Friday, 11 July 2014

இலங்கையில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது ஏன்? 
யுவகிருஷ்ணா

லங்கையில் மதங்களுக்கு இடையே நிலவும் பதட்டநிலை பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. முஸ்லிம், இந்து, பௌத்த மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவர் மீது ஒருவர் அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள்.’ அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு  அமெரிக்க அரசு கடந்த ஆண்டு இறுதியில் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில் இடம்பெற்றிருந்த வரிகள் இவை.

இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆங்காங்கே நடந்த சிறு தாக்குதல்கள், பௌத்த பிக்குகளால் இஸ்லாமியரது பள்ளிவாசல்கள் அழிப்பு என்று நடந்த சம்பவங்கள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தன . இலங்கையில் மீண்டும் எப்போது வேண்டு மானாலும் மத மோதல்கள் எழலாம் என்றும் கவலையோடு அமெரிக்க அரசு சுட்டிக் காட்டியிருந்தது.

அளுத்கமாவில் வெடித்த கலவரம்
இலங்கையின் மக்கள்தொகையில் இஸ்லாமியர் கிட்டத்தட்ட பத்து சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக நெடுங்காலமாகவே பௌத்த பிக்குகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இவர்களது பிடியில் இலங்கை போய்விடக்கூடாது என்று வலியுறுத்தி ஆங்காங்கே கூட்டங்கள், பேரணிகள் நடத்தத் தொடங்கினார்கள். குறிப்பாக இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஊர்வலமாகச் சென்று அவர்களுக்கு எதிராக கோஷம் இட்டு வந்தனர். இப்படித்தான் இருதரப்புக்கும் இடையே மோதல் சமீபமாகத் தொடங்கியது.

ஒரு ஞாயிறு மாலை... அன்று இலங்கையின் தென்மேற்குப் பகுதியிலிருக்கும் அளுத்கமா, பெருவலா ஆகிய கடலோர நகரங்களில் நடந்த பேரணியில் கடுமையான வன்முறை ஏற்பட்டது. மூன்று முஸ்லிம்கள் பலியாகினர். எழுபத்தைந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மசூதிகள் தாக்கப்பட்டன. தொழுது கொண்டிருந்தவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடக்க... சிதறி ஓடினர்.

வேடிக்கையான முரண் என்னவென்றால், மத வன்முறையால் ஆங்காங்கே மோதல்களும், நாடு முழுக்க மக்கள் மத்தியில் மனதளவிலான பதட்டமும் நிலவிவரும் இதே வேளையில் பொலிவியாவில் ராஜபக்‌ஷேவுக்கு அமைதிக்கான விருது வழங்கப்படுகிறது. அங்கிருந்தபடியே கூலாக, ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று அதிபர் அறிவிக்கிறார்.

யார் தூண்டியது?
வலதுசாரி புத்தமதக் குழுவான, ‘போது பல சேனா’ (புத்த வீரப்படை) என்கிற அமைப்புதான் இப்பகுதியில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்திருக்கிறது. இவர்கள் நடத்திய பேரணியில்தான் இஸ்லாமியரை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து தாக்குதலில் இறங்கியிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்தப் பேரணியில் புத்த வீரப்படையின் தலைவர் கலகோடா அத்தே ஞானசரா, மதவெறுப்பு தொனிக்க படுமோசமாகப் பேசியிருக்கிறார். ‘எந்த இஸ்லாமியராவது இனி  சிங்களர்கள் மீது கைவைக்க நினைத்தால் - குறிப்பாக புத்த துறவிகளைச் சீண்டினால் - அதுதான் இஸ்லாமியர்களின் இறுதிநாளாக இருக்கும்’ என்று அவர் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இவரது பேச்சைக் கேட்டதுமே வெறி பிடித்த கூட்டம் அப்படியே இஸ்லாமியக் குடியிருப்புகளுக்குப் போய் தாக்குதலை ஆரம்பித்தது. இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஏராளமானோர் வீட்டை விட்டு வெளியேறி அங்கிருக்கும் மசூதியில் பாதுகாப்புக்காகத் தஞ்சமடைந்தனர்.

குரான் எரிப்பு
‘ஒவ்வொரு இரவையும் அச்சத்தோடே கடக்கிறோம். காவல்துறையினர் எங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பார்கள் என்கிற நம்பிக்கை இல்லை’ என்று அப்பகுதி இஸ்லாமியர் சர்வதேச ஊடகங்களிடம் குமுறுகிறார்கள்.

‘எங்கள் வீட்டை அடித்து நொறுக்கியவர்களிடம் கெஞ்சினோம். அவர்கள் எங்களை ஆபாசமாக ஏசினார்கள். வீட்டுக்குள் இருந்த குரானை கொண்டு போய் நடுரோட்டில் போட்டு எரித்தார்கள்" என்று கண்கலங்குகிறார் எண்பது வயது பன்சியா ஃபைரூஸ்.

கொல்லப்பட்ட மூன்று முஸ்லிம்களில் இருவரது உடலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்திருக்கிறது. நான்காவதாக கொல்லப்பட்ட ஒருவர் தமிழர். ஒரு இஸ்லாமியரின் நிறுவனத்தில் காவல்காரராகப் பணிபுரிந்த அவர் மீதும் கொலைவெறித் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

இந்த வன்முறை வெடித்ததற்கு முந்தைய நாள் ஒரு புத்த மதத் துறவி மீது இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் தாக்கினார்கள் என்றொரு வதந்தி பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்த வீரப்படை இப்படியெல்லாம் வன்முறையில் ஈடுபடும் அமைப்பில்லை. இதில் ஈடுபட்டவர்கள் யாரென்று காவல்துறைதான் கண்டுபிடிக்க வேண்டும். அன்று எங்கள் தலைவர் கொஞ்சம் காட்டமாகப் பேசியது உண்மைதான். ஆனால் வன்முறையைத்  தூண்டவில்லை. எல்லா மக்களும் அமைதிவழியில் வாழவேண்டும் என்றுதான் அவர் கேட்டுக் கொண்டார்" என்று புத்த வீரப்படையின் தலைமைச் செயலரான திலந்தா வித்தனாகே  அவசர அவசரமாக மறுத்திருக்கிறார்.

அரசியல் ஆகிறது மதம்
மியான்மரைப் போலவே இலங்கையிலும் பௌத்தமதம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிபர் ராஜபக்‌ஷேவுக்கு நெருக்கமானவர்கள், அமைச்சரவை சகாக்களே கூட மத வன்முறையை ஊதிப்பெருக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இலங்கை அரசின் சட்டத்துறை அமைச்சரான ஹக்கீமே கூட இச்சம்பவங்களைக் குறிப்பிட்டு, பௌத்தர்கள் நடத்திய தாக்குதலை காவல்துறையினர் கை கட்டி வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இலங்கை அரசில் அங்கம் வகிப்பதற்காக நான் வெட்கப்படுகிறேன்" என்று குமுறினார்.

அமைதியை விரும்பும் புத்த துறவியான வடாரகா விஜிதா தெரோ இருதரப்பு மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்த கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரை புத்த வீரப்படையின் ஞானசரா, ‘அவரது அமைதிப்பணிகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று வெளிப்படையாகவே எச்சரித்தார். சில வாரங்களுக்கு முன்பாக உடல் முழுவதும் ஆழமான வெட்டுக்காயங்களோடு கொழும்புவின் புறநகர்ச் சாலை ஒன்றில் குற்றுயிரும் குலையுயிருமாக விழுந்து கிடந்தார் விஜிதா தெரோ.

புத்த வீரப்படைக்கு அதிபர் ராஜபக்‌ஷேவின் மறைமுக ஆசி இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதுவரை அதை அதிபரும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையைச் சேர்ந்த கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் என்று சுமார் முன்னூறு பேர் புத்த வீரப்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,  ஞானசராவின் மதவெறிப் பேச்சுகளைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றுகோரி கையெழுத்து இயக்கம் நடத்தியிருக்கிறார்கள்.

பொலிவியா நாட்டின் ஜி-77 சந்திப்பு முடிந்ததுமே நாடு திரும்பிய ராஜபக்ஷே பாதிக்கப்பட்ட இஸ்லாமியக் கிராமம் ஒன்றுக்கு நேரில்  சென்றார். வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நடுநிலைமையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதி கூறினார். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்திருக்கிறோம் என்று காவல்துறையும் அறிவித்திருக்கிறது.

ஆனால், இதெல்லாம் வெறும் கண்துடைப்பு. புத்த வீரப்படை மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று அரசினை நோக்கி கேட்கிறார்கள் இஸ்லாமியர்கள். அரசு எதுவும் செய்யக்கூடிய எண்ணத்தில் இல்லை என்பதுதான் கடைசிக்கட்ட நிலவரம்.

Saturday, 21 June 2014

ஆஷ் துரை எனும் கொடுங்கோலனை வீரவாஞ்சி சுட்டு சாய்த்தான்,இது வரலாற்றுப் பதிவு.
ஆனால் மறைக்கப்பட்ட வரலாறு என்று இணையதளம் முழுவதும் வேறு மாதிரியாக செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன,அயோத்திதாச பண்டிதரும் அவ்வாறே பதிவு செய்துள்ளாராம்.
குறிப்பிட்ட சாதியினரும்,கடவுள் சிலைகளும் மட்டுமே குற்றால அருவியில் குளிக்கலாம் என்ற நிலையை மாற்றி,இயற்கையை அனுபவிப்பதில் என்ன பாகுபாடு என்று கேட்டு எல்லோரையும் அருவியில் குளிக்க அனுமதிக்க உத்தரவிட்டாராம்.
தன்னுடைய அலுவலக சிப்பந்திகள் வர்ண அடிப்படையில் பிரிந்து அமர்ந்து உணவு உண்பதை மறுத்து ஒன்றாக அமர்ந்து உண்ணுமாறு உத்தரவிட்டார்.
அலுவலகத்தில் எல்லோருக்கும் பொதுவாக குடிநீர் பாத்திரம் ஏற்பாடு செய்தார்.
பிரசவ வலியால் துடித்த அருந்ததியினப் பெண்ணைக் காப்பாற்ற பலத்த எதிர்ப்பை மீறி அக்ரகாரம் வழியே அப்பெண்ணை ஆஷ்துரையும் அவர் மனைவியும் கொண்டு சென்றனர்,குதிரை வண்டியை மறித்த இளைஞர்களை சாட்டையால் விளாசினார்,அடிவாங்கி ஓடிய இளைஞர்களுள் ஒருவர் வாஞ்சிநாதன் என்கிறது ஒரு செய்தி.
வாஞ்சியின் இறுதிக் கடிதத்தில் இருக்கும் பஞ்சமன்,கோமாமிசம் உண்ணும் மிலேச்சன் போன்ற வார்த்தைகளும் வாஞ்சியின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மேலே கூறிய செய்திகள் உண்மையாக இருப்பின் ஆஷ்துரையை சிறப்பிக்க சமத்துவநாயகன் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் புலப்படவில்லை.
இன்று ஆஷ்துரையின் நினைவு நாள்,சமத்துவ நாயகனை போற்றி வணங்குகிறேன். Prince Ennares Periyar திராவிடப் புரட்சி

Wednesday, 7 May 2014

வெற்றி வெளியே இல்லை – 7
ரமணன்    

அழைத்தது  இந்திய அரசு

கெல்லாக்ஸ் பல்கலைக்கழகத்தில்  தொழிற்துறைப் பேராசிரியராக இருந்த நான் ஆழ்ந்த யோசனைகளுக்குபின் நிதி மற்றும் கணக்கியியல் துறையில் ஓர் ஆசிரியராக ஆவது என்று முடிவு செய்தேன். அது எளிதல்ல என்று எனக்குத் தெரியும். ஆனாலும் சவாலாக எடுத்து முடிக்க விரும்பினேன்.   அமெரிக்காவில் நிதி மற்றும் கணக்கியலில்  ஆசிரியராக  வேண்டுமானால், CPA என்கிற தகுதி வேண்டும். இது நமது   CA  விற்கு நிகரானது. அமெரிக்கக் கணக்காயர்கள் சொஸைட்டி நடத்தும் தேர்வு. தேர்ச்சி விகிதம் குறைவு. பாடங்களும்  வணிகவியல் பட்டதாரிகளுக்கே  கடினமானது. ஆனாலும் நான் அதைத்தான் படிக்க விரும்பினேன். 12 பாடங்களில்  தேர்ச்சி பெற வேண்டும். ஒரு கணக்கு நிறுவனத்தில் நேரடிப் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். அதற்கு விண்ணப்பிக்க, கெல்லாக்ஸ் பல்கலைக்கழகத்தில் அனுமதி கேட்டேன். அந்த டீன்  எனக்கு  அனுமதியும், ஓராண்டு லீவும் கொடுத்தார்.  

இந்த CPA எழுத குறைந்தபட்சத் தகுதி  இளநிலை பட்டப்படிப்பில்  நிதி, கணக்கியல் படித்திருக்க வேண்டும்.  CPAதேர்வு முடிவுக்குள்ளாக தகுதித் தேர்வை முடிக்க வேண்டும் . இதனால், நான் ஒரு கல்லூரியில் மாணவனாகி இளநிலை நிதி நிர்வாகம் படிக்க வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டது. கெல்லாக்ஸ் கல்லூரியிலேயே படிக்க வாய்ப்பும் தந்தார்கள். நான்தான் அதை ஏற்கவில்லை. அதுவரை வாழ்நாளில் நான் எழுதிய அத்தனை தேர்விலும் ‘அ’ அல்லது ‘அ+’ கிரேடுகள்தான் (90-100 மதிப்பெண்கள்) வாங்கியிருந்தேன். நான் பணியாற்றும் கல்லூரியில் ஒரு துணைப் பேராசிரியர்  எனது அந்த நிலையை மாற்றிவிடக்கூடிய வாய்ப்பு  உண்டு என்பதால், நான் வேறு கல்லூரியில் படிக்க விரும்பி அதில் சேர்ந்தேன்.

பேராசிரியராக இருந்த நான், மீண்டும் மாணவ வாழ்க்கைக்குத் திரும்பினேன். நேரடிப் பயிற்சிக்காக ஆர்தர் ஹாண்டர்சன் என்கிற நிறுவனத்தில் பயிற்சியாளனாகச் சேர்ந்தேன். பிஎச்.டி. பெற்ற பேராசிரியராக இருந்தாலும் அங்கு ஒரு பயிற்சியாளனாகத்தான் மதிக்கப்பட்டேன். பகலில் வேலை, மாலையில் கல்லூரி, இரவில் CPAதேர்வுகளுக்கான படிப்பு எனக் கடுமையான உழைப்பு, படிப்பு படிப்பு அதைத்தவிர எதுவுமில்லை. ஒரே ஆண்டில் அத்தனை 12 பேப்பர்களையும்  எழுதி முடித்துவிட விரும்பினேன். பலர், ‘அது கடினம், இரண்டாண்டுகளாக திட்டமிடுங்கள்’ என்றனர். நான் ஒரே ஆண்டில் முடிக்க முடியும்  என நம்பினேன்.  

அமெரிக்காவில் நான் கற்ற முதல் பாடம், இங்கு  குறைவான நேரத்தில்  இரண்டு படிப்புகளை படிக்க முடியும். அது –Money Value of Time  என்பதின் பொருளைச் சொல்லிக் கொடுத்தது. நேரத்தின் மதிப்பை பணத்தின் அளவுகோலில்  மதிப்பிடக் கூடிய வாய்ப்புகளை நான் தவற விட்டதேயில்லை. திட்டமிட்டபடி ஒரே ஆண்டில் அத்தனை பேப்பர்களிலும் நல்ல மார்க்குகளுடன் தேர்ந்து CPA ஆனேன்.  இளநிலைத் தேர்வு முடிவுகள், CPA உரிமம்  எல்லாம் வந்த பின் கெல்லாக்ஸ் பிசினஸ் ஸ்கூலின் அக்கவுண்டிங் துறையில் பேராசிரியரானேன். விரும்பியதை சவாலாக்கிக்கொண்டு  சாதித்த சந்தோஷம். துறையில் புதிய வகுப்புகளைப் புகுத்தத் திட்டமிட்டேன்.  அது பெரிய வெற்றியாகியதால், ஒரே ஆண்டில் அந்தத் துறையின் தலைவராக்கப் பட்டேன்.

உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக கனவு கண்டு,தந்தை சொன்னதற்காக கணிதத்துடன் புள்ளியியல் படித்து, கிடைத்த வாய்ப்பில் பொறியியல் படித்து, அதில் தொழிற்துறைப் பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றுப் பேராசிரியராகி,  கணக்கியல் துறையில் தேர்ந்து  உலகின் சிறந்த  நிர்வாகயியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரானேன்"  என்று தன் வெற்றிப் பயணத்தின் மைல்கற்களை விவரித்தார் பேராசிரியர் பாலா.

இந்தக் கட்டத்தில் இவர் பிஸினஸ் கணக்கு வழிமுறைகள் பற்றி எழுதிய  ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள் யார் இந்த பாலா என மேனெஜ்மெண்ட் உலகைப் பார்க்கச் செய்தது. தொடர்ந்து கெல்லாக்ஸ் கல்லூரியில் இவரது புதிய வகுப்புகள், புத்தகங்கள் அமெரிக்க கார்ப்பரேட் வட்டாரத்தில் பேசப்பட்டன. இந்திய நிர்வாகவியல் கல்லூரிகளும் இவரைக் கவனித்தன.

பெங்களூருவில்  இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) துவக்கத் தீர்மானிக்கப்பட்டபோது  அதன் தலைவர்  ராமசாமி,  சிகாகோவிற்கு வந்து இவரை அதில் சேர அழைத்தார். ஆனால், பாலா ஏற்கவில்லை. காரணம், இந்திய ஐஐஎம்மில் பணியில் சேர்ந்து  ஐஐஎம்களுக்கு உதவுவதைவிட அமெரிக்காவில் பணியிலிருந்தால், அவற்றுக்கு அதிகம் உதவி செய்யலாம் என்பதே. மேலும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அளவுக்கு அங்கு சுதந்திரம் கிடையாது என்பதும் ஒரு காரணம்.  ஆனால், பெங்களூரு ஐஐஎம்மின் முதல் 6 பேராசிரியர்களை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலிருந்து அடையாளம் கண்டு, நேர்முகத்தை தன் வீட்டிலேயே நடத்தித் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறார். இன்றும் இதுபோன்ற உதவிகளை செய்துகொண்டிருக்கிறார். இந்திரா பிரதமராக இருந்த காலத்தில் அவரது ஆலோசகரின் வேண்டுகோளை ஏற்று,  ஐஐஎம்மின் பணிகளை ஆராய்ந்து அறிக்கை கொடுத்திருக்கிறார்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியபோது பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், நிறுவனத் தலைவர்களுக்கான வகுப்புகளுக்கு வந்த இந்திய தொழிற்துறைத் தலைவர்களான ராகுல் பஜாஜ், முகேஷ் அம்பானி, கோத்ரேஜ் போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது. பின்னர், அவர்களில் சிலர் நல்ல நண்பர்களானார்கள்.   

உலகின்  முக்கிய பிஸினஸ் ஸ்கூல்களில் வகுப்பு எடுக்க அழைக்கப்பட்டதாலும்  இஸ்ரேல் போன்ற நாடுகளில் அரசின் ஆலோசனைக் குழுவில் இருந்ததாலும்  நிறையப் பயணங்கள், புதியவர்களின் சந்திப்பு எனப் பாலாவின் வாழ்க்கை பிஸியாக இருந்த நேரத்தில் அவர் எதிர்பாராத ஓர் அழைப்பு- இந்திய அரசிடமிருந்து வந்தது.

1990-களின் துவக்கத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிவிக்கப்பட்ட புதிதில் டாக்டர். மன்மோகன் சிங்  நமது IAS  அதிகாரிகளின் பார்வைகள் மாற வேண்டும், நவீன அமெரிக்க நிர்வாக முறைகளை அறிந்திருக்க வேண்டும்,  அதற்கு அவர்களை இந்தியாவிலேயே தயார் செய்யவேண்டும் என விரும்பினார்.

அதற்கு உலகின் மிகச் சிறந்த மேலாண்மைக் கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்களை அழைத்து, அவர்கள் உதவியுடன் இதைச் செய்ய விரும்பினார். இதற்காக ஓர் அதிகாரிகள் குழு  அமெரிக்கா வந்திருந்தது. கெல்லாக்ஸ் முடிவு செய்யப்பட்டு, அதனால், எனக்கு வாய்ப்பும் கிடைத்தது. நம் நாட்டுக்கு  உதவ, அதுவும் பிரதமர் மட்டத்திலிருந்து எழுப்பப்பட்டிருக்கும் யோசனை என்பதால், மிகுந்த சந்தோஷமாக ஒப்புக் கொண்டிருந்தேன்.  ஆனால், இத்திட்டத்திற்குப் பெருமளவில் டாலர் நிதி வேண்டும். நம் தேசத்தில் அப்போது  இதற்கெல்லாம் செலவழிக்க டாலர்கள் கிடையாது. நமது அதிகாரிகள் சூப்பர் புத்திசாலிகள். இம்மாதிரிப் பயிற்சிகளுக்கு ஐ.நா. பணம் ஒதுக்குகிறது. அதைப்பெற பெரிய பல்கலைக்கழகங்கள் அரசுடன் இணைய வேண்டும்.  கெல்லாக்ஸ் என்பதால், உடனே நிதி வசதி கிடைத்தது.  

தில்லியில் மத்திய அரசின் ஆதரவில் –MDI  என்று ஒரு பயிற்சி நிறுவனம் இருக்கிறது.  அதில் ஒரு பகுதியாக ‡–NMP (NATIONAL MANAGEMENT PROGRAMME)   நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டு, அதை வடிவமைக்கும் பொறுப்பை நான் ஏற்றேன். IAS  அதிகாரிகள் இந்தியாவின் தேர்ந்தெடுக்கபட்ட அதிபுத்திசாலிகள். அவர்களுக்கு  பாடத்திட்டம் அதுவும் அரசின் நடைமுறைகளுக்கேற்ப, கெல்லாக்ஸின் தரத்தில்  தயாரிப்பது ஒரு சவாலாகத்தான் இருந்தது.  

20 ஆசிரியர்களுக்கு அமெரிக்காவிலும் இங்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் இரண்டு பயிற்சிகள் என் நேரடி மேற்பார்வையில் நடந்தன. அனைத்தும் அரசாங்கத்துக்கு ஒரு பைசா செலவில்லாமல் நடந்தன. இந்த வாய்ப்பின் மூலம் ஒரு –MBA  பாடத்திட்டத்தை முழுமையாக வடிவமைப்பதின் பரிமாணங்களை அறிந்துகொண்டேன். எல்லாப் பேராசிரியர்களுக்கும் இத்தகைய வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

தொடர்ந்து கடின உழைப்பினால் வெவ்வேறு துறைகளில் தடம் பதித்து, சாதனைகளை செய்திருக்கும் பாலா, சென்னைக்கு அருகில் கிரேட் லேக்ஸ் என்கிற பெயரில் ஒரு பிசினஸ் மற்றும் மேலாண்மைக் கல்லூரியைத் துவக்கி நடத்தி வருகிறார். பல சிகரங்களைத் தொட்டு ஓய்வு பெற்றபின் 64 வயதில் இப்படி ஒரு கல்லூரியை நிறுவி நடத்தும் பொறுப்பை ஏன் மேற்கொண்டார்?

பலர் என்னிடம் கேட்ட கேள்வி இது. அமெரிக்காவில் மதிப்புமிக்க பேராசிரியர் (Distinguished professor) என்பது பெரிய கௌரவம். விரும்பும் வரை அல்லது வாழ்நாள் முழுவதும்  பேராசிரியராக இருக்கலாம். பணிச்சுமையும் அதிகம் கிடையாது. புத்தகங்கள் எழுதலாம். ஆராய்ச்சிகள் செய்யலாம். 24x7 அதாவது 24 நாட்களில் 7 மணி நேரங்கள் வகுப்புகள் எடுத்தால் போதும். அதனால், மற்ற பணிகளுக்கு  நிறைய நேரம் கிடைக்கும். அத்தகைய அருமையான ஓய்வு வாழ்க்கையை விட்டுவிட்டு ஏன் இப்படிப் பொறுப்பை வரவழைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனப் பலரும் கேட்டார்கள். இதற்குப் பதில், ஒரு வரியில் சொல்லிவிடமுடியாது. அதுவும் சவாலாக எழுந்த  ஒரு விஷயம்தான்" என அதை விவரிக்க ஆரம்பிக்கிறார்.
நீங்கள் எந்த வகை கிறிஸ்தவர்கள்?
கிறிஸ்தவர்களில் பல வகுப்பார் உண்டு.
(பற்பல நோக்கங்களோடு சபையில்
சேருகிறவர்களால்
தேவமகிமை குன்றிப்போகிறது)
1. பிறப்பு கிறிஸ்தவர்கள்.
2. கல்வி கிறிஸ்தவர்கள்.
3. உத்தியோகக் கிறிஸ்தவர்கள்.
4. பிழைப்பு கிறிஸ்தவர்கள்.
5. ஞானஸ்நான கிறிஸ்தவர்கள்.
6. இராபோஜன கிறிஸ்தவர்கள்.
7. கலியாண கிறிஸ்தவர்கள்.
8. மீண்டும் பழைய வாழ்க்கை திரும்பும்
(பன்றிக்) கிறிஸ்தவர்கள்.
9. கல்லறைக் கிறிஸ்தவர்கள்.
10. பாரம்பரிய (பரம்பரையான)
கிறிஸ்தவர்கள்.
11. பெருமை கிறிஸ்தவர்கள்.
12. வாரத்தில் ஒரு நாள் கிறிஸ்தவர்கள்.
13. வருடத்தில் வரும்
பண்டிகை கிறிஸ்தவர்கள்.
14. சபைகளில் பதவி கிறிஸ்தவர்கள்.
15. பெயர் கிறிஸ்தவர்கள்.
16. மனமாறாத (பழைய
குணத்தோடு வாழும்) கிறிஸ்தவர்கள்.
17.தினமும் வேதம் மட்டும்
வாசித்து வேறு எதையு செய்யாத
கிறிஸ்தவர்கள்.
18. தினமும் ஜெபம் மட்டும் செய்து ,
வேறு எதும் செய்யாத கிறிஸ்தவர்கள்.
19. மனிதர் காண
பார்வைக்கு கிறிஸ்தவர்கள்.
20. கிறிஸ்தவனை போல வேஷம் போடும்
கிறிஸ்தவர்கள்.
21. வேதத்தின்படி நடக்காத
கிறிஸ்தவர்கள்.
22. ஆலயத்தில் மட்டும் கிறிஸ்தவர்கள்.
23.விருந்து கிறிஸ்தவர்கள்.
24. அற்புதம் அடையாள கிறிஸ்தவர்கள்.
25. கிறிஸ்தற்ற (சபையில் சேர்ந்தும்
கிறிஸ்துவோடே சேராத) கிறிஸ்தவர்கள்.
இதில் எழுதாத இன்னும் பல
கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்.. நாம்
இதில் எந்த இடத்தில் இருக்கிறோம்
என்று சிந்தித்து,
வாழ்வது ஒரு வாழ்க்கை அதை முழுமையாக
இயேசுவுக்காக அர்ப்பணித்து வாழ்வோம்..
நாம் கிறிஸ்துவுக்குள் இருக்க
முயற்சி செய்வோம்.. 2கொரி5:17.
நம்மை பார்ப்பவர்கள் மற்றும் நம்மிடத்தில்
பழகுகிறவர்களும்
இயேசு கிறிஸ்துவை கற்றுக்
(அறிந்துக்) கொள்ளவேண்டும்...
நாம் ஆயத்தமாவோம் மற்றவரையும்
ஆயத்தப்படுத்துவோம்... ஆமென்...

Saturday, 3 May 2014

தமிழகத்தை துளைத்த தோட்டாக்களும்...சிதறடித்த வெடிகுண்டுகளும்!
Posted Date : 17:12 (02/05/2014)Last updated : 18:00 (02/05/2014)
இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் எப்போதும் அமைதிப்பூங்காதான். ஆனால், விதி(Rule) என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கும் இருக்கும் அல்லவா? அதற்கேற்ப, இந்த அமைதிப்பூங்காவும் சமயங்களில் தோட்டாக்களின் சீற்றத்தினாலும் வெடிகுண்டுகளின் கோரத்தினாலும் காயம்பட்ட வரலாறு நிறைய இருக்கிறது. சமயங்களில் இங்கு நடந்த கோரங்கள், உலகின் பார்வையைக்கூட தமிழகத்தின் பக்கம் திருப்பி உள்ளது. அப்படி நடந்த சில சம்பவங்கள்..

இலங்கைக்கு வைத்த குறி...மீனம்பாக்கத்தை சிதைத்த சூட்கேஸ் பாம்!


1984 ஆம் வருடம், தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அண்டை நாடான இலங்கையில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. இனக் கலவரமும் அதற்கு எதிரான போராளிக் குழுக்களின் தீவிர எதிர் நடவடிக்கைகளும் உச்சத்தில் இருந்த நேரம் அது. அப்போது இலங்கையில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த தமிழ் ஈழ ராணுவம் (Tamil Eelam Army)  என்ற அமைப்பைச் சேர்ந்த 130 பேர், அங்கு நிலைமை மோசமானதால், தமிழகத்தில் தஞ்சமடைந்து இருந்தனர்.
அவர்களில் கதிரேசன் என்பவர் சென்னையில் இருந்து செயல்பட்டு வந்தார். தம்பிராஜா, சரவண பவன், லோகநாதன், விஜயகுமார் போன்ற தமிழ் ஈழ ராணுவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இயங்கிய ஏர் லங்கா விமானசேவை நிறுவனத்தில் வேலை பார்த்தனர்.

இவர்கள் கூட்டாக சேர்ந்து, இலங்கை விமான நிலையத்தை தகர்ப்பதற்காக ஒரு திட்டம் வகுத்தனர். சென்னை விமானநிலையத்தில் இருந்து இரவு 8.10 மணிக்குக் கிளம்பும் ஏர் லங்கா விமானம், இரவு 11 மணிக்கு கொழும்பு விமான நிலையத்தை அடையும். அதற்கு ஏற்றவாறு, நேரத்தை கணக்கிட்டு ஒரு டைம்பாம்மை செட் செய்து சூட்கே¬ஸில் வைத்து ஏர் லங்கா விமானத்தில் அனுப்பிவிட்டால், அது கொழும்பு விமானநிலையத்தை 11 மணிக்கு சென்றடைந்ததும் வெடிக்கும். அந்த நேரத்தில் கொழும்பு விமானநிலையத்தில் நிற்கும் ஆறு விமானங்களும் இந்த விபத்தில் வெடித்துவிடும். அப்படி நடந்தால், கொழும்பு நகரில் பாதி தீக்கிரையாகிவிடும் என்பது அவர்களின் திட்டம்.

அதன்படி கதிரேசன் ஏர் லங்கா விமானத்தில் பயணம் செய்வதற்கு டிக்கெட் எடுத்துக் கொண்டார். திட்டப்படி 11 மணிக்கு நேரம் குறிக்கப்பட்ட டைம்பாம் சூட்கேஸை தயார் செய்தார். தன்னுடைய நண்பர்கள் மூலம் சூட்கேஸை ஏர் லங்கா விமானத்திற்குள் அனுப்பினார். ஆனால், அந்த சூட்கேஸ் கிளியரன்ஸுக்காக போனபோது, மாறிப்போய் லங்கா விமானத்திற்கு திரும்பாமல், லண்டன் விமானத்திற்கு சென்றது. ஆனால், அந்த விமானத்தில் சூட்கேஸுக்கான பயணி இல்லை என்று சொல்லி அவர்கள் கஸ்டம்ஸ் வசம் ஒப்படைத்தனர்.

இந்த குளறுபடிகளுக்கு இடையே லங்கா விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு கிளம்பிச் சென்றுவிட்டது. விமான நிலையத்திற்குள் இருந்து இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கதிரேசன், தன் திட்டப்படி டைம் பாம் சூட்கேஸ் ஏர் லங்கா விமானத்தில் செல்லவில்லையே, இப்போது சென்னை விமான நிலையத்திலேயே வெடிக்கப்போகிறதே என்று பதறியபடியே, விமான நிலையத்தைவிட்டு வெளியேறினார்.

அங்கிருந்து வேகமாக கிண்டி சென்றவர், தொலைபேசி மூலம் போலீஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, சூட்கேஸ் விவகாரத்தைச் சொன்னார். சரியாக பதினோரு மணிக்கு அதில் இருக்கும் டைம் பாம் வெடித்துவிடும் என்ற தகவலையும் சொன்னார். இதையடுத்து, விமானநிலையத்திற்கு தகவல் சொன்ன போலீஸ்காரர்கள், உடனடியாக அங்கு கிளம்பிப் போகவும் செய்தனர். கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் நேரில் பார்த்து தகவலைச் சொன்னபோது, அவர்கள் நம்ப மறுத்ததுடன் தங்க பிஸ்கெட் கடத்துவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது.

இந்த சூட்கேஸில் இருப்பது தங்க பிஸ்கட்டாகக்கூட இருக்கலாம். அதனால், எங்களுடைய சோதனைகளை முடித்துவிட்டு உங்களுக்குச் சொல்கிறோம். அதன்பிறகு வந்து சூட்கேஸை வாங்கிக்கொள்ளுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருந்த போது, கடிகார முட்கள் 11-ஐ சுட்டிக்காட்ட, டைம் பாம் வெடித்துச் சிதறியது. இதில், 33 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 27 பேர் படுகாயமடைந்தனர். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், 5 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

சூளைமேட்டை சூறையாடிய டக்ளஸ் தேவானந்தா

1986-ம் வருடம், இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சென்னை சூளைமேட்டில் வீடு எடுத்துதங்கியிருந்தனர். அவர்கள் அனைவரும் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற தமிழ் போராளிக் குழுவைச் சேர்ந்தவர்கள். டக்ளஸ் தேவானந்தா என்பவர்தான் அந்த இளைஞர்களுக்குத் தலைவன். இவர்கள் தங்கியிருந்த, சூளைமேடு இருளர் காலனியில் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வந்தவர் திருநாவுக்கரசு. அந்தப் பகுதி மக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், திருநாவுக்கரசுதான் ஓடிவந்து முன்னால் நிற்பார். மக்களும் அவரைத்தான் முதலில் நாடிப்போவார்கள்.

அந்த வருடம் நவம்பர் 1-ம் தேதி தீபாவளி. காலையில் இருந்து தீபாவளிக் கொண்டாட்டங்கள் பட்டாசு சத்தங்கள் என அமர்க்களப்பட்ட ஏரியா, மதியத்திற்கு மேல் வெறிச்சோடியது. அந்த நேரத்தில், நன்றாக குடித்துவிட்டு போதையில் வந்த ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்க இளைஞர்கள், பெட்டிக் கடையில் வாழைப்பழம் வாங்கிவிட்டு காசு தராமல் போனார்கள். இதை கடைக்காரர் தட்டிக் கேட்டதும் தகராறு மூண்டது.

கடைக்காரருக்கு ஆதரவாக அந்தப் பகுதியில் இருந்த சிலர் திரள, நிலைமை களேபரம் ஆனாது. காலனியினருக்கும், ஈ.பி.ஆர்.எல்.எப். இளைஞர்களுக்கும் தகராறு பெரிதானது. சத்தம் கேட்டு காலனி மக்களில் பெரும்பகுதியினர், வீட்டை விட்டு வெளியில் வந்து அந்த இளைஞர்களைத் தாக்க முற்பட, பயந்துபோன அவர்கள் தங்கள் அறைக்குச் சென்று ஏ.கே. 47 உள்ளிட்ட துப்பாக்கிகளை கையில் எடுத்து வந்து மக்களை நோக்கி சுட ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் பட்டாசுச் சத்தம் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே இருந்தவர்கள்கூட பொதுமக்களின் அலறல் கேட்டு வீதிக்கு வந்தனர். அவர்களில் திருநாவுக்கரசு மட்டும், அந்த இளைஞர்களை நோக்கி சுடாதீர்கள்... சுடாதீர்கள்... என்று சொல்லிக் கொண்டே முன்னேறிப்போனார். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாத டக்ளஸ் தேவனாந்தாவின் ஏ.கே.47-ல் இருந்து சீறிய தோட்டாக்கள், திருநாவுக்கரசின் உயிரைப் பறித்தன. அருகில் இருந்த சுவரில் பாய்ந்த ஒரு தோட்டா, அதில் அரையடிக்கு பள்ளத்தை ஏற்படுத்தியது என்றால், அதன் வீரியத்தை உணரலாம். அதன் பிறகு அவர்கள் மொட்டை மாடியில் ஏறி, பொதுமக்களை மிரட்டிக் கொண்டு இருந்தனர்.

இந்தத் தகவல் பரவி, அந்தப் பகுதி முழுவதும் கூட்டம் கூடியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஒரு வேன் நிறைய போலீஸ்காரர்கள் வந்தனர். அந்த வேனையும் ஈ.பி.ஆர்.எல்.எப். இளைஞர்கள் குறிவைத்து சுட ஆரம்பித்ததும், போலீஸ் வேன் அங்கிருந்து மாயமானது. அதன்பிறகு நூற்றுக்கணக்கில் வந்து குவிந்த போலீஸ்காரர்கள் ஏரியா மக்கள் அனைவரையும் வெளியில் அனுப்பிவிட்டு மொத்தமாக அந்த ஏரியாவை தங்களின் கண்ட்ரோலுக்கு கொண்டுவந்தனர்.

துப்பாக்கிகளுடன் மொட்டை  மாடியில் நின்று கொண்டிருந்த இளைஞர்களை சரண் அடையச் சொன்னது போலீஸ். ஆனால், அவர்கள் போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் முன்னிலையில்தான் சரணடைவோம் என்று கோரிக்கை வைத்தனர். அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு வால்டர் தேவாரம் வந்தார். அவர் முன்னிலையில் பத்து பேரும் சரணடைந்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு ஜாமீன் பெற்று வெளியில் வந்தவர்கள், இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார்கள். திருநாவுக்கரசை சுட்டுக்கொன்ற டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தற்போது இலங்கையில் அமைச்சராகி, அரசு விருந்தினராக இந்தியா வந்தபோது கூட டக்ளஸ் தேவானந்தா தலைமறைவுக் குற்றவாளிதான்.

முற்றிலும் முடியாத கதை மனித வெடிகுண்டு-பெல்ட் பாம்-ராஜிவ் காந்தி

பனைமரங்கள் அடர்ந்த, வளர்ச்சியடையாத தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தை நோக்கியே அன்று ஒட்டுமொத்த உலகத்தின் பார்வை இருந்தது. உலக அரசியலில் சில அதிர்வுகளை, தெற்காசிய பிராந்தியத்தில் பல முக்கிய முடிவுகளை, இந்திய அரசியலில் பல திருப்பங்களை ஏற்படுத்த காரணமாக இருந்த இந்தச் சம்பவம், தமிழக அரசியலால் என்றென்றும் தவிர்க்க முடியாத விவகாரமாகி நிற்கிறது. சம்பவம் நடந்து முடிந்து 23 ஆண்டுகள் ஆகிவிட்டபின்பும் கூட இன்னும் இதில் வெளிவராத நிஜங்கள் நிறைய இருக்கின்றன.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, அப்போது நடைபெற இருந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக  ஸ்ரீபெரும்புதூர் வந்தார். ராஜிவைக் கொல்வதற்காகவே இலங்கையில் இருந்து தமிழகம் வந்திருந்த ஒற்றைக்கண் சிவராஜன், மனிதவெடிகுண்டு தானு, சுபா ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் பிரச்சாரக் கூட்டத்தை தங்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான களமாகத் தேர்ந்தெடுத்தனர்.

உலகில் அதுவரை வழக்கத்தில் இல்லாத புதிய கொலைக்கருவி உருவாக்கப்பட்டது. நீச்சல் மற்றும் பாராசூட்வீரர்கள் அணிவதைப் போன்ற ஜாக்கெட் டெனிம் துணியில் தயாரிக்கப்பட்டு, அதற்குள் வெடிபொருள்கள் நிரப்பப்பட்டன. முதுகுவலிக்காரர்கள் இடுப்பில் கட்டிக்கொள்ளும் பெல்ட் வடிவத்தில் டெனிம் துணி பெல்ட் ஒன்றும் தயாரிக்கப்பட்டு அது ஜாக்கெட்டுடன் இணைக்கப்பட்டது. பெல்டில் பேட்டரி ஸவிட்ச் சர்க்கியூட் வகையறாக்கள் அமைக்கப்பட்டன.
அதை தன் உடலோடு அணிந்து கொண்ட தானு, அதற்கு மேல் சுடிதார் அணிந்து கையில் சந்தன மாலையுடன் ராஜிவ் காந்தியை நெருங்கினார். சந்தன மாலை அணிவிப்பதுபோல் ராஜிவை நெருங்கிய தானு, தன் உடலோடு ஒட்டியிருந்த பெல்ட்பாம்மை வெடிக்க வைத்தார். அதில் சிக்கிய ஒரு அகண்ட தேசத்தின் முன்னாள் பிரதமர் ரத்த சகதியானார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ்காரர்கள், நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்த பத்திரிகை புகைப்படக்காரர்கள்,பொதுமக்கள், மனித வெடிகுண்டு தானு உள்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தமிழகத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தை நடத்தியது இலங்கையில் இருந்து செயல்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புதான் என்று சொல்லி வழக்கு பதிவு செய்யப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், உளவுத்துறை தளபதி பொட்டு அம்மானில் தொடங்கி, தமிழகத்தில் கொலைகாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக்கூறி நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் என பலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்தக் கதையின் தொடர்ச்சி தான், இப்போது மூன்று பேர் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதும், ஏழுபேரின் விடுதலை குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க உள்ளதும்.

பத்மநாபாவும் அவரது தோழர்களும்

இலங்கையில் செயல்பட்டு வந்த ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் பத்மநாபா. எதிரிகளைகளையெடுப்பதற்காக இவர்கள் மண்டையன் குழு என்ற குழு ஒன்றை அமைத்து இருந்தனர். அந்தக்குழுவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்மநாபாவை பழிவாங்கத் துடித்தனர்.

அப்படிப்பட்ட நேரத்தில், பத்மநாபா, சென்னை கோடம்பாக்கம் ஜாக்காரியா தெருவில் அலுவலகம் அமைத்து, தங்களின் அமைப்புக்கு ஆள் சேர்த்துக் கொண்டு இருந்தார். அப்போது, 1991-ஆம் வருடம் ஜுன் மாதம், 19ம் தேதி மாலை 6.30 மணிக்கு, ஒரு வெள்ளை அம்பாசிடர் கார் அவர் அலுவலகத்திற்க வந்தது. அதில் இருந்து நான்கு பேர் இறங்கினார்கள். அவர்கள் டி56 ரக துப்பாக்கிகள் வைத்திருந்தனர் என்று சொல்லப்பட்டது(பிறகு அது ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் என்று தெரியவந்தது). வந்தவர்களில் இரண்டுபேர் வீட்டிற்கு கீழே காவலுக்கு நிற்க, மற்ற இருவரும் துப்பாக்கிகளுடன் மாடிக்குச் சென்று அறையின் கதவை தட்டினார்கள். கதவு திறக்கப்பட்ட நொடியில், அந்த அறையை நோக்கி சுடத்
தொடங்கினார்கள்.

சீறிப் பாய்ந்த தோட்டாக்கள் அறையில் இருந்த பத்மநாபா உள்பட 7 பேரை ரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தன. மரண ஓலங்கள் அந்தப்பகுதியை அலறடித்தது. அந்த ஓலம் கேட்டு, பக்கத்து அறையில் தங்கியிருந்த பத்மாநாபாவின் மற்ற தோழர்கள் ஒடி வந்தனர். அவர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அறைக்குள் ஏழு உடல்களும் ரோட்டில் மற்றவர்களின் சடலங்களும் சிதறி சின்னாபின்னமாகிக் கிடந்தன. சம்பவம் நடந்த இடத்தில் சில வெடிகுண்டுகளும், 400 துப்பாக்கி ரவைகளும் கண்டெடுக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் நடந்த அன்று, தஞ்சாவூரில் சந்தேகத்திற்கிடமாக ஒரு கார் நிற்பதும், 7 பேர் கடல் கையில் துப்பாக்கிகளுடன் இலங்கைக்கு தப்பிச் சென்றனர் என்றும் செய்திகள் வெளியானது. அப்படித் தப்பிச் சென்றவர்களில் ஒருவர் ராஜிவ் கொலை வழக்கை தமிழகத்தில் அரங்கேற்றிய ஒற்றைக் கண் சிவராசன் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வழக்கில், தமிழகத்தில் அப்போது தஞ்சம் புகுந்திருந்த 180 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் இறந்த பத்மநாபா மற்றும் அவருடைய தோழர்களின் உடல்கள், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.

உருக்குலைந்த தமிழக மான்செஸ்டர்

எங்கு வெடிக்கும்...? எப்போது வெடிக்கும் என்று தெரியாமல் ஒவ்வொரு நொடியையும் மரண அவஸ்தையோடு கோவை வாசிகளை உழல வைத்த சம்பவம். பூங்கா, தியேட்டர், ஷாப்பிங்மால், கடைகள், குழந்தைகள் விளையாடும் ரப்பர் பந்துகள் என எல்லாவற்றிலும் குண்டுகள் வெடித்தன. அதற்கு பின்னணியாக அமைந்த சம்பவங்கள்.

1997-ம் ஆண்டு, மோட்டர் சைக்கிளில் மூன்று பேராக அமர்ந்து சென்ற அல் உம்மா இளைஞர்களை, போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் தடுத்து நிறுத்தினார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்னை சற்று கடுமையானது. இந்த நேரத்தில், நவம்பர் 29-ம் தேதி போக்குவரத்துறை காவலர் செல்வராஜை சிலர் வெட்டிக் கொன்றனர். இந்தப் படுகொலைக்கு காரணம் அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது தெரியவந்து, அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்களை பின்னணியாக வைத்து கோவையில், இந்து- முஸ்லீம் கலவரம் வெடித்தது.

இரண்டு தரப்பிலும் ரத்தப்பலிகள், பெண்கள் அவமானப்படுத்தப்படுதல் என்று சம்பவங்கள் தொடர்ந்தன. பிறகு சற்று அடங்கியதுபோல் வெளியில் தெரிந்தாலும், உள்ளுக்குள் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்தது. அந்த சூழ்நிலையில், பா.ஜ.க. தலைவர் அத்வானி கோவைக்கு ரதயாத்திரை வருவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி கோவையில் வெடிக்கத் தொடங்கிய குண்டுகள் 17ம் தேதி வரை மூலைமுடுக்கில் எல்லாம் வெடித்தன. 50க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள் நாசமடைந்தன. இந்தத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரள ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி, அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் போனது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் கோவை சிறப்பு நீதிமன்றம், 43 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அதுபோல், 83 பேருக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.

சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவெடிப்பு


1993- ஆம் ஆண்டு, சென்னை சேத்துப்பட்டில் இயங்கி வந்த ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் குண்டு வெடித்தது. ஆகஸ்டு 6-ம் தேதி வெடித்த குண்டில் 11 பேர் பலியானார்கள். பலியானவர்களின் உடலில் இருந்து தெறித்த சதைகள், எதிர்வீட்டு மாடியில் டியூசன் படித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் மீது விழுந்தது. இந்த வழக்கில் இமாம் அலி, அல் உம்மா இயக்கத்தலைவர் பாஷா, பழனி பாபா, நஜிமுதின் உள்ளிட்ட பலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது இமாம் அலியும் பழனி பாபா இறந்துவிட்டனர். அபுபக்கர் சித்திக் என்பவர் தலைமறைவானர்.

எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு

1997-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி, காலையில் தூக்கம் கலைந்து செய்திகளைப் பார்த்தவர்களுக்கு பெரும் துக்கம் காத்திருந்தது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர்-6ம் நாளை கருப்பு நாளாக அனைவரும் உணர வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட சதியால், சென்னையில் இருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை 4.55 மணிக்கு குண்டு வெடித்தது. அந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்தில் நின்றபோது இது நடந்தது. நான்கு பேர் பலியானார்கள்.

அடுத்த 15 நிமிடத்தில் ஈரோடு ரயில் நிலையத்தில், சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. 2 பேர் பலியானார்கள். இரண்டு மணிநேரம் கழித்து சென்னையில் இருந்து ஆலப்புழா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. திரிச்சூர் ரயில் நிலையத்தில் அது நிகழ்ந்தது. 4 பேர் பலியானார்கள். 57 பேர் படுகாயமடைந்தனர். இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜுகாத் கமிட்டித் தலைவர் குணங்குடி ஹனீபா, ஏர்வாடி காசிம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பத்தாண்டுகளுக்குப் பின் திரும்பிய ரத்த சரித்திரம் - மேலே நாம் குறிப்பிட்ட சம்பவங்கள் எல்லாம் பத்தாண்டுகளுக்கும் இருபது ஆண்டுகளுக்கும் முந்தைய சம்பவங்கள். அதன்பிறகு, சில சிறிய அசாம்பாவிதங்கள் தவிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய குண்டுவெடிப்புகளோ துப்பாக்கித் தாக்குதல்களோ இல்லை. இப்படி ஓய்ந்திருந்த ரத்த சரித்திரம் மே-1 ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்ற கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன் மூலம் திரும்பி உள்ளது.
இரண்டு மாதங்களில் ஸ்வாதியை திருமணக் கோலத்தில் பார்க்க வேண்டிய பெற்றோர், அவளை பிணக்கோலத்தில்தான் பார்த்தனர். இந்த சம்பவத்தில், 6 பேர் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உண்மையான குற்றவாளிகள் யாரென்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

-ஜோ.ஸ்டாலின்http://news.vikatan.com/article.php?module=news&aid=27479

Tuesday, 29 April 2014

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
இந்தியாவை இந்துமயமாக்கும் ஆர்.எஸ்.எஸின் திட்டம்
மோடியை ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தும் பின்னணி என்ன? தி எக்னாமிக் டைம்ஸ் ஏடு படப்பிடிப்பு

மும்பை, ஏப்.28- மோடியை ஆர்.எஸ்.எஸ் ஏன் முன்னிறுத்துகிறது என்பது குறித்து தி எக்னா மிக் டைம்ஸ் தெளிவாகப் படம் பிடித்துள்ளது.
16ஆம் மக்களவைத் தேர்தலில் சிறப்பாக குறிப் பிடத்தக்கதாக சோனியாவின் தொலைக்காட்சிமூலம் ஏப்ரல் 14 அன்று அளித்த செய்தியாகும். தேர்தல் களத் தில் மக்களைப் பிரிக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராடும் நிலை உள்ளது. பாரதீய, ஹிந்துஸ்தானியம் என்கிற பெயரில் அழிவை நோக்கி இட்டுச் செல்கி றார்கள் என்றார். இத்தேர்தல் கொள்கையைச்சார்ந்த போட்டியாக உள்ளது என்று பிரியங்காகாந்தி கோடிட் டுக்காட்டியதுடன்  பாஜகவு டன் இணைத்துக் கொண் டுள்ள வருண்காந்தியை சாடியுள்ளார்.
இதுகுறித்து சி.பி. பாம்ப்ரி (Bhambhri) தி எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் (28.4.2014) எழுதி இருப்பதாவது:
கொள்கைப்பூர்வமான போட்டி என்பது இந்தியா வில் பழமையானதும், மிகப் பெரிய  சமுதாய, அரசியல் அமைப்பாக உள்ளதுமான காங்கிரசுக்கு ஒரே உண் மையான எதிரியாக உள்ள ஆர்.எஸ்.எஸ் என்கிற ராஷ் டிரிய சுயம் சேவக்  சங் அமைப்பை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
பிஜேபியை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ்.
1952 முதல் நடைபெற்று வரும் இந்தியாவின் மற்ற எந்த தேர்தலையும் விட, முடிவுடனும்,  ஒருவித வெறியுடனும், முழு சக்தியுடன் ஆர்.எஸ்.எஸ்சை வழிநடத்தும் மோகன் பகவத் குதித்துள்ளார். வெளிப்பார்வையில் கலாச் சார அமைப்பு என்கிற முக மூடியை அணிந்து கொண்டு, தேர்தல் காலங்களில் பாஜக மற்றும் ஜன சங்கத்தை ஆர்.எஸ்.எஸ். பின் இருக் கையில் இருந்துகொண்டு இயக்கி வரும். ஆனால், 2014இல் தேர்தல் அரசிய லில் ஆர்.எஸ்.எஸ். கொள் கையுடன் உள்ள அனைத்து ஆதரவு அமைப்புகளையும் நேரிடையாக ஈடுபடுத்தி யது. சங் பரிவாரங்கள் 1998இல் ஏற்பட்ட அனுப வத்திலிருந்து 2014இல் மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்றினால்தான் ஹிந்து ராஷ்டிரவாதம் அமைக்க முடியும் என்முடிவு செய்தது. அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான அரசு இந்தியாவில் உள்ள மாநி லங்களை ஹிந்துத்துவமாக் கும் கருத்துக்கு முன்னெ டுத்துச் சென்றதில் வெற்றி கண்டது. ஆனாலும், ஆட் சியதிகாரத்தை 2004இல் இழந்தது. பாஜகவின் இந்த தோல்வி சங்பரிவாரங்களின் தலைமையிடம் விழிப்பை ஏற்படுத்தியது. மோடியை முன்னிறுத்துவது ஏன்?
ஆகவே, மோகன் பகவத் வாஜ்பேயி காலத்திய பாஜக தலைவர்களை அரசியலிலி ருந்து ஒதுக்கிவிட்டு, பிரத மருக்கான வேட்பாளராக நரேந்திர மோடியை நிய மித்தார். ஹிந்துத்துவாவுக் காக எல்.கே.அத்வானி பாப்ரி மஸ்ஜித் இடத்தில் ராமன்கோவில் கட்டுவதாக யாத்திரை நடத்தியதைப் போன்றே, நரேந்திர மோடி யும் செயல்படுவார் என்கிற எதிர்பார்ப்பில் அவரை பிரதமருக்கான வேட்பாள ராக மோடியை ஆர்.எஸ். எஸ்.  நியமனம் செய்தது.
ஆர்.எஸ்.எஸ்சின் நிறுவனர்  ஹெட்கேவர், தொடக்கக் கால ஒருங்கி ணைப்பாளர் எம்.எஸ். கோல்வால்கர் கட்டுப்ப டாக ஹிந்துத்துவாவைப் பரப்புபவர்களை உரு வாக்குவதற்கு மட்டுமின்றி பிரிட்டிஷ் காலனியாதிக் கத்தின் பாதையில், பல்வேறு சமயங்களால், பிரிந்து இருப் பவர்களிடம் ஹிந்து பிரா மணீயத்தின் ஆதிக்கத் தூணை நாட்டுவதற்கும் ஆர்.எஸ்.எஸ். பணியாற் றியது. 2014இல் ஆர்.எஸ்.எஸ் கூறும் ஹிந்து என்பதற்கு விளக்கமாக பொருள் கூறி உள்ளது. இந்தியாவுக்கான கொள்கை என்பதாக, ஆர். எஸ்.எஸ்சின்  கொள்கையாக  அதன்வழியில் உள்ள  அமைப்புகள்,  மற்றும்  அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் என்று தெளி வாகவே கூறுகிறது.
ஆர்.எஸ்.எஸின் திட்டம்!
மத்தியிலோ, மாநிலத் திலோ பாஜக அல்லது ஆதரவு கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது, வணிகம் மற்றும் தொழில்களில் உள்ள  சில முக்கிய தொழி லதிபர்கள் ஆர்.எஸ்.எஸ்சால் நியமிக்கப்படும் நரேந்திர மோடியை ஆதரிக்க வேண் டும். இந்தத் தேர்தல்களில் இலாபத்தை எதிர்நோக்கும்  பெரும்பணக்காரர்கள் சங் பரிவாரங்களை வெளிப் படையாக ஆதரிக்க வேண் டும். ஆர்.எஸ்.எஸ்சின் கொள்கைகளை ஏற்காத வர்கள், மேலோட்டமாக உள்ள  நடுத்தர மற்றும் உயர் வகுப்பினர் ஹிந்து மனப் பான்மையுடன் இருப்பவர் களிடம் பாஜகவை, மோடியை ஆதரிக்கும் ஆர்வத்தை உருவாக்க வேண்டும்.
ஹிந்துக்களில் ஆர்வ முள்ளவர்களைத் திரட்டி  ஆர்.எஸ்.எஸ்சின் கொள் கைப் பயிற்சி அளித்து ஹிந்துத்துவக் கட்சிகளில் இணைக்க வேண்டும். தேச பக்தி, தியாக உணர்ச்சியை ஹிந்துக்கட்சியின் நிகழ்ச் சிகள் மற்றும் கொள்கை களில் எதிரொலிக்க வேண் டும்.  தேச நலனுக்கான  கட்டுப்பாடுகள்மூலம்  மில் லியன் கணக்கானவர்கள்  பாஜகவை நோக்கி வர வேண்டும். ஆனால், இந்தி யாவின் கொள்கை  ஹிந்து என்பதில் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் கணக்கில் கொள்ளப்படு கிறார்களா?
முசாபர்நகர் மற்றும ஷாம்லியில் முஸ்லீம்கள் மீதான கலவரத்தில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத் தின்கீழ் குற்றம் சுமத்தப் பட்டுள்ளனர். அவர்களை  மக்களவைத் தேர்தலில் எவ் வித தயக்கமும் இல்லாமல் தேர்தலில் நியமிப்பதும், தேர்தல் பணிகளில்  ஈடு படுத்துவதுமாக இருப் பதைப்பார்க்கும்போது, ஹிந்து இந்தியாவில் முஸ் லீம்கள் ஒருபொருட்டாக கருதப்பட வில்லை என் பதையே காட்டுகிறது. இரு வகை குடிமக்கள்
பாரத மாதா என்கிற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே முதல் தரக்குடி மகன்களாகவும், மற்ற மதத் தைச் சேர்ந்தவகுப்பினரை
இரண்டாம் தரக் குடிமகன்களாகவும் ஆக்கிவிட்டு எப்போதுமே அவர்கள் குறிவைக்கப்படும் நிலையும் ஏற்படும்.
இந்த சிறுபான்மையருக்கு எதிரான  தகவல் ஆர்.எஸ்.எஸ். பணிகளை மேற் கொண்டுள்ள  அய்ம்பது அமைப்புகளுக் கும், நாடுமுழுவதும் உள்ள  44,982 ஷாகாக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மூலம் பரவியுள்ளது. இதன்மூலம் முஸ்லீம்கள் குறிவைக்கப்பட மாட் டார்கள் என்பவர்களை ஆர்.எஸ்.எஸ். முட்டாளாக்கி உள்ளது.
சுருக்கமாகக் கூறவேண்டுமானால், இந்தியாவில் மே 16இல் இரு வேறு எதிர்ப்புக் கருத்துக்களை உடையவர்கள் வெளியில் வருவதே கடினமாகிவிடும். சமுதாயத்தில் குறிப்பிட்ட  தத்துவத்தைக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ்.-பாஜக சிறு பான்மையரை சமுதாயத்திலிருந்து விலக்கிவைப்பதைக் கொள்கையாக கொண்டுள்ளது. இதைத்தான் ஒரு சார்பற்ற  வளர்ச்சியின் முன்னுதாரண மாக கூறுகிறார்கள் என்று சி.பி. பாம்ப்ரி எழுதியுள்ளது.
(‘The Economic Times - 28.4.2014 - page-12)


Read more: http://viduthalai.in/e-paper/79419.html#ixzz30Ljj7CSs

Sunday, 20 April 2014

Easter Special : உயிர்த்தவரோடு உயிர்த்தெழுவோம்.

Easter2
ஹாரி கௌடினி என்றொரு மனிதர் இருந்தார். 1874 ல் பிறந்த இவர், தனது வாழ்நாளில் உலகப் பிரசித்தம். “தப்பிதல்களின் தலைவன்” என்று இவரை அழைத்தார்கள். என்னை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கட்டலாம், பூட்டலாம், மாட்டி வைக்கலாம், அடைத்து வைக்கலாம் அனைத்திலும் இருந்து தப்பிப்பேன், என பொதுவில் சவால் விடுவார். இவருடைய சவாலை ஏற்றுக்கொண்டு பலரும் பல விதங்களில் இவரைப் பூட்டி வைக்க நினைத்தார்கள். முடியவில்லை. பல்லாயிரம் பேருக்கு முன்னால் வைத்தே, சவால்களை வெற்றியுடன் முடிப்பார்.
ஒரு முறை இவருக்காகவே ஸ்பெஷலாக 5 வருடங்கள் கஷ்டப்பட்டு ஒரு புதுவகை பூட்டைக் கண்டுபிடித்து அவரைப் பூட்டியது, லண்டன் “டெய்லி மிரர்” செய்தி நிறுவனம். அதிலிருந்தும் தப்பினார். உலகமே அவரை வியந்து பார்த்தது .சங்கிலிகளால் பூட்டினால் தப்பினார். சவப்பெட்டியில் அடைத்து புதைத்தால் வெளியே வந்தார். பால் கேனுக்குள் திணித்துப் பூட்டினால், வெளியே வந்தார். உயர் மட்ட பாதுகாப்புடைய சிறையில் போட்டபோதும் தப்பினார் !
கடைசியாகஅக்டோபர் 31, 1926ல் மரணம் அவரைப் பூட்டியது. சாகும் முன் மனைவியிடம் சொன்னார். இதிலிருந்து தப்பிக்கும் வழி ஏதேனும் இருந்தால் நான் நிச்சயம் வருவேன். வந்து உன்னைச் சந்திப்பேன். நமது திருமண நாளில் உன்னை எப்படியும் வந்து சந்திப்பேன், காத்திரு ! என்றார். மனைவி மெழுகுதிரியும், இதயமும் உருக காத்திருந்தாள். திருமண நாள் வந்தது. ஹாரி வரவில்லை. அடுத்த வருடம் திருமண நாள் வந்தது, ஹாரி வரவில்லை. வருடங்கள் கடந்தன. பத்துவருடங்கள் சென்றபின் அவருடைய மனைவி தனது டைரியில் இப்படி எழுதினாள். “மரணத்திலிருந்து தப்பிக்க ஹாரியாலும் முடியாது ! “
யாரும் தப்ப முடியாத ஒரு சுருக்கு தான் மரணம். அதை வென்றவர் ஒரே ஒருவர் தான். அவர் தான் இறைமகன் இயேசு. மரணத்திலிருந்து உயிர்த்தவர்கள் லாசரைப் போல பலர் உண்டு. ஆனால் அவர்களுடைய பயணம் மீள முடியாத இன்னொரு மரணத்தில் தான் முடிவடைந்தது, மரித்து உயிர்த்தபின் மீண்டும் மரிக்காதவர் ஒருவரே ! அதனால் தான் அவரை மரணத்தை வென்ற மீட்பர் என அழைக்கிறோம்.
ஹாரியைப் போல இயேசுவும் கல்லறைக்குள் அடங்கியிருந்திருப்பாரேயானால், கிறிஸ்தவம் இன்று இல்லை. நற்செய்தி இல்லை. பாவத்தையும் மரணத்தையும், ஆண்டவர் வென்று விட்டார் என்பதற்கான ஆதாரம் இல்லை. நமக்கு மீட்பு இல்லை. “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்”. ( 1 கொரி 15 : 14.) என்கிறார் பவுல்.
இயேசு உயிர்த்தெழாமல் இருந்திருந்தால் நமது விசுவாசம் முட்டாள்தனமான ஒன்றாக மாறியிருக்கும். மறுபடியும் முளைத்து எழாத சூரியனை யாரும் வெளிச்சத்தின் நாயகனாகப் பார்க்க முடியாது. மரணத்தோடு முற்றுப்புள்ளியாகியிருந்தால் இயேசு ஒரு மனிதனாகவே வந்து மனிதனாய் மறைந்த ஒரு தத்துவஞானியாகியிருப்பார். ” தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ” ( உரோமர் 1 : 4″. )
இயேசு உயிர்த்தெழாமல் இருந்திருந்தால் கிறிஸ்தவம் தோன்றியிருக்காது. சீடர்களுக்கு ஒரு ஆக்ரோஷ வல்லமையை வேறு எந்த ஒரு நிகழ்வும் வழங்கியிருக்க முடியாது. அவர்கள் பொய் சொல்லவில்லை. “(கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லையென்றால்) ” நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச்சான்று பகர்வோர் ஆவோம் ( 1 கொரி 15 ). என்கிறார் பவுல். அவர்கள் பொய் சொல்லவில்லை என்பதற்கு மனித காரணங்களே போதுமானது !
நாம் எப்போது பொய் சொல்வோம் ? ஒரு பிரச்சினையிலிருந்து தப்பிக்க, அல்லது ஒரு சிக்கலுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க. அப்படித் தானே ? பிரச்சினைக்குள் நுழையவதற்காக ஒரு பொய்யைச் சொல்வோமா ? அதுவும் மிரட்டும் அரசவையிலும், விரட்டும் மதவாதிகளின் நடுவிலும் !! விளைவு கொடூரமான சாவு என தெரிந்தும் கூட பொய் சொல்லுவோமா ? தோலை உரித்து, சிலுவையில் தலைகீழாய் அறையும் போது கூட அதே பொய்யைச் சொல்வோமா !!! கண்டிப்பாக இல்லை ! எனவே சீடர்கள் பொய்சொல்லியிருக்க வாய்ப்பு கடுகளவும் இல்லை !
இயேசு உயிர்த்தெழாமல் இருந்திருந்தால் நமது பாவங்களுக்கான மன்னிப்பு இல்லை ! “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள்.” என்கிறது பைபிள். பாவங்களுக்கான மன்னிப்பு இல்லையேல், நமக்கு மறு உலக வாழ்க்கை என்பது நிச்சயம் இல்லை. எனவே தான் வேறெந்த விழாவையும் விட உயிர்ப்பு மிக முக்கியமானதாகிறது. புதிய ஏற்பாட்டின் மையமே உயிர்த்த இயேசுவின் மீது கட்டியெழுப்பப்படுகிறது.
உயிர்ப்பு என்பது கொண்டாட்டத்தின் நாள். அது தான் நமது விசுவாசத்தையும், நமது இறை அனுபவத்தையும் ஆழப்படுத்துகிறது. அது நமது வாழ்க்கையை உயிர்ப்பை நோக்கி நடத்தும் வழிகாட்டுதலைத் தரவேண்டும். இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தில் பங்குகொள்ள வேண்டுமெனில் மூன்று விஷயங்கள் நமக்குத் தேவை.

முதலாவது தேவை சிலுவையை சுமத்தல் !

“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (லூக்கா 18 : 23) என்கிறார் இயேசு. சிலுவையைச் சுமக்காமல் இயேசுவின் வழியில் நடக்க முடியாது. இயேசுவின் வழியில் நடக்காமல் இயேசுவின் உயிர்ப்பைச் சந்திக்க முடியாது.
சிலர் தங்களுக்கு வருகின்ற காய்ச்சல் தலைவலி பல்வலி போன்றவற்றையெல்லாம் “சிலுவை” என்று சொல்லித் திரிவதுண்டு. சிலுவை என்பது நமது உடல் சார்ந்த சிக்கல்கள் அல்ல. அது நமது பாவம் சார்ந்தது. நமது உலக ஆசைகளை வெறுப்பதே உண்மையான சிலுவை சுமத்தல். “தன்னலம் துறந்தால்” மட்டுமே அதைச் சுமக்க முடியும்.
கண்கள் நம்மை பாவத்தில் விழத் தூண்டினால், பிடுங்கி எறிய வேண்டும். கைகள் பாவத்தைச் செய்யத் தூண்டினால் வெட்டி விட வேண்டும் என்கிறார் இயேசு. அது தான் நாம் தினமும் சுமக்க வேண்டிய சிலுவை. அதுவே தன்னை வெறுத்து, தன் சிலுவையை சுமக்கும் நிலமை. ஆசைகள் அலைக்கழிக்கையில் மனக் கட்டுப்பாடு எனும் சிலுவையைச் சுமக்க வேண்டும். கோபம் நமது மூக்கில் ஏறி அமர்கையில் கோபம் தாண்டும் சிலுவை சுமக்க வேண்டும். இப்படி, இயேசு வெறுத்த அத்தனை விஷயங்களையும் நாமும் வெறுத்து, அதனால் வரும் இடர்கள் எனும் சிலுவையை “நாள்தோறும்” சுமக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

இரண்டாவது தேவை சிலுவையில் அறையப்படுதல்

“நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். எனவே இனி வாழ்பவன் நான் அல்ல: கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். (கலா 2 : 19-20. ) என்கிறார் பவுல். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்படுதல் என்பது பழைய வாழ்க்கையைச் சிலுவையில் அறைந்து விட்டு புதுப் பிறப்பு எடுப்பது.
பழைய மனிதனைக் களைந்துவிட்டு புதிய மனிதனை அணிந்து கொள்ளச் சொல்லும் இறை வார்த்தை அது ! ஆதாமின் வாழ்க்கை பாவத்தின் முள்கிரீடத்தை தலைமுறை தலைமுறையாய் நமது தலையில் சூட்டுகிறது. அந்தப் பாவத்தின் சாபத்தை இயேசுவின் சிலுவை அழிக்கிறது. நமது பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டுவிட்டான். இனிமேல் புது மனிதனாய் நாம் வாழவேண்டும் என்பதே பைபிள் சொல்லும் வாழ்க்கை.
பழைய ஏற்பாட்டில் செங்கடலில் எகிப்தியர்கள் அழிக்கப்பட்டு இஸ்ரயேல் புது வாழ்வுக்குள் நுழைந்தது போல, கிறிஸ்துவோடு நாம் அறையப்பட்டு புதுப் பிறப்பு எடுக்கிறோம். இதை இறைவனே முன்னின்று நடத்துகிறார். இறைவன் நடத்தும் செயலில் நமக்குரிய பங்கு, அர்ப்பணிப்பு உணர்வும், அசைக்க முடியாத நம்பிக்கையுமே ! எதை அசைக்க வேண்டுமெனிலும் முதலில் நமக்குள் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டியது அவசியம் !

மூன்றாவது தேவை இயேசுவோடு உயிர்த்தல்.

சிலுவையில் அறையப்பட்டு அப்படியே இறந்து போய்விடுவதில் அர்த்தமில்லை. பழைய பாவங்களை அழித்து விட்டு நமது வாழ்க்கையை அதைவிடப் புதிய பாவங்களுக்குள் நுழைப்பது என்பது மீண்டும் நாம் புதைத்த மனிதனைத் தோண்டி எடுத்து அணிந்து கொள்வது போல.
பேயை விரட்டிவிட்டால் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையேல் அதைவிடக் கொடிய ஏழு பேய்கள் வந்து தங்கி வீட்டை சல்லடையாக்கிவிடும். எனவே தான் சிலுவையில் அறையப்பட்டபின் அவரோடு உயிர்த்தெழுதலும் அவசியமாகிறது ! பாவங்கள் அகற்றப்பட்ட இதயத்தை இறைவனின் வார்த்தைகளாலும் வாழ்க்கையாலும் நிரப்ப வேண்டும். அதுவே இயேசுவோடு உயிர்த்தலின் அடையாளம்.
உயிர்த்த இயேசுவின் அனுபவத்தில் இணைவது என்பதும், இயேசுவுக்காய் வாழ்வோம் என்பதும் துறவற வாழ்க்கையோ, முழுநேர ஊழியமோ அல்ல. வாழும் இடத்தில், பணி செய்யும் இடத்தில் இயேசுவைப் பிரதிபலிப்பதே. நமது வெளிப்படையான வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும், மறைவான வாழ்விலும் எப்போதும் இயேசுவைப் போல வாழ்வதே ! உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிரும்போது நீங்கள் உயிர்த்த இயேசுவின் அங்கங்கள் என்பதை உலகம் கண்டு கொள்ளும்.
“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் ( யோவான் 11 : 25 – 26 ) எனும் இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை கொள்வோம். நமது வாழ்கையில் அவரைக் கொள்வோம்.

அனைவருக்கும் உயிர்த்த இயேசுவின் பெயரால் நல்வாழ்த்துகள்.


*
சேவியர்
தேசோபகாரி, ஏப்ரல் 2014