Saturday, 13 December 2014

பல பெண்களை பலாத்காரம் செய்த உபேர் டாக்ஸி டிரைவர்: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

COMMENT (2)   ·   PRINT   ·   T+  
சிவகுமார் யாதவ்
சிவகுமார் யாதவ்
கால் டாக்ஸியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கியுள்ள உபேர் டாக்ஸி டிரைவர், ஏற்கெனவே பல பெண்களை பலாத்காரம் செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மதுரா அருகேயுள்ள ராம் நகரைச் சேர்ந் தவர் சிவகுமார் யாதவ் (32). டெல்லியில் உபேர் கால் டாக்ஸி யில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 8-ம் தேதி இரவு நிதி நிறுவன பெண் ஊழியரை சவாரி அழைத்துச் சென்றபோது பலாத்காரம் செய்து கொலைமிரட்டலும் விடுத்தார்.
அப்பெண் அளித்த புகாரின் பேரில் சிவகுமார் யாதவை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
தலைமை ஆசிரியரின் மகன்
சிவகுமார் யாதவின் தந்தை ராம்நாத் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். அவரது குடும்பத்துக்கு சொந்த ஊரில் நிலங்கள், வீடுகள் உள்ளன. இதனால் பொருளாதார பிரச்சினை இல்லை.
சிறுவயது முதலே ஊதாரித் தனமாக வளர்ந்த சிவகுமார் யாதவ், 2003-ம் ஆண்டில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் உள்ளூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 2006-ம் ஆண்டில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் கைதானார். தொடர் குற்றங்கள் காரணமாக 2008-ம் ஆண்டில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிவகுமார் வாழ்ந்த வீட்டின் அருகே அவரது உறவுகார பெண் வசித்து வந்தார். அவரிடம் பாசமாக பழகிய சிவகுமார் ஒரு நாள் தனது மிருக குணத்தை வெளிப்படுத்தி பலாத்காரம் செய் தார். கணவர், குழந்தைகளோடு வசித்த அந்தப் பெண், குடும்ப கவுரவம் கருதி நடந்த சம்பவத்தை வெளியில் கூறவில்லை. தற்போது 45 வயதாகும் அவர் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
2011-ம் ஆண்டில் குர்காவ்ன் பார் நடனக் கலைஞரை பலாத்காரம் செய்த வழக்கில் சிவகுமார் யாதவ் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
ராம்நகருக்கு அருகில் உள்ள நாக்லா தார் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை ஆகஸ்ட் 2013-ல் துப்பாக்கியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
இரவில் மட்டுமே பணி
சிவகுமார் யாதவ் பெண்களை குறிவைத்து இரவில் மட்டுமே கார் ஓட்டியுள்ளார். மால், சினிமா தியேட்டர், மதுபான பார்களின் முன்பு பெண் வாடிக் கையாளர்களுக்காக காத்திருந் துள்ளார்.
காரில் தனிமையில் வரும் பெண்களிடம் தகாத முறையில் நடந்துள்ளார். சில பெண்களுக்கு பணம் கொடுத்து சரிகட்டியுள்ளார்.
இதுவரை 6 பெண்கள் மட்டுமே அவர் மீது பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் குடும்ப கவுரவம் கருதி பலர் வெளியில் வரத் தயங்குகின்றனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஊருக்கு பொல்லாதவனாக இருந்தாலும் மனைவி, குழந்தை கள் மீது சிவகுமார் அதிக பாசம் வைத்துள்ளார்.
விதவையை மறுமணம் செய் துள்ள அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். போலீஸ் தன்னை நெருங்குவதை அறிந்த அவர், மதுராவுக்கு தப்பிவந்து மனைவி யையும் மகள்களையும் உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்து தப்பி யோடியபோது போலீஸில் சிக்கி கொண்டார்.
அவரது தாய், தந்தை கூறும்போது, “ஊதாரி மகனை பெற்றதால் ஊரை விட்டே எங்களை ஒதுக்கும் நிலை ஏற்பட்டது, அவன் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக தண் டிக்கப்பட வேண்டும்” என்றனர்.
டாக்ஸி டிரைவர்கள் போராட்டம்
உபேர் கால் டாக்ஸி சேவையை டெல்லி அரசு தடை செய்துள்ளது. இதைக் கண்டித்து அந்த கால் டாக்ஸியை சேர்ந்த டிரைவர்கள் டெல்லியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகளுக்கு போதை மருந்து விற்றவரை தொண்டு நிறுவன உதவியுடன் பிடித்த தாய்

COMMENT (2)   ·   PRINT   ·   T+  
போதை மருந்து விற்ற போது பிடிபட்ட சுனில் ஷர்மா (வலது)
போதை மருந்து விற்ற போது பிடிபட்ட சுனில் ஷர்மா (வலது)
தன் மகளுக்கு போதை மருந்து விற்கும்போது, தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அவரின் தாய், அதை விற்பனை செய்தவரைக் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்திருக்கிறார்.
மும்பையில் 16 வயது கல்லூரிப் பெண் ஒருவருக்கு போதை மருந்துப் பழக்கம் இருந்தது. இதை அவரின் `வாட்ஸ் அப்' உரையாடல்கள் மூலம் அவரின் தாய் தெரிந்து கொண்டார். அந்தப் பெண் கடந்த காலத்தில் மூன்று முறை போதை மருந்து பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது.
மேலும், மீண்டும் போதை மருந்து வாங்க அதை விற்பனை செய்யும் ரகீப் எனும் வியாபாரி ஒருவருடன் தன் மகள் உரையாடல் நடத்தியிருப்பது தெரிய வந்தது. தவிர, அந்த போதை மருந்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் தர வேண்டும் என்றும், அவ்வாறு முடியாவிட்டால் தன்னுடன் ஓர் இரவைக் கழிக்க வேண்டும் என்றும் ரகீப் நிபந்தனை விதித்ததும் தெரிய வந்தது.
அதற்கு அந்தப் பெண் பணத்தைக் கொடுத்து போதை மருந்து பெற்றுக்கொள்வதாகவும், அதைக் கொடுக்க தன் கல்லூரிக்கு வெளியே காத்திருக்கும்படியும் ரகீப்பிடம் சொல்லியிருக்கிறார்.
இதைத் தெரிந்துகொண்ட அவரின் தாய் தன் பெண்ணை இந்தப் பழக்கத்தில் இருந்து மீட்க முயற்சி செய்தார். அதற்காக மகிளா விகாஸ் சமிதி எனும் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டார்.
அந்தத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறியபடி, பணத்தைத் தன் மகள் கண்ணில் படும்படி வைத்தார். அதை எடுத்துக்கொண்டு அந்தப் பெண் கல்லூரிக்குச் சென்றார்.
அந்தப் பெண்ணை தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பின் தொடர்ந்தனர். கல்லூரிக்கு வெளியே ரகீப் அந்தப் பெண்ணிடம் போதை மருந்து விற்கும்போது அவனைக் கையும் களவுமாக அவர்கள் பிடித்தனர்.
ஆனால் பிடிப்பட்டது ரகீப் அல்ல என்பதும், அது அவன் அனுப்பிய டெலிவரி ஆள் என்பதும் அவன் பெயர் சுனில் ஷர்மா என்பதும் தெரிய வந்தது. அவனிடமிருந்து 18 பாக்கெட் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, ரகீப் ஒரு கல்லூரி மாணவர் என்றும், அவருக்கு நிறைய கல்லூரி மாணவர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அந்தத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நீதா ரஷீத் கூறும்போது, "இப்படியான நபர்கள் எல்லாம் பேஸ்புக்கில் பார்டியில் கலந்து கொள்ளும் புகைப்படங்களைப் பதிவேற்றியிருக்கும் பெண் களுக்கு நட்பு விண்ணப்பம் கொடுப்பார்கள். பின்னர் பேஸ்புக் மூலம் கைப்பேசி எண்களைப் பரிமாறிக் கொள்வார்கள். பிறகு அவர்களுக்கு போதை மருந்தை அறிமுகப்படுத்துவார்கள். இவற் றைப் பயன்படுத்தும் பிரபலங் களின் படங்களைக் காட்டி மாணவர்களை ஊக்குவிப்பார்கள். இந்த போதைப் பொருட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் தங் களுக்கு புது உத்வேகம் கிடைப் பதாக இளைஞர்கள் கருதுகிறார் கள். ஆனால் உண்மையில், அது அவர்களின் உயிரை எடுத்துவிடும்" என்றார்.
பெங்களூரு: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் பிடித்து அனுப்பும் வேலையில் ஈடுபட்ட மேதி மஸ்ரூர் பிஸ்வாஸை பெங்களூர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மாற்று நம்பிக்கையாளர்களை கொன்று குவித்து வருகிறது. அவர்கள் கொள்கைகளை செயல்படுத்தும் இஸ்லாமிய நாடுகளை உருவாக்க அந்த அமைப்பு துடித்து வருகிறது. ஈராக்கின் பல பகுதிகளையும் அவ்வமைப்பு கைப்பற்றியுள்ளது. இந்த அமைப்பில் சேர்ந்து எதிரிகளை கொல்வதற்காக புனித போராளிகள் என்ற பெயரில் பல நாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் ஈராக் செல்கின்றனர். சமீபத்தில் இந்தியாவில் இருந்து சென்ற சில வாலிபர்கள், அந்த வாழ்க்கை பிடிக்காமல் தாயகம் திரும்பினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே தாங்கள் ஈர்க்கப்பட்டு சென்றதாக கூறினர். இதையடுத்து சமூக வலைத்தளங்களை உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வந்தது. பன்னாட்டு பாதுகாப்பு அமைப்புகளும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில்தான் இங்கிலாந்தை சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி சேனல் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற நபர், @shamiwitness என்ற ட்விட்டர் அக்கவுண்ட் மூலமாக பலரையும் மூளை சலவை செய்து வந்ததாக அந்த சேனல் கூறியது. இந்த மேதி பிஸ்வாஸ், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால் பெங்களூரிலுள்ள எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது ட்விட்டர் அக்கவுண்டில் 17,700 ஃபாலோவர்கள் உள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ள 3ல் 2 பங்கு பேர் இவரது டிவிட்டர் அக்கவுண்ட்டை ஃபாலோ செய்பவர்கள்தான் என்றும் சேனல்4 தெரிவித்திருந்தது. பெங்களூவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கால் வைத்துவிட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த நபர் குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு போலீசார் வடக்கு பெங்களூரின் ஜாலஹள்ளியில் மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் வசிப்பதை கண்டறிந்து நேற்றிரவு அவரை கைது செய்தது. இதையடுத்து மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளும், பெங்களூரு போலீசாரும் இணைந்து மேதி மஸ்ரூர் பிஸ்வாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு, தீவிரவாத அழைப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், அதில் இடம்பெற்ற வாசகங்களுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more at: http://tamil.oneindia.com/news/india/mehdi-picked-up-bangalore-police-216894.html

Thursday, 13 November 2014

அதிகம் பகிருங்கள் நிச்சயம் பயன்படும்......!!
பாஸ்வேர்ட் (password) கேட்ட சிறுமி..(SHARE MORE PLEASE)
கடத்தலில் தப்பிய சாதுர்யம்...,பெற்றோர்களே உடனே அமல்படுத்துங்கள்.....!
பெங்களூரில் 'little flower' என்கிற பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியிடம் முன்பின் தெரியாத ஒரு நபர், உன்னை அழைத்துவரசொல்லி உன்னுடைய அம்மா என்னை அனுப்பிவைத்துள்ளார். வா போகலாம் என்று சொல்லி இருக்கிறார்.
உடனே அந்த சிறுமி , "password" சொல்லுங்கள் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறாள். (அதாவது முன் பின் தெரியாத யாராவது உன்னை அழைத்தால் இந்த password கேட்டு தெரிந்துகொண்டு செல் என்று முன்னரே அவளுடைய தாயும் , இந்த சிறுமியும் ஒரு password பகிர்ந்துகொண்டுள்ளார்கள்)..!!
சிறுமி password கேட்கவும் அந்த கடத்தல் ஆசாமி எஸ்கேப் ஆகிவிட்டான். அருமையான யோசனை அல்லவா இது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த முறையை உடனே அமல்படுத்துங்கள் பெற்றோர்களே....!
-------------------------------------------------------------------------------------
தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்

Monday, 10 November 2014

கேள்வி: திருமணத்திற்கு முன் பாலுறவு பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்: 
திருமணத்திற்கு முன் பாலுறவுகொள்ளுதலைக் குறிக்கிற எந்த ஒரு எபிரேய அல்லது கிரேக்கச் சொல்லோ இல்லை. விபச்சாரத்தையும் வேசித்தனத்தையும் வேதாகமம் கண்டிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் திருமணத்திற்கு முன்பு பாலுறவுகொள்ளுதல் வேசித்தனம் என்று எண்ணப்பட்டுமா? 1 கொரிந்தியர் 7:2இன் படி “ஆம்” என்பதுதான் தெளிவான பதிலாக வெளிவருகிறது: “ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.” வேசித்தனத்தை “குணமாக்கும் மருந்தாக” திருமணத்தைப் பற்றி பவுல் குறிப்பிடுகிறார். ஒன்று கொரிந்தியர் 7:2 இங்கு குறிப்பாக வலியுறுத்துவது என்னவென்றால், பலருக்கு இச்சையடக்கம் இல்லாததால் திருமணத்திற்கு வெளியே வேசித்தன பாலுறவு கொள்கிறார்கள் என்பதால் மக்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இதனால் தங்கள் வேட்கைகளை நன்முறை வழிகளிலேயே தீர்த்துக் கொள்ள முடியும்.

திருமணத்திற்கு முன் பாலுறவை வேசித்தனம் என்ற வரையறைக்குள் 1 கொரிந்தியர் 7:2 திட்டவட்டமாகக் கொண்டுவந்து விடுவதனால் வேசித்தனத்தைப் பாவம் என்று கண்டிக்கிற வேத வசனங்கள் அனைத்துமே திருமணத்திற்கு முன் பாலுறவையும் பாவம் என்றே கண்டிக்கின்றன. திருமணத்திற்கு முன் பாலுறவை பாவம் என்று அறிவிக்கிற அநேக வேதவசனங்கள் உண்டு (அப்போஸ்தலர் 15:20; 1 கொரிந்தியர் 5:1; 6:13,18; 10:8; 2 கொரிந்தியர் 12:21; கலாத்தியர் 5:19; எபேசியர் 5:3; கொலோசேயர் 3:5; 1 தெசலோனேக்கியர் 4:3; யூதா 7). திருமணத்திற்கு முன் பாலுறவை விட்டு முற்றிலும் விலகியிருக்க வேண்டும் என்பதையே வேதாகமம் அறிவுறுத்துகிறது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான பாலுறவு மட்டுமே கர்த்தர் அனுமதிக்கும் பாலுறவு முறையாகும் (எபிரேயர் 13:4).

பாலுறவை பற்றி நாம் சிந்திக்கும்போது பலவேளைகளில் அது அளிக்கும் பொழுதுபோக்குச் சிற்றின்பம் பண்பில்தான் கவனம் செலுத்துகிறோமே அன்றி குழந்தை பெறும் அதன் மற்றொரு பண்பை நாம் கண்டுகொள்வதே கிடையாது. திருமணத்திற்குள் நடக்கும் பாலுறவு இன்பமானது, மேலும் கர்த்தர் அதை அப்படித்தான் வடிவமைத்தார். திருமண உறவுக்குள் ஆண்களும் பெண்களும் பாலுறவு நடவடிக்கையில் ஈடுபடுவதும் இன்பம் அனுபவிப்பதுமே கர்த்தர் விரும்புவது. சாலோமோனின் உன்னதப்பாட்டு மற்றும் வேறு பல வேதாகமப் பகுதிகள் (நீதிமொழிகள் 5:19 போன்றவை) பாலுறவு இன்பத்தைப் பற்றித் தெளிவாக விவரிக்கின்றன. ஆனாலும், பாலுறவில் கர்த்தருடைய நோக்கத்தில் குழந்தை பெறுவதும் அடங்கும் என்பதை தம்பதியினர் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, திருமணத்திற்கு முன் இருவர் பாலுறவில் ஈடுபடுவது இரு மடங்குத் தவறு – அவர்களுக்கென்று வைக்கப்படாத இன்பத்தை அவர்கள் அனுபவிப்பது, மேலும் ஒரு குழந்தைக்கு கர்த்தர் விரும்புகிற குடும்பச் சூழலைக் கொடுக்காமல் அதற்கு வெளியே அவர்களை உருவாக்க முயற்சிப்பது.

நடைமுறைக்கு ஏற்றது என்பதை மட்டும் வைத்து நல்லது கெட்டது என்பதைத் தீர்மானிக்காமல், திருமணத்திற்கு முன் பாலுறவு என்பதைப் பற்றி வேதாகமத்தின் அறிவுரையைப் பின்பற்றினாலே பால்வினை நோய்கள் வெகுவாகக் குறைந்துவிடும்; கருக்கலைப்புகள் குறையும்; திருமணமாகமல் தாயாகிவிடுவது மற்றும் விருப்பமில்லாமல் கர்ப்பமுறுவது ஆகியவை எண்ணிக்கையில் வெகுக் குறைவாக இறங்கிவிடும்; மேலும் தங்கள் வாழ்க்கையில் பெற்றோரின்றி வளரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறையும். திருமணத்திற்கு முன் பாலுறவைப் பொருத்தவரை விலகியிருத்தலே கர்த்தருடைய ஒரே கொள்கை. விலகியிருத்தல் உயிர்களைக் காக்கும், குழந்தைகளைப் பாதுகாக்கும், பாலியல்சார் உறவுகளுக்கு தகுந்த மதிப்பை அளிக்கும், மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தருக்கு மகிமை சேர்க்கும்.

காயீனின் மனைவி யார்? காயீனின் மனைவி அவனது சகோதரியா?




கேள்வி: காயீனின் மனைவி யார்? காயீனின் மனைவி அவனது சகோதரியா?

பதில்: 
காயீனின் மனைவி யாரென்பதை வேதாகமம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அவனது சகோதரியோ, மருமகளோ அல்லது பேத்தியோ போன்றவர்தாம் காயீனின் மனைவியாக இருந்திருக்க முடியும் என்ற ஒரே பதில்தான் இங்கு சாத்தியம். காயின் ஆபேலைக் கொலை செய்தபோது (ஆதியாகமம் 4:8) அவனது வயது என்ன என்பதையும் வேதாகமம் நமக்குச் சொல்லவில்லை. இருவரும் விவசாயிகள் என்பதனால் இருவரும் வயது வந்தவர்கள் எனலாம். சொந்தக் குடும்பமும் இருந்திருக்கலாம். ஆபேல் கொலை செய்யப்பட்டபோது, காயீனையும் அபேலையும் தவிர ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வேறு குழந்தைகளும் இருந்தார்கள் என்பது தெளிவு. நிச்சயமாகவே பின்பு இன்னும் பல குழந்தைகளைப் பெற்றார்கள் (ஆதியாகமம் 5:4). ஆபேலைக் கொலை செய்தபின் காயீன் தன் உயிருக்குப் பயந்திருந்தான் (ஆதியாகமம் 4:14) என்னும் உண்மை அப்பொழுதே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மேலும் பல குழந்தைகள் இருந்திருப்பார்கள், சொல்லப்போனால் பேரக்குழந்தைகளும் இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. காயீனின் மனைவி (ஆதியாகமம் 4:17) ஆதாம் ஏவாளுடைய மகளோ அல்லது பேத்தியோதான்.

ஆதாமும் ஏவாளும் மட்டுமே முதலாவது படைக்கப்பட்ட மனிதர்கள் என்பதால் அவர்களது குழந்தைகளுக்கு குடும்பத்திற்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது. மக்கள்தொகை அதிகமாகி குடும்பத்திற்குள்ளேயே திருமண உறவு ஏற்படுத்திக்கொள்வது தேவையில்லை (லேவியராகமம் 18:6-18) என்ற காலம் வரும்வரை குடும்பத்திற்குள்ளேயே எற்படும் திருமண உறவை கர்த்தர் தடுக்கவில்லை. மிகவும் நெருங்கிய, முறையில்லாத உறவினர்களிடையில் நிகழும் சேர்க்கை இக்காலத்தில் அதிகமாக மரபியல் சீர்கேடுகளில் முடிகிறது எதனாலெனில், ஒரே மரபியற்குழுவைச் சேர்ந்த இரண்டுபேர் (எ.கா. ஒரு சகோதரனும் சகோதரியும்) சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, கோளாறான குணங்கள் ஆற்றலடையும் ஆபத்தான நிலை உருவாகிறது. வேறு வேறு குடும்பங்களைச் சேர்ந்தஅவர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்போது பெற்றோர்கள் இருவரும் ஒரே கோளாறு பண்புகளைக் கொண்டிருக்கும் நிலைமை மிகக்குறைவு. மனிதகுல மரபியல் குறியீடு “மாசுபடுதல்” அதிகமாகிக்கொண்டே போகிறது. ஆண்டுகள் நூற்றாண்டுகளாக மரபணு குறைவுகள் தலைமுறை தலைமுறைகளாக பல மடங்குகளாக உயர்ந்து, பூதாகரமாக மாறிவிட்டது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எந்த மரபணுக்குறைவும் இருக்கவில்லை. அதனால் அவர்களும், அவர்களது சந்ததியில் அடுத்து வந்த சில தலைமுறைகளும் நமக்கு இன்று இருப்பதைவிட நல்ல ஆரோக்கியமான உடல்நிலை இருந்தது. ஆதாம் ஏவாளின் குழந்தைகளுக்கு எந்த மரபணுக் குறையும் இருக்கவில்லை. அதன் பலனாக குடும்பத்திற்குள்ளே நெருங்கிய உறவினர்களுக்கிடையே திருமணம் செய்துகொள்வது பாதுகாப்பானதாக இருந்தது.

டினோசர்களைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது? வேதாகமத்தில் டினோசர்கள் உள்ளனவா?



கேள்வி: டினோசர்களைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது? வேதாகமத்தில் டினோசர்கள் உள்ளனவா?

பதில்: 
பூமியின் வயது என்ன, ஆதியாகமத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதெப்படி, நம்மைச் சுற்றியுள்ள இயற்கை தரும் ஆதாரங்களை எப்படிப் புரிந்துகொள்வது போன்றவற்றைப் பற்றி கிறிஸ்தவ சமுதாயத்தில் நடக்கும் பெரும் விவாதங்களில் டினோசர்கள் வேதாகமத்தில் உள்ளனவா என்கிற தலைப்பும் ஒன்று. பூமி மிகவும் பழமையானது என்கிற கருத்தை உடையவர்களுக்கு வேதாகமத்தில் டினோசர்களைப் பற்றி கூறப்படவில்லை என்பதை ஒத்துக்கொள்வதில் அதிக ஆட்சேபணை இல்லை, ஏனென்றால், அவர்களின் நிலைப்பாட்டின்படி முதலாவது மனிதன் இந்த பூமியில் நடப்பதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே டினோசர்கள் அழிந்துவிட்டன. வேதாகமத்தை எழுதினவர்கள் உயிருள்ள டினோசர்களைப் பார்த்திருக்கவே மாட்டார்கள்.

பூமியின் வயதைக் குறைவாக மதிப்பிடுபவர்கள், வேதாகமம் ’டினோசர்’ என்ற சொல்லை நேரடியாகக் பயன்படுத்தவில்லை என்றாலும் வேதாகமத்தில் டினோசர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது என்னும் கருத்தை ஒத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். வேதாகமம், இதற்கு பதிலாக ’தன்னியின்’ என்ற எபிரேயச் சொல்லை பயன்படுத்துகிறது. இது ஆங்கில வேதாகமங்களில் வெவ்வேறு விதங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “கடல் அரக்கன்” என்று சிலவேளைகளிலும், “சர்ப்பம்” என்று சிலவேளைகளிலும் கொடுக்கப் பட்டுள்ளது. ’தன்னியின்” என்பது ஒரு இராட்சத ஊரும் பிராணி என்பதுபோல் தெரிகிறது. இந்தப் பிராணிகள் பழைய ஏற்பாட்டில் சொமார் 30 முறை குறிப்பிடப்பட்டுள்ளன. அவை நிலத்திலும் நீரிலும் காணப்பட்டன.

இந்த இராட்சத ஊரும் பிராணிகள் மட்டுமல்லாமல், வேதாகமம் குறிப்பிடும் வேறுசில பிராணிகளின் விவரணை எப்படி இருக்கிறதென்றால், இவற்றை எழுதியவர்கள் டினோசர்களைக் குறிப்பிட்டிருக்கலாம் என சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பெகெமோத் கர்த்தருடைய சிருஷ்டிப்புகள் அனைத்தைக் காட்டிலும் பெரியதாக கருதப்படுகிறது, இதன் வால் கேதாரு மரங்களுக்கு ஒப்பாகக் கூறப்பட்டுள்ளது (யோபு 40:15). சில ஆய்வாளர்கள் பெகெமோத்தை யானையாகவோ, நீர் யானையாகவோ இருக்கக்கூடும் என்கின்றனர். ஆனால் மற்றவர்கள், யானைக்கும் நீர்யானைக்கும் வால் சிறியது, அதைக் கேதாரு மரத்துடன் ஒப்பிட முடியாது என்கின்றனர். ஆனால் டினோசர்களோவென்றால் அவை ப்ராகியோசௌரஸ் மற்றும் டிப்லோடோகஸ் போல கேதாரு மரங்களுடன் ஒப்பிடக்கூடிய மிகப் பெரிய வால்களைக் கொண்டிருந்தன.

எல்லா பழமையான நாகரிகங்களிலுமே இராட்சத ஊரும் பிராணிகளை குறிக்கும் சில கலை பொருட்கள் இருந்திருக்கின்றன. வட அமெரிக்காவில் கிடைத்துள்ள சில கற்பாறைச் சிற்பங்களும், கைவினைப் பொருட்களும், மட்பாண்டப் பொருட்களும் கூட நவீன காலத்தில் சித்தரிக்கப்படும் டினோசர்கள் போல காணப்படுகின்றன. தென் அமெரிக்காவில் உள்ள குகைச் சித்திரங்களில் கூட டிப்லோடோகஸ் போன்ற பிராணிகளை மனிதர்கள் ஓட்டிக்கொண்டு செல்வதுபோல் காணப்படுகின்றன. மேலும்,டிரைசெராடாப்ஸ் போன்ற, டெரோடாக்டைல் போன்ற, டைரனோசௌரஸ் போன்ற பிராணிகளின் உருவங்களும் காணப்படுகின்றன. ரோம மொஸைக்கள், மாயன் களிமண் பாண்டங்கள், பாபிலோனிய நகர் சுவர்கள் அனைத்துமே இந்த பிராணிகளைப் பற்றிய மனிதர்களுடைய நிலவரம்புகள் அற்ற, பல்கலாச்சார மோகத்தையே காண்பிக்கிறது. மார்கோ போலோவின் இல் மிலியொன் போன்றவற்றில் கொடுக்கப்பட்டுள்ள தெளிவான விவரணைகள் கூட புதையல்களைச் சேர்த்து வைக்கும் பிராணிகளின் அருமையான கற்பனைக் கதைகளைக் கொண்டிருக்கின்றன. மனிதனும் டினோசரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியாக பல தெளிவான மானுடவியல்சார் மற்றும் வரலாறுசார் ஆதாரங்கள் இருப்பது மட்டுமல்லாமல், வட அமெரிக்காவிலும், மேற்கு-மத்திய ஆசியாவிலும் கண்டுபிடிக்கப் பட்ட டினோசர்கள் மற்றும் மனிதனின் உறைந்துபோன காலடித்தடங்கள் இயற்கையிலிருந்தும் கிடைத்துள்ளது.

அப்படியென்றால், வேதாகமத்தில் டினோசர்கள் இருக்கின்றனவா? இதற்கு முடிவு சொல்வதென்பது இன்னமும் முடியாது. இது நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள இந்த உலகத்தையும், கிடைத்துள்ள ஆதாரங்களுக்கு எப்படி பொருள் காண்கிறீர்கள் என்பதையும் பொருத்ததுச், வேதாகமத்தை அப்படியே புரிந்துகொள்ள முயற்சித்தால், பூமியின் வயது குறைவு என்ற விளக்கம் கிடைக்கும், மேலும் மனிதனும் டினோசரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற கருத்தையும் ஏற்றுக்கொள்ளலாம். மனிதர்களும் டினோசர்களும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்றால் டினோசர்கள் என்ன ஆனது? இந்த விஷயத்தைப் பற்றி வேதாகமம் விவரிக்க வில்லையென்றாலும், பெரும் வெள்ளத்திற்குப் பின் எதோ ஒரு காலத்தில் சுற்றுப் புறச்சூழலில் நடந்த பயங்கரமான மாற்றங்களினாலும், மனிதன் விடாமல் அவற்றை வேட்டையாடினதாலும் அவை அழிந்துவிட்டன.