Tuesday, 17 December 2013

கிறிஸ்துமஸ் தாத்தா

குட்டையான, குண்டான உருவம், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய சிவப்பு வெல்வெட்உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா.... ஸாண்ட்ட கிளாஸ்!

சரி, கிறிஸ்மஸ் தாத்தா தயார்! அவருக்கு வாகனம், வாகனம் யினிதே விரைந்திட ரெய்ண்டீர் எனப்படும் நீண்ட கிளைகளையுடைய கொம்புகள் கொண்ட மான்கள் தயாரா?!. அவ்வளவுதான், கிறிஸ்துமஸ் தாத்தா கிளம்பி விடுவார்.

மேற்கத்திய நாடுகளிலும் சில கீழை நாடுகளிலும் மட்டுமே காணப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைக்கு உலகெங்கும் பரவி அவருக்கே உரித்தான சிவப்பு உடையில் வெண்தாடி, கண்கண்ணாடி சகிதமாக வலம் வரத்துவங்கிவிட்டார்! சாண்ட்டா என்றும் சாண்ட்ட கிளாஸ் என்றும் அன்போடு குழந்தைகள் குதூகலித்துக் கொள்வதைநாமறிவோம்! உலகில் எந்தக் கிறிஸ்தவக் குழந்தையிடமும் சாண்ட்ட கிளாஸ் என்றால் அறியாத குழந்தைகளே இல்லை எனலாம்.

17ம் நூற்றாண்டில் நியூயார்க்கில் குடியேறிய டட்ச் ( Dutch ) இனத்தவர் சிண்ட்டர் க்ளாஸ் என்று அறிமுகப்படுத்தியவர் பின்னாளில் சாண்ட்ட கிளாசாக வலம் வரத் துவங்கினார். டச்சு இனத்தவர் சிண்ட்டர் க்ளாஸை அறிமுகப்படுத்தியபோது புனித நிக்கோலஸ் பிஷப் ஆக யிருந்தபோது அவர்அணிந்த சிவப்பு அங்கி போன்ற டையையும் அவர் பயன்படுத்திய வெள்ளைக் குதிரையையும் அறிமுகம் செய்தனர். அதுவே சில மாற்றங்களுடன் பின்ன ர் சாண்ட்ட கிளாஸ் ஆடைகளாக மாறின.

அதாவது 1773ல் அமெரிக்கன் பிரஸ் வெளியீட்டில் "St. A Claus," என்று பிரசுரிக்கப்பட்டது. ஆனால் 1809ல் புகழ்பெற்ற எழுத்தாளர் வாஷிங்டன் யிர்விங் செயிண்ட் நிக்கோலஸ் தான் சாண்ட்ட கிளாஸ்என்பதை பல்வேறு தாரங்களோடு சுட்டுகின்றார். " நியூயார்க்கின் வரலாறு என்ற அவரின் புத்தகம் டச்சு-அமெரிக்கன் செயிண்ட் நிக் எப்படி சாண்ட்டாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்று தெளிவுபடக் கூறியுள்லார்.

Night Before Christmas ஐ எழுதிய கிளமெண்ட் க்ளார்க் மூர்தான் ரெயிண்டீர், சண்ட்ட கிளாஸ் வர்ணணைகளைப் பற்றி எழுதினார் என்றாலும் 1860லிருந்து 1880 வரை வெளிவந்துகொண்டிருந்த ஹார்ப்பெர் வாராந்திர சஞ்சிகையின் கிறிஸ்மஸ் சிறப்புவெளியீட்டில் தாமஸ் நாஸ் ( Thomas Nast ) சாண்ட்ட கிளாஸ் வடதுருவத்தில் வசிப்பது, குழந்தைகள் விரும்பி என்பது உட்பட பல்வேறு அம்சங்களைக் குறிப்பிட்டு எழுதினார். 1931ல் Coca-Cola நிறுவனம் சாண்ட்ட கிளாஸ் தொடர் விளம்பரங்கள் படக்கதை போல வெளியிட்டது...// http://www.culpeperfamily.com/wp-content/uploads/2012/11/Santa2.jpeg

புனித நிக்கோலஸ் !
கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமல் யின்று எங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்லை என்ற அளவுக்கு கிறிஸ்மஸ் தாத்தாவும் கிறிஸ்துமஸ்சும் ஐக்கியப்பட்டுப் போனது. கிறிஸ்மஸ் தாத்தா தோன்றிய விதம் குறித்து அலசினால் அவருக்கும் ஒரு பின்னனி உண்டு என்பதை அறியலாம்! உண்மையில் புனித நிக்கோலஸ் தான் சாண்ட்டகிளாஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தா உருவாகக் காரணம் என்று சொல்லவேண்டும்.

புனித நிக்கோலஸ் ரோமன் கத்தோலிக்க பிஷப் வார்! நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். வாழ்க்கையின் அடித்தள மக்களின் மேம்பாட்டிற்காகவும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்க்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டஅற்புதர் அவர்!

"உன் வலக்கரம் செய்தது இடது கரம் அறியக்கூடாது " என்ற வேத வசனத்திற்கு ஒப்ப வாழ்ந்த அவர் மக்களின் தேவையறிந்து அதனை அவர்கள் அறியாமல் நிறைவேற்றி வந்தார். ஆலயத்தில் தங்கள் தனிப்பட்ட வேண்டுதல்களை, மனக் குறைகளை பாவசங்கீர்த்தனம் ( பாவமன்னிப்பு ) செய்யும்போது சொன்னால் அவர்களின் குறைகள் நீங்க விசேடமாகப் பிரார்த்திக்கப்படும் என்று புனித நிக்கோலஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி மக்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் புனித நிக்கோலஸிடம் பாவமன்னிப்பு கோரிச் சென்ற போது தங்கள் குறைகளையும் சொல்லத் துவங்கினர். உண்மையிலேயே அவர்கள் சொல்லும் குறைகள் நியாயமானதுதானா? என்றறிந்து அவர்கள் அறியாமல் உதவிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இப்படி ஒரு சமயம் புனித நிக்கோலஸ் செய்யத் துவங்கிய உதவியே அவர் அதுபோன்ற உதவிகள் தொடரக்காரணமானது! ஒரு மனிதர் தனது மகளின் திருமணத்திற்கு நகைகள் செய்யவோ, ஆடை பரணங்கள் வாங்கவோ வழியின்றி மிகுந்த துயருக்கு ஆளாகி வேதனையுற்றிருந்தார்.

அந்த மனிதருக்கு மூன்று பெண் குழந்தைகள்! மூன்று பேரையும் எப்படிக் கரைசேர்ப்பேன் என்று தெரியாமல் புலம்பித் தவித்தார். குளிர்காலம் முடிந்ததும் வசந்த காலத்தில் மூத்தபெண்ணுக்குத் திருமணம் செய்வதென்று நிச்சயிக்கப்பட்டது. தனது இயலாமையை பாவ சங்கீர்த்தனத்திற்குச் சென்றபோது அந்த மனிதரும் எல்லோரைப் போலவே தழுதழுத்த குரலில் சொல்லி அழுது மன்றாடி வந்தார்.// http://upload.wikimedia.org/wikipedia/commons/f/f8/Russian_icon_Instaplanet_Saint_Nicholas.JPG

கொடுக்கின்ற தெய்வம்

ஆனால் குளிர்கால விழா எங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் மூன்று பெண்களுக்குத் தந்தையான அவர் மனம் சோர்ந்துபோய் அவருடைய வீடும் எந்தவிதமான மகிழ்ச்சியுமின்றி சோகத்தில் மூழ்கிக் கிடந்தது. அந்தச் சோகத்திலேயே அந்த இரவு உறங்கியும் போனார்கள். நள்ளிரவு ஏதோ ஒரு பொருள் "பொத்" தென்று விழுந்த சத்தம் கேட்டு அந்த மனிதர் எழுந்து சென்று பார்த்தார். வீட்டின் புகைபோக்கிக்கு நேர் கீழ் ஒரு பை கிடந்ததைக் கண்டார்.

அந்தப் பையைத் திறந்து பார்த்த அவருக்கோ பெருத்த ஆச்சரியம்! தன் மகள் திருமணத்திற்கு என்ன செய்வேன் என்று ஏங்கித் தவித்த மனிதனுக்கு விடையாகக் கிடைத்தது போல தங்க ஆபரணங்களும், பணமும் இருந்தது கண்டு திகைத்துப் போனார். "கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பொத்துக்கொண்டு கொடுத்தது" என்று சொல்வது போல தெய்வம் கொடுத்தது என்று சொல்லி மகிழ்ந்து மகளின் திருமணத்தை தடபுடலாக நடத்தினார்.

அதே போல தனது ரெண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட போதும் அவருடைய பணமுடை அவரைச் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் முதலில் தெய்வம் கொடுத்தது போல புகைபோக்கியை பொத்துக்கொண்டு இந்தமுறை கொடுக்கும் என்பது என்ன நிச்சயம்? ஆனால் அந்த அதிசயம் நிகழ்ந்தது! முன்பு புகைபோக்கி வழியே கிடைத்ததைப் போலவே இந்த முறையும் கிடைத்தது. விழுந்த சத்தம் கேட்டதும் வீட்டிற்கு வெளியே ஓடிச் சென்று பார்த்தார். தூரத்தில் யாரோசெல்வது மட்டும் தெரிந்தது. ஆனால் உருவம் யார் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.

மூன்றாம் மகள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மனிதர் நள்ளிரவு வரை விழித்திருந்து புகைப்போக்கியையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தமக்கு உதவி செய்கின்ற அந்த உருவத்தைப் பார்க்க ஆவல் கொண்டிருந்ததால் அவ்வாறு நள்ளிரவு வரை விழித்திருந்து அந்த உருவத்தின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். அவர் எதிர் பார்த்த அந்த நாளும் வந்தது. நள்ளிரவில் ஒரு பை "பொத்" என்று விழுந்ததும் தயாராக திறந்து வைத்திருந்த கதவைத் தாண்டி வெளியே ஓடிப் பார்த்தபோது, சிவப்பு அங்கியணிந்திருந்த அந்த உருவம் வெள்ளைக் குதிரையொன்றில் தாவி ஏறவும் இவர் அவரை யார் என்று பார்க்கவும் சரியாக இருந்திருக்கின்றது.

அவர் கண்கள் ஆச்சரியத்தால் நிறைந்து போயிருந்தது. அந்த உருவத்துக்குச் சொந்தக்காரர் புனித நிக்கோலஸ்! புனித நிக்கோலஸ் தான் உதவியது குறித்து யாரிடமும் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு அந்த மனிதரை ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். அந்த மனிதப் புனிதர் நிக்கோலஸ் வாழ்ந்த காலம் வரை தேவையுள்ளோர் யார் என்பதறிந்து அவர்கள் வீட்டின் புகைபோக்கி வழியாக அவ்வீட்டார் அறியாமல் பொன்னோ பொருளோ போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவர் புகை போக்கி வழியாக பரிசுகளை, வெகுமதிகளை உள்ளே போட்டுவிட்டு அந்த வீட்டிலுள்ளவர்கள் என்ன? யார் என்று கவனிப்பதற்குள் தனது வெள்ளைக்குதிரையில் பறந்துவிடுவாராம். சிறுவர் சிறுமியருக்கு சிறுசிறுபரிசுப் பொருட்களையும் அவர்கள் வீடுகளுக்குச் சென்று போட்டுவிட்டு பின்னர் அவர்கள் அகம் மகிழ்வதைக் கண்டுமகிழ்ந்தார்!//http://bucultureshock.com/wp-content/uploads/2011/12/Santa-Claus-A.jpg

வழக்கம் பழக்கமானது

அவர் மறைவுக்குப் பின் அவர் மேற்கொண்டிருந்த அப் பழக்கமே பின்னர் சாண்ட்ட கிளாஸ் என்ற உருவாகச் சித்தரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு புகை போக்கி வழியாக குழந்தைகளுக்கு பரிசுகளை அளிக்கும் வழக்கம் பின்பற்றப்படலாயிற்று. குட்டையான தடித்த உருவம், நீண்ட வெண்தாடி, சிவப்பு வெல்வெட் வண்ண உடையின் ஓரங்களில் வெண்பகுதி அலங்கரிக்க, சர்க்கஸ் கோமாளி போன்ற சிவப்புவண்ணத்தில் குஞ்சம் வைத்த குல்லா, ஒரு மூக்குக் கண்ணாடி இடுப்பில் அகன்ற தோல் பட்டை பெல்ட், முதுகில் தொங்கும் பரிசுப்
பொருட்கள் அடங்கிய ஒரு பெரிய பை....இதுதான் கிறிஸ்மஸ் தாத்தா! அது மட்டுமா? கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு கடிதம் போட்டால் அவர் வாழ்த்து அனுப்புகின்றதிலிருந்து முக்கிய இடங்களுக்கு திடீர் விசிட் அடித்து குழந்தைகளைமகிழ்விக்கச் செய்வது வரை உலகின் பல பகுதிகளில் கிறிஸ்மஸ் தாத்தா சாண்ட்ட கிளாஸாக பவனி வந்து கொண்டிருக்கின்றார்.

ஆனால் சுவீடனில் புனித லூசியாதான் கிறிஸ்மஸ் தாத்தாவாக...ஸாரி பாட்டியாகக் கருதப்படுகிறார்

Saturday, 14 December 2013

வல்லவனுக்கு வல்லவன்!
அதிஷா

அனுபவமிக்க செஸ் உலக ஜாம்பவானை நார்வே நாட்டிலிருந்து வந்த 22 வயதேயான சின்னப்பையன் வீழ்த்தியிருக்கிறான். யார் இந்த மேக்னஸ் கார்ல்ஸன்? விஸ்வநாதன் ஆனந்தை எப்படி வென்றான்?

மேக்னஸ் கார்ல்ஸனுக்கு அப்போது வயது ஐந்து. அவனுடைய அப்பா ஹென்ரிக் தன் மகனையும் இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு தன் நண்பர்களின் குடும்பத்தோடு நார்வேயின் வடக்குப் பகுதியான  ஜூவாசிட்டா என்கிற இடத்துக்கு சுற்றுலாவுக்குக் கிளம்பினர்.

அங்குதான் நார்வேயின் மிக உயர மலைச்சிகரமான ‘கல்தோபிக்கன்’ இருக்கிறது. அதன் உயரம் 2,469 மீட்டர். அதில் ட்ரெக்கிங் செல்வது என்று முடிவாகிறது. ஆனால் வனப்பகுதிக் காவலர்கள் ஐந்து வயது கார்ல்ஸனை மலையேற அனுமதிக்க முடியாது, ஆபத்தானது என மறுத்துவிட்டனர். அப்பாவின் நண்பர்களும் அவருடைய பையன்களும் மட்டும் மலையேறத் தொடங்கிவிட்டார்கள்.

ஆனால் கார்ல்ஸன் அடம்பிடித்தான். ‘அப்பா! நான் அந்தப் பையன்கள் முன்னால் தோற்றுப்போனவனாக நிற்க முடியாது (LOSER). நான் போயே ஆகணும்’ என்று கத்தி கூப்பாடு போடுகிறான். வனப்பகுதிக் காவலர்களுக்கே ஒருமாதிரி ஆகிவிடுகிறது.

‘வேண்டுமானால் மாற்றுவழிப்பாதை இருக்கிறது. வாகனங்கள் செல்லும் சாலை அது. அதில் ஏறினால் ஒரு ஐந்து கிலோமீட்டர் அதிகமாக நடக்க வேண்டியிருக்கும் பரவாயில்லையா?’ என்று வனப்பகுதிக் காவலர்கள் கூற... உடனே கார்ல்ஸன் கிளம்பிவிட்டான்.

அப்பாவை விட வேக வேகமாக ஓட ஆரம்பித்தான். அவனோடு சுற்றுலா வந்த அவனுடைய பக்கத்து வீட்டு நண்பர்களுக்கு முன்பே மலை உச்சியை அடைய வேண்டும் என்கிற வேகம். ஆவேசமாக நடக்க ஆரம்பிக்க... அப்பாவுக்கும் தங்கைகளுக்கும் மூச்சு வாங்குகிறது. மலை மேல் ஏற ஏற குளிர்வேறு உதறல் எடுக்கிறது. பெய்கிற பனி, எலும்புகளுக்குள் ஊடுருவி ஊசியால் குத்துவதைப்போல வலிக்கிறது. உட்கார்ந்து உட்கார்ந்துதான் மலையேற முடிகிறது.

கார்ல்ஸன் வேக வேகமாக முன்னேறுகிறான். அவனுக்கு குளிர் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவனுக்கு கால்கள் வலிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அப்பாவையும் சகோதரிகளையும் விட்டுவிட்டு அவன் மட்டும் தன்னந்தனியாக மலை உச்சியை அடைகிறான். அங்கு இன்னமும் அந்தப் பையன்கள் வந்து சேர்ந்திருக்கவில்லை. அப்போதுதான் அந்த பிஞ்சு முகத்தில் புன்னகை பூக்கிறது. பின்னாலேயே பதறிப்போய் அவனுடைய தந்தையும் சகோதரிகளும் வந்து பார்க்கிறார்கள்.

உச்சியில் நின்றுகொண்டு இரண்டு கைகளையும் உயர்த்தி, ‘நான் ஜெயிச்சிட்டேன்... ஜெயிச்சிட்டேன்...’ என்று கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கிறான். அது அன்றைய தினம் நார்வே முழுக்க எதிரொலித்திருக்கும்! இது நடந்து 18 ஆண்டுகள் கடந்து விட்டன.

சென்னையில் பத்து சுற்றுகள் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த்தை தோற்கடித்து உலக சாம்பியன் பட்டத்தை இப்போது வென்று விட்டார். வெற்றி பெற்ற தினம் அப்படியே உடையைக்கூட கழற்றாமல் கோட்டு சூட்டோடு நீச்சல் குளத்தில் குதித்து துள்ளித் துள்ளி ஆட்டம்போடுகிறார், ‘நான் ஜெயிச்சுட்டேன்... நான் ஜெயிச்சுட்டேன்...’ கார்ல்ஸன்.

அதை போட்டோ எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொள்கிறார் 23 வயது மேக்னஸ் கார்ல்ஸன்!

‘இறுதியாக சாம்பியனாகிவிட்டேன்... அனைவருடைய ஆதரவிற்கும்  நன்றி!’ என்கிற வாசகங்களோடு.  

கார்ல்ஸனிடம் வெற்றிபெற வேண்டும் என்கிற வேகம் இத்தனை ஆண்டுகளில் துளிகூட குறைந்ததில்லை. அதுதான் அவனை இத்தனை விரைவாக இவ்வளவு உயர்ந்த இடத்தை எட்ட வைத்திருக்கிறது" என்று நெகிழ்ச்சியோடு பேட்டியொன்றில் குறிப்பிடுகிறார், ஹென்ட்ரிக் கார்ல்ஸன். மேக்னஸ் கார்ல்ஸனின் தந்தை.

ந்தச் சின்னப்பையன் விஸ்வநாதன் ஆனந்த்தை தோற்கடிப்பான் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லோருக்குமே அதிர்ச்சிதான். சிலரால் நம்பவும்கூட முடியவில்லை. ஒருமுறை அல்ல இரண்டு முறை அல்ல மூன்று முறை தோற்கடித்தான். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த்தால் அந்தப் பையனை ஒருமுறை கூட வெல்ல முடியவில்லை. 1991-இல் தொடங்கி 22 ஆண்டுகளில், உலக சாம்பியன்ஷிப் தொடரில் ஓர் ஆட்டத்தில் கூட வெற்றி பெறாதது ஆனந்த்துக்கு இதுவே முதல் முறை.

முகத்தில் இன்னமும் குழந்தைத் தன்மை ஒட்டிக்கொண்டிருக்கிற கார்ல்ஸன் 13 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர். 19 வயதில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர். இதோ 22 வயதில் உலக சாம்பியன். மேக்னஸ் கார்ல்ஸனின் வெற்றி, ஹாரிபாட்டர் போன்ற ஃபேன்டஸி கதைகள்போல் வந்தும் இருக்கின்றன!

‘செஸ் விளையாட்டின் மோசார்ட் (–ˆMOZART OF CHESS)’ என்று கார்ல்ஸனை வர்ணிக்கிறார்கள். ‘நவீன கணினி யுகத்தின் வார்ப்பு’ என்கிறார்கள். ‘எந்திரம் (–MACHINE)’ என்கிறார்கள்.

கார்ல்ஸனின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது பதினைந்து ஆண்டுகால அர்ப்பணிப்பு.

செஸ்ஸை மட்டுமே சுவாசித்து வாழ்ந்த ஒரு நார்வே சிறுவனின் அபாரமான உழைப்பு.

மேக்னஸ் கார்ல்ஸன் பிறக்கும்போதே கையில் செஸ் கான்களை பிடித்துக் கொண்டு வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. 1990-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி நார்வேயில் ஹென்ரிக் கார்ல்ஸன், சிர்குன் கார்ல்ஸன் என்கிற தம்பதிக்குப் பிறந்த சாதாரணப் பையன்தான். குட்டிப்பையனாக இருக்கும்போதிருந்தே அவனுக்கு நல்ல நினைவாற்றல் இருந்தது. 10 வயதுப் பையன்கள் பண்ணுகிற புதிர்களை ஐந்து வயதிலேயே செய்து அசத்தினான்.

ஐந்து வயதாக இருக்கும்போதுதான் அவனுடைய தந்தை அவனுக்கு செஸ் ஆட்டத்தை கற்றுக்கொடுத்தார். செஸ் போர்டில் ஒவ்வொரு காய்களை தனித்தனியாக வைத்து அது எப்படி நகரும், அதற்கு என்ன சக்தி இருக்கிறது, அதை வைத்து எப்படி எல்லாம் எதிரிகளின் காய்களை வெட்டலாம் என்பதை பொறுமையாக சொல்லிக் கொடுப்பார். கார்ல்ஸன் அதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டாலும் அவனுக்கு அதில் அதிக விருப்பமில்லை. அவனுக்கு கணிதமும் புதிர்களும்தான் பிடித்திருந்தன.

சர்வதேச அளவில் புள்ளிகள் பெற்ற சுமாரான செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்ஸனின் தந்தை ஹென்ட்ரிக். ஆனாலும் தன் பையனுக்கு செஸ்ஸில் ஆர்வமில்லை என்று தெரிந்ததும் அவனை அவன் போக்கிலேயே விட்டுவிட்டார். ‘செஸ் ஆடு.. செஸ் ஆடு...’ என எப்போதுமே அவர் வற்புத்தியதில்லை. கார்ல்ஸனுக்கு கால்பந்தாட்டமும் பனிச்சறுக்கு விளையாட்டும்தான் பிடித்திருந்தன. அவற்றில் ஆர்வத்தோடு பங்கேற்றான்.

‘மிகவும் இளம் வயதிலேயே அவனுக்கு மிகச்சிறந்த நினைவாற்றல் வாய்த்திருந்தது. அதுதான் பிற்காலத்தில் அவனை செஸ் உலகின் சக்ரவர்த்தியாக உயர வைக்கவும் காரணமாக இருந்தது’ என்று தன்னுடைய நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார், கார்ல்ஸனின் ஆரம்பகாலப் பயிற்சியாளராக இருந்த அடெஸ்டின்.

அவன் ஐந்து வயதிலேயே உலக நாடுகளின் தலைநகரங்கள், கொடிகள் என அனைத்தையும் மனப்பாடமாகச் சொல்லும் திறனைப் பெற்றிருந்தான். நார்வேயின் 430 முனிசிபாலிட்டிகளின் பெயரையும் எப்படிப் கேட்டாலும் சரியாகச் சொல்லி பல பரிசுகளையும் வென்றுள்ளான்.

இப்படிப்பட்ட ஒரு நினைவாற்றல் பல குழந்தைகளுக்கும் இருப்பதுதான். ஆனால் அதை செஸ் மாதிரியான விளையாட்டில் மடைமாற்றி விட்டால் என்னாகும் என்பதற்கு மேக்னஸ் கார்ல்ஸன் நல்ல உதாரணம்" என்கிறார் அடெஸ்டின்.

கார்ல்ஸனுக்கு ஏழு வயதாகும்போது, திடீரென தானாகவே செஸ் விளையாட்டில் ஆர்வமாகி விளையாட ஆரம்பித்தான். டென்மார்க்கின் கிராண்ட் மாஸ்டரான பென்ட் லார்சனின், ‘பைன்ட் தி பிளான்’ என்ற செஸ் குறித்த புத்தகத்தைப் படித்த பிறகுதான் செஸ்ஸின் மீது மிகப்பெரிய ஆர்வம் பிறந்ததாக ஒரு பேட்டியில் கார்ல்ஸன் குறிப்பிடுகிறார்.

இந்த முறையும் கார்ல்ஸனின் தந்தை அவனுக்கு எந்த அழுத்ததையும் கொடுக்கவில்லை. அவனை அவன் போக்கிலேயே விட்டுப்பிடித்தார். அவனாகவே தன் சகோதரிகளோடு விளையாடினான். அவர்களை வென்றான். பின் ஆர்வத்தோடு செஸ் குறித்த புத்தகங்களை படிக்கத் தொடங்கினான்.

எல்லோரும் படிப்பதுபோல அவன் செஸ் புத்தகங்களைப் படிக்கவில்லை. அவன் அதில் உள்ள ஆட்டங்களையும் அதன் நுணுக்கங்களையும் தன் மனதுக்குள் விளையாடிப் பார்த்தான். தனக்குள்ளாகவே அவனுடைய ஆட்டத்திறனை வளர்த்துக்கொண்டான். அவனுடைய ஷெல்பில் இருந்த செஸ் விளையாட்டு குறித்த 500 புத்தகங்களிலும் பல ஆயிரம் பக்கங்களில் நிறைந்திருந்த லட்சக்கணக்கான ஆட்டங்களும் அவனுக்கு அத்துப்படி! அவன் செஸ் விளையாட போர்டோ, கான்களோ தேவையே இல்லை. அவன் தனக்குள்ளாகவே விளையாடுவான்" என்று தன்னுடைய மகனைப் பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் ஹென்ட்ரிக்.

1999-இல் நடைபெற்ற நார்வே செஸ் சாம்பியன்ஷிப்தான் கார்ல்ஸனின் முதல் போட்டி. அப்போது அவருக்கு வயது 8. 11 சுற்றுகளைக் கொண்ட அந்தப் போட்டியில் கார்ல்ஸன்  6.5 புள்ளிகளைப் பெற்றார். பின்னர்தான் முன்னணி செஸ் வீரராக இருந்த அடெஸ்டின் நடத்திய நார்வேயின் எலைட் ஸ்போர்ட் செஸ் கல்லூரியில் பயிற்சி பெற்றார் கார்ல்ஸன்.

ஒன்பது வயதில் நார்வேயின்  11 வயதிற்குட்பட்டோருக்கான செஸ் ஆட்டத்தை வென்றபின் தினமும் மூன்று மணிநேரம்  செஸ்ஸுக்காகவே ஒதுக்க ஆரம்பித்தான் கார்ல்ஸன்.

ஒரு போர்டை எடுத்து வைத்துக் கொண்டு எதிரில் யாருமின்றி தானாகவே விளையாடுவான். ஒரு சமயம் வெள்ளை பலமானதாகவும், ஒரு சமயம் கறுப்புக்காய்கள் பலமானதாகவும் இருக்கும்படி இரண்டும் இடங்களிலும் மாறிமாறி ஆடத்தொடங்குவான்.

செஸ் குறித்த புத்தகங்களை நூலகங்களில் தேடித் தேடி வாசிப்பான். அப்பாவை நச்சரித்து புத்தகங்களை  வாங்கித்தரச் சொல்லுவான்.

படித்த செஸ் ஆட்டங்களை மனதிற்குள் உருப்போட்டுக்கொண்டே இருப்பான். உலகின் மிக முக்கியமான அத்தனை ஆட்டங்களையும் தோற்றுப்போனவரின் இடத்தில் இருந்து, ‘ஏன் தோற்றார்... என்ன தவறு?’ என்பதை ஆராய்ந்துகொண்டே இருப்பான். அதுதான் அவனுடைய பலமானது. எதிரிகளை எப்படியெல்லாம் தவறிழைக்கச்  செய்ய வைப்பது என்பதை கணக்கிடத்தொடங்கினான்.

கணினி கார்ல்ஸனின் செஸ் வாழ்க்கையில் மிகமுக்கியப் பங்காற்றியது. அவன் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான செஸ் ஆட்டங்களை கணினியில் வைத்திருந்தான். FRITZ மற்றும் RYBKA  போன்ற அதிநவீன கணினி மென்பொருட்களோடு பயிற்சி செய்தான். இந்த மென்பொருட்கள் ஆனந்து, கார்போவ், காஸ்பரோவுக்கே தண்ணிகாட்டின எந்திரன்கள்! அவற்றோடு மணிக்கணக்கில் மல்லுக்கட்டுவான்.

உங்கள் வீட்டில் நிறைய செஸ் போர்டு இருக்குமா அண்ணா? என்று கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை வந்திருந்த கார்ல்ஸனை நம்மூர் செஸ் ஆட்டக்காரப் பையன்கள் கேட்டபோது, கார்ல்சன் சிரித்துக்கொண்டே சொன்னார்: ‘என்னுடைய செஸ்போர்டுகளும் காய்ன்களும் என் தலைக்குள் இருக்கிறது!’

2000-இல் நார்வேயின் கிராண்ட் மாஸ்டரான ரிங்டால் ஹன்சனை கார்ல்ஸனுக்கு அறிமுகப்படுத்தினார் அடெஸ்டின். ஹன்சனுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட கார்ல்ஸன் ஓர் ஆண்டிற்குள்ளேயே 1000 ரேட்டிங் புள்ளிகளுக்கு மேல் பெற்றார்.

2000 முதல் 2002 வரை ஏறத்தாழ 300 ரேட்டிங் போட்டிகளிலும், ஏராளமான பிளிட்ஸ் செஸ் போட்டிகளிலும், வேறு சில போட்டிகளிலும் பங்கேற்ற கார்ல்ஸன், 2003-இல் இண்டர்நேஷனல் மாஸ்டருக்கான 3 நார்ம்ஸ்களையும் பெற்று அதே ஆண்டில் இண்டர்நேஷனல் மாஸ்டராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

அதன்பிறகு தொடர் வெற்றிகளைக் குவித்த கார்ல்ஸன், 2004-இல் முன்னாள் உலக  சாம்பியனான அனாடோலி கார்போவை தோற்கடித்து செஸ் உலகையே அதிர்ச்சியடைய வைத்தார். அதே ஆண்டில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அப்போது அவருக்கு வயது 13. இதன்மூலம் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார்.

2002-ஆம் ஆண்டு 12 வயதிற்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டி துபாயில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் கார்ல்ஸன் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றபின், தொலைக்காட்சி செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு  பேசுகிறார்கள். அப்போது கார்ல்ஸனின் பயிற்சியாளர் அக்டெஸ்டின், ‘இதோ இந்தப் பையனுக்கு இதுவரை பதிவான செஸ் உலகின் மிக  முக்கியமான போட்டியின் அத்தனை காய்நகர்த்தல்களும் மிக நன்றாகத் தெரியும்’ என்று சொல்ல...

உடனே ஒரு குசும்புக்காரப் பத்திரிகையாளர்  அவசரமாக தனக்கு நன்கு தெரிந்த காய்நகர்த்தல்களை எழுதி, ‘இது யார் விளையாடியது... எத்தனையாவது ஆண்டு  சொல்லு பார்ப்போம் தம்பி?’ என்று கார்ல்ஸனிடம்  நீட்ட... கார்ல்ஸன் தாமதிக்கவே இல்லை.

‘இது க்ராம்னிக்-எல்வ்னிக் இருவரும் ஆடியது, வியன்னாவில் 1997-ஆம் ஆண்டு நடந்த ஆட்டத்தின் கடைசிப்பகுதி. இதில் முப்பதாவது நகர்த்தலில் எல்வ்னி யானையை இப்படி நகர்த்தியிருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்’ என்று கடகடவென  கூகுளில் சர்ச் பட்டனை அமுக்கினால் தகவல்களைக் கொட்டுமே... அப்படி பொழிய ஆரம்பித்துவிட்டான்.

அங்கிருந்த அத்தனை பத்திரிகையாளர்களும் அப்படியே ஸ்தம்பித்துப்போய் உறைந்துபோய் நின்றுவிட்டார்கள். மூக்கறுபட்ட அந்தப் பத்திரிகையாளர், ‘நீங்க சொன்னதுல ஒரு தப்பிருக்கு. அது 1997-ஆம் ஆண்டல்ல, 1996-ஆம் ஆண்டு தம்பி’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு தப்பி ஓடிவிட்டார்!

மேக்னஸ் கார்ல்ஸனின் வெற்றி ரகசியங்களில் அவருடைய நினைவாற்றல் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அவருடைய மூளையில் உலகின் மிக முக்கியமான இருபதாயிரத்திற்கும் அதிகமான காய்நகர்த்தல்கள் பதிவாகியிருக்கின்றன" என்கிறார், இங்கிலாந்து கிராண்ட் மாஸ்டரான நீஜெல் ஷார்ட்.

எட்டு வயதில் தன்னுடைய தந்தையை தோற்கடித்த பின் ஒவ்வொருவராக தோற்கடிக்க ஆரம்பித்தான். தன்னுடைய ஆட்டத்திறனை தானாகவே வளர்க்கத் தொடங்கினான். பத்து வயதில் இனி செஸ்தான் என்று அவனாக முடிவெடுத்து முழுநேர கால்பந்தாட்டம் மற்றும் பனிச்  சறுக்காட்டத்தையும் கைவிட்டான். பனிச்  சறுக்கு விளையாட்டில் பத்து வயதிலேயே  21 மீட்டர்கள் உயரம் பறந்து சாதனை படைத்திருந்தான் குட்டிப்பையனான மேக்னஸ் கார்ல்ஸன்.

சரமாரியாக வெற்றிகளை குவித்துக் கொண்டிருந்த கார்ல்ஸனை அவனுடைய தந்தை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். வேண்டிய உதவிகளை செய்துகொடுத்தார். கார்ல்ஸனுக்கு  16 வயதாக இருந்தபோது தன்னுடைய பள்ளிப் படிப்பைக் கைவிட்டுவிட்டு முழுநேரமும் செஸ் ஆடப்போவதாகச் சொன்னான்! அவனுடைய அப்பாவுக்கு முதலில் அதிர்ச்சிதான்! எந்தத் தகப்பன்தான் ஒப்புக்கொள்வார்.

ஆனால் ஹென்ட்ரிக் உடனே அதற்கு ஒப்புக்கொண்டார். எந்த மறுப்பையும் சொல்லவில்லை. அது கார்ல்ஸன் தன்னுடைய செஸ்ஸில் மட்டுமே கவனத்தைக் குவிக்க உதவியது. அவன் அதற்குப் பிறகு முழுநேரமும்  செஸ்ஸை மட்டும் சுவாசித்து உண்டு உறங்கி செஸ்ஸோடு வாழ உதவியது (சச்சின் தெண்டுல்கர்கூட தன் 16 வயதில் படிப்பைக் கைவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது).

2004-இல் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் அதில் பங்கேற்ற இளம் வீரர் என்ற பெருமை கார்ல்ஸனின் வசமானது. 2004- உலக செஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியனிடம் தோல்வி கண்ட கார்ல்ஸன், பின்னர் உலக செஸ்ஸில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார்.

கார்ல்ஸன் குறித்துப் பேசும்போது, ’‡’NETTLESOMENESS’ என்கிற சொல் செஸ் வட்டாரங்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அதுதான் அவருடைய வெற்றி ரகசியம் என்கிறார்கள் வல்லுநர்கள். அதென்ன நெட்டில் சம்நஸ்?

அமெரிக்காவின் நியூயார்க் யுனிவர்சிட்டியை சேர்ந்த கென்னத் ரீகன் என்கிற ஆராய்ச்சியாளர் செஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் யுக்திகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். அவர்தான் மேக்னஸ் கார்ல்ஸனின் விளையாட்டு யுக்தியை அல்லது விளையாடும் குணத்தை நெட்டில்சம்னஸ் என்கிற சொல்லால் விவரிக்கிறார்.

இன்று கணினிகளின் உதவியோடு எப்படிப்பட்ட செஸ் ஆட்டத்தையும் எளிதில் அனலைஸ் செய்து பிரித்து மேய்ந்துவிட இயலும். அப்படி ஆராயும்போது எதிரில் ஆடுபவரை தவறு செய்யத் தூண்டும் வகையில் ஆடுவது ஒரு பாணி! அது இயல்பிலேயே கார்ல்ஸனுக்கு மிக அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அவரை எதிர்த்து ஆடுபவருக்கு அழுத்தம் கொடுத்து தன்னுடைய திறமையான காய் நகர்த்தலால் தவறிழைக்க வைப்பதில் வல்லவராக இருக்கிறார். ஆனந்த் கூட தன்னுடைய ஐந்தாவது ஆட்டத்தில் செய்த மிகச்சிறிய தவறுதான் ஒட்டுமொத்தமான அவருடைய தோல்விக்கு வித்திட்டது!

கார்ல்ஸன், தான் விளையாடும்போது மூளைக்குள் காய் நகர்த்தல்ளை கன்னாபின்னாவென்று போட்டு கணக்கிடுவதில்லை   என்கிறார். அது தன்னுடைய கவனத்தை சிதறடிக்கும் என்கிறார்.

என்னுடைய உள்ளுணர்வின் அடிப்படையிலேயே காய்களை நகர்த்துவேன். பார்க்கும்போதே இது நல்ல பொசிஸன், இது தவறானது என்பதை உணர்வேன்.எனக்கு எது சரியாகத் தோன்றுகிறதோ அதைச் செய்வேன். அவ்வளவுதான்" என்று இதுகுறித்துக் கேட்டபோது புன்னகையோடு கூறுகிறார் கார்ல்ஸன்!

ஆனால் இந்த உள்ளுணர்வு போர்டில் செய்யக்கூடிய பல்லாயிரக்கணக்கான தவறுகளை தன்னுடைய மூளையில் பதிவு செய்துவைத்திருப்பதால் இயல்பாக உண்டாகக்கூடியது என்கிறார்கள் செஸ் வல்லுநர்கள். அதாவது ஏதாவது ஒன்றில் இடித்து தடுக்கி விழும்போது நம்முடைய உள்ளுணர்வினால் எதையாவது பிடித்து நிற்க முயல்வோமே அதுபோல... இது கடுமையான பயிற்சி மற்றும் ஆழ்ந்த தேடலினால் உருவாவது என்கிறார்கள். பயிற்சியின் போது நிறைய தவறுகளை செய்து பார்த்து அதிலிருந்து கற்றுக்கொள்கிற முறை இது!

அதுமட்டுமல்ல, அந்தக்காலம் போல மாறி மாறி காய்களை வீழ்த்தி திடீரென எங்கிருந்தோ ஒரு ஒளி பிறந்து வெற்றி பெறுகிற ஆட்டத்தையெல்லாம் கார்ல்ஸன் மாற்றிவிட்டார். அவர் எதிரிக்கு வாய்ப்பே கொடுப்பதில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குத்துகளை தொடர்ந்து கொடுத்து எதிரி தள்ளாட ஆரம்பிக்கும்போது வீழ்த்தி வெற்றிபெறுகிறார், அவருடைய  ஆட்டம்   குத்துச் சண்டையைப் போன்றதுதான்" என்கிறார் அடெஸ்டின்.

2009-இல் நடைபெற்ற நான்ஜிங் பியர்ல் ஸ்பிரிங் போட்டியின்போது 2800 இ.எல்.ஓ. ரேட்டிங் புள்ளிகளை எட்டினார். இதன்மூலம் செஸ் வரலாற்றில் 2800 ரேட்டிங் புள்ளிகளைத் தொட்ட 5-ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

2010- ஜனவரியில் உலக செஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம் இளம் வயதில் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தவர் என்ற சாதனையை ரஷியாவின் விளாடிமிர் கிராம்னிக்கிடம் இருந்து பறித்தார். கடந்த ஜனவரியில் 2861 இ.எல்.ஓ. ரேட்டிங் புள்ளிகளை எட்டியதன் மூலம் செஸ் வரலாற்றில் அதிக ரேட்டிங் புள்ளிகளை எட்டிய வீரர் என்ற மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரரானார். இதன்மூலம் அதிக இ.எல்.ஓ. புள்ளிகளை (2851) வைத்திருந்த முன்னாள் உலக சாம்பியனான ரஷிய வீரர் கேரி காஸ்பரோவின் 13 ஆண்டுகால சாதனையை முடிவுக்குக் கொண்டு வந்தார் கார்ல்ஸன்.

தன்னுடைய ஃபிட்னஸ்ஸில் மிகுந்த அக்கறை கொண்டவராகவும் தன்னுடைய உடல் மொழியில் தனித்துவம் கொண்டவராகவும் இருக்க விரும்புகிறார் கார்ல்ஸன். அது செஸ் ஆட்டத்தில் மிக முக்கியப் பங்காற்றுகிற ஒன்றாக இருக்கும் என்பது அவருடைய கோட்பாடு. அதற்காக தினமும் உடற்பயிற்சிகள் மேற்கொள்வதிலும் உடலை கச்சிதமாகவும் கம்பீரமாகவும் வைத்துக்கொள்வதிலும் அதிக கவனத்தை செலுத்துகிறார்.

சென்னைக்கு போட்டிக்காக வரும்போது தன்னுடைய சமையல்காரரையும் கூடவே அழைத்து வந்தார். இந்த ஊர் உணவு, உடலை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி ஓர் ஏற்பாடு!

ட்விட்டர், ஃபேஸ்புக்கை தொடர்ந்து நிறையவே பயன்படுத்துகிறார் கார்ல்ஸன். தொடர்ந்து கால்பந்தாட்டப் போட்டிகளில் ஆர்வம் காட்டுகிறார். இப்போது கால்பந்தாட்டத்திலும் கால்ஃபிலும் ஈடுபடுகிறார். இரவு கேளிக்கை விடுதிகளில் உற்சாக ஆட்டம் போடுகிறார். நிறைய சாகஸங்களில் ஆர்வமாக இருக்கிறார்.  தன்னுடைய  புற அழகைப் பேணுவதிலும் புதுமைகள் செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார். இங்கிலாந்தின் பெண்கள் வார இதழ் ஒன்று 2013-ன் கவர்ச்சிகரமான ஆண் என இவரை தேர்ந்தெடுத்திருக்கிறது.

எப்போதும் அமைதியே உருவமாக, சாந்தபாந்தமாக, சிந்தித்துக் கொண்டேயிருக்கிற செஸ் வீரர்கள் போல இல்லாமல் இதுவரை செஸ் உலகம் பார்த்திராத புதுமாதிரியான வார்ப்பாக கார்ல்ஸன் இருக்கிறார். அவர் நவீன யுகத்தின் சிக்ஸ்பேக் + டச்போன் இளைஞர்களை பிரதிபலிக்கிறார். அந்தப் புதிய போக்கினை அவருடைய விளையாட்டிலும் வாழ்க்கையிலும் அதை இயல்பாகவே பார்க்க முடிகிறது.

அடுத்த இருபதாண்டுகள் நிச்சயமாக கார்ல்ஸன் ஆதிக்கம் செலுத்துவார் என்று இப்போதே ஆருடம் கூறுகிறார்கள் வல்லுநர்கள்.

 இளம் பெற்றோருக்கு என்னுடைய அறிவுரை ஒன்றே ஒன்றுதான்... உங்கள் குழந்தைகளை இதுதான் செய்ய வேண்டும் என்று எதையுமே திணிக்காதீர்கள். அவர்களை தங்களுடைய ஆர்வம் எதில் என்பதைக் கண்டறிய கொஞ்சம் காலம் கொடுங்கள். அதற்கான வாய்ப்புகளை வீட்டிலேயே உருவாக்குங்கள். அவர்களாகவே அதைக் கண்டறிந்து மேலெழும்பி வருவார்கள். அப்போது முழு மனதோடு ஊக்கப்படுத்துங்கள். உங்கள் உயிரையும் கொடுத்து அவர்களுடைய வளர்ச்சிக்கு உதவுங்கள். அதுவே போதுமானது" என்று தன்னுடைய மகன் வெற்றிபெற்ற பின்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் கார்ல்ஸனின் அப்பா ஹென்ரிக். இதுதான் கார்ல்ஸன் மாதிரியான ஒரு சாம்பியனின் வெற்றிக்கான உண்மையான காரணமாக இருக்க முடியும். எல்லா சாம்பியன்களும் வீட்டிலிருந்துதான் உருவாகிறார்கள். அதற்கான சூழலை அமைத்துக் கொடுத்தால் இங்கேயும் கோடிக்கணக்கான சாம்பியன்களை நம்மால் உருவாக்க முடியும்.

அவன் தன்னுடைய செஸ் பயணத்தை முடித்துக் கொள்ளும்போது, நவீன செஸ் உலகத்தின் போக்கை, ஆட்டங்களின் பாணியையே புரட்டிப் போட்டிருப்பான்!" என்று புகழாரம் சூட்டுகிறார் கார்ல்ஸனின் முன்னாள் பயிற்சியாளரும் செஸ் உலகின் மிக முக்கியமான வீரருமான காரி காஸ்பரோவ். கார்ல்ஸனின் ஆட்டத்தை தொடர்ந்து பார்த்தவர்கள் யாருமே அதை கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக்கொள்வார்கள்.

நவம்பர் 30-ஆம் தேதி தன்னுடைய 23-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் மேக்னஸ் கார்ல்ஸன். அவருக்கு, ‘புதிய தலைமுறை’யின் வாழ்த்துகள்!
கவர் ஸ்டோரி – II : வீழ்ச்சி!
மாலன்

தர்மாவேசத்தோடு எழுந்த ஓர் பத்திரிகையாளன் வியாபாரியாகி வீழ்ந்த கதை

அவன் மெல்ல இருளில் கிடந்த ரகசியங்களை அம்பலப்படுத்தத் துவங்கினான். உண்மை நிர்வாணமாய் உரித்துக் காட்டப்படும்வரை, உறுதியான எல்லாம் தலைகீழாகப் புரட்டப்படும்வரை அவன் மெல்ல மெல்ல இருளில் கிடந்த ரகசியங்களை அம்பலப்படுத்தத் துவங்கினான். விரைவிலேயே அவன் காதலின், வாழ்வின் உடைசல்கள் மட்டும் அவனைச் சூழ்ந்திருக்க... அவன் தனிமைப்பட்டுப் போனான். எழுதப்படாத அவனது பெரும் படைப்பும், எதிர்கால இருளும் அவனை விழுங்கக் காத்திருக்க... தனிமைப்பட்டுப் போனான்.

சையின் ரசவாதம் (The Alchemy of Desire) என்ற தருண் தேஜ்பாலின் முதல் நாவலின் கதைச்சுருக்க வரிகள் இவை. இவற்றை இன்று வாசிக்கும்போது இதழோரம் ஓர் புன்னகை கசிவதைத் தவிர்க்கத்தான் முடியவில்லை.

பல ஆங்கிலப் பத்திரிகையாளர்களைப் போல, தன் இளம் வயதில், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் தன் இதழியல் வாழ்வைத் துவக்கிய தருண் தேஜ்பால் ஒரு ராணுவ அதிகாரியின் மகன். பல ஊர்களில் படித்து சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். இந்தியன் எக்ஸ்பிரசில் பணியைத் துவக்கினாலும் தனது 21-ஆவது வயதில், ‘இந்தியா டுடே’ பத்திரிகைக்கு வந்துவிட்டார். அங்கு முதலில் அவருக்கு புத்தக விமர்சனம் எழுதும் பணிதான் கொடுக்கப்பட்டது. அவருக்கு புலானாய்வு இதழியலில் இருந்த ஆர்வம் அடையாளம் கண்டு கொள்ளப்படவில்லை. காரணம், அடிப்படையில் ஓர் இலக்கிய எழுத்தாளர், தீவிர வாசகர்.

‘இந்தியா டுடே’வில் பத்தாண்டுகள் பணி புரிந்த பின் ஃபைனான்சியல் எகஸ்பிரசில் சேர்ந்தார். ‘இந்தியா டுடே’யின் போட்டி இதழ் எனக் கருதப்படும் ‘அவுட்லுக்’ இதழ் துவக்கப்படுவதில் முக்கியப் பங்காற்றினார்.

அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே, ‘இந்தியா இன்க்’ (India Ink) என்ற பதிப்பகத்தைத் துவக்கினார். அருந்ததி ரா, கபில் சிபல், மஞ்சு கபூர் போன்ற பிரபங்களின் நூல்களை வெளியிட்ட நிறுவனம் இப்போது கை மாறிவிட்டது.

டாட் காம் (இணையதளம்) என்பது பணம் கொட்டும் தொழிலாக இருந்த இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், 2000-த்தில், ‘வென்சர் காபிடல்’ உதவிகள் கிடைத்து வந்த காலகட்டத்தில் தனது மனைவி மின்டி, மற்ற இரு நண்பர்களுடன் சேர்ந்து தெஹல்கா இணையதளத்தைத் துவக்கினார்.

இந்த இரு நண்பர்களில் ஒருவர் அநிருத்த பகல். இவரும் ‘இந்தியா டுடே’வில் பணியாற்றியவர். அங்கே பல புலனாய்வுக் கட்டுரைகள் எழுதியவர். ராஜீவ் கொலையில் சிவராசனுக்கு இருந்த தொடர்பை அம்பலப்படுத்தியவர் இவர்தான். இந்தியில் தெஹல்கா என்ற பெயரைச் சூட்டியவரும் இவர்தான். தெஹல்கா என்றால் பரபரப்பு என்று அர்த்தம்.

அநிருத் ‘இந்தியா டுடே’வைப் போலவே தெஹல்காவிலும் நிறைய புலனாய்வுக் கட்டுரைகள் எழுதினார். இவர் பின்னர் தெஹல்காவிலிருந்து விலகி தற்போது கோப்ராபோஸ்ட்.காம் என்ற புலனாய்வு இணையதளத்தை நடத்தி வருகிறார். இது அண்மையில் பல அதிர்ச்சி தரும் விஷயங்களை (குஜராத் அரசு அதிகாரிகள் ஓர் இளம்பெண்ணை பின் தொடர்ந்த விவகாரம், வங்கிகள் ஹவாலா பிசினஸில் ஈடுபட்டுள்ள விவகாரம் போன்றவை) வெளியிட்டு வருகிறது.

கிரிக்கெட்டில் நடக்கும் மேட்ச் ஃபிக்சிங்கை அம்பலப்படுத்தியதுதான் தெஹல்கா இணையதளம் வெளியிட்ட முதல் புலனாய்வுக் கட்டுரை. கிரிக்கெட்டைக் கும்பிடும் தேசம் திகைத்தது. தெஹல்காவின் பக்கம் கவனம் திரும்பியது. இந்த கிரிக்கெட் ஊழல் பற்றி சிபிஐ, விசாரணை மேற்கொண்டது. அசாருதீன், அஜய் ஜடேஜா, அஜய் சர்மா ஆகியோர் வாழ்நாள் முழுதும் விளையாடத் தடை விதிக்கப்பட்டனர்.

அடுத்த கட்டுரை ராணுவ அதிகாரிகளிடையே இருந்துவரும் லஞ்ச ஊழலை வெளிப்படுத்தும் ஆபரேஷன் வெஸ்ட் எண்ட். பாதுகாப்பு அமைச்சர், ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த பங்காரு லக்ஷ்மண், ஜார்ஜ் பெர்னாண்டஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஜெயா ஜெட்லி, பல அதிகாரிகள் பதவியிலிருந்து உருண்டனர்.

ஆபரேஷன் வெஸ்ட் எண்ட் தெஹல்காவிற்கு நிறைய விருதுகளைப் பெற்றுத் தந்தது. நிறைய பிரச்சினைகளையும் கொண்டுவந்தது. வென்சர் காபிடல் முறையில் முதலீடு செய்தவர்கள் அதிகார வர்க்கத்திடமிருந்து நிறைய நெருக்கடிகளைச் சந்தித்ததையடுத்து விலகிக் கொண்டார்கள். பத்திரிகையில் பணியாற்றியவர்கள் விலகினார்கள். தெஹல்கா.காம் மூடப்பட்டது.

எழுத்தாளர்கள் (அருந்ததி ராய், சசி தரூர் போன்றோர்), வக்கீல்கள், (கபில் சிபல், ராம்ஜெத்மலானி போன்றோர்), சினிமா நட்சத்திரங்கள் (அமீர்கான், நந்திதா தாஸ் போன்றவர்கள்), வணிகர்கள்,  சமூகச் செயல்வீரர்கள் என 200 பேர் தலைக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க... 2004-இல் மீண்டும் தெஹல்காவை வார இதழாகத் துவக்கினார் தேஜ்பால். ‘மக்கள் இதழ்’ என்ற முழக்கத்துடன் அது வலம் வரத் துவங்கியது. குஜராத்தில் நடந்த வகுப்புக் கலவரம் பற்றிய ஒரு புலனாய்வுக் கட்டுரையின் மூலம் கவனத்தையும் சர்குலேஷனையும் பெற்றது. ஆனால் பொருளாதார நிலை சீராகவில்லை.

ர்மாவேசத்தோடு இதழியலுக்குள் அடியெடுத்து வைத்த ஒரு பத்திரிகையாளன் வியாபாரியாக மாறுகிற துயரம் இங்குதான் துவங்கியது. பொருளாதார நிலையை சமாளிக்க தேஜ்பால் முதலீடுகளைத் தேட ஆரம்பித்தார். திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரான கே.டி. சிங்கின் நிறுவனமான ராயல் பில்டிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம் தனது துணை நிறுவனம் மூலம் 65 சதவீதப் பங்குகளை வாங்கிக் கொண்டது. அக்னி மீடியா என்ற தேஜ்பாலின் நிறுவனம் ஆனந்த் மீடியா என்ற புதிய பெயரைச் சூடிக் கொண்டது. அக்னி, ஆனந்த் ஆனதை இப்போது பார்க்கும் போது இந்த மாற்றம் ஏதோ ஒரு குறியீடு போல (Symbolix) தோன்றுகிறது. தேஜ்பாலிடம்  19 சதவீதப் பங்குகளும், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களிடம் 10 சதவீதப் பங்குகளும் மற்ற வேறு சிலரிடம் மீதிப் பங்குகளும் உள்ளன.

 கே.டி.சிங்கின் நிறுவனம் ஒன்று மோசடிக் குற்றச்சாட்டுகளின் பேரில் 2012-இல் விசாரணைக்கு உடபடுத்தப்பட்டது, அந்த நிறுவனம் தெஹல்காவிற்கு 19 கோடி ரூபாய் பிணை இல்லாத கடனாகக் கொடுத்திருக்கிறது  என்பது தெஹல்காவின் மீது படிந்துள்ள நிழல். முதலீடுகள் வந்தன.

ஆனால் நஷ்டம் தொடர்கிறது. 2011-ஆம் ஆண்டு  16 கோடி ரூபாயும், 2012-ஆம் ஆண்டு 10 கோடி ரூபாய்க்கு மேலும் தெஹல்காவை வெளியிடும் ஆனந்த் மீடியா நஷ்டத்தை சந்தித்துள்ளது. அது கடந்த ஆண்டுகளில் மொத்தம் 66 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

நிறுவனம் நஷ்டத்தில் இருந்து வருகிறது என்றாலும் தருணின் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பங்குகளை நம்ப முடியாத விலைக்கு விற்றுப் பணம் பார்த்துவிட்டார்கள் என தருணை  விமர்சிப்பவர்கள் சொல்கிறார்கள். தருணின் மனைவி அவர் வசம் இருந்த 2000 பங்குகளை பங்கு ஒன்று 13,189 ரூபாய் என்ற விலைக்கு விற்றதன் மூலம் 2.64 கோடி பெற்றார் எனவும், தருணின் தந்தை தன் வசம் இருந்த 1,000 பங்குகளை விற்று 1.32 கோடியும், அவரது தாய் 1.32 கோடியும், சகோதரர் 2 கோடியும், சகோதரி 57 லட்சமும் பெற்றார்கள் என அவர்கள் சொல்கிறார்கள். நிறுவனம் நஷ்டத்தில் நடக்கும்போது, அதன் நிகர சோத்து மதிப்பு மைனஸில் இருக்கும்போது எப்படி இவ்வளவு அதிகத் தொகைக்கு அவர்களால் விற்க முடிந்தது என்பது அவர்கள் எழுப்பும் கேள்வி.

வரது குடும்பத்தினர் பங்குகளை விற்றார்களே தவிர, தருண் தேஜ்பால் தனது பங்குகளை விற்கவில்லை. ஆனால் அவர் வேறுவிதங்களில் பணம் சம்பாதித்துவிட்டார் என்பது அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.

கடந்த மூன்றாண்டுகளாக திங்க் பெஸ்ட் (Think Fest) என்ற சிந்தனைத் திருவிழா ஒன்றை தெஹல்கா நடத்தி வருகிறது. ஓர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மிகப் பிரபலமானவர்களை அழைத்து மூன்று நாட்கள் இந்தத் ‘திருவிழா’ நடக்கும். பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள இந்தாண்டு திருவிழாவில் பங்கேற்றவர்கள் அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் ராபர்ட் டி நிரோ, எழுத்தாளர் வி.எஸ்.நைபால், நடிகர் அமிதாப் பச்சன், கவிஞர் ஜாவித் அக்தர், அமைச்சர் பாரூக் அப்துல்லா, தொழிலதிபர் நந்தன் நீல்கேணி, முன்னாள் தலைமை கணக்காயர் வினோத் ராய், சமூக சேவகர் மேத்தா பட்கர், தாலிபானின் நிறுவனர்களில் ஒருவரான அப்துல் சலாம் சயீஃப் போன்றோர்.

இவ்வளவு பிரபலமானவர்களை கோவா போன்ற இடத்திற்கு அழைத்து மூன்று நாட்கள் ஒரு நிகழ்ச்சியை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடத்துவது என்றால் அதற்கு பெரும் செலவாகுமே, தொடர்ந்து பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் ஒரு நிறுவனத்திற்கு இது எப்படி சாத்தியமாயிற்று என்ற கேள்வி ஊடக வட்டாரங்களில் எழுந்தபோது ஓர் உண்மை வெளியாயிற்று.

இந்தத் திருவிழா தெஹல்காவின் பெயரால் நடத்தப்பட்டாலும் அதை ஏற்பாடு செய்வது தெஹல்கா அல்ல. அதை நடத்துவது திங்க் ஒர்க்ஸ் என்ற ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்தின் 80 சதவீதப் பங்குகள் தருண் தேஜ்பால் வசம் உள்ளன. மீதிப் பங்குகள் தலா பத்து சதவீதம் அவரது சகோதரி வசமும், அண்மையில் தெஹல்காவின் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகிய ஷோமா சௌத்ரி வசமும் உள்ளன.  கடந்த ஆண்டு 56,391 ரூபாய் நஷ்டம் சம்பாதித்த இந்த நிறுவனம் இந்த ஆண்டு இரண்டு கோடி ரூபாய் லாபம் சம்பாதித்திருக்கிறது. இது எப்படி சாத்தியமாயிற்று என்று பார்த்தால் ஏர்டெல், எஸ்ஸார், டிஎல்எஃப், கோகோ கோலா, யூனிடெக், வேவ், டொயாட்டோ, பிஎச்இஎல், கோவா டூரிசம்  போன்ற  34 கார்ப்பரேட் மற்றும் அரசு நிறுவனங்கள் இதற்கு நன்கொடை அளித்துள்ளன. இவற்றின் மூலம் வந்த பணம் 12.4 கோடி. இதில் பார்த்த லாபம் 2 கோடி.

சுருக்கமாகச் சொன்னால் தருண் தேஜ்பாலின் முதலீடு குறைவாக உள்ள (தெஹல்கா) நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறது. பெருமளவு அவரது முதலீட்டைக் கொண்ட (திங்க் ஒர்க்ஸ்) நிறுவனம், கார்ப்பரேட்களின் ஆதரவுடன் லாபம் சம்பாதிக்கிறது!

சட்டப்படி இது தவறு இல்லை. ஆனால் தர்ம நியாயங்களின்படி இனி தெஹல்கா எப்படி இந்த நிறுவனங்கள் பற்றி எழுதும்?

திங்க் ஒர்க்ஸில் லாபத்தை ருசி பார்த்த தேஜ்பால் ப்ருஃபோர்க் (prufrock) என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அது தில்லியில் ஒரு ‘பாஷ்’ ஆன பகுதியில் அறிவுஜீவிகள், கலைஞர்களுக்கான ஒரு கிளப் ஒன்றை ஆரம்பிக்க உள்ளது. அதில் அழைப்பின் பேரிலேதான் உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இந்த நிறுவனத்தில் சடாஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் 2 கோடி ரூபாயை 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலீடு செய்துள்ளது. இந்த சடா ஹோல்டிங்ஸ் குர்தீப் சிங் சடா என்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சாராய வியாபாரிக்குச் சொந்தமானது. வட இந்தியாவில்  மூன்று மாநிலங்களில் ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனை செய்பவர் அவர். மதுக்கடைகள் முன் தின்பண்டங்கள் விற்பவரின் மகனாக வாழ்க்கையைத் துவக்கிய அவர் பின்னாளில் மது விற்பனை, சர்க்கரை, ரியல் எஸ்டேட், வேவ் என்ற பெயரில் பல சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றை நடத்தும் தொழிலதிபராக வளர்ந்தார். அவரது சினிமா தியேட்டர்கள் வரி ஏப்புச் செய்ததாக சோதனைகளையும் எதிர்கொண்டன. அவர் கடந்த நவம்பர் மாதம் சத்தர்பூர் என்ற ஊரில் அவரது பண்ணையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அது தொடர்பாக அவரது மேனேஜரும், டிரைவரும் கைது செய்யப்பட்டார்கள்.

இப்படி ஒரு நிழலான மனிதரிடமிருந்து கிளப் நடத்துவதற்கான திட்டத்திற்கு தேஜ்பால் முதலீடு பெற்றிருப்பதும் அவரை விமர்சனத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

கிரேக்க துயர நாடகங்களைப் போல விரியும் இந்த வீழ்ச்சி ஒரு தனிமனிதனுடையது மட்டும்தானா? ஒரு சமூகத்தின் வீழ்ச்சியும்கூட அல்லவா? அநீதிகளுக்கு எதிராக எழுகிற வாள்கள் எல்லாம் பணத்தின் முன்னால் மண்டியிடுகிற துயரம் நம் எல்லோருக்குமானதல்லவா?

வீழ்ச்சி!

Friday, 13 December 2013

ஃபாஸ்ட் ஃபுட் திருமணங்கள்.

"திருமணங்கள் ஆயிரம் காலத்துப் பயிர்", "வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்" என்பதெல்லாம் ஏறக்குறைய வழக்கொழிந்து விடும் நிலமையில் தொங்கிக் கொண்டிருக்கும் பழமொழிகள்.

முன்பெல்லாம் ஒரு கல்யாணம் முடிவானால்... ஊருக்கே அது ஒரு திருவிழாச் செய்தி. இரு வீட்டாரும் சந்தித்துப் பேசுவதில் துவங்கி, ஒவ்வொரு விஷயமாய் இரண்டு வீட்டுப் பெற்றோர்களும், பெரியோர்களும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். எத் தரப்புக்கும் எந்தக் குறையும் வந்து விடக் கூடாதென்பதில் ஊர்ப் பெரியவர்கள் ரொம்பவே கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள்.

யாராவது வாய்தவறி ஏதாவது சொல்லி விட்டால் உடனே பெரியவர்கள் முன்னின்றி அதை சமரசம் செய்து வைப்பார்கள். "வாழப் போறவங்க மன நிறைவோட போணும்" என ரொம்பவே பிராக்டிகலான ஒரு பதிலையும் சொல்வார்கள்.

பெண்பார்க்கப் போவது வெட்கத்தை முற்றத்தில் தெளித்துக் கோலம் போடும் ஒரு ஆனந்த அனுபவம். நிச்சயம் குறிக்கும் நாள் அந்த வெட்கத்தை வீட்டு வரவேற்பறைக்கு நீட்டிக்கும் காலம். அதன் பின் சேலை எடுப்பது, வளையல் கொடுப்பது, இத்யாதி இத்யாதி என திருமணம் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாய் விரியும்.

அப்போதெல்லாம் திருமணம் பெரும்பாலும் முற்றங்களில் தானே நடக்கும். வாழை மரத்தை வெட்டித் தோரணம் கட்டுவதில் துவங்கி நடக்கின்ற களேபரங்கள் ஒரு தித்திக்கும் திருவிழாக் கோலம். திருமணத்துக்கு முந்திய நாளிலேயே வீடு முழுக்க சுற்றமும், சமையல் தடபுடல்களும், சிரிப்புச் சத்தங்களும், கிண்டல் கேலிகளும் என உறவின் இன்னொரு படலமே அங்கே அரங்கேறும். பனை மர உச்சியில் கட்டப்பட்டிருக்கும் ஊதுகுழல் ஒலிபெருக்கியில் சர்வ நிச்சயமாய் டி.எம்.எஸ் பாடிக்கொண்டிருப்பார், அல்லது கட்டபொம்மன் கர்ஜித்துக் கொண்டிருப்பார்.

"மணமகளே மருமகளே வா" எனும் பாடல் ஒலிக்காத கல்யாணங்கள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இல்லவே இல்லை. மைக் செட் காரர் வந்திறங்கிய உடனே கேட்கும் முதல் கேள்வியே அது தான். "லேய்.. மங்களப்பாட்டு, கட்டப்பொம்மன் கதைவசனம் எல்லாம் இருக்காலே.. " !!!

திருமணத்தன்று பெற்றோர் நெகிழ்விலும், மகிழ்விலும், அழுகையிலும் தான் இருப்பார்கள். கால்நூற்றாண்டு காலம் தன் கால்களைச் சுற்றிச் சுற்றி வந்த மகளுக்கு கால்க்கட்டு போட்டு அனுப்பி வைக்கிறோமே ! அவள் அந்த வீட்டில் நன்றாக இருப்பாளா ? எல்லோரும் அவளை நல்ல முறையில் கவனித்துக் கொள்வார்களா ? பொத்திப் பொத்தி வளர்த்த மகளை, கட்டிக் காப்பார்களா, கண்கலங்க வைப்பார்களா ? என மனசு இடைவிடாமல் அடித்துக் கொள்ளும்.

கண்ணீர் விட்டு அழாமல், பெற்றோரின் பாதங்களைத் தொழாமல் எந்தப் பெண்ணும் திருமணத்தைச் சந்தித்ததேயில்லை என்பதே பழைய நிலமை. திருமணமாகி சில மாதங்கள் கழிந்து புது வீட்டில் பெண் மகிழ்ச்சியாய் இருக்கிறாள் என்பதைக் கண்டறிந்தபின்பே பெற்றோர் கொஞ்சம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுப்பார்கள். அந்தக் கணம் வரை அட்வைஸ் மழையும், பாசப் பயணங்களும், பதட்டங்களுமாக அவர்களுடைய தினங்கள் கழியும். இதெல்லாம் இப்போது மருவி மருவி, அருவிக் கரையில் கிடக்கும் கூழாங்கற்கள் போல வடிவம் மாறி விட்டது.

"அம்மா.. எனக்கு இந்தப் பொண்ணைப் புடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். என்ன சொல்றீங்க ?" எனக் கேட்கும் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் எனும் பட்டியலில் சேர்கிறார்கள். காரணம், அந்த அளவுக்கு கூட பெற்றோரின் ஈடுபாட்டை இளைஞர்கள் இப்போதெல்லாம் நாடுவதில்லை. "அம்மா... இந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். அடுத்த மாசம் முகூர்த்தம் வருது." என்பது தான் பெரும்பாலான இன்றைய இளசுகளின் திருமண ஆயத்தம்.

"பொண்ணு எப்படிடே ?" எனக் கேட்கும் தந்தையர்களுக்கு சரியான பதில் பல நேரங்களிலும் கிடைக்காது. "பொண்ணைப் பாக்காம ஓ.கே சொல்லுவேனா ?", "பொண்ணு வீட்லயும் பேசிட்டேன். அவங்களுக்கும் ஓ.கே தான்", "பொண்ணை எனக்கு ஆறு மாசமா தெரியும் ஃபேஸ்புக் பிரண்ட்", "என் ஃப்ரண்டுக்குத் தெரிஞ்ச பொண்ணு", "மேட்ரிமோனில பாத்தேன்", " பொண்ணு என் கூட தான் வர்க் பண்ணுது.. நல்ல பொண்ணு தான்" இப்படி ஏதோ ஒற்றை இரட்டை வரி தான் பெரும்பாலான பதில்கள்.

ஆன்லைனில் ஆள் பார்த்து, அப்படியே ஸ்கைப்பில் பேசி, அம்மாக்களிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு, நண்பர்களுடன் கலந்தாலோசித்து ஒரு திருமணத்தை முடிவு செய்கிறார்கள் இளசுகள். மண்டபம், சாப்பாடு, அழைப்பிதழ், ஆடைகள், நகை என என்ன தேவையோ அவற்றையெல்லாம் போன், மின்னஞ்சல், ஆன்லைன், என அவர்களாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

கலந்து கொள்ள வருகின்ற விருந்தினர்களில் ஒருவர். அல்லது விருந்தினர்களில் முக்கியமானவர் எனும் இடம் தான் பெற்றோருக்கு. "மாம்.. இதான் பொண்ணோட அம்மா, இது பொண்ணோட சித்தி" என மண்டபத்திலேயே கூட அறிமுகம் நடக்கும் நிகழ்வுகளும் இப்போதெல்லாம் சர்வ சாதாரணம்.

பார்த்துப் பார்த்துச் சமைக்கும் சாப்பாட்டைச் சாப்பிடும் வயிறுகள் நன்றாக ஜீரணமாகின்றன. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளோ பெரும்பாலும் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதனால் தான் பழைய காலத்துத் திருமண பந்தங்களைப் போல இந்தக் காலத்தில் இல்லை. விவாகரத்துகளின் எண்ணிக்கை சகட்டு மேனிக்கு உயர்ந்து கொண்டே போகிறது. "சமைக்க மாட்டேங்கறா, அவன் ஹைட் கம்மியா தெரியறான்" என்றெல்லாம் காரணம் காட்டி மணமுறிவுகள் தினம் தோறும் நடந்து கொண்டே இருக்கின்றன.

"இட்ஸ் பார்ட் ஆஃப் லைஃப்" என விவாகரத்துகளை எடுத்துக்கொள்ளும் இளைய தலைமுறை அச்சப்பட வைக்கிறது. சிக்கல்கள் இல்லாத குடும்ப உறவுகள் இல்லை. அப்படிப்பட்ட சிக்கல்களை எப்பாடு பட்டாவது தீர்த்து வைப்பது தான் பழைய வழக்கம். இருவரும் பேசி, இரண்டு வீட்டாரும் பேசி, குடும்பத்தினர் பேசி சிக்கல்களைச் சரிசெய்வார்கள். ஒரு விவாகரத்து அத்தி பூத்தாற்போல நடந்தாலே அந்த ஊருக்குள் அது ஒரு அதிர்ச்சிச் செய்தியாய் தான் உலாவரும்.

எடுத்தோம் கவிழ்த்தோம் எனும் திருமணங்கள் நிலைப்பதில்லை. அதற்காக இளைஞர்கள் எதையும் முடிவு எடுக்கக் கூடாதென்பதல்ல. காதலிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. தனது மணப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் அதை பெற்றோரின் மனம் காயப்படாத அளவுக்கு செய்ய வேண்டும் என்பது மட்டுமே நான் சொல்லும் விஷயம்.

"இந்தப் பெண்ணை புடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா" எனுமளவுக்கேனும் இளைஞர்கள் இருப்பதே ஆரோக்கியமானது. ஒரு திருமணம் என்பது சடங்கல்ல, அது வாழ்வின் மிகப்பெரிய அனுபவம். ஆனந்தங்கள் பந்தி வைக்கும் இடம். அதைப் பார்த்துப் பார்த்துச் செய்வதிலும், அதை நிகழ்த்தி முடித்து நிம்மதி கொள்வதிலும் தான் பெற்றோரின் ஆனந்தம் நிலைக்கும். அந்த ஆனந்தத்தை பெற்றோருக்கும் தரும் பிள்ளைகள் கடவுளின் வரங்கள்.

'நீங்கதாம்பா எல்லாம் பாத்துக்கணும். நீங்க சொல்றது படி செய்யறேன்" ன்னு என் பையன் சொல்லிட்டான் என ஒரு தந்தை சொல்லும் போது அவருடைய கண்களைக் கவனியுங்கள். அந்தக் கண்ணில் இருக்கும் கர்வமும், பாசமும், பெருமிதமும், ஈரமும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தரும். அத்தகைய அனுபவத்தைக் கொடுக்காத ஒரு திருமணத்தினால் என்ன பயன் இருக்கப் போகிறது.

மணப் பெண்ணும், மணப் பையனும் ஏற்கனவே சந்தித்துக் கொள்ளாத திருமணங்கள் இப்போது இல்லை. அதில் தவறேதும் இல்லை. ஆனால் பெற்றோருடன் இணைந்து செய்யும் திருமண ஏற்பாடுகள் மிகவும் அவசியம். அது தான் ஒரு புதிய குடும்ப உறவுக்கு தன்னம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும், பரவசப் பகிர்தலையும் நல்க முடியும்.

பறவை எச்சம் போல விழுந்த இடத்தில் முளைப்பதல்ல திருமணப் பயிர்கள். அது சரியான நிலத்தைத் தேர்வு செய்து, பக்குவப்படுத்தி, விதைத் தேர்வு செய்து, நல்ல நாளில் விதைத்து, பாசனத்தைக் கவனித்து, புழு பூச்சிகள் அரிக்காமல் பாதுகாத்து, சரியான காலத்தில் விளைச்சல் இருக்கிறதா என சோதித்து இப்படி படிப்படியாய் செய்ய வேண்டிய விஷயம். அத்தகைய திட்டமிட்ட, வலுவான குடும்ப உறவை உருவாக்க பெற்றோரின் ஆசீரும், அருகாமையும், வழிகாட்டுதலும், உதவியும் நிச்சயம் தேவை.

இன்றைய இளைஞன் நாளைய தந்தை. இன்றைய இளைஞி நாளைய அன்னை. இப்போது நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ, அது தான் நாளை உங்களுக்காகவும் கட்டப்படும். திருமணம் ஆனந்தத்தின் அடையாளம். பெற்றோரின் கண்ணீர்த் துளிகளின் மேல் கட்டப்பட்டால் அது எப்போதுமே வேர்பிடிக்கப் போவதில்லை !

நன்றி: வெற்றிமணி –யேர்மனி. மார்கழி இதழ்
சேவியர்
1Like ·  · 

Thursday, 12 December 2013

BG birthday
My father turned 95 this past November 7, and I am pleased to say that my family was able to be with him as he celebrated another milestone in his long and productive life.   Joined by many colleagues and friends from around the nation and the world at this celebration, he spoke briefly of these friendships and did not fail to point people to the Lord Jesus Christ. This will forever be his legacy which is, as the Bible says, a testimony to the faithfulness of our Lord and Savior Jesus Christ.
Since that night a few short weeks ago, he has had another bout with a respiratory infection and was hospitalized briefly before returning home to recuperate. He is extremely weak but his vitals are good.  Our family would appreciate your prayers for him that the Lord would strengthen him. He has been so encouraged by the release of his most recent book “The Reason for My Hope—Salvation” that he immediately began work on another book about a subject that he feels that God has laid on his heart. Only the Lord knows what is in store as we move forward in service to Him.
To all who have stood with us—some for sixty years—supporting us financially and undergirding through prayer, thank you for your faithful support.  We are encouraged with how God has blessed the proclamation of the Gospel through My Hope.  This evangelistic outreach will continue for the next five years as the Lord is using it so effectively in people’s hearts. We are thankful that He is touching hearts as tens of thousands have responded to the invitation to confess their sins and receive Christ as Savior.
We value your prayers—in fact, we depend on them. We find words of comfort and praise in the psalms, “Oh, bless our God…and make the voice of His praise to be heard, who keeps our soul among the living, and does not allow our feet to be moved. Come and hear, all you who fear God, and I will declare what He has done for my soul. Blessed be God, who has not turned away my prayer” (Psalm 66:8-9, 16, 20 NKJV).
Franklin Graham Signature
Franklin Graham
December 10, 2013
பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்! நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம். 1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும். 2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா? 3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள். 4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்! 5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள். 6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள். 7. பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பறிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும். 8. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும். 9. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் அறியட்டும். 10. உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள். 11. புத்தகம், கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள். 12. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள். 13. இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக கொடுங்கள். 14. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்! மறக்காமல் மகளின் நல்வாழ்வுக்காக பிரார்த்தியுங்கள்.