந்தச் சம்பவம், தமிழக அரசியலால் என்றென்றும் தவிர்க்க முடியாத விவகாரமாகி நிற்கிறது. சம்பவம் நடந்து முடிந்து 23 ஆண்டுகள் ஆகிவிட்டபின்பும் கூட இன்னும் இதில் வெளிவராத நிஜங்கள் நிறைய இருக்கின்றன.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, அப்போது நடைபெற இருந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக  ஸ்ரீபெரும்புதூர் வந்தார். ராஜிவைக் கொல்வதற்காகவே இலங்கையில் இருந்து தமிழகம் வந்திருந்த ஒற்றைக்கண் சிவராஜன், மனிதவெடிகுண்டு தானு, சுபா ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் பிரச்சாரக் கூட்டத்தை தங்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான களமாகத் தேர்ந்தெடுத்தனர்.

உலகில் அதுவரை வழக்கத்தில் இல்லாத புதிய கொலைக்கருவி உருவாக்கப்பட்டது. நீச்சல் மற்றும் பாராசூட்வீரர்கள் அணிவதைப் போன்ற ஜாக்கெட் டெனிம் துணியில் தயாரிக்கப்பட்டு, அதற்குள் வெடிபொருள்கள் நிரப்பப்பட்டன. முதுகுவலிக்காரர்கள் இடுப்பில் கட்டிக்கொள்ளும் பெல்ட் வடிவத்தில் டெனிம் துணி பெல்ட் ஒன்றும் தயாரிக்கப்பட்டு அது ஜாக்கெட்டுடன் இணைக்கப்பட்டது. பெல்டில் பேட்டரி ஸவிட்ச் சர்க்கியூட் வகையறாக்கள் அமைக்கப்பட்டன.
அதை தன் உடலோடு அணிந்து கொண்ட தானு, அதற்கு மேல் சுடிதார் அணிந்து கையில் சந்தன மாலையுடன் ராஜிவ் காந்தியை நெருங்கினார். சந்தன மாலை அணிவிப்பதுபோல் ராஜிவை நெருங்கிய தானு, தன் உடலோடு ஒட்டியிருந்த பெல்ட்பாம்மை வெடிக்க வைத்தார். அதில் சிக்கிய ஒரு அகண்ட தேசத்தின் முன்னாள் பிரதமர் ரத்த சகதியானார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ்காரர்கள், நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்த பத்திரிகை புகைப்படக்காரர்கள்,பொதுமக்கள், மனித வெடிகுண்டு தானு உள்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தமிழகத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தை நடத்தியது இலங்கையில் இருந்து செயல்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புதான் என்று சொல்லி வழக்கு பதிவு செய்யப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், உளவுத்துறை தளபதி பொட்டு அம்மானில் தொடங்கி, தமிழகத்தில் கொலைகாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக்கூறி நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் என பலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்தக் கதையின் தொடர்ச்சி தான், இப்போது மூன்று பேர் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதும், ஏழுபேரின் விடுதலை குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க உள்ளதும்.

பத்மநாபாவும் அவரது தோழர்களும்

இலங்கையில் செயல்பட்டு வந்த ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் பத்மநாபா. எதிரிகளைகளையெடுப்பதற்காக இவர்கள் மண்டையன் குழு என்ற குழு ஒன்றை அமைத்து இருந்தனர். அந்தக்குழுவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்மநாபாவை பழிவாங்கத் துடித்தனர்.

அப்படிப்பட்ட நேரத்தில், பத்மநாபா, சென்னை கோடம்பாக்கம் ஜாக்காரியா தெருவில் அலுவலகம் அமைத்து, தங்களின் அமைப்புக்கு ஆள் சேர்த்துக் கொண்டு இருந்தார். அப்போது, 1991-ஆம் வருடம் ஜுன் மாதம், 19ம் தேதி மாலை 6.30 மணிக்கு, ஒரு வெள்ளை அம்பாசிடர் கார் அவர் அலுவலகத்திற்க வந்தது. அதில் இருந்து நான்கு பேர் இறங்கினார்கள். அவர்கள் டி56 ரக துப்பாக்கிகள் வைத்திருந்தனர் என்று சொல்லப்பட்டது(பிறகு அது ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் என்று தெரியவந்தது). வந்தவர்களில் இரண்டுபேர் வீட்டிற்கு கீழே காவலுக்கு நிற்க, மற்ற இருவரும் துப்பாக்கிகளுடன் மாடிக்குச் சென்று அறையின் கதவை தட்டினார்கள். கதவு திறக்கப்பட்ட நொடியில், அந்த அறையை நோக்கி சுடத்
தொடங்கினார்கள்.

சீறிப் பாய்ந்த தோட்டாக்கள் அறையில் இருந்த பத்மநாபா உள்பட 7 பேரை ரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தன. மரண ஓலங்கள் அந்தப்பகுதியை அலறடித்தது. அந்த ஓலம் கேட்டு, பக்கத்து அறையில் தங்கியிருந்த பத்மாநாபாவின் மற்ற தோழர்கள் ஒடி வந்தனர். அவர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அறைக்குள் ஏழு உடல்களும் ரோட்டில் மற்றவர்களின் சடலங்களும் சிதறி சின்னாபின்னமாகிக் கிடந்தன. சம்பவம் நடந்த இடத்தில் சில வெடிகுண்டுகளும், 400 துப்பாக்கி ரவைகளும் கண்டெடுக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் நடந்த அன்று, தஞ்சாவூரில் சந்தேகத்திற்கிடமாக ஒரு கார் நிற்பதும், 7 பேர் கடல் கையில் துப்பாக்கிகளுடன் இலங்கைக்கு தப்பிச் சென்றனர் என்றும் செய்திகள் வெளியானது. அப்படித் தப்பிச் சென்றவர்களில் ஒருவர் ராஜிவ் கொலை வழக்கை தமிழகத்தில் அரங்கேற்றிய ஒற்றைக் கண் சிவராசன் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வழக்கில், தமிழகத்தில் அப்போது தஞ்சம் புகுந்திருந்த 180 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் இறந்த பத்மநாபா மற்றும் அவருடைய தோழர்களின் உடல்கள், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.

உருக்குலைந்த தமிழக மான்செஸ்டர்

எங்கு வெடிக்கும்...? எப்போது வெடிக்கும் என்று தெரியாமல் ஒவ்வொரு நொடியையும் மரண அவஸ்தையோடு கோவை வாசிகளை உழல வைத்த சம்பவம். பூங்கா, தியேட்டர், ஷாப்பிங்மால், கடைகள், குழந்தைகள் விளையாடும் ரப்பர் பந்துகள் என எல்லாவற்றிலும் குண்டுகள் வெடித்தன. அதற்கு பின்னணியாக அமைந்த சம்பவங்கள்.

1997-ம் ஆண்டு, மோட்டர் சைக்கிளில் மூன்று பேராக அமர்ந்து சென்ற அல் உம்மா இளைஞர்களை, போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் தடுத்து நிறுத்தினார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்னை சற்று கடுமையானது. இந்த நேரத்தில், நவம்பர் 29-ம் தேதி போக்குவரத்துறை காவலர் செல்வராஜை சிலர் வெட்டிக் கொன்றனர். இந்தப் படுகொலைக்கு காரணம் அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது தெரியவந்து, அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்களை பின்னணியாக வைத்து கோவையில், இந்து- முஸ்லீம் கலவரம் வெடித்தது.

இரண்டு தரப்பிலும் ரத்தப்பலிகள், பெண்கள் அவமானப்படுத்தப்படுதல் என்று சம்பவங்கள் தொடர்ந்தன. பிறகு சற்று அடங்கியதுபோல் வெளியில் தெரிந்தாலும், உள்ளுக்குள் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்தது. அந்த சூழ்நிலையில், பா.ஜ.க. தலைவர் அத்வானி கோவைக்கு ரதயாத்திரை வருவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி கோவையில் வெடிக்கத் தொடங்கிய குண்டுகள் 17ம் தேதி வரை மூலைமுடுக்கில் எல்லாம் வெடித்தன. 50க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள் நாசமடைந்தன. இந்தத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரள ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி, அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் போனது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் கோவை சிறப்பு நீதிமன்றம், 43 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அதுபோல், 83 பேருக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.

சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவெடிப்பு


1993- ஆம் ஆண்டு, சென்னை சேத்துப்பட்டில் இயங்கி வந்த ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் குண்டு வெடித்தது. ஆகஸ்டு 6-ம் தேதி வெடித்த குண்டில் 11 பேர் பலியானார்கள். பலியானவர்களின் உடலில் இருந்து தெறித்த சதைகள், எதிர்வீட்டு மாடியில் டியூசன் படித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் மீது விழுந்தது. இந்த வழக்கில் இமாம் அலி, அல் உம்மா இயக்கத்தலைவர் பாஷா, பழனி பாபா, நஜிமுதின் உள்ளிட்ட பலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது இமாம் அலியும் பழனி பாபா இறந்துவிட்டனர். அபுபக்கர் சித்திக் என்பவர் தலைமறைவானர்.

எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு

1997-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி, காலையில் தூக்கம் கலைந்து செய்திகளைப் பார்த்தவர்களுக்கு பெரும் துக்கம் காத்திருந்தது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர்-6ம் நாளை கருப்பு நாளாக அனைவரும் உணர வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட சதியால், சென்னையில் இருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை 4.55 மணிக்கு குண்டு வெடித்தது. அந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்தில் நின்றபோது இது நடந்தது. நான்கு பேர் பலியானார்கள்.

அடுத்த 15 நிமிடத்தில் ஈரோடு ரயில் நிலையத்தில், சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. 2 பேர் பலியானார்கள். இரண்டு மணிநேரம் கழித்து சென்னையில் இருந்து ஆலப்புழா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. திரிச்சூர் ரயில் நிலையத்தில் அது நிகழ்ந்தது. 4 பேர் பலியானார்கள். 57 பேர் படுகாயமடைந்தனர். இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜுகாத் கமிட்டித் தலைவர் குணங்குடி ஹனீபா, ஏர்வாடி காசிம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பத்தாண்டுகளுக்குப் பின் திரும்பிய ரத்த சரித்திரம் - மேலே நாம் குறிப்பிட்ட சம்பவங்கள் எல்லாம் பத்தாண்டுகளுக்கும் இருபது ஆண்டுகளுக்கும் முந்தைய சம்பவங்கள். அதன்பிறகு, சில சிறிய அசாம்பாவிதங்கள் தவிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய குண்டுவெடிப்புகளோ துப்பாக்கித் தாக்குதல்களோ இல்லை. இப்படி ஓய்ந்திருந்த ரத்த சரித்திரம் மே-1 ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்ற கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன் மூலம் திரும்பி உள்ளது.
இரண்டு மாதங்களில் ஸ்வாதியை திருமணக் கோலத்தில் பார்க்க வேண்டிய பெற்றோர், அவளை பிணக்கோலத்தில்தான் பார்த்தனர். இந்த சம்பவத்தில், 6 பேர் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உண்மையான குற்றவாளிகள் யாரென்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

-ஜோ.ஸ்டாலின்http://news.vikatan.com/article.php?module=news&aid=27479

Tuesday, 29 April 2014

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
இந்தியாவை இந்துமயமாக்கும் ஆர்.எஸ்.எஸின் திட்டம்
மோடியை ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தும் பின்னணி என்ன? தி எக்னாமிக் டைம்ஸ் ஏடு படப்பிடிப்பு

மும்பை, ஏப்.28- மோடியை ஆர்.எஸ்.எஸ் ஏன் முன்னிறுத்துகிறது என்பது குறித்து தி எக்னா மிக் டைம்ஸ் தெளிவாகப் படம் பிடித்துள்ளது.
16ஆம் மக்களவைத் தேர்தலில் சிறப்பாக குறிப் பிடத்தக்கதாக சோனியாவின் தொலைக்காட்சிமூலம் ஏப்ரல் 14 அன்று அளித்த செய்தியாகும். தேர்தல் களத் தில் மக்களைப் பிரிக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராடும் நிலை உள்ளது. பாரதீய, ஹிந்துஸ்தானியம் என்கிற பெயரில் அழிவை நோக்கி இட்டுச் செல்கி றார்கள் என்றார். இத்தேர்தல் கொள்கையைச்சார்ந்த போட்டியாக உள்ளது என்று பிரியங்காகாந்தி கோடிட் டுக்காட்டியதுடன்  பாஜகவு டன் இணைத்துக் கொண் டுள்ள வருண்காந்தியை சாடியுள்ளார்.
இதுகுறித்து சி.பி. பாம்ப்ரி (Bhambhri) தி எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் (28.4.2014) எழுதி இருப்பதாவது:
கொள்கைப்பூர்வமான போட்டி என்பது இந்தியா வில் பழமையானதும், மிகப் பெரிய  சமுதாய, அரசியல் அமைப்பாக உள்ளதுமான காங்கிரசுக்கு ஒரே உண் மையான எதிரியாக உள்ள ஆர்.எஸ்.எஸ் என்கிற ராஷ் டிரிய சுயம் சேவக்  சங் அமைப்பை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
பிஜேபியை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ்.
1952 முதல் நடைபெற்று வரும் இந்தியாவின் மற்ற எந்த தேர்தலையும் விட, முடிவுடனும்,  ஒருவித வெறியுடனும், முழு சக்தியுடன் ஆர்.எஸ்.எஸ்சை வழிநடத்தும் மோகன் பகவத் குதித்துள்ளார். வெளிப்பார்வையில் கலாச் சார அமைப்பு என்கிற முக மூடியை அணிந்து கொண்டு, தேர்தல் காலங்களில் பாஜக மற்றும் ஜன சங்கத்தை ஆர்.எஸ்.எஸ். பின் இருக் கையில் இருந்துகொண்டு இயக்கி வரும். ஆனால், 2014இல் தேர்தல் அரசிய லில் ஆர்.எஸ்.எஸ். கொள் கையுடன் உள்ள அனைத்து ஆதரவு அமைப்புகளையும் நேரிடையாக ஈடுபடுத்தி யது. சங் பரிவாரங்கள் 1998இல் ஏற்பட்ட அனுப வத்திலிருந்து 2014இல் மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்றினால்தான் ஹிந்து ராஷ்டிரவாதம் அமைக்க முடியும் என்முடிவு செய்தது. அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான அரசு இந்தியாவில் உள்ள மாநி லங்களை ஹிந்துத்துவமாக் கும் கருத்துக்கு முன்னெ டுத்துச் சென்றதில் வெற்றி கண்டது. ஆனாலும், ஆட் சியதிகாரத்தை 2004இல் இழந்தது. பாஜகவின் இந்த தோல்வி சங்பரிவாரங்களின் தலைமையிடம் விழிப்பை ஏற்படுத்தியது. மோடியை முன்னிறுத்துவது ஏன்?
ஆகவே, மோகன் பகவத் வாஜ்பேயி காலத்திய பாஜக தலைவர்களை அரசியலிலி ருந்து ஒதுக்கிவிட்டு, பிரத மருக்கான வேட்பாளராக நரேந்திர மோடியை நிய மித்தார். ஹிந்துத்துவாவுக் காக எல்.கே.அத்வானி பாப்ரி மஸ்ஜித் இடத்தில் ராமன்கோவில் கட்டுவதாக யாத்திரை நடத்தியதைப் போன்றே, நரேந்திர மோடி யும் செயல்படுவார் என்கிற எதிர்பார்ப்பில் அவரை பிரதமருக்கான வேட்பாள ராக மோடியை ஆர்.எஸ். எஸ்.  நியமனம் செய்தது.
ஆர்.எஸ்.எஸ்சின் நிறுவனர்  ஹெட்கேவர், தொடக்கக் கால ஒருங்கி ணைப்பாளர் எம்.எஸ். கோல்வால்கர் கட்டுப்ப டாக ஹிந்துத்துவாவைப் பரப்புபவர்களை உரு வாக்குவதற்கு மட்டுமின்றி பிரிட்டிஷ் காலனியாதிக் கத்தின் பாதையில், பல்வேறு சமயங்களால், பிரிந்து இருப் பவர்களிடம் ஹிந்து பிரா மணீயத்தின் ஆதிக்கத் தூணை நாட்டுவதற்கும் ஆர்.எஸ்.எஸ். பணியாற் றியது. 2014இல் ஆர்.எஸ்.எஸ் கூறும் ஹிந்து என்பதற்கு விளக்கமாக பொருள் கூறி உள்ளது. இந்தியாவுக்கான கொள்கை என்பதாக, ஆர். எஸ்.எஸ்சின்  கொள்கையாக  அதன்வழியில் உள்ள  அமைப்புகள்,  மற்றும்  அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் என்று தெளி வாகவே கூறுகிறது.
ஆர்.எஸ்.எஸின் திட்டம்!
மத்தியிலோ, மாநிலத் திலோ பாஜக அல்லது ஆதரவு கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது, வணிகம் மற்றும் தொழில்களில் உள்ள  சில முக்கிய தொழி லதிபர்கள் ஆர்.எஸ்.எஸ்சால் நியமிக்கப்படும் நரேந்திர மோடியை ஆதரிக்க வேண் டும். இந்தத் தேர்தல்களில் இலாபத்தை எதிர்நோக்கும்  பெரும்பணக்காரர்கள் சங் பரிவாரங்களை வெளிப் படையாக ஆதரிக்க வேண் டும். ஆர்.எஸ்.எஸ்சின் கொள்கைகளை ஏற்காத வர்கள், மேலோட்டமாக உள்ள  நடுத்தர மற்றும் உயர் வகுப்பினர் ஹிந்து மனப் பான்மையுடன் இருப்பவர் களிடம் பாஜகவை, மோடியை ஆதரிக்கும் ஆர்வத்தை உருவாக்க வேண்டும்.
ஹிந்துக்களில் ஆர்வ முள்ளவர்களைத் திரட்டி  ஆர்.எஸ்.எஸ்சின் கொள் கைப் பயிற்சி அளித்து ஹிந்துத்துவக் கட்சிகளில் இணைக்க வேண்டும். தேச பக்தி, தியாக உணர்ச்சியை ஹிந்துக்கட்சியின் நிகழ்ச் சிகள் மற்றும் கொள்கை களில் எதிரொலிக்க வேண் டும்.  தேச நலனுக்கான  கட்டுப்பாடுகள்மூலம்  மில் லியன் கணக்கானவர்கள்  பாஜகவை நோக்கி வர வேண்டும். ஆனால், இந்தி யாவின் கொள்கை  ஹிந்து என்பதில் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் கணக்கில் கொள்ளப்படு கிறார்களா?
முசாபர்நகர் மற்றும ஷாம்லியில் முஸ்லீம்கள் மீதான கலவரத்தில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத் தின்கீழ் குற்றம் சுமத்தப் பட்டுள்ளனர். அவர்களை  மக்களவைத் தேர்தலில் எவ் வித தயக்கமும் இல்லாமல் தேர்தலில் நியமிப்பதும், தேர்தல் பணிகளில்  ஈடு படுத்துவதுமாக இருப் பதைப்பார்க்கும்போது, ஹிந்து இந்தியாவில் முஸ் லீம்கள் ஒருபொருட்டாக கருதப்பட வில்லை என் பதையே காட்டுகிறது. இரு வகை குடிமக்கள்
பாரத மாதா என்கிற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே முதல் தரக்குடி மகன்களாகவும், மற்ற மதத் தைச் சேர்ந்தவகுப்பினரை
இரண்டாம் தரக் குடிமகன்களாகவும் ஆக்கிவிட்டு எப்போதுமே அவர்கள் குறிவைக்கப்படும் நிலையும் ஏற்படும்.
இந்த சிறுபான்மையருக்கு எதிரான  தகவல் ஆர்.எஸ்.எஸ். பணிகளை மேற் கொண்டுள்ள  அய்ம்பது அமைப்புகளுக் கும், நாடுமுழுவதும் உள்ள  44,982 ஷாகாக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மூலம் பரவியுள்ளது. இதன்மூலம் முஸ்லீம்கள் குறிவைக்கப்பட மாட் டார்கள் என்பவர்களை ஆர்.எஸ்.எஸ். முட்டாளாக்கி உள்ளது.
சுருக்கமாகக் கூறவேண்டுமானால், இந்தியாவில் மே 16இல் இரு வேறு எதிர்ப்புக் கருத்துக்களை உடையவர்கள் வெளியில் வருவதே கடினமாகிவிடும். சமுதாயத்தில் குறிப்பிட்ட  தத்துவத்தைக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ்.-பாஜக சிறு பான்மையரை சமுதாயத்திலிருந்து விலக்கிவைப்பதைக் கொள்கையாக கொண்டுள்ளது. இதைத்தான் ஒரு சார்பற்ற  வளர்ச்சியின் முன்னுதாரண மாக கூறுகிறார்கள் என்று சி.பி. பாம்ப்ரி எழுதியுள்ளது.
(‘The Economic Times - 28.4.2014 - page-12)


Read more: http://viduthalai.in/e-paper/79419.html#ixzz30Ljj7CSs

Sunday, 20 April 2014

Easter Special : உயிர்த்தவரோடு உயிர்த்தெழுவோம்.

Easter2
ஹாரி கௌடினி என்றொரு மனிதர் இருந்தார். 1874 ல் பிறந்த இவர், தனது வாழ்நாளில் உலகப் பிரசித்தம். “தப்பிதல்களின் தலைவன்” என்று இவரை அழைத்தார்கள். என்னை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கட்டலாம், பூட்டலாம், மாட்டி வைக்கலாம், அடைத்து வைக்கலாம் அனைத்திலும் இருந்து தப்பிப்பேன், என பொதுவில் சவால் விடுவார். இவருடைய சவாலை ஏற்றுக்கொண்டு பலரும் பல விதங்களில் இவரைப் பூட்டி வைக்க நினைத்தார்கள். முடியவில்லை. பல்லாயிரம் பேருக்கு முன்னால் வைத்தே, சவால்களை வெற்றியுடன் முடிப்பார்.
ஒரு முறை இவருக்காகவே ஸ்பெஷலாக 5 வருடங்கள் கஷ்டப்பட்டு ஒரு புதுவகை பூட்டைக் கண்டுபிடித்து அவரைப் பூட்டியது, லண்டன் “டெய்லி மிரர்” செய்தி நிறுவனம். அதிலிருந்தும் தப்பினார். உலகமே அவரை வியந்து பார்த்தது .சங்கிலிகளால் பூட்டினால் தப்பினார். சவப்பெட்டியில் அடைத்து புதைத்தால் வெளியே வந்தார். பால் கேனுக்குள் திணித்துப் பூட்டினால், வெளியே வந்தார். உயர் மட்ட பாதுகாப்புடைய சிறையில் போட்டபோதும் தப்பினார் !
கடைசியாகஅக்டோபர் 31, 1926ல் மரணம் அவரைப் பூட்டியது. சாகும் முன் மனைவியிடம் சொன்னார். இதிலிருந்து தப்பிக்கும் வழி ஏதேனும் இருந்தால் நான் நிச்சயம் வருவேன். வந்து உன்னைச் சந்திப்பேன். நமது திருமண நாளில் உன்னை எப்படியும் வந்து சந்திப்பேன், காத்திரு ! என்றார். மனைவி மெழுகுதிரியும், இதயமும் உருக காத்திருந்தாள். திருமண நாள் வந்தது. ஹாரி வரவில்லை. அடுத்த வருடம் திருமண நாள் வந்தது, ஹாரி வரவில்லை. வருடங்கள் கடந்தன. பத்துவருடங்கள் சென்றபின் அவருடைய மனைவி தனது டைரியில் இப்படி எழுதினாள். “மரணத்திலிருந்து தப்பிக்க ஹாரியாலும் முடியாது ! “
யாரும் தப்ப முடியாத ஒரு சுருக்கு தான் மரணம். அதை வென்றவர் ஒரே ஒருவர் தான். அவர் தான் இறைமகன் இயேசு. மரணத்திலிருந்து உயிர்த்தவர்கள் லாசரைப் போல பலர் உண்டு. ஆனால் அவர்களுடைய பயணம் மீள முடியாத இன்னொரு மரணத்தில் தான் முடிவடைந்தது, மரித்து உயிர்த்தபின் மீண்டும் மரிக்காதவர் ஒருவரே ! அதனால் தான் அவரை மரணத்தை வென்ற மீட்பர் என அழைக்கிறோம்.
ஹாரியைப் போல இயேசுவும் கல்லறைக்குள் அடங்கியிருந்திருப்பாரேயானால், கிறிஸ்தவம் இன்று இல்லை. நற்செய்தி இல்லை. பாவத்தையும் மரணத்தையும், ஆண்டவர் வென்று விட்டார் என்பதற்கான ஆதாரம் இல்லை. நமக்கு மீட்பு இல்லை. “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்”. ( 1 கொரி 15 : 14.) என்கிறார் பவுல்.
இயேசு உயிர்த்தெழாமல் இருந்திருந்தால் நமது விசுவாசம் முட்டாள்தனமான ஒன்றாக மாறியிருக்கும். மறுபடியும் முளைத்து எழாத சூரியனை யாரும் வெளிச்சத்தின் நாயகனாகப் பார்க்க முடியாது. மரணத்தோடு முற்றுப்புள்ளியாகியிருந்தால் இயேசு ஒரு மனிதனாகவே வந்து மனிதனாய் மறைந்த ஒரு தத்துவஞானியாகியிருப்பார். ” தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ” ( உரோமர் 1 : 4″. )
இயேசு உயிர்த்தெழாமல் இருந்திருந்தால் கிறிஸ்தவம் தோன்றியிருக்காது. சீடர்களுக்கு ஒரு ஆக்ரோஷ வல்லமையை வேறு எந்த ஒரு நிகழ்வும் வழங்கியிருக்க முடியாது. அவர்கள் பொய் சொல்லவில்லை. “(கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லையென்றால்) ” நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச்சான்று பகர்வோர் ஆவோம் ( 1 கொரி 15 ). என்கிறார் பவுல். அவர்கள் பொய் சொல்லவில்லை என்பதற்கு மனித காரணங்களே போதுமானது !
நாம் எப்போது பொய் சொல்வோம் ? ஒரு பிரச்சினையிலிருந்து தப்பிக்க, அல்லது ஒரு சிக்கலுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க. அப்படித் தானே ? பிரச்சினைக்குள் நுழையவதற்காக ஒரு பொய்யைச் சொல்வோமா ? அதுவும் மிரட்டும் அரசவையிலும், விரட்டும் மதவாதிகளின் நடுவிலும் !! விளைவு கொடூரமான சாவு என தெரிந்தும் கூட பொய் சொல்லுவோமா ? தோலை உரித்து, சிலுவையில் தலைகீழாய் அறையும் போது கூட அதே பொய்யைச் சொல்வோமா !!! கண்டிப்பாக இல்லை ! எனவே சீடர்கள் பொய்சொல்லியிருக்க வாய்ப்பு கடுகளவும் இல்லை !
இயேசு உயிர்த்தெழாமல் இருந்திருந்தால் நமது பாவங்களுக்கான மன்னிப்பு இல்லை ! “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள்.” என்கிறது பைபிள். பாவங்களுக்கான மன்னிப்பு இல்லையேல், நமக்கு மறு உலக வாழ்க்கை என்பது நிச்சயம் இல்லை. எனவே தான் வேறெந்த விழாவையும் விட உயிர்ப்பு மிக முக்கியமானதாகிறது. புதிய ஏற்பாட்டின் மையமே உயிர்த்த இயேசுவின் மீது கட்டியெழுப்பப்படுகிறது.
உயிர்ப்பு என்பது கொண்டாட்டத்தின் நாள். அது தான் நமது விசுவாசத்தையும், நமது இறை அனுபவத்தையும் ஆழப்படுத்துகிறது. அது நமது வாழ்க்கையை உயிர்ப்பை நோக்கி நடத்தும் வழிகாட்டுதலைத் தரவேண்டும். இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தில் பங்குகொள்ள வேண்டுமெனில் மூன்று விஷயங்கள் நமக்குத் தேவை.

முதலாவது தேவை சிலுவையை சுமத்தல் !

“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (லூக்கா 18 : 23) என்கிறார் இயேசு. சிலுவையைச் சுமக்காமல் இயேசுவின் வழியில் நடக்க முடியாது. இயேசுவின் வழியில் நடக்காமல் இயேசுவின் உயிர்ப்பைச் சந்திக்க முடியாது.
சிலர் தங்களுக்கு வருகின்ற காய்ச்சல் தலைவலி பல்வலி போன்றவற்றையெல்லாம் “சிலுவை” என்று சொல்லித் திரிவதுண்டு. சிலுவை என்பது நமது உடல் சார்ந்த சிக்கல்கள் அல்ல. அது நமது பாவம் சார்ந்தது. நமது உலக ஆசைகளை வெறுப்பதே உண்மையான சிலுவை சுமத்தல். “தன்னலம் துறந்தால்” மட்டுமே அதைச் சுமக்க முடியும்.
கண்கள் நம்மை பாவத்தில் விழத் தூண்டினால், பிடுங்கி எறிய வேண்டும். கைகள் பாவத்தைச் செய்யத் தூண்டினால் வெட்டி விட வேண்டும் என்கிறார் இயேசு. அது தான் நாம் தினமும் சுமக்க வேண்டிய சிலுவை. அதுவே தன்னை வெறுத்து, தன் சிலுவையை சுமக்கும் நிலமை. ஆசைகள் அலைக்கழிக்கையில் மனக் கட்டுப்பாடு எனும் சிலுவையைச் சுமக்க வேண்டும். கோபம் நமது மூக்கில் ஏறி அமர்கையில் கோபம் தாண்டும் சிலுவை சுமக்க வேண்டும். இப்படி, இயேசு வெறுத்த அத்தனை விஷயங்களையும் நாமும் வெறுத்து, அதனால் வரும் இடர்கள் எனும் சிலுவையை “நாள்தோறும்” சுமக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

இரண்டாவது தேவை சிலுவையில் அறையப்படுதல்

“நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். எனவே இனி வாழ்பவன் நான் அல்ல: கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். (கலா 2 : 19-20. ) என்கிறார் பவுல். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்படுதல் என்பது பழைய வாழ்க்கையைச் சிலுவையில் அறைந்து விட்டு புதுப் பிறப்பு எடுப்பது.
பழைய மனிதனைக் களைந்துவிட்டு புதிய மனிதனை அணிந்து கொள்ளச் சொல்லும் இறை வார்த்தை அது ! ஆதாமின் வாழ்க்கை பாவத்தின் முள்கிரீடத்தை தலைமுறை தலைமுறையாய் நமது தலையில் சூட்டுகிறது. அந்தப் பாவத்தின் சாபத்தை இயேசுவின் சிலுவை அழிக்கிறது. நமது பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டுவிட்டான். இனிமேல் புது மனிதனாய் நாம் வாழவேண்டும் என்பதே பைபிள் சொல்லும் வாழ்க்கை.
பழைய ஏற்பாட்டில் செங்கடலில் எகிப்தியர்கள் அழிக்கப்பட்டு இஸ்ரயேல் புது வாழ்வுக்குள் நுழைந்தது போல, கிறிஸ்துவோடு நாம் அறையப்பட்டு புதுப் பிறப்பு எடுக்கிறோம். இதை இறைவனே முன்னின்று நடத்துகிறார். இறைவன் நடத்தும் செயலில் நமக்குரிய பங்கு, அர்ப்பணிப்பு உணர்வும், அசைக்க முடியாத நம்பிக்கையுமே ! எதை அசைக்க வேண்டுமெனிலும் முதலில் நமக்குள் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டியது அவசியம் !

மூன்றாவது தேவை இயேசுவோடு உயிர்த்தல்.

சிலுவையில் அறையப்பட்டு அப்படியே இறந்து போய்விடுவதில் அர்த்தமில்லை. பழைய பாவங்களை அழித்து விட்டு நமது வாழ்க்கையை அதைவிடப் புதிய பாவங்களுக்குள் நுழைப்பது என்பது மீண்டும் நாம் புதைத்த மனிதனைத் தோண்டி எடுத்து அணிந்து கொள்வது போல.
பேயை விரட்டிவிட்டால் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையேல் அதைவிடக் கொடிய ஏழு பேய்கள் வந்து தங்கி வீட்டை சல்லடையாக்கிவிடும். எனவே தான் சிலுவையில் அறையப்பட்டபின் அவரோடு உயிர்த்தெழுதலும் அவசியமாகிறது ! பாவங்கள் அகற்றப்பட்ட இதயத்தை இறைவனின் வார்த்தைகளாலும் வாழ்க்கையாலும் நிரப்ப வேண்டும். அதுவே இயேசுவோடு உயிர்த்தலின் அடையாளம்.
உயிர்த்த இயேசுவின் அனுபவத்தில் இணைவது என்பதும், இயேசுவுக்காய் வாழ்வோம் என்பதும் துறவற வாழ்க்கையோ, முழுநேர ஊழியமோ அல்ல. வாழும் இடத்தில், பணி செய்யும் இடத்தில் இயேசுவைப் பிரதிபலிப்பதே. நமது வெளிப்படையான வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும், மறைவான வாழ்விலும் எப்போதும் இயேசுவைப் போல வாழ்வதே ! உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிரும்போது நீங்கள் உயிர்த்த இயேசுவின் அங்கங்கள் என்பதை உலகம் கண்டு கொள்ளும்.
“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் ( யோவான் 11 : 25 – 26 ) எனும் இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை கொள்வோம். நமது வாழ்கையில் அவரைக் கொள்வோம்.

அனைவருக்கும் உயிர்த்த இயேசுவின் பெயரால் நல்வாழ்த்துகள்.


*
சேவியர்
தேசோபகாரி, ஏப்ரல் 2014

Friday, 21 March 2014

Employment Register

Employment Register -ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? உபயோகமான தகவல்கள்!
(இதை அனைத்து நண்பர்களுக்கும் Share செய்தால் உபயோகமான இருக்கும்)
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதளத்திற்கு சென்று
click here for new user ID registration என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும்.
அடுத்து வரும் பக்கத்தில் உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Create ஆகிவிடும்.
குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.
குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.
குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.
Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.
Register Number : ARD2012M00007502
வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர் )
பதிவு செய்த ஆண்டு : 2012
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.
User ID : ARD2012M00007502
Password : dd / mm / yyyy
கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
..
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்

சீகன் பால்க்

சீகன் பால்க்
சீகன்பால்க் ஜெர்மனியிலுள்ள பால்நிட்ஸில் 1682- ஆண்து ஜூன் 10-ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஒரு பணக்கார தானிய வியாபாரி. அவருக்கு அநேக வீடுகளும், வேலைக்காரர்களும், வயல்வெளிகளும் இருந்தன. இருப்பினும் சீகன்பால்க்கின் பெற்றோருக்கு உடல்நலம் சரி இல்லாமலிருந்தது. அவர்களது பராமரிப்பில் வளர்ந்த குழந்தைகள் அனைவரும் பெலவீனமாகவும் நோய்வாய்ப்பட வாய்ப்புகளுடனும் காணப்பட்டனர். சீகன்பால்க் இதற்கு விதி விலக்கல்ல. (இந்த பெலவீனமான ஊனை தாங்கியவர் கடினமான இந்திய மண்ணில் உழைத்தார் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறதல்லவா?). சீகன்பால்க் சரீரத்தில் பெலவீனராயிருந்தும் உயர்ந்த மனத்திறனையும் ஆழ்ந்த ஞானத்தையும் பெற்றிருந்தார்.
சீகன்பாலிற்கு பக்தி நிறைந்த தாயார் இருந்தார்கள். அவர்கள் மரணப்படுக்கையில் கூறின வார்த்தைகள் இவைகளே: "என் அருமை குழந்தைகளே! திருமறையை ஆராய்ந்து பாருங்கள், அவற்றின் ஒவ்வொரு பக்கங்களையும் என் கண்ணீரால் நனைத்திருக்கின்ற படியால் நீங்கள் அதில் பொக்கிஷத்தைக் காண்பீர்கள்." சீகன்பால்க் அவ்வார்த்தைகளை மறவாது திருமறையைக் கருத்தாய் கற்று வந்தார். சீகன்பால்க்கின் தாயார் இறந்த இரண்டு வருடத்தில் அவரது தகப்பனாரும் இறந்துவிட்டார். இன்னும் ஒரு வருடத்தில் அவரது சகோதரிகளில் ஒருவரும் மரித்துப்போனார்கள். தமது குடும்பத்தில் தொடர்ந்து நிகழ்ந்த இந்த துக்க சாகரம் அவரது மனதையும் தொடர்ந்து பாதித்தது. விரைவில் திறமையையும் இறை இயலையும் கற்றுக்கொள்ள கல்லூரிச் சேர்ந்தார்.
மனந்திரும்புதலின் அனுபவம்:
பால்னிட்ஸில் லத்தின் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சீகன்பால்க் கோயர்லிட்ஸில் தனது 12-ம் வயதில் உயர்நிலை படிப்பைத் தொடர்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நற்செய்தி சார்பான மறைமெய்மை சார்ந்த (Evangelical Mysticism) வட்டத்துக்குள் அறிமுகமானார். அவர் திருமறையைத் தொடர்ந்து படித்ததினாலே மறைமெய்மைக் கொள்கையினால் முற்றிலும் இழுக்கப்படாமல் உணர்ச்சி வசப்படும் அனுபவத்துக்கும் வேதாகம அறிவுக்கும் சமநிலைத் தந்து இரண்டையும் தனக்கு முக்கியமானதாய் வைத்திருந்தார். நற்செய்தி சார்பான மரைமெய்மை (Mysticism) அனுபவம் அவரை கடவுளைத் தேதும்படிச் செய்து சில மாதங்களுக்குப் பிறகு இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற உதவியது. அவருக்குள் ஓர் அற்புதம் நிகந்தது. அதன் விளைவாக அவரது வாழ்வில் அடிப்படை மாற்றம் தோன்றலாயிற்று. இந்த மாற்றத்திற்கு பிறகு சாட்சி பகர உந்துதலும் மிஷனரி அருட்பணியில் ஆர்வமும் அவரில் எழுந்தது.
கல்வியும் மிஷனரிப் பணி ஆயத்தமும்:
1703 ல் இறைஇயலில் உயர்கல்வி பெற சீகன்பால்க் ஹாலே பல்கலைகழகம் வந்து சேர்ந்தார். பிலிப் ஸ்பென்னர் மற்றும் ஆகஸ்ட் பிராங்கே (August Franகெ) என்பவர்களின் நூற்களால் மிகவும் கவரப்பட்டார். நவீன மிஷனரி இயக்கம் தோன்ற காரணமாயிருந்த பக்தி இயக்கத்திற்கு தந்தை என்று அழைக்கப்படுபவர் இந்த ஸ்பென்னர் தான். பக்தி இயக்கம் 17ம் நூற்றாண்டில் ஸ்பென்னரால் ஜெர்மனியில் தோற்றுவிக்கப்பட்டது. பிராங்கேயின் முயற்சியால் ஹாலே பல்கலைக்கழகம் பக்தி இயக்கத்தின் கல்வி மையமாகத் திகழ்ந்தது.
ஹாலேயில் கல்வி பயின்ற நாட்களில் சீகன்பால்க் நோய்வாய்ப்பட்டிருந்தார். தனது சரீர பலவீனத்தைக் குறித்து குறிப்பிடுகையில் "நான் எங்கிருந்தாலும் என் நேசக் சிலுவை என்னைப் பின் தொடருகிறது" என்பார். இருப்பினும் அவர் அனுபவித்திருந்த இயேசு அருளிய சுவிசேஷத்தின் பெலன் அவரது எல்லாச் சரீர பெலவீனங்களிலிருந்தும் அவரைத் தூக்கி நிறுத்தியது. உண்மையிலேயே இறையியல் பயிற்சியின் கடுமையான படிப்பிற்கு ஈடுகொடுக்க அயராது உழைத்தார். பரிசுத்த வேதாகமத்தைச் சலிப்பின்றிப் படித்தார். நல்ல முறையில் எபிரேய மொழியைக் கற்றார். மற்றவர்களுக்கு போதிக்கிற தான் ஆகாதவனாகாதபடி தன்னை காத்துக்கொள்ள அனுதினமும் ஜெபித்து தன் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொண்டார். அவருக்கிருந்த சரீர பெலவீனம் அவர் கருணையுடனும் மன பணிவுடனும் வாழ பெருந்துணைப் புரிந்தது.
மிஷனரிப் பணி அழைப்பு:
சீகன்பால்க்கின் இறையல் பயிற்சி நாட்களில் திருச்சபை போதக அருட்பணிக்குப் பல இடங்களிலிருந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் மிஷனரி அருட்பணியில் அவர் கொண்டிருந்த பேராவலும் அதற்கு அவர் செய்த அர்ப்பணிப்பும் மற்ற பணிகளின் அழைப்பை ஏற்றுக்கொள்ளாது மறுப்பு செய்ய உதவின.
நான்காம் பிரடெரிக் மன்னை தென்னிந்தியக்குடி அமைப்பிற்கு மிஷனரிகளை அனுப்பி கிறிஸ்தவரல்லாதோர் மத்தியில் அருட்பணியாற்றிட பேராவல் கொண்டிருந்தார். இளைஞனாய் ஹாலேயில் இறைஇயல் பயின்றுக் கொண்டிருந்த சீகன்பால்கிற்கு மிஷனரி அழைப்பு மன்னர் சார்பில் அளிக்கப்பட்டது. உண்மையில் இந்த அழைப்பினால் அவர் இறைஇயல் கல்வியை அப்போது தான் ஆரம்பித்திருந்ததாலும் அவரது உடல்நிலை மோசமாயிருந்ததாலும் அவரது வாலிபம் மிஷனரி அழைப்பை ஏற்றுக் கொள்ள முதலில் தயாராக இல்லை. அவர் மிஷனரி அழைப்பை ஏற்றுக்கொள்ளச் சற்று தயக்கம் காட்டியதற்கு காரணமே அவரால் மிஷனரி பணியை நன் முறையில் நிறைவேற்ற முடியாது என்ற எண்ணமே தவிர அது தீர்வான மறுப்பில்லை. பின்னர் அந்த அழைப்பை தூர தேசத்தில் அருட்பணி செய்யும் படியாக இறைவனே தந்த அழைப்பாக எண்ணி அதனை ஏற்றுக் கொண்டார். சீகன்பால்க்கின் பெயரும் ஹென்றி புளுட்சோவின் பெயரும் டென்மார்க்கிலுள்ள கோப்பனேகனுக்கு அனுப்பப்பட்டது. அரசாணையின்படி இந்த இரு இறைஇய‌ல் மாண‌வ‌ர்க‌ளும் லூத்த‌ர‌ன் பேராய‌ரால் குரு அபிஷேக‌ம் ப‌ண்ண‌ப்ப‌ட்ட‌‌ன‌ர். பின்னர் அர‌ச‌ குடும்ப‌த்தின‌ர் இவ‌ர்க‌ள் இருவ‌ரையும் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ அர‌ச‌ மாளிகைக்கு அழைத்த‌ன‌ர்.
அப்போஸ்த‌ல‌ர் ந‌ட‌ப‌டிகளின் நூலின் அடிப்ப‌டையில் ஓர் சிற‌ப்பு செய்தியை ம‌ன்ன‌ரின் குடும்ப‌த்திற்கு சீக‌ன்பால்க் அளித்தார். அந்த‌ நாள் முத‌ல் அர‌ச‌ குடும்ப‌த்துட‌ன் மிகுந்த‌ ந‌ட்பு ஏற்ப‌ட்ட‌து. அவ‌ர‌து ம‌ர‌ண‌ம் வ‌ரை அந்த‌ ந‌ட்பு தொட‌ர்ந்த‌து. ப‌ல‌ தேச‌ங்க‌ளைக் குறித்து சிந்தித்த‌ப் பின்ன‌ர் இந்தியாவிற்கு மிஷ‌ன‌ரிக‌ளை அனுப்ப‌ பிர‌டெரிக் ம‌ன்ன‌ர் தீர்மானித்தார். புளூட்சோ, சீக‌ன்பால்க்கை விட‌ ச‌ற்று திற‌மை குறைந்த‌வ‌ராக‌யிருந்த‌ப‌டியால் அவ‌ர் பின்ன‌ணியில் தான் செய‌ல்ப‌ட்டார். இருப்பினும் இவ்விருவ‌ரும் ஒன்றுப‌ட்டு ஒரு ந‌ல்ல‌ மிஷ‌ன‌ரி அணியாக‌த் திக‌ழ்ந்த‌ன‌ர்.
த‌ர‌ங்க‌ம்பாடி வ‌ருகை:
இள‌ம் மிஷ‌ன‌ரிக‌ளான‌ சீக‌ன்பால்க்கும் புளுட்சோவும் 1706ம் ஆண்டு ஜூலை 6ம் நாள் த‌மிழ்நாட்டின் காயிதேமில்ல‌த் மாவ‌ட்ட‌த்திலுள்ள‌ த‌ர‌ங்க‌ம்பாடி வ‌ந்து சேர்ந்த‌னர். த‌ர‌ங்க‌ம்பாடியில் டென்மார்க் குடிய‌மைப்பு ஆளுந‌ரும் ம‌ற்றும் ஐரோப்பிய‌ போத‌க‌ர்க‌ளும் மிஷ‌ன‌ரிக‌ளுக்கு ந‌ல்வ‌ர‌வு அளிக்க‌வில்லை. த‌ர‌ங்க‌ம்பாடிக்கு வ‌ர‌ அனும‌தியாம‌ல், மூன்று நாட்க‌ள் க‌ப்ப‌லில் த‌ங்கும் நிர்ப‌ந்த‌த்தை ஆளுந‌ர் ஏற்ப‌டுத்தினார். ப‌ட்ட‌ண‌த்திற்குள் வ‌ந்த‌ பிற‌கும் ச‌ந்தைவெளியில் ப‌ல‌ம‌ணிநேர‌ம் கொளுத்தும் வெயிலில் அதிகாரிக‌ளால் கைவிட‌ப்ப‌ட்ட‌ நிலையில் எங்கே த‌ங்குவ‌தென‌ திகைத்து நின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளை யாரும் ச‌ட்டை ப‌ண்ண‌வில்லை.
அனைத்து சூழ்நிலைக‌ளும் அவ‌ர்க‌ளுக்கு எதிராய் செய‌ல்ப‌ட்ட‌ன‌. டென்மார்க் அர‌ச‌னால் அனுப்ப‌ப்ப‌ட்ட‌ ஒற்ற‌ர்க‌ள் என்று ம‌க்க‌ள் இவ‌ர்க‌ளை ச‌ந்தேகிக்க‌லாயின‌ர். ஆனால் அதைரிய‌ப்ப‌டாது இந்தியாவில் சீர்திருத்த‌ திருச்ச‌பை முத‌ல் மிஷ‌ன‌ரிக‌ள் அனைத்து பிர‌ச்ச‌னைக‌ளையும் துன்ப‌ங்க‌ளையும் ச‌கித்த‌ன‌ர். பின்ன‌ர் அடிமைக‌ளாக‌ எண்ண‌ப்ப‌ட‌ இந்திய‌ ஏழை எளிய‌ ம‌க்க‌ள் வாழும் ப‌குதியில் சென்று த‌ங்கின‌ர். ம‌னித‌னால் கைவிட‌ப்ப‌ட்டும் தேவ‌னால் நெகிழ‌ப்ப‌ட‌வில்லை
இந்த‌ கொடூர‌ எதிர்ப்புக‌ள் ம‌த்தியிலும் த‌ன‌து அருட்ப‌ணியாள‌ருக்கு உத‌வி செய்ய‌ ஆண்ட‌வ‌ர் ஆய‌த்த‌ப்ப‌டுத்தி வைத்திருந்தார். அவ‌ர்க‌ள் ப‌ட‌கிலிருந்த‌போது முத‌லிய‌ப்பா என்ற‌ இந்திய‌ இளைஞ‌ன் அவ‌ர்களுக்கு உத‌வியாயிருக்க‌ முன் வ‌ந்தான். அத்துட‌ன் இராணுவ‌த்தில் ப‌ணியாற்றிய‌ ஜெர்மானிய‌ ப‌டைவீர‌ர் அவ‌ருக்கு ப‌க்க‌ப‌ல‌மும் ப‌ண‌ உத‌வியும் அளிக்க‌ முன் வ‌ந்த‌ன‌ர். விரைவில் வெகு விம‌ரிசையாக‌ சீக‌ன்பால்க் த‌ன் மிஷ‌ன‌ரிப்ப‌ணியை ஆர‌ம்பித்தார்.
இந்திய குழந்தைகளுக்கு தங்கும் வசதி கொண்ட பள்ளிகூடம் நிறுவினார்:
இந்திய அடிமைகளோடு மிஷனரிகள் வாழ்ந்தபடியால், அவர்கள் மத்தியில் தங்கள் முதல் அருட்பணியை ஆரம்பித்தனர். குடியமைப்பில் வாழ்ந்த ஐரோப்பியர்களின் இல்லங்களில் பணியாற்றிய இம்மக்களின் ஏழ்மை சீக‌ன்பால்க்கை மிகவும் ஈர்த்தது.
முதல் மிஷனரிப் பள்ளி இந்த அடிமை மக்களின் குழ்ந்தைகளுக்காக ஆரம்பமாயிற்று. ஜெர்மானியில் பிராங்கே என்பவரின் மாதிரியைப் பின்பற்றி அநாதை குழந்தை காப்பகத்தை ஏற்படுத்தினார். இந்த அடிமைக் குழந்தைகளை அவர்களது ஐரோப்பிய காப்பாளரிடம் கிரயம் கொடுத்து வாங்கி பின்பு திருமுழுக்கு கொடுத்து கிறிஸ்தவ நெறிப்படி வளர்ந்து வந்தார். இந்த இளஞ் சிறுவர்களுக்கு கல்வி புகட்டி, பயிற்சி அளித்து வருங்கால நற்செய்திப் பணிக்கு பயன்பதுத்த வேண்டும் என்பதே அவர் திட்டம்.
இந்திய கிறிஸ்தவர்களுக்காக கட்டிய முதல் ஆலயம்:
இந்திய திருச்சபையின் எதிர்காலத்தைக் குறித்து பெரும் எதிர்பார்ப்பு சீக‌ன்பால்க்குக்கு இருந்தது. அவரது அருட்பணி பலனளித்து 1707-ல் ஆண்டு மே 12-ம் நாள் போர்த்துகீசிய மொழி பேசும் 5 இந்தியர்கள் இயேசுவை இரட்சகராக அறிக்கைப் பண்ணி, திருமுழுக்குப் பெற்று இயேசுவில் தங்களுக்கிருந்த மகிழ்ச்சியை அறிக்கையிட்டனர். விரைவில் தங்களுக்கென ஒரு ஆலயம் கட்ட வேண்தியதின் தேவையை உண்ர்ந்தனர். அவர்கள் ஐரோப்பியர் ஆலயங்களில் உட்காரத் தயங்கினர். இந்தியருக்கென தனி ஆலயம் அமைக்கும் திட்டத்தை வெகுவாய் ஆட்சேபித்து, ஆலயம் கட்ட இடம் தர ஐரோப்பிய ஆளுநர் மறுத்தார்.
இருப்பினும் ஆதரவு இல்லாமையால் ஆலயம் கட்டும் திட்டம் நின்று விடவில்லை. விரைவிலேயே ஓர் இடம் கிடைத்து ஆலயம் எழுப்பப்பட்டது. ஆலயம் கட்ட பணம் குறைவு பட்ட போது மிஷனரிகள் தங்கள் சம்பளத்தில் பகுதியை கொடுத்தும் ஸ்தல மக்கள் உதவி செய்தும் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. 1707-ம் ஆண்டு 14-ம் நாள் இந்திய கிறிஸ்தவர்கள் பேரானந்திக்க ஆலயம் பிரதிஷ்டைச் செய்யப்பட்டது. பின்னர் கிறிஸ்தவர்கள் பெருகிய போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு புது எருசலேம் என்ற பேராலயமாக 1717-ம் ஆண்டு பிரதிஷ்டைச் செய்யப்பட்டது. இதுவே இன்றும் லூத்தரன் திருச்சபையினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கிராமத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது:
கிறிஸ்தவரல்லாத இந்தியர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதில் சீகன்பால்கிற்கு மிகுந்த ஆவலும் வாஞ்சையும் இருந்தது. இவர்கள் எவ்வித பயமும் கவலையுமின்றி தங்கள் இறைவணக்கத்தைச் செய்து வந்தனர். இவர்களுக்கு நற்செய்தியை திறம்பத அறிவிக்க தமிழ் மொழியையும் மக்களின் கலாச்சாரத்தையும் சீகன்பால்க் கற்றறிருந்து அவர்களின் உணர்வுகளையும் கண்ணோட்டத்தையும் நன்கு புரிந்து கொண்டார்.
சீகன்பால்க் தனது நேரத்தை மொழி கற்றல், திருமறை மொழியாக்கம், குழந்தைகள் காப்பகம் மற்றும் பள்ளியை பராமரிதல் போன்றவற்றிற்கு செலவழித்ததோடு தூர இடங்களில் காணப்பட்ட கிராமங்களுக்கும் சென்று நற்செய்தியை பிரசங்கிக்கவும் செய்தார். சென்னைக்கும் கடலூருக்கும் அவர் விஜயம் செய்தபோது கிராமங்களைச் சந்தித்து வழியில் நற்செய்தியை பிரசங்கித்து வந்தார். நற்செய்தியை அந்தணர்களோடு விவரித்தும் தாழ்ந்த ஜாதியினருக்கு அறிவித்தும் வந்தார். போதுமான ஆன்மீக வழிநடத்துதல் இல்லாமலிருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தனது அருட்பணியைச் செய்தார்.
திருமறைத் தமிழாக்கம்:
திருமறைத் தமிழாக்கம் சீகன்பால்க் தமிழ் திருச்சபைக்கு ஆற்றிய முக்கிய தொண்டாக கருதப்படுகின்றது. மிகக்குறுகிய காலத்தில் கற்பதற்கு கடினமான தமிழ் மொழியை பிழையறக் கற்று பண்டிதரானார். விரைவில் திருமறையைக் தமிழில் மொழியாக்கம் பணியைத் துவங்கினார். ரோமன் கத்தோலிக்கர்களால் உருவாக்கிய தமிழ் பதங்களைக் கொண்ட அகராதியை அவர் பயன்படுத்தினார். புதிய ஏற்பாட்டு தமிழாக்கம் நிறைவுப்பெற்று 1713 ல் அச்சடிக்கப்பட்டது. பழைய ஏற்பாடும் ரூத் புத்தகம் வரை அவர் மொழிப் பெயர்த்திருந்தார். பின்னர் வந்த மிஷனரிகள் மீதமுள்ள நூற்களை முடித்து முழு திருமறையையும் தமிழில் தந்தனர். இந்த மொழியாக்கம் பெப்பிரிஸியஸ் என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இவ்விதமாக இந்திய மொழிகளில் தமிழ்மொழி தான் முதன் முறையில் திருமறையை பெறும் வாய்ப்பை பெற்றது.
தமிழ் இலக்கண நூல் பதிக்கப்பட்டது:
சீக‌ன்பால்க் மொழியாற்ற‌ல் பெற்ற‌வ‌ராயிருந்தார். அவ‌ர் இந்தியா வ‌ந்த‌ ஒரு வ‌ருட‌த்திலேயே த‌ள‌ர்ப‌ட‌மாய் த‌மிழைப் பேசிய‌தைக் க‌ண்ட‌ த‌மிழ‌ர் மெய்சிலிர்த்த‌ன‌ர். ந‌ல்ல‌ த‌மிழ் ஆசிரிய‌ர்க‌ளின் நூற்க‌ளை அனுதின‌மும் ப‌டித்தார். ந‌ல்ல‌ ஆழ்ந்த‌ வாக்கிய‌ அமைப்புக‌ளை ம‌றுப‌டியும் ப‌டித்து ம‌ன‌தில் ப‌தித்துக்கொண்டார். ஒரே வார்த்தையையோ ஒரே உச்ச‌ரிப்பையோ ப‌ல‌முறைச் சொல்ல‌ அவ‌ர் அலுத்த‌தே இல்லை. இந்த‌ அய‌ராது உழைப்பின் உய‌ர்வாக‌ த‌மிழில் இல‌க்க‌ண‌ நூலை அவ‌ர் த‌யாரிக்க‌ முடிந்த‌து. அவ‌ர் ஹாலே ப‌ட்ட‌ண‌த்தில் 1715 ல் ஆண்டு இந்த‌ இல‌க்க‌ண‌ நூல் அச்ச‌க‌ப் ப‌ணியை நேர‌டியாக‌ க‌ண்காணித்தார். இப்ப‌டி த‌மிழ் மொழிக்கு பெருந்தொண்டாற்றி வ‌ருங்கால‌ மிஷ‌ன‌ரிக‌ள் த‌மிழ் மொழியை எளிதில் க‌ற்க‌ பெரிதும் உத‌வி புரிந்தார்.
திரும‌றைக் க‌ல்லூரி நிறுவ‌ப்ப‌ட்ட‌து:
சீக‌ன்பால்க் தொலைத் தூர‌ப் பார்வையுட‌ன் எதிர்கால‌த்தை நினைவிற் கொண்டு வ‌ருங்கால‌ திருச்ச‌பைத் த‌லைமைத் துவ‌த்திற்காக‌ இந்திய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் ப‌யிற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ வேண்டுமென‌ உண‌ர்ந்தார். இந்த‌ த‌ரிச‌ன‌த்துட‌ன் எட்டுப்பேரைக் கொண்டு 1716 ல் த‌ர‌ங்க‌ம்பாடியில் தான் முத‌ன் முத‌லில் இந்தியாவில் சீர்திருத்த‌ திருச்ச‌பை இறையிய‌லை இந்தியாவில் புக‌ட்டிய‌து. அநேக‌ர் கிராம‌ ந‌ற்செய்தி ம‌ற்றும் போத‌க‌ அருட்ப‌ணிக்காக‌ இங்கு ப‌யிற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். இப்பயிற்சிக்காக‌ த‌மிழ் திருச்ச‌பையை சேர்ந்த‌ ம‌க்க‌ளை மிக‌க் க‌வ‌ன‌த்துட‌னும் பொறுப்புட‌னும் தெரிந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌து குறிப்பிட‌த்த‌க்க‌தாகும்.
பின்ன‌ர் வ‌ந்த‌ மிஷ‌ன‌ரிக‌ளும் சீக‌ன்பால்க்கினால் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ப‌யிற்சி முறைக‌ளைக் கையாண்ட‌ன‌ர். இத‌ன் விளைவாக 1733 ம் ஆண்டிலேயே இந்து ம‌த‌த்திலிருந்து கிறிஸ்த‌வ‌ரான‌ ஆரோன் என்ப‌வ‌ர் த‌மிழ் லுத்த‌ர‌ன் திருச்ச‌பையின் முத‌ல் போத‌க‌ராய் போத‌காபிஷேக‌ம் செய்ய‌ப்ப‌ட்டார். இந்திய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளை அருட்ப‌ணிக்காக‌ ப‌யிற்றுவிக்க‌ ஒரு மிஷ‌ன‌ரிக்கு த‌னிப் பொறுப்பு கொடுக்க‌ப்ப‌ட்டு ஒதுக்க‌ப்ப‌ட‌ வேண்டுமென்று சீக‌ன்பால்க் மிஷ‌ன் த‌லைமைக்கு ப‌ரிந்துரையும் செய்தார்.
இளைஞ‌ர்க‌ளுக்கு ப‌யிற்சிப் ப‌ள்ளி துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து:
தொல‌தூர‌ நோக்கோடு வாலிப‌ர்க‌ளை ஆசிரிய‌ப் ப‌ணிக்கும் போத‌க‌ப் ப‌ணிக்கும் சீக‌ன்பால்க் ப‌யிற்றுவித்தார். இந்த‌ நோக்க‌த்திற்காக‌ கிறிஸ்த‌வ‌ வாலிப‌ர்க‌ள் த‌ங்க‌ள் இல்ல‌ங்க‌ளிலிருந்து பிரித்தெடுக்க‌ப்ப‌ட்டு காப்ப‌க‌ங்க‌ளில் த‌ங்க‌ வைத்து க‌ல்வியும் ப‌யிற்சியும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். இந்த‌ வாலிப‌ர்க‌ளுக்கு உண‌வு, உறைவிட‌ம், உடுக்க‌ துணிக‌ள் கொடுத்து ப‌யிற்சி அளிக்க‌ப்ப‌ட்ட‌து. திருச்ச‌பைக‌ளிலும் பாட‌க‌ சாலைக‌ளிலும் இவ‌ர்க‌ளுக்கு வேலைவாய்ப்பு த‌ர‌ப்ப‌ட்ட‌து. ஏனையோருக்கு குடிய‌மைப்பு நிர்வாக‌த்தில் உய‌ர்ப‌த‌வி த‌ர‌ப்ப‌ட்டு பொருளாதார‌ தாழ்வு நிலையிலிருந்த‌ கிறிஸ்த‌வ‌ குடும்ப‌ங்க‌ள் ப‌ராம‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.
இல‌க்கிய‌ப் ப‌ணி வ‌ள‌ர்ச்சி அடைத‌ல்:
1713 ம் ஆண்டு ஹாலே ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திலிருந்து மூன்று எழுத்து வ‌டிவ‌மைப்பும் அச்சு இய‌ந்திர‌மும்மிஷ‌ன‌ரிப்ப‌ணிக்கென‌ த‌மிழ‌க‌த்திற்கு அனுப்பி வைக்க‌ப்ப‌ட்ட‌து. த‌மிழ் எழுத்துக்க‌ளைக் கொண்ட‌ ஒரு அச்ச‌க‌த‌தைபிராங்கே உருவாக்கியிருந்தார். இறுதியில் ஆங்கில‌ எழுத்துக்க‌ளைக் கொண்ட‌ அச்ச‌க‌மும் அச்சுத்தாளுட‌ன் வ‌ந்துசேர்ந்த‌து. இந்த‌ வ‌ச‌திக‌ளைக் கொண்டு த‌மிழ் இல‌க்கிய‌ப் ப‌ணி வெகுவாய் விரிவுப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. பாமாலை நூல்,பாடல் நூல் தமிழாக்கம் செய்து அச்சிடப்பட்டது. ஜெபப்புத்தகமும், தியானப்புத்தகங்களும் பின்னை மொழியாக்கம்பெற்று அச்சிடப்பட்டு, இவ்விலக்கியங்கள் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியில் விரிவான முறையில்விநியோகிக்கப்பட்டது.
கடலூர், சென்னை மற்றும் இலங்கைக்கு அருட்பணி விரிவு செய்தல்:
சீகன்பால்க் டென்மார்க் குடியமைப்போடு தன் அருட்பணியை முடித்துவிடாது தன் பரந்த நோக்கோடும் ஆழ்ந்தபாரத்தோடும் நற்செய்தி இதுவரை எட்டாத மற்ற இடங்களுக்கும் தனது பணியை விரிவு செய்து கொண்டார்.சென்னை மாநகருக்கும் அண்டை நகரமாகிய கடலூருக்கும் அடிக்கடி பயணம் மேற்கொண்டுகிறிஸ்தவல்லாதவருக்கு நற்செய்தியை பிரசங்கித்தும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு தேவையானஆன்மீக போதனைகள் தந்தும் வந்தார். இலங்கையில் அருட்பணிக்கான வாய்ப்புகளை கண்டறியுமாறு அங்கும்அவர் விஜயம் செய்தார். அங்கு வாழ்ந்த ஜெர்மானியர்களுக்கு போதக விசாரணைத் தர திட்டம் வகுத்தார். ஆனால்இந்த திட்டங்கள் பின் வந்த மிஷனரிகளால் தான் நிறைவேற்ற முடிந்தது. இவ்விதமாக தமிழகத்தின் பலபகுதிகளிலும் இலங்கையிலும் ஆரம்பித்து வைத்த அருட்பணி பின்னர் ஏனைய மிஷனரிகளால் விரிவானமுறையில் செயல்படுத்தபட அனுகூலமாயிருந்தது.
சீகன்பால்க் சிறையிலிடப்ப‌டுதல்:
டென்மார்க் குடியமைப்பின் ஆளுநராகிய ஹாஸியஸ் மிஷனரிகளை ஒடுக்கும் எண்ணத்துடன் கோட்டையில்தன்னை வந்து சந்திக்குமாறு 1701 ம் ஆண்டு நவம்பர் மாதம் சீகன்பால்க்கை அழைத்தார். அவரை அழைத்து வரஇராணுவம் மிஷனரி இல்லத்தை நோக்கி விரைந்தது. முழங்காலினின்று சீகன்பால்க் ஜெபித்துக் கொண்டிருந்தபடியால் பல மணி நேரம் இராணுவத்தினர் காத்திருக்க வேண்டியதாயிற்று. பொறுமையிழந்த இராணுவ தளபதிஅவரை சபித்து ஜெபத்தை நிறுத்த வைத்து தன்னோடு அழைத்துச் சென்றான்.
ஆளுநர் ஹாஸியிஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்பவராகவும் நீதிபதியாகவும் செயல்பட்டார். சீகன்பால்க்கிற்குவிரோதமாக எந்த சாட்சியும் நிறுத்தப்படவோ விசாரிக்க‌ப்ப‌ட‌வோ இல்லை. அவ‌ரை கேட்ட‌போது இயேசுகிறிஸ்துவைப் போன்று அமைதியாய் இருந்தார். இறுதியாக‌ அவ‌ரைக் கைது செய்து சிறையில‌டைக்க‌ ஹாஸிய‌ஸ்உத்த‌ர‌விட்டார்.
மிக‌வும் கொடூர‌மாக‌ வெப்ப‌மிகுந்த‌ அறையில் சீக‌ன்பால்க் சிறைவைக்க‌ப்ப‌ட்டார். அவ‌ர‌து சிறைக் கோட்டைச‌மைய‌ல‌றைக்கு அடுத்து அமைக்க‌ப்ப‌ட்டு ச‌மைய‌ல‌றை வெப்ப‌மும் சூரிய‌ வெப்ப‌மும் அவ‌ரை வெகுவாய்வாட்டிய‌து. அவ‌ர‌து ச‌க‌ மிஷ‌ன‌ரியாகிய‌ புளூட்சோ அவ‌ரை ச‌ந்திக்க‌ அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை. எழுத‌ பேனாவும்காகித‌மும் கூட‌ அவ‌ருக்கு ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தால் அவ‌ர் த‌ன‌து திரும‌றை த‌மிழாக்க‌த்தை தொட‌ர‌முடியாம‌ற் போயிற்று.
அமைதியினால் அவ‌ர‌து மிஷ‌ன‌ரிப் ப‌ணி பார‌மும் வாஞ்சையும் அவிக்க‌ப்ப‌ட‌வும், த‌னிமையின் கொடுமையும்கொடும் வெப்ப‌மும் அவ‌ர் உட‌லிலிருந்த‌ நோய் எதிர்ப்பு த‌ன்மையையும் பெல‌னையும் முற்றிலும் அழித்துபோட‌வும் எதிரிக‌ள் ச‌தி செய்த‌ன‌ர். இருப்பினும் புளுட்சோவைப் போல் சீக‌ன்பால்க்கும் துவ‌ண்டு போகாதும‌ன‌தைரிய‌த்துட‌ன் பாட‌லாலும் ஜெப‌த்தாலும் சிறையைத் தூய்மைப்ப‌டுத்தினார்.
இத‌ன் கார‌ண‌மாக‌ ம‌க்க‌ள் திர‌ள் ஹாஸிய‌ஸ்ஸிற்கு எதிராக‌ எழும்பிய‌தால் சிறைத‌ண்ட‌னையை நீண்ட‌நாள் அவ‌ர்நீடிக்க‌ முடிய‌வில்லை. சீக‌ன்பால்க்கின் மேல் பொதும‌க்க‌ள் வைத்திருந்த‌ பாச‌ம், ம‌திப்பு, ம‌ரியாதைக்குஅள‌வில்லை. 1709 ம் ஆண்டு மார்ச் 26 ம் நாள் நான்கு மாத‌ சிறைவாச‌த்தின் பிற‌கு சீக‌ன்பால்க் விடுத‌லைச்செய்ய‌ப்ப‌ட்டார். சிறையிலிருந்து வெளிவ‌ந்த‌வுட‌ன் ப‌ல‌ மாறுத‌ல்க‌ள் ஏற்ப‌ட்ட‌ன‌. சிறையில் அவ‌ர் அனுப‌வித்த‌பாடுக‌ள் தேவ‌ன் அவ‌ருக்கு ந‌ன்‌மை ப‌ய‌க்கும்ப‌டி செய்தார். அவ‌ர் பொதும‌க்க‌ளின் மிகுந்த‌ம‌ரியாதைக்குரிய‌வ‌ரானார்.
திரும‌ண‌மும் குடும்ப‌ வாழ்வும்:
ப‌த்து வ‌ருட‌ங்க‌ள் இந்திய‌வில் அருட்ப‌ணி செய்த‌பின் சீக‌ன்பால்க் விடுமுறைக்கு ஐரோப்பா சென்றார். அங்குடென்மார்க் ம‌ன்ன‌ரை ச‌ந்தித்து த‌ன‌து வ‌ருங்கால‌ மிஷ‌ன‌ரி ப‌ணித்திட்ட‌ங்க‌ளை விவ‌ரித்து தேவையான‌ ஆத‌ர‌வைக்கோரினார். அவ‌ரும் ஐரோப்பாவில் இந்திய‌ அருட்ப‌ணிக்காக‌ ஒரு பெரும் ப‌ண‌த்தொகையைத் திர‌ட்டினார்.
ஹாலே ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திற்கு அவ‌ர் விஜ‌ய‌ம் செய்த‌போது ம‌ரியா டார‌த்தி என்ற‌ இள‌ம் பெண்ணை ச‌ந்தித்தார்.ம‌ரியாவின் க‌ல‌க‌ல‌வென்ற‌ சிரித்த‌ முக‌ அழ‌கும் ந‌ற்குண‌மும் அவ‌ரை வெகுவாய்க் க‌வ‌ர்ந்த‌ன‌. ம‌ரியாவும்சீக‌ல்பால்க்கை விரும்பி த‌ன‌து விருப்ப‌த்தை தெரிவிக்க‌ விரைவில் திரும‌ண‌ம் 1715 ம் ஆண்டு டிச‌ம்ப‌ரில்ந‌டைபெற்ற‌து. திரும‌ண‌ம் ஆன‌தும் இருவ‌ரும் ஹால‌ந்து ம‌ற்றும் இங்கிலாந்து வ‌ழியாக‌ இந்தியாவுக்கு ப‌ய‌ண‌ம்மேற்கொண்டு 1716 ம் ஆண்டு ஆக‌ஸ்ட் மாத‌ம் சென்னை வ‌ந்து சேர்ந்த‌ன‌ர். அவ்விருவ‌ருக்கும் இந்திய‌ ம‌க்க‌ளின்அன்பான‌ வ‌ர‌வேற்பு காத்திருந்த‌து. த‌மிழ் ம‌க‌ளீர் த‌ங்க‌ள் பிர‌ச்ச‌னைக‌ளை மிஷ‌ன‌ரியின் ம‌னைவியிட‌ம் த‌ய‌க்க‌மின்றிப‌கிர்ந்து ஆலோச‌னைப் பெற்ற‌ன‌ர். இவ்வித‌ம் இருவ‌ரும் ஒரு அணியாக‌ ம‌ற்ற‌ மிஷ‌ன‌ரிக‌ள் குடும்ப‌ங்க‌ளோடு சிற‌ப்புமிக்க‌ அருட்ப‌ணியாற்றி வ‌ந்த‌ன‌ர்.

Sunday, 16 March 2014

போர்னோகிராஃபி : பாலியல் சுதந்திரமா , அடிமைத்தனமா ?

டெல்லியில் 5 வயது சிறுமியை கொடூர பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய இருவர் அதற்கு சற்று முன்னர்தான் இணையத்தில் போர்னோ தளத்தை பார்வையிட்டுள்ளனர்

சமூக இழப்புகள்: போர்னோகிராபி பயங்கர வடிவங்களை கொண்டாடி, அவற்றை இயல்பானதாக முன் வைக்கிறது. இது இந்தியா போன்ற இடங்களில் ஆட்கொல்லியாக மாறுகிறது. (படம் நன்றி: தி இந்து நாளிதழ்)

க‌மலேஷ் வஸ்வானி என்பவர் உச்சநீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அதில் போர்னோகிராபியை (பாலியல் காட்சிகள்) இணையத்தில் பார்ப்பதை தடைசெய்ய வேண்டும் என்றும், மீறி பார்ப்பவர்களை பிணையில் வர இயலாத பிரிவுகளில் கைது செய்ய வேண்டும் என்றும் கோரியிருக்கிறார். இணையத்தின் கருத்துச் சுதந்திரம் மற்றும் சுதந்திரமான பாலியல் உறவுகளுக்காக நிற்பதாக சொல்லிக் கொள்ளும் இணையதளப் போராளிகள் இந்த கோரிக்கையை கடுமையாக எதிர்க்கத் துவங்கியுள்ளனர். ஆனால் கமலேஷின் கோரிக்கை, அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு போர்னோ ஒரு முக்கிய காரணம் என்பதை வலியுறுத்துகிறது. போர்னோ என்பது கருத்து சுதந்திரமா இல்லை கருத்துருவாக்கமா என்ற கேள்வியை பலரும் பரிசீலிப்பதில்லை. தவிர்க்க இயலாமல் முதலாளித்துவ அறிவுஜீவிகள் விதந்தோதும் கட்டற்ற சுதந்திரத்தின் அயோக்கியத்தனத்தை தோலுரிக்க வேண்டியதாகிறது.
இப்படி சொல்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. சமீபத்தில் டெல்லியில் 5 வயது சிறுமியை கொடூர பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய இருவர் அதற்கு சற்று முன்னர்தான் இணையத்தில் போர்னோ தளத்தை பார்வையிட்டுள்ளனர். இரண்டாவது 2012 இல் உலகிலேயே கூகுள் தேடுபொறியில் அதிகமுறை போர்ன் என்ற வார்த்தையை தேடியது டெல்லியில்தானாம். அதற்கு இணையாக தேசிய குற்றப்பதிவு காப்பகத்தின் அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் பாலியல் வல்லுறவுக் குற்றம் கடந்த ஆண்டுதான் அதிகமாம். இது பிற ஆண்டுகளைக் காட்டிலும் சற்றேறக்குறைய இருமடங்கு அதிகம்.
இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட பொது இடங்களில் இது போன்ற இணைய தளங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் கூடுகின்ற இடங்களில் ஆபாசப் படங்களை வைக்க தடை உள்ளது. காரணம் கூகுள் இணைய தளத்தில் ஒரு பன்னிரெண்டு வயது சிறுவன் அல்லது சிறுமி போர்ன் என்ற வார்த்தையை போட்டுத் தேடினால் கிடைப்பது பெரும்பாலும் காடு அல்லது வயல்வெளியில் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாகும் பெண்ணின் கதைதான். பாலியல் உறவு என்பதே அந்த பதின்ம வயது இளைஞர்களிடம் வன்முறை கலந்த இன்பமாகத்தான் பதிவாகிறது. சில காலம் கழித்து இதுவெல்லாம் சாதாரணம் என்ற அளவுக்கு புரிந்துகொள்ளப் பழகுகிறார்கள். ஊடகங்களும், சினிமாவும் சந்தையின் தேவைக்கேற்ப பெண்களை ஒரு ஸ்டீரியோ டைப் இல் பார்க்க சொல்லித் தருவதால் இளைஞர்களுக்கு பாலியல் வன்முறை சாதாரண நிகழ்வாக மாறுவது பெரிய விசயமாகப் படுவதேயில்லை.
போர்னோகிராபி பார்க்கும் பழக்கம் அதிகரிப்பதற்கு இணங்க நிஜ உலகில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. குற்றங்களில் ஈடுபடுபவர்களின் வயதும் கணிசமாக குறைந்துள்ளது. ஆகவே ஃபோர்னோ தளங்களை சரோஜாதேவி புத்தகத்தின் ஈ-பதிப்பு என்று குறைவாக மதிப்பிட்டு விட இயலாது. அமெரிக்க நீதித்துறை புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வெளியான அறிக்கை ஒன்றின்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் சேர்ந்து செய்யும் குழுவான பாலியல் வல்லுறவுக் குற்றம் 1994-98 இல் 7 சதவீதமாக இருந்து, 2005-10 இல் 10% ஆக உயர்ந்துள்ளது.
மேற்கத்திய நாடுகளில் இப்படி வல்லுறவுக்குள்ளாக்கிய காட்சியை பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் ஏற்றுவது இளைஞர்களின் ஆண்மைக்கு அடையாளமாக மாறி உள்ளது. பெண்களை போகப்பொருளாகப் பார்ப்பது, பாலியல் உறவுக்கான கருவி என ஸ்டீரியோடைப்பாக பார்க்கப் பழகிய இவர்களை அடுத்த கட்டமாக அந்த அரைத்த மாவில் கல் தோசை, மசாலா தோசை, பொடி தோசை என சுட வைக்கும் வேலையை சோசியல் மீடியா செய்யத் தூண்டுகிறது. ஏற்கெனவே உள்ள ஆணாதிக்க சமூக கட்டமைப்பும், வளர்ந்து வரும் நுகர்வு மோகமும் ஒரே பெண்ணிடம் விதவிதமான உறவு என வெரைட்டி காண்பிக்கிறது. தன்னைப் போன்ற ஒரு சக பயணி என்ற உணர்வு இந்த அமெரிக்க பாணி இளைஞனிடம் சுட்டுப்போட்டாலும் வராது.
க‌டந்த ஆண்டு அமெரிக்க நாட்டின் ஓகியோவிலுள்ள ஸ்டூபன்வில் உயர்தரப் பள்ளியில் நடந்த குழுவான பாலியல் வன்முறையில் பல மாணவர்கள் இணைந்து ஒரு மாணவியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினர். இந்த நிகழ்வை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து போட்டனர். இக்குற்றத்தில் சாட்சியாக இருந்த மாணவர்கள் இதனை ஒரு வல்லுறவு என்று நினைக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஹ்தா பார்த்தன்ஸ் என்ற அமெரிக்க மாணவியும், ஆட்ரே போட்ஸ் என்ற கனடா மாணவியும் இதே போன்ற நிகழ்வால் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
போர்னோ தளங்களில் உண்மையான பாலியல் காட்சி என்று போட்டால்தான் மவுசு அதிகம். அது அமெரிக்காவில் தோழிகளை படம் பிடிப்பதாக இருந்தால், இந்தியா போன்ற நாடுகளில் தன்னிடம் வேலை பார்க்கும் பதின்ம வயதுப் பெண்களை மிரட்டி படம் பிடிப்பதாக உள்ளது. இந்த இடத்தில்தான் சமூக தளமும், போர்னோ தளமும் பிரியும் கோடு அழியத் துவங்குகிறது. போர்னோ தளத்தில் பார்த்த போது தெரிந்த கற்பனையான பக்கத்து வீட்டு ஆண்டி இப்போது சக மாணவியாக, உடன் வேலை செய்பவராக மாறத் துவங்குகிறது. நேரடியாக போர்னோ தளத்துக்கும் பாலியல் குற்றங்களுக்கும் தொடர்பு இருப்பதாக நிரூபிக்க முடியாவிட்டாலும், இத்தளங்களை பார்ப்பதன் அதீதம் காரணமாக நிறைய மணமுறிவு, விவாகரத்துகள் நடந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
‘மூன்றாண்டு வரை தண்டனை தருமளவுக்கு ஏதேனும் சட்டம் இருக்கிறதா? என்ன வரைமுறைப்படுத்த உள்ளீர்கள்’ என்றெல்லாம் கேட்டு மத்திய அரசின் அமைச்சகங்கள் சிலவற்றுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது நீதிமன்றம். ஏப் 29 அன்றுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ‘போர்னோ பார்ப்பதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்’ என்பது போன்ற சட்டங்கள் போடப்படலாம். சினிமாவுக்கு இருப்பது போல சென்சார் போடுவது சாத்தியமில்லை என்றாலும் கட்டுப்பாடுகள் விதிப்பார்களா? எனத் தெரியவில்லை. ஆனால் போர்னோ தளங்கள் வெறும் கள்ளக் குழந்தை மட்டுமல்ல. மனித சமூகம் பண்பட எடுத்துக்கொண்ட பல நூற்றாண்டு காலத்தை பின்னோக்கி செலுத்த சில நிமிடங்கள் மட்டுமே அதற்கு தேவைப்படுகிறது. நிழலை நிஜமாக்க இளைஞர்கள் முந்துகிறார்கள். பாலியல் சுதந்திரம், எழுத சுதந்திரம் என கட்டற்ற சுதந்திரம் கடைசியில் பெண்களது உயிரோடும், சமத்துவமாகவும், சுய மானத்தோடும் வாழ்வதற்கான சுதந்திரத்தைப் பறித்து விடுகிறது.