Saturday, 28 February 2015

'இருநூறு ஆண்டுமுன்பு  குமரி மண்ணில் இந்துக்களால் நடந்த வெறியாட்டத்தை ...மறக்க முடியுமா ??ஆரிய இந்துக்களால் மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில்.....!! மறுக்க முடியுமா ?? அவற்றின் சில கொடுமைகள் ...இதோ பாருங்கள் ...!!

திருவிதாங்கூர் (தற்போதைய தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் ) சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமை...!! தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர்.... உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்."

சமஸ்தானத்தில் பெரும் எண்ணிக்கையில் இருந்தபோதும் குறைந்த எண்ணிக்கையில் இருந்த நம்பூதிரி(பார்ப்பனர்கள்) மற்றும் உயர் சாதி நாயர்கள் பிள்ளைமார் இந்துக்களால் உலகில்  மிகவும் கொடுரதனமாகவும் ,கேவலமாக நடத்தபெற்ற வரலாறு இன்றைய இளைய சமுதாயம் அறிந்திருக்க வேண்டும் .அதனால் இந்த பதிவு ...!!

ஆரிய இந்துக்கள் அந்த காலத்தில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டால் தெய்வ குற்றம் எனக்கருதி ,தெய்வத்திற்கு வேண்டியவர்களான தாழ்த்தப்பட்ட அடிமைகளை உயிரோடு குளத்தில் உடைப்பெடுத்த இடத்தில போட்டு  மூடியிருக்கிறார்கள் !!

மகாராஜா மார்த்தாண்ட வர்மா காலத்தில் அவருக்கு
அரசாங்கத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் அதற்க்கு தெய்வ குற்றம்என நம்பூதிரி(பார்ப்பனர்கள்)
எடுத்து கூறி தெய்வ குற்றத்தை போக்க வேண்டும் எனில் தாழ்த்தப்பட்ட 15 குழந்தைகளை தெய்வத்திற்கு பலி கொடுக்கவேண்டும் என்றார்கள் .அதன்படி ஒரு மழை நாள் இரவு ஈழவர் சமுதாயத்தை சேர்ந்த 15 குழந்தைகள் திருவனந்த புரத்துக்கு  பிடித்து செல்லப்பட்டு ,நம்பூதிரி(பார்ப்பனர்கள்)  மந்திர ,தந்திர சடங்குகளுக்கு பின் நகரின் நான்கு மூலைகளிலும் உயரோடு புதைக்கபட்டார்கள் !! (அ.கா .பக்கம் .91-92 )

மேலும் எசமானுக்கு உடல் நலம் இல்லை எனில் ஆடு மாடுகளை பலி இடுவதற்கு பதிலாக எல்லா பெரிய கோவில்களிலும் நரபலி கொடுக்க பட்ட கொடுமைகள் கூட நடந்திருக்கிறது !! ( மறுபக்கம் ,ப.69)

கொடிய  தீமைகளில் பாதிக்க பட்ட  ஒரு பிரிவு தான்(சாணார்(நாடார் ) ,முக்குவர், புலையர்......) தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு இருந்தது . உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும்.

மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி…
மார்புக்கு (முலை) வரி வசூலிப்பார்கள்...!!மார்பகம் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய மார்பகளென்றால் வரி அதிகம்...!! வரி கட்ட முடியாவிட்டால்,  இடுக்கியினை ( பனைமரத்து  பூவை பத படுத்த பயன்படுத்துவது ) கொண்டு மார்பகங்களை திருகுவார்களாம் ...சில இடங்களில்  முலைகள் அறுத்து எறியப் பட்டது...!! என்ன கொடுமை  இந்த கொடுமை உலகில் நடந்ததுண்டா...?

கோவில் தெருக்களில் செல்வதற்கும், உயர்சாதியினரின் தெருக்களில் செல்லவும், குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், குளிக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது...!!

சாணார்(நாடார் ),முக்குவர், புலையர்...  மக்கள் திருமணங்களில் தாலி கட்டுவதற்குக் கூட வரி விதிக்கப்பட்டது..!! பசுக்கள், மண்வெட்டிகள், அரிவாள்களுக்கும் கூட வரி விதிக்கப்பட்டது...!! பனைத் தொழில் செய்பவர்கள் பனை மரத்திற்கும் கூட வரி செலுத்த வேண்டும் என்ற பெயரில் கொத்தடிமைகளாகக் கூலியின்றி வேலை செய்ய வேண்டும்...!!
 
சாணார் (நாடார் ),முக்குவர், புலையர்... ... மக்கள் தீண்டத்தகாதவர்களென்றும் தள்ளி வைக்கப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிவதற்கும், தெய்வத்தை வழிபடுவதற்கும் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது...!!

இன்னும் பாருங்கள்  நாகர்கோயில் செல்லும் வழியில் தாளக்குடி எனும் கிராமம். அங்கு சாம்பவர் சாதியைச் சார்ந்த கர்ப்பிணி பெண்  மாடத்தியை, மேலாடை அணிந்ததற்காக ஆதிக்கசாதியினர் அடிமையாய் வைத்திருந்தனர். அவரை மாட்டுக்குப் பதிலாய் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுது கொன்றனர். இந்த கொடுமை 19ம் நூற்றாண்டில் நடந்தது...!!

மேலாடை அணிந்ததற்காக  சிலரைச் சுடுமணலில் நாள் முழுவதும் நிற்க வைத்தார்கள் மேலாடை அணிந்த பெண்களின் மார்புகளை வெட்டினார்கள்...!!

இதையறிந்த அய்யா  வைகுந்தர் கொடுமைகளுக்கு ஆளான மக்களிடம், “மார்பில் ஆடையணியுங்கள்...!! முட்டுக்குக் கீழ் துணி கட்டுங்கள்....!! தங்கத்தில் தாலி கட்டுங்கள்....!! இடுப்பில் குடம் வைத்துத் தண்ணீர் எடுங்கள்...!! கோவில்களை நீங்களே கருவறையில் சென்று பூசை செய்யுங்கள்...!! வணங்குங்கள்” என்றார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை” என எழுதியுள்ளனர்...!!

இக்கொடுமைகளைக் கண்டதனால் தான் விவேகானந்தர் குமரிக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” எனக் குறிப்பிட்டார்...!!

இது தமிழர் வலாற்றின்  கறைகள்...!! காலம் மாறலாம் .வரலாறு தெரியாமல் இருந்தால், எதிர் காலம் மதவாத சத்திகளிடம் அடிமை பட்டு விட கூடாது !!

அன்பு உறவுகளே எல்ல திசைகளிலும், இந்த செய்தியை கொண்டு சேருங்கள் !!பகிருங்கள் ...!!'
இருநூறு ஆண்டுமுன்பு குமரி மண்ணில் இந்துக்களால் நடந்த வெறியாட்டத்தை ...மறக்க முடியுமா ??ஆரிய இந்துக்களால் மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில்.....!! மறுக்க முடியுமா ?? அவற்றின் சில கொடுமைகள் ...இதோ பாருங்கள் ...!!
திருவிதாங்கூர் (தற்போதைய தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் ) சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமை...!! தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர்.... உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்."
சமஸ்தானத்தில் பெரும் எண்ணிக்கையில் இருந்தபோதும் குறைந்த எண்ணிக்கையில் இருந்த நம்பூதிரி(பார்ப்பனர்கள்) மற்றும் உயர் சாதி நாயர்கள் பிள்ளைமார் இந்துக்களால் உலகில் மிகவும் கொடுரதனமாகவும் ,கேவலமாக நடத்தபெற்ற வரலாறு இன்றைய இளைய சமுதாயம் அறிந்திருக்க வேண்டும் .அதனால் இந்த பதிவு ...!!
ஆரிய இந்துக்கள் அந்த காலத்தில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டால் தெய்வ குற்றம் எனக்கருதி ,தெய்வத்திற்கு வேண்டியவர்களான தாழ்த்தப்பட்ட அடிமைகளை உயிரோடு குளத்தில் உடைப்பெடுத்த இடத்தில போட்டு மூடியிருக்கிறார்கள் !!
மகாராஜா மார்த்தாண்ட வர்மா காலத்தில் அவருக்கு
அரசாங்கத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் அதற்க்கு தெய்வ குற்றம்என நம்பூதிரி(பார்ப்பனர்கள்)
எடுத்து கூறி தெய்வ குற்றத்தை போக்க வேண்டும் எனில் தாழ்த்தப்பட்ட 15 குழந்தைகளை தெய்வத்திற்கு பலி கொடுக்கவேண்டும் என்றார்கள் .அதன்படி ஒரு மழை நாள் இரவு ஈழவர் சமுதாயத்தை சேர்ந்த 15 குழந்தைகள் திருவனந்த புரத்துக்கு பிடித்து செல்லப்பட்டு ,நம்பூதிரி(பார்ப்பனர்கள்) மந்திர ,தந்திர சடங்குகளுக்கு பின் நகரின் நான்கு மூலைகளிலும் உயரோடு புதைக்கபட்டார்கள் !! (அ.கா .பக்கம் .91-92 )
மேலும் எசமானுக்கு உடல் நலம் இல்லை எனில் ஆடு மாடுகளை பலி இடுவதற்கு பதிலாக எல்லா பெரிய கோவில்களிலும் நரபலி கொடுக்க பட்ட கொடுமைகள் கூட நடந்திருக்கிறது !! ( மறுபக்கம் ,ப.69)
கொடிய தீமைகளில் பாதிக்க பட்ட ஒரு பிரிவு தான்(சாணார்(நாடார் ) ,முக்குவர், புலையர்......) தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு இருந்தது . உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும்.
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி…
மார்புக்கு (முலை) வரி வசூலிப்பார்கள்...!!மார்பகம் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய மார்பகளென்றால் வரி அதிகம்...!! வரி கட்ட முடியாவிட்டால், இடுக்கியினை ( பனைமரத்து பூவை பத படுத்த பயன்படுத்துவது ) கொண்டு மார்பகங்களை திருகுவார்களாம் ...சில இடங்களில் முலைகள் அறுத்து எறியப் பட்டது...!! என்ன கொடுமை இந்த கொடுமை உலகில் நடந்ததுண்டா...?
கோவில் தெருக்களில் செல்வதற்கும், உயர்சாதியினரின் தெருக்களில் செல்லவும், குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், குளிக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது...!!
சாணார்(நாடார் ),முக்குவர், புலையர்... மக்கள் திருமணங்களில் தாலி கட்டுவதற்குக் கூட வரி விதிக்கப்பட்டது..!! பசுக்கள், மண்வெட்டிகள், அரிவாள்களுக்கும் கூட வரி விதிக்கப்பட்டது...!! பனைத் தொழில் செய்பவர்கள் பனை மரத்திற்கும் கூட வரி செலுத்த வேண்டும் என்ற பெயரில் கொத்தடிமைகளாகக் கூலியின்றி வேலை செய்ய வேண்டும்...!!
சாணார் (நாடார் ),முக்குவர், புலையர்... ... மக்கள் தீண்டத்தகாதவர்களென்றும் தள்ளி வைக்கப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிவதற்கும், தெய்வத்தை வழிபடுவதற்கும் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது...!!
இன்னும் பாருங்கள் நாகர்கோயில் செல்லும் வழியில் தாளக்குடி எனும் கிராமம். அங்கு சாம்பவர் சாதியைச் சார்ந்த கர்ப்பிணி பெண் மாடத்தியை, மேலாடை அணிந்ததற்காக ஆதிக்கசாதியினர் அடிமையாய் வைத்திருந்தனர். அவரை மாட்டுக்குப் பதிலாய் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுது கொன்றனர். இந்த கொடுமை 19ம் நூற்றாண்டில் நடந்தது...!!
மேலாடை அணிந்ததற்காக சிலரைச் சுடுமணலில் நாள் முழுவதும் நிற்க வைத்தார்கள் மேலாடை அணிந்த பெண்களின் மார்புகளை வெட்டினார்கள்...!!
இதையறிந்த அய்யா வைகுந்தர் கொடுமைகளுக்கு ஆளான மக்களிடம், “மார்பில் ஆடையணியுங்கள்...!! முட்டுக்குக் கீழ் துணி கட்டுங்கள்....!! தங்கத்தில் தாலி கட்டுங்கள்....!! இடுப்பில் குடம் வைத்துத் தண்ணீர் எடுங்கள்...!! கோவில்களை நீங்களே கருவறையில் சென்று பூசை செய்யுங்கள்...!! வணங்குங்கள்” என்றார்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை” என எழுதியுள்ளனர்...!!
இக்கொடுமைகளைக் கண்டதனால் தான் விவேகானந்தர் குமரிக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” எனக் குறிப்பிட்டார்...!!
இது தமிழர் வலாற்றின் கறைகள்...!! காலம் மாறலாம் .வரலாறு தெரியாமல் இருந்தால், எதிர் காலம் மதவாத சத்திகளிடம் அடிமை பட்டு விட கூடாது !!
அன்பு உறவுகளே எல்ல திசைகளிலும், இந்த செய்தியை கொண்டு சேருங்கள் !!பகிருங்கள் ...!!

Tuesday, 6 January 2015




திறமை இல்லாப் பட்டதாரிகள்
சிவக்குமார் பழனியப்பன்
மதிப்பெண்களை வைத்து மாணவர்களை வரிசைப்படுத்தும் துக்ககரமான கல்வி முறை மாற வேண்டும்
இந்திய மக்கள்தொகை 125 கோடி என்றும், அதில் 60% இளைஞர்கள் என்றும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதில் 50% பேர் 25 வயதுக்குக் குறைவானவர்கள். நமது பிரதமர் மோடி உலகெங்கும் சென்று, “இந்தியா இளைஞர்கள் மிகுந்த நாடு. சீனாவையும் மற்ற உலக நாடுகளையும் முந்திக்கொண்டு நாங்கள் வெகு விரைவில் வளர்ந்த நாடாகிவிடுவோம். எங்கள் நாட்டில் தொழில் முதலீடு செய்யுங்கள், உற்பத்தி செய்யுங்கள்” என்றெல்லாம் சொல்லிவருகிறார்.
இந்த நிலையில், ‘திறமை இல்லாப் பட்டதாரிகள்’ என்றொரு பெரும் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது இந்தியா. 45 சதவீதத்துக்கும் அதிகமான பட்டதாரிகள், அறிவுசார்ந்த எந்த ஒரு வேலைக்கும் ஏற்றவர்கள் இல்லை என்றும், வெறும் 8% முதல் 12% பொறியியல் மாணவர்கள் மட்டுமே வளாக நேர்காணல்களின்போது வேலைக்கு அமர்த்தத் தகுதியுடையவர்களாக இருக் கிறார்கள் என்றும் சொல்கிறது ஒரு கருத்துக் கணிப்பு.
காத்திருக்க முடியுமா?
அப்படியென்றால், மொத்தம் 85 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் வேலை இல்லாமல்தானே கல்லூரிகளிலிருந்து வெளியே வருகிறார்கள்? (இதில் 100% வேலைவாய்ப்பு என்று விளம்பரங்கள் வேறு). ஏதோ கண்துடைப்பு வேலையாக ஊர், பேர் தெரியாத லெட்டர் பேட் நிறுவனங்களிலெல்லாம் வேலைக் கடிதம் வாங்கிக்கொடுத்துவிட்டு, பின்னர் ‘எங்களுக்கு ஒன்றுமே தெரியாது’ என்று கைவிரிக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேவருகிறது.
சரி, கல்லூரிகளையும் பாடத்திட்டங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய ‘அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுமம்’ என்ன சொல்கிறது? “கவலைப் படாதீர்கள், தரமற்ற கல்லூரிகளையெல்லாம் காலப் போக்கில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் அவர்களே மூடிவிடுவார்கள். தரமான கல்வியைக் கொடுக்கும் நல்ல கல்லூரிகள் மட்டுமே நிலைக்கும். அதுவரைக்கும் சற்றுப் பொறுமையாகக் காத்திருங்கள்” என்கிறது.
இளைஞர்களின் கதி என்ன?
ஏதோ நினைத்த மாத்திரத்தில் திறந்து மூடும் சாலையோர உணவகங்கள்போல, அவர்களே மூடிவிடு வார்கள் என்பது எவ்வளவு பெரிய அபத்தம். வியர்வை சிந்தி, உயிரைக் கொடுத்து உழைத்த பெற்றோரின் உழைப்பினால் வந்த காசைக் கொடுத்து, தங்கள் இளம் பருவத்தைத் தொலைத்து, எந்தத் திறமையும் அறிவும் இல்லாமல் பட்டம் பெற்று வெளியில் வந்து வேலை கிடைக்காமல் தெருவில் நிற்கும் இளைஞர்களின் கதி என்ன? வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் இளைஞர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம்?
2013-ல் தமிழகத்தின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களில் பலர் முதல் செமஸ்டர் தேர்வில் கணிதப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சித் தகவல். 12-ம் வகுப்புத் தேர்வில் கணிதத்தில் 200/200 மதிப்பெண் பெற்றவர்கள், கல்லூரித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பது பேரதிர்ச்சி.
பள்ளிகளை விட்டுக் கல்லூரிக்கு வந்தால் அங்கும் அதே கதைதான். பல கல்லூரிகள், பள்ளிக்கூடங்களைவிட மாணவர்களை மிகவும் கடுமையாக நடத்துகின்றன. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பல்கலைக்கழக ரேங்க். எப்படியாவது செமஸ்டர் தேர்வுகளில் தங்கள் மாணவர்கள் முதல் ரேங்க் பெற்றுவிட வேண்டும், கல்லூரி வாசலில் விளம்பரப் பதாகைகள் வைக்க வேண்டும். இதுதான் பிரதானக் குறிக்கோள்.
ஷேக்ஸ்பியர், எலியட் தெரியவில்லை
தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் பயிலும், பல்கலைக்கழக ரேங்க் பெற்ற மாணவ-மாணவியரிடம் அவர்கள் துறை சார்ந்த அடிப்படைக் கேள்விகளுக்குக்கூட தெளிவான பதில் இல்லை. சமீபத்தில் மின்னணு உதிரிப் பாகம் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் சொன்னது, “நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தங்கள் துறை சார்ந்த தெளிவும், அடிப்படை மின்னணுபற்றிய அறிவும்தான். நான்கு ஆண்டுகள் மின்னியல் பயின்ற பல பட்டதாரிகளுக்கு மின்னோட்டம்குறித்த அடிப்படை விதியான ‘ஓம்ஸ்’ விதி தெரியவில்லை. இவர்களை எந்த அடிப்படையில் வேலைக்கு எடுப்பது?”
ஆங்கில ஆசிரியர் பணிக்கு தேர்வு நடத்தி, ஒருவரைக்கூட வேலைக்கு எடுக்க முடியாமல் தவிக்கும் ஒரு பள்ளி முதல்வர் இப்படிச் சொல்கிறார்: “பொறியியல் மட்டுமல்ல, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இலக்கணப் பிழை இல்லாமல் எழுத, பேசத் தெரியவில்லை. ஷேக்ஸ்பியர் தெரியவில்லை, எலியட் தெரியவில்லை, ஆங்கில இலக்கியம் சார்ந்த எதுவும் தெரியவில்லை.” ஆங்கிலோ-இந்திய ஆசிரியர்கள் கிடைப்பார்களா என்று இப்போது தேடிவருகிறார்.
நமது அடிப்படைக் கல்வி முறையில் மிகப் பெரும் மாற்றங்களைக் கொண்டுவராவிட்டால், உலகெங்கும் நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் மக்கள்தொகை லாபம், வெறும் மக்கள்தொகை சாபமாக மாறக்கூடிய காலம் வெகு விரைவில் வந்துவிடுமோ என்ற அச்சமே ஏற்படுகிறது.
வெறும் மதிப்பெண்களை மட்டுமே வைத்து மாணவர்களை வரிசைப்படுத்தும் துக்ககரமான நமது கல்வி முறை மாற வேண்டும். மதிப்பெண்களோடு, மாணவர்களின் தனித் திறமைகளையும் கண்டெடுத்து வளர்க்கும், திறன் சார்ந்த கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். வேகமாக மாறிவரும் உலகத்துக்கு ஏற்ப நமது கல்வி முறையிலும் தாமதம் இல்லாத, துரிதமான மாற்றங்களைக் கொண்டுவரும் வழிவகைகள் செய்ய வேண்டும்.
ஆரம்பப் பள்ளி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை, மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், அரசாங்கம் அனைவருக்கும் மதிப்பெண்களைத் தாண்டிய சிந்தனை வர வேண்டும். நமது கல்வி முறையில் தக்க மாற்றங்கள் செய்து, சிறந்த திறன் மிகுந்த பட்டதாரிகளை உருவாக்கத் தவறினால், இந்த தேசம் ‘திறமை இல்லாப் பட்டதாரிகள்’ நிறைந்த, திண்டாடும் தேசமாகத்தான் திகழும் என்பது நிச்சயம்.
2015-ன் சவால்கள்
இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சவால்களும் நிறைய.
மாற்றமும் வளர்ச்சியும் வேண்டும் என்று 10
ஆண்டு கால காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியைத்
தூக்கியெறிந்துவிட்டு, மோடி தலைமையிலான பாஜகவைத்
தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் மக்கள். ஆனால், மக்களின்
எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் திசையை நோக்கிக் கடந்த ஆறு
மாதங்களில் எதிர்பார்த்த வேகத்தில் மோடி அரசு
செயல்படவில்லை என்பதுதான் உண்மை. பிரிவினைவாத
அரசியலைத் தவிர்த்துவிட்டு, மக்களுக்கான உண்மையான
வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டியதே மோடி அரசுக்கு உள்ள
சவால்.
தலையங்கம்
Published: the tamil hindu January 1, 2015 09:50 IST Updated: January 1, 2015 09:50 IST

பார்லே ஜி பிஸ்கெட்


பார்லே ஜி பிஸ்கெட் ஐந்தாயிரம் கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி, உலக பிஸ்கெட்களில் முதல் இடம் பிடிக்கும் பிராண்ட் எது?
இந்தியாவில் அறுபது லட்சத்துக்கும் அதிகமான கடைகளில் கிடைக்கும் பிஸ்கெட் எது?
மக்களின் ருசியும், ரசனையும் நாளுக்கு நாள் மாறும் நிலையில், 76 ஆண்டுகளாக மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கும் பிஸ்கெட் எது?
மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் பார்லே ஜி பிஸ்கெட்!
இந்தியாவில், பிஸ்கெட்களை இரண்டு வகையாகச் சாப்பிடுகிறோம். காபி, டீயோடு சாப்பிடும் சிற்றுண்டியாக: குழந்தைகளின் தின்பண்டமாக.
1930 கால கட்டம். இந்தியாவில் கிடைத்த பிஸ்கெட்கள் இரண்டு வகை. முதல் வகை, ஒவ்வொரு ஊரிலும் இருந்த சிறிய பேக்கரிகள் தயாரித்தவை. இவை சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகின்றனவா என்பது பற்றி மக்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் இருந்தன. இரண்டாம் வகை பிஸ்கெட்கள் இங்கிலாந்து நாட்டிலிருந்து இறக்குமதியாயின. இவை தரமும் சுவையும் கொண்டவை. ஆனால், இவற்றின் விலை நடுத்தர, அடிமட்ட மக்களுக்குக் கட்டுப்படியாகாத அதிக விலை. ஆகவே, இவர்களில் பெரும்பாலானோர், டீயோடு ரஸ்க், பன், பொறை, லோக்கல் பிஸ்கெட் போன்ற சிற்றுண்டிகளைச் சாப்பிட்டார்கள்.
பெற்றோர்களின் ஏக்கம்
குழந்தைகளின் உணவுகளை வாங்கும்போது, நாம் அதிக எச்சரிக்கையாக இருப்போம். ஆகவே, பணக்காரர்கள் அல்லாதோர் குழந்தைகளுக்கு சுகாதாரம் குறைந்த (?) பிஸ்கெட் தராமல், முறுக்கு, மிக்சர் போன்ற சிற்றுண்டிகள் தந்தார்கள். “குழந்தைகளுக்கு எண்ணெய்ப் பண்டம் கொடுக்கிறோமே, அவர்களுக்கு ஆரோக்கியமான பிஸ்கெட் தரும் வசதி நம்மிடம் இல்லையே?” என்னும் ஏக்கம் அவர்களிடம் இருந்தது.
1929 இல், மும்பையில், மோகன் லால் தயால் செளஹான் (Mohanlal Dayal Chauhan) ஆரஞ்சு மிட்டாய் போன்ற இனிப்புகள் தயாரித்துவந்தார். வில்ல பார்லே (Vile Parle) என்னும் பகுதியில் வியாபாரம் செய்ததால், தன் கம்பெனிக்குப் பார்லே புராடெக்ட்ஸ் என்று பெயர் வைத்தார். தரமான, சக்தி தரும் பிஸ்கெட்களைச் சுகாதார மான முறையில் தயாரித்துச் சகாய விலையில் தந்தால், மக்களின் ஏக்கத்தைப் பூர்த்தி செய்யலாம், பிசினஸை வளர்க்கலாம் என்று உணர்ந்தார். உடல் சக்தி என்றால், மக்கள் நினைவுக்கு முதலில் வருவது பால். குழந்தைகளுக்கு எளிதில் செரிக்கும் உணவு. இதனால், ஏழை வீடுகளில்கூட, குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் வழக்கம் நாடு முழுக்க இருக்கிறது. இதேபோல், குளுக்கோஸ் சாப்பிட்டால் சோர்வு நீங்கி உடனடிப் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பது பொதுவான நம்பிக்கை.
பார்லே குளுக்கோ பிஸ்கெட் உருவான விதம்
பால், குளுக்கோஸ் ஆகியவற் றோடு பசி தீர்க்கும் கோதுமை மாவும் சேர்த்து மோகன்லால் பிஸ்கெட் தயாரித்தார். பார்லே குளுக்கோ (Parle Gluco) என்று பெயர் வைத்தார். கோதுமை வயிற்றுப் பசியைத் தீர்த்தது. பால் மணமும், குளுக்கோஸின் இனிப்பும் சுவை தந்தன. 100 கிராம் பிஸ்கெட் 450 கலோரி ஊட்டச் சக்தி தந்தது. நிஜமாகவே, மோகன்லாலின் தயாரிப்பு சுவையான, ஊட்டச் சத்து உணவு. 1939 ம் ஆண்டில் பார்லே குளுக்கோ அறிமுகமானது. பால், கோதுமை ஆகியவற்றின் நன்மைகளைத் தருகிற பிஸ்கெட் இது என்று முதல் பார்வையிலேயே கஸ்டமர்களுக்குத் தெரிவிக்கவேண்டுமே? பாக்கெட்டில், கோதுமை வயலில் ஒரு பெண், பசு, கன்றுக்குட்டி, பால் கறக்கும் பாத்திரம் ஆகியவற்றோடு நிற்கும் படம் இருந்தது.
விலை குறைவு
தன் பிஸ்கெட்டுக்கு, இறக்குமதி யாகும் இங்கிலாந்து பிஸ்கெட்களைவிட மட்டுமல்ல, மிக்சர், சிவ்டா போன்ற சிற்றுண்டிகளை விடவும் விலை குறைவாக மோகன்லால் வைத்தார். அன்றைய நாட்களில், விலை மலிவான தரமான ஸ்நாக் பார்லே குளுக்கோ பிஸ்கெட்தான்!
பார்லே குளுக்கோ பிறந்த வேளை ராசியான நேரம். அதே 1939 ம் ஆண்டில், இரண்டாம் உலகப் போர் தொடங்கியது, 1945 வரை நீடித்தது. போர்முனையில் குளுக்கோஸ், அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றிலிருந்து வேதியல் முறையில் தயாரிக்கப்படும் இனிப்புப் பொருள்.
வீரர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் உணவு பிஸ்கெட். ஆகவே, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிலிருந்த பிஸ்கெட் கம்பெனிகள், தங்கள் முழுத் தயாரிப் பையும் போர் முனைகளுக்கு அனுப்பினார்கள். இந்தியாவுக்கு வெளிநாட்டு பிஸ்கெட்கள் வருவது நின்றது. ஆகவே, பணக்காரர்களும் மோகன்லாலின் பிஸ்கெட் வாங்கி னார்கள். எல்லோருக்கும் பிஸ்கெட் தரமும், சுவையும் பிடித்தது. சப்ளை செய்யமுடியாத அளவுக்கு விற்பனை அதிகரித்தது.
விலை உயர்வு இல்லை
பெரும்பாலான கம்பெனிகள் இந்தத் தட்டுப்பாட்டு நேரங்களில் விலையைக் கூட்டிக் கொள்ளை லாபம் அடிப்பார்கள். ஆனால், மோகன்லால் நேர்மையாக நடந்துகொண்டார். விலையைக் கூட்டவேயில்லை. தரம், சுவை, சகாய விலை ஆகிய காரணங்களால், இந்திய பிஸ்கெட்களில் நம்பர் 1 இடத்தைப் பார்லே குளுக்கோ பிடித்தது. பார்லே குளுக்கோ சக்தி தரும், சுவை நிறைந்த சகாய விலை பிஸ்கெட் என்னும் பொசிஷனிங் மக்கள் மனங்களில் பதிந்துவிட்டது. யுத்தம் முடிந்தபின்னும் முதல் இடம் நீடித்தது.
மோகன்லால் படிக்காத மேதை. பல நவீன மார்க்கெட்டிங் யுக்திகளை உள்ளுணர்வால் அநாயசமாகக் கையாண்டார். தன் பிஸ்கெட் குறைந்த விலை என்று விளம்பரம் செய்தால், தரமும் குறைவாக இருக்கும் என்று சாதாரணமாக மக்கள் நினைப்பார்கள். ஆகவே, விளம்பரங்களில் விலையை மையப்படுத்தக்கூடாது, தரம், சுவை, சக்தி ஆகியவற்றை மட்டுமே மையப்படுத்தவேண்டும். அதே சமயம், குளுக்கோ பிஸ்கெட்டின் வெற்றிக்கு முக்கிய காரணம் குறைந்த விலை. வெற்றி தொடரவேண்டுமானால், விலையை முடிந்தவரை உயர்த்தக் கூடாது.
மோகன்லால் மறைவுக்குப் பிறகும், பார்லே புராடக்ட்ஸ் இந்தக் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறார்கள். 1984 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில், கோதுமை, பால், சீனி ஆகிய மூலப்பொருட்களின் விலை 150 சதவிகிதம் அதிகரித்தது. ஆனால், இந்த 24 வருடங்களிலும், 100 கிராம் பார்லே குளுக்கோ விலை ஒரு பைசா கூட அதிகரிக்கவில்லை. 1984 முதல் 2008 வரை, அதே 4 ரூபாய்தான்!
2008 இல் பார்லேயால் விஷமாக ஏறும் விலைவாசியைச் சமாளிக்க முடியவில்லை. 100 கிராம் பாக்கெட் விலையை 4.50 ஆக்கினார்கள். 50 காசு அதிகம். ஆனால், கஸ்டமர்கள் வாங்குவதை நிறுத்தினார்கள். வேறு வழி தெரியாத நிர்வாகம் பாக்கெட் எடையை 92.5 கிராமாகக் குறைத்தார்கள். விலை அதே 4 ரூபாய்! இதேபோல், 2012- ல் எடை 88 கிராம் ஆனது. விலை என்றென்றும் மாறாத அதே நான்கு ரூபாய்! இன்றும், தரமான பிராண்டட் பிஸ்கெட்களில் மிக விலை குறைவானது பார்லே ஜி தான்.
குழந்தைகளைக் கவர…
பிசினஸ் வளர வளர, எல்லா வயதினரும் பிஸ்கெட் சாப்பிட்டாலும், குழந்தைகள்தாம் முக்கிய கஸ்டமர்கள் என்று பார்லே உணர்ந்தது. மார்க்கெட்டிங் யுக்திகளும், விளம்பரங்களும் இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன. 1960 முதல் பாக்கெட் டிசைனை மாற்றினார்கள். அதுவரை இருந்த மாடு மேய்க்கும் பெண்ணுக்குப் பதில், அழகான குழந்தை படம்!
பார்லே குளுக்கோ என்று கடைகளில் கேட்டு வாங்கக் கிராமப்புற மக்கள் சிரமப்பட்டார்கள். இதனால், 1980 இல், பிஸ்கெட் பெயரைப் பார்லே ஜி என்று சுருக்கினார்கள். ஜி என்பது குளுக்கோவின் சுருக்கம். நம் ஊரில் “ஐயா” என்பதுபோல், இந்தியில் “ஜி” என்பது மரியாதையான விளிப்பு. ஆகவே, பார்லே ஜி என்னும் புதிய சுருக் பெயர் ``நச்” என்று மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்தது.
இந்தியாவின் பிஸ்கெட் மார்க்கெட், போட்டியாளர்களின் பலங்கள், பலவீனங்கள் ஆகிய அம்சங்களை ஆழமாக அலசிய பார்லே நிர்வாகிகளுக்கு மாட்டியது ஒரு லட்டு ஐடியா. பார்லே ஜி என்றால் எனர்ஜி, எனர்ஜி என்றால் பார்லே ஜி என்று மக்களை நினைக்கவைத்துவிட்டால், யாருமே பார்லே ஜி யை அசைக்கமுடியாது.
விளம்பரங்கள்…
இப்போது கச்சேரி ஆரம்பம். 1982 இல் டி.வி. விளம்பரம் வந்தது. ஒரு தாத்தா தன் பேரனோடும், பேத்தியோடும் விளையாடும் காட்சி. அவர்கள் சேர்ந்து பார்லே ஜி சாப்பிடுவார்கள். முழுக்க முழுக்கச் சுவை, முழுக்க முழுக்க சக்தி என்னும் ஜிங்கிள் வரும். இந்த விளம்பரம் மாபெரும் வெற்றி கண்டது.
1998 இல் தொலைக்காட்சியில் சக்திமான் என்னும் தொடர் வந்துகொண் டிருந்தது. சிறுவர் சிறுமிகளுக்குப் பிடித்த ஆங்கில ஸூப்பர்மேன் தொடர்போல், இந்தியாவிலும் ஒரு ஸூப்பர் ஹீரோவை உருவாக்கும் முயற்சி. வெற்றியும் கண்டது. இந்தத் தொடரைப் பார்லே ஜி ஸ்பான்சர் செய்தார்கள். பார்லே ஜி சாப்பிட்டால் நமக்கும் சக்திமானின் பலம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை சிறுவர், சிறுமியர் மனங்களில் விதைக்கப்பட்டது.

ஜி ஃபார் ஜீனியஸ்
பார்லே ஜி என்னும் பெயரில் வரும் ``ஜி” குளுக்கோ என்பதன் சுருக்கம். 2004 இல் இதிலும் மாற்றம் கொண்டுவந்தார்கள். நடிகர் அமீர்கான் ஒரு சிறுவனோடு வருவார். G = Genius என்று இருவரும் வலியுறுத்துவார்கள்.
பார்லே ஜி என்றால், உடல் வலிமையும், அறிவு பலமும் தரும் சுவை நிறைந்த சகாயவிலை பிஸ்கெட் என்னும் பொசிஷனிங்கைத் தொடர்ந்து பார்லே கம்பெனி வலியுறுத்தி வருகிறார்கள். பிசினஸில் முதல் இடத்தைப் பிடிக்க மட்டுமல்ல, தொடர்ந்து தக்கவைத்துக்கொளவும், பொசிஷனிங்கில் தொடர்ந்து புதுமைகள் செய்துகொண்டேயிருக்கவேண்டும் என்பதற்குப் பார்லே ஜி நல்ல உதாரணம்.

Saturday, 13 December 2014

பல பெண்களை பலாத்காரம் செய்த உபேர் டாக்ஸி டிரைவர்: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

COMMENT (2)   ·   PRINT   ·   T+  
சிவகுமார் யாதவ்
சிவகுமார் யாதவ்
கால் டாக்ஸியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கியுள்ள உபேர் டாக்ஸி டிரைவர், ஏற்கெனவே பல பெண்களை பலாத்காரம் செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மதுரா அருகேயுள்ள ராம் நகரைச் சேர்ந் தவர் சிவகுமார் யாதவ் (32). டெல்லியில் உபேர் கால் டாக்ஸி யில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 8-ம் தேதி இரவு நிதி நிறுவன பெண் ஊழியரை சவாரி அழைத்துச் சென்றபோது பலாத்காரம் செய்து கொலைமிரட்டலும் விடுத்தார்.
அப்பெண் அளித்த புகாரின் பேரில் சிவகுமார் யாதவை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
தலைமை ஆசிரியரின் மகன்
சிவகுமார் யாதவின் தந்தை ராம்நாத் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். அவரது குடும்பத்துக்கு சொந்த ஊரில் நிலங்கள், வீடுகள் உள்ளன. இதனால் பொருளாதார பிரச்சினை இல்லை.
சிறுவயது முதலே ஊதாரித் தனமாக வளர்ந்த சிவகுமார் யாதவ், 2003-ம் ஆண்டில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் உள்ளூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 2006-ம் ஆண்டில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் கைதானார். தொடர் குற்றங்கள் காரணமாக 2008-ம் ஆண்டில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிவகுமார் வாழ்ந்த வீட்டின் அருகே அவரது உறவுகார பெண் வசித்து வந்தார். அவரிடம் பாசமாக பழகிய சிவகுமார் ஒரு நாள் தனது மிருக குணத்தை வெளிப்படுத்தி பலாத்காரம் செய் தார். கணவர், குழந்தைகளோடு வசித்த அந்தப் பெண், குடும்ப கவுரவம் கருதி நடந்த சம்பவத்தை வெளியில் கூறவில்லை. தற்போது 45 வயதாகும் அவர் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
2011-ம் ஆண்டில் குர்காவ்ன் பார் நடனக் கலைஞரை பலாத்காரம் செய்த வழக்கில் சிவகுமார் யாதவ் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
ராம்நகருக்கு அருகில் உள்ள நாக்லா தார் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை ஆகஸ்ட் 2013-ல் துப்பாக்கியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
இரவில் மட்டுமே பணி
சிவகுமார் யாதவ் பெண்களை குறிவைத்து இரவில் மட்டுமே கார் ஓட்டியுள்ளார். மால், சினிமா தியேட்டர், மதுபான பார்களின் முன்பு பெண் வாடிக் கையாளர்களுக்காக காத்திருந் துள்ளார்.
காரில் தனிமையில் வரும் பெண்களிடம் தகாத முறையில் நடந்துள்ளார். சில பெண்களுக்கு பணம் கொடுத்து சரிகட்டியுள்ளார்.
இதுவரை 6 பெண்கள் மட்டுமே அவர் மீது பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் குடும்ப கவுரவம் கருதி பலர் வெளியில் வரத் தயங்குகின்றனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஊருக்கு பொல்லாதவனாக இருந்தாலும் மனைவி, குழந்தை கள் மீது சிவகுமார் அதிக பாசம் வைத்துள்ளார்.
விதவையை மறுமணம் செய் துள்ள அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். போலீஸ் தன்னை நெருங்குவதை அறிந்த அவர், மதுராவுக்கு தப்பிவந்து மனைவி யையும் மகள்களையும் உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்து தப்பி யோடியபோது போலீஸில் சிக்கி கொண்டார்.
அவரது தாய், தந்தை கூறும்போது, “ஊதாரி மகனை பெற்றதால் ஊரை விட்டே எங்களை ஒதுக்கும் நிலை ஏற்பட்டது, அவன் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக தண் டிக்கப்பட வேண்டும்” என்றனர்.
டாக்ஸி டிரைவர்கள் போராட்டம்
உபேர் கால் டாக்ஸி சேவையை டெல்லி அரசு தடை செய்துள்ளது. இதைக் கண்டித்து அந்த கால் டாக்ஸியை சேர்ந்த டிரைவர்கள் டெல்லியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகளுக்கு போதை மருந்து விற்றவரை தொண்டு நிறுவன உதவியுடன் பிடித்த தாய்

COMMENT (2)   ·   PRINT   ·   T+  
போதை மருந்து விற்ற போது பிடிபட்ட சுனில் ஷர்மா (வலது)
போதை மருந்து விற்ற போது பிடிபட்ட சுனில் ஷர்மா (வலது)
தன் மகளுக்கு போதை மருந்து விற்கும்போது, தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அவரின் தாய், அதை விற்பனை செய்தவரைக் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்திருக்கிறார்.
மும்பையில் 16 வயது கல்லூரிப் பெண் ஒருவருக்கு போதை மருந்துப் பழக்கம் இருந்தது. இதை அவரின் `வாட்ஸ் அப்' உரையாடல்கள் மூலம் அவரின் தாய் தெரிந்து கொண்டார். அந்தப் பெண் கடந்த காலத்தில் மூன்று முறை போதை மருந்து பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது.
மேலும், மீண்டும் போதை மருந்து வாங்க அதை விற்பனை செய்யும் ரகீப் எனும் வியாபாரி ஒருவருடன் தன் மகள் உரையாடல் நடத்தியிருப்பது தெரிய வந்தது. தவிர, அந்த போதை மருந்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் தர வேண்டும் என்றும், அவ்வாறு முடியாவிட்டால் தன்னுடன் ஓர் இரவைக் கழிக்க வேண்டும் என்றும் ரகீப் நிபந்தனை விதித்ததும் தெரிய வந்தது.
அதற்கு அந்தப் பெண் பணத்தைக் கொடுத்து போதை மருந்து பெற்றுக்கொள்வதாகவும், அதைக் கொடுக்க தன் கல்லூரிக்கு வெளியே காத்திருக்கும்படியும் ரகீப்பிடம் சொல்லியிருக்கிறார்.
இதைத் தெரிந்துகொண்ட அவரின் தாய் தன் பெண்ணை இந்தப் பழக்கத்தில் இருந்து மீட்க முயற்சி செய்தார். அதற்காக மகிளா விகாஸ் சமிதி எனும் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டார்.
அந்தத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறியபடி, பணத்தைத் தன் மகள் கண்ணில் படும்படி வைத்தார். அதை எடுத்துக்கொண்டு அந்தப் பெண் கல்லூரிக்குச் சென்றார்.
அந்தப் பெண்ணை தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பின் தொடர்ந்தனர். கல்லூரிக்கு வெளியே ரகீப் அந்தப் பெண்ணிடம் போதை மருந்து விற்கும்போது அவனைக் கையும் களவுமாக அவர்கள் பிடித்தனர்.
ஆனால் பிடிப்பட்டது ரகீப் அல்ல என்பதும், அது அவன் அனுப்பிய டெலிவரி ஆள் என்பதும் அவன் பெயர் சுனில் ஷர்மா என்பதும் தெரிய வந்தது. அவனிடமிருந்து 18 பாக்கெட் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, ரகீப் ஒரு கல்லூரி மாணவர் என்றும், அவருக்கு நிறைய கல்லூரி மாணவர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அந்தத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நீதா ரஷீத் கூறும்போது, "இப்படியான நபர்கள் எல்லாம் பேஸ்புக்கில் பார்டியில் கலந்து கொள்ளும் புகைப்படங்களைப் பதிவேற்றியிருக்கும் பெண் களுக்கு நட்பு விண்ணப்பம் கொடுப்பார்கள். பின்னர் பேஸ்புக் மூலம் கைப்பேசி எண்களைப் பரிமாறிக் கொள்வார்கள். பிறகு அவர்களுக்கு போதை மருந்தை அறிமுகப்படுத்துவார்கள். இவற் றைப் பயன்படுத்தும் பிரபலங் களின் படங்களைக் காட்டி மாணவர்களை ஊக்குவிப்பார்கள். இந்த போதைப் பொருட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் தங் களுக்கு புது உத்வேகம் கிடைப் பதாக இளைஞர்கள் கருதுகிறார் கள். ஆனால் உண்மையில், அது அவர்களின் உயிரை எடுத்துவிடும்" என்றார்.
பெங்களூரு: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் பிடித்து அனுப்பும் வேலையில் ஈடுபட்ட மேதி மஸ்ரூர் பிஸ்வாஸை பெங்களூர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மாற்று நம்பிக்கையாளர்களை கொன்று குவித்து வருகிறது. அவர்கள் கொள்கைகளை செயல்படுத்தும் இஸ்லாமிய நாடுகளை உருவாக்க அந்த அமைப்பு துடித்து வருகிறது. ஈராக்கின் பல பகுதிகளையும் அவ்வமைப்பு கைப்பற்றியுள்ளது. இந்த அமைப்பில் சேர்ந்து எதிரிகளை கொல்வதற்காக புனித போராளிகள் என்ற பெயரில் பல நாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் ஈராக் செல்கின்றனர். சமீபத்தில் இந்தியாவில் இருந்து சென்ற சில வாலிபர்கள், அந்த வாழ்க்கை பிடிக்காமல் தாயகம் திரும்பினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே தாங்கள் ஈர்க்கப்பட்டு சென்றதாக கூறினர். இதையடுத்து சமூக வலைத்தளங்களை உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வந்தது. பன்னாட்டு பாதுகாப்பு அமைப்புகளும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில்தான் இங்கிலாந்தை சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி சேனல் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற நபர், @shamiwitness என்ற ட்விட்டர் அக்கவுண்ட் மூலமாக பலரையும் மூளை சலவை செய்து வந்ததாக அந்த சேனல் கூறியது. இந்த மேதி பிஸ்வாஸ், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால் பெங்களூரிலுள்ள எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது ட்விட்டர் அக்கவுண்டில் 17,700 ஃபாலோவர்கள் உள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ள 3ல் 2 பங்கு பேர் இவரது டிவிட்டர் அக்கவுண்ட்டை ஃபாலோ செய்பவர்கள்தான் என்றும் சேனல்4 தெரிவித்திருந்தது. பெங்களூவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கால் வைத்துவிட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த நபர் குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு போலீசார் வடக்கு பெங்களூரின் ஜாலஹள்ளியில் மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் வசிப்பதை கண்டறிந்து நேற்றிரவு அவரை கைது செய்தது. இதையடுத்து மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளும், பெங்களூரு போலீசாரும் இணைந்து மேதி மஸ்ரூர் பிஸ்வாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு, தீவிரவாத அழைப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், அதில் இடம்பெற்ற வாசகங்களுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more at: http://tamil.oneindia.com/news/india/mehdi-picked-up-bangalore-police-216894.html