Tuesday, 24 April 2018

ஆபாசப் படம் பார்த்துவிட்டு தாயையே பலாத்காரம் செய்த மகன் பலான்பூர்: குஜராத்தில் ஆபாசப் படம் பார்த்துவிட்டு தாயையே பலாத்காரம் செய்த 22 வயது மகன் கைது செய்யப்பட்டார். படான் நகரில் ஜல் சவுக் பகுதியை சேர்ந்தவர் ரோஹன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 22 வயதான இவருக்கு ஆபாசப் படம் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு ஆபாச படம் பார்த்த இவர், தாயின் அறைக்கு தண்ணீர் குடிக்கச் சென்றார். அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த தாயை பலாத்காரம் செய்தார். வழக்கமான சண்டை இதனால் அவர் கத்தி கூச்சல் போட்டுள்ளார். இவரது வீட்டில் எப்போதும் மகனுக்கும் தாய்க்கும் சண்டை ஏற்படுவது அக்கம் பக்கம் வீட்டாருக்கு தெரிந்த ஒன்று. பலாத்காரம் இதனால் இந்த கூக்குரலும் வழக்கமாக சண்டைக்கானது என நினைத்து யாரும் உதவ முன்வரவில்லை. இந்த சம்பவத்தால் அவரது தாய் மனரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டார். போலீஸில் புகார் இதையடுத்து பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்த ரோஹனின் தந்தைக்கு தகவல் அளித்தார். அவர் அகமதாபாத்தில் உள்ள மூத்த மகனுக்கு தகவல் கொடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறியிருந்தார். விசாரணையில் திடுக் இதையடுத்து புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று ரோஹனை கைது செய்தனர். விசாரணையில் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புவதாக அவரது தாயிடமே ரோஹன் அடிக்கடி கூறி வந்தது தெரியவந்தது. பலாத்காரச் சம்பவம் மேலும் அவரது தாய், சகோதரி முன்னிலையில் செக்ஸ் படம் பார்த்ததும் தெரியவந்தது. ஆபாசப் படம் பார்த்துவிட்டு தாயையே மகன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/porn-addict-rapes-his-mom-gujarat/articlecontent-pf305581-317977.html

Friday, 20 April 2018

அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!
உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே... சில விஷயங்களை மனசைவிட்டு Description: http://www.vikatan.com/jv/2010/sep/08092010/p3a.JPGதங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, 'தலைவா' என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.
நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! 'போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்' என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!
இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர
ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்ணீர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், 'உள்ளே வராதே' என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.
அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்... கட்-அவுட் வேண்டும்... டிக்கெட் காசு வேண்டும்... நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்... உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே... தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்...... உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, 'இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு' என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!
நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது... நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்துவிடுவீர்கள். கடந்த முறை 'குசேலன்' படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, 'என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.' என்று சொல்லி, கோடம் பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!
உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் Description: http://www.vikatan.com/jv/2010/sep/08092010/p2b.JPGஇருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது 'என்னாச்சு?' என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடி, திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி 'எங்க பவர் புரியுதா?' என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!
'பாபா' படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க... பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை... ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! 'பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்' என்றும் 'நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்' என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்... ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்ணீர் வடிகிறதே!
எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!
இப்படிக்கு
   ஈர விழிகளுடன்,
உங்களின் ரசிகன்
தமிழகத்தில் ஒரு இலட்சம் நபர்களை
தாய் மதத்திற்கு மாற்றுவோம் அர்ஜுன்சம்பத் இந்துமக்கள்கட்சி- தமிழகம்

பகீரங்க சவால்?
நான் மற்றும் என் குடும்பமும் தாய் மதத்திற்கு வர தயாராக இருக்கின்றோம் நான் கேட்க்கும் கேள்விகளுக்கு முறையான ஆதாரம் பதிந்து மக்கள் மன்றத்தில் பதில் கொடுத்தால்
நான் தாய் மதத்திற்கு வந்தால் எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்வீர்கள்?
நான்கு ஆயிரத்து நாறூற்றி ஐம்பது ஜாதிகளுக்கு மேல் உள்ளது
தாய் மதத்தில் உள்ள பிராமணர் பிரிவில்
சேரவே என் விருப்பம் அப்படி பிராமணர் பிரிவில் என்னை சேர்த்துக் கொண்டால்?
நான் U நாமம் போட வேண்டுமா??
M நாமம் போட வேண்டுமா??
பட்டை போட வேண்டுமா? கழுத்தில் கொட்டை போட வேண்டுமா?
சைவம் மற்றொன்று வைணவம் சைவத்தை விட வைணவமே உயர்ந்த ஜாதியாக கூறப் படுகிறது
ஆகவே வைணவத்தில் வடகலை தென்கலை என்ற கூறுகளும் உள்ளதை அறிந்தேன்
உயர்ந்த ஜாதியில் சேரவே என் விருப்பம் ஆகையால் என்னை வடகலை நாமத்தில் சேர்த்தாலும் சரி தெங்கலை நாமத்தில் சேர்த்தாலும் சரி
ஏற்றுக் கொள்கிறேன்
என் சவாலுக்கு சம்மதமா??
ஆம் என்றால் இன்றே தாய் மதத்திற்கு திரும்ப தயார்!
பெண்களையும் பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது.
மனுதர்மம் (அத்தியாயம்-11 சுலோகம் - 65)
சூத்திரன் காவல் இல்லாது திரிகிற பிராமணப் பெண்ணைக் கூடினாலும் அவனது பீஜம், ஆண் குறியை அறுக்க வேண்டும்!
காக்கப்பட்ட பிராமணப் பெண்ணை கூடினால் உடல் முழுவதையும் துண்டு துண்டாய் வெட்டி அவனுடைய பொருளையும் கொள்ளையிட வேண்டும். (மனு அத்தியாயம் 8 சுலோகம் 374)
சூத்திரன் பிராமண சாதிக் குறியை - பூணுல் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரன் அங்கங்களை வெட்டிவிட வேண்டும். (மனு அத்தியாயம் 9 சுலோகம் 224)
சூத்திரன்,பிராமணர்களை திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்.
(அத்.8.சு.270)மனு
இப்போது புரிகிறதா??
நான் தாய் மதத்தில் பிராமணர்
வகுப்பை தேர்ந்தெடுக்க காரணம் என்னவென்று???
எங்களுக்கு தெரியும் ஹிந்து யார்
ஹிந்துத்துவா யார் என்று
நன்றி :- ஒரு இஸ்லாமிய நண்பன் ‪#‎அப்துல்லா‬
இரத்த சாட்சிக் கூட்டம் சத்திய பாதையில்
நித்தந் தம்மைத் தத்தம் செய்து வீர சேவையில்
ஜீவன் சுகம் பெலன் யாவையும் ஈந்ததால்
சுத்த சுவிசேஷம் ஓங்குதே

பல்லவி
போர் வீரரே! பூமி மாளுதே
பயந்து செல்லுவீர் நம் இயேசுவின் பின்னே
தேவ ராஜ்யம் ஓங்கவே பாவ மக்கள் மீளவே
தியாகப் பரிசுத்தராய் சேவை செய்குவோம்

ஜாதி மதபேதம் முற்றும் நீக்கிட
ஜோதியாய்ப் பிறந்து லோகப் பாவம் போக்கிட
கல்வாரியில் மரித்தே உயிர்த்தெழுந்த
கர்த்தரின் நற்செய்தி சாற்றுவோம் – போர் வீரரே

நாடு, நகரமோ, காடு மலையோ
நாடித் தேடி ஓடியே நல் ஊழியம் செய்வோம்
மாண்டழியும் மக்கள் மேல் மனதுருகி
கண்டறிந்த சாட்சி கூறுவோம் – போர் வீரரே

தாகமோ, பசியோ நோக்கிடாமலே
லோக இன்ப துன்பமோ நெருங்கிடாமலே
முன் வைத்த காலையும் பின் வைத்திடாமலே
இன்னமும் முன்னேறி சேவிப்போம் – போர் வீரரே

உன்னத அழைப்பை என்றும் காத்திட
ஊக்கமாய் உறுதியாய் தகுதி பெற்றிட
ஆவியிலே அனலாய் நிலை நின்றிட
ஆண்டவர் அருள் பொழிகுவார் – போர் வீரரே

சுத்த ஜீவியம் நற்சாட்சி பெறுவோம்
சத்திய வழி நடக்கும் பக்தி நாடுவோம்
வாக்கு வரம் வல்லமை அடைந்திடுவோம்
வல்ல விசுவாச சேவையில் – போர் வீரரே

பிரதி பலன் ஏந்தி ஏசு வருவார்
பாடுபட்ட கர்த்தரோடு நாமும் சேருவோம்
ஆதிப்பிதாக்களுடன் ரத்த சாட்சிகள்
ஆர்ப்பரித்துக் கூடி வாழுவோம் – போர் வீரரே

இயேசு உயிர்த்தெழுந்தார் என்பது உண்மையா?

இயேசு உயிர்த்தெழுந்தார் என்பது உண்மையா?

இறந்த நேசத்துக்குரியவர்களை மீண்டும் காண ஏங்கி கண்ணீர் துளிகள் சிந்தியிருக்காதவர்களே இருக்க முடியாது. உலக வாழ்க்கை என்ற காகித தாளில் காலம் என்ற எழுத்தாணி இறுதியாக இடும் முற்றுப்புள்ளி தான் மரணம். அதன் பின் நமக்கு வாழ்வுண்டா? நமக்குள் நாம் உணரும் சிந்தனை என்ற உயிர் என்னாகிறது?
"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" - யோவான் 11:25
இதனை போத்திதவர் ஏசுநாதர். மரணம் உடலுக்கு உரியது உயிருக்கல்ல என்றார். உயிர்த்தெழுந்து காட்டி தன் வல்லமையை சீடர்கள் முன் வெளிப்படுத்திக் காட்டினார் இயேசுநாதர். இந்த நம்பிக்கையே 2000 ஆண்டுகளாக கிறிஸ்தவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது.

ரஸ்ஸல் என்ற நாத்திக அறிஞர், "இறந்தப் பின் மண்ணோடு மண்ணாக நான் மக்க போகிறேன், ஒரு துளியும் என் உடலில் மிஞ்சப் போவதில்லை, என் வாழ்க்கை பயணம் அதோடு முடிந்து விட்டது என்பதே என் நம்பிக்கை" என்றார். நிச்சயமாக ஏசுநாதர் கூறியதை ரஸ்ஸல் நம்பவில்லை.

ஆதிகால கிறிஸ்தவர்கள் "இயேசு  சிலுவை மரணமடைந்து அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்குள் உயிர்த்தெழுந்தார்" என்று எழுதினர். அவர்கள் அவரை கண்டதாக மட்டும் எழுதவில்லை, அவருடன் உண்டதாகவும், அவரை தொட்டதாகவும் அவருடன் 40 நாட்கள் செலவிட்டதாகவும் எழுதினர்.

நம் இயேசு ஜீவிக்கிறார்!

அதற்கு என்ன ஆதாரம்? இந்த நம்பிக்கை காலப்போக்கில் எழுந்த கட்டுக்கதையா அல்லது ஆதரங்களுடன் கூடிய உண்மை சம்பவமா? இந்த கேள்விக்கான பதிலே கிறிஸ்தவத்திற்கு அஸ்திவாரம். 

இயேசு உயிர்த்தெழுந்தார் என்பது உண்மையானால் இறப்பிற்கு பின் நமக்குள்ள வாழ்வைக் குறித்து அவர் கூறியது அனைத்தையும் மனப்பூர்வமாக நம்பலாம். அவர் உயிர்த்தெழுந்தது உண்மை எனில் இறப்பிற்கு பின்பு உள்ள வாழ்வைக் குறித்து கூற அவர் ஒருவரே தகுதியுடையவர் ஆகிறார். ஆனால் அவர் உயிர்த்தெழவில்லை என்று கண்டு கொள்ளப்பட்டால்   கிறிஸ்தவத்திற்கு எவ்வித பொருளும் இல்லை. ஒரு பொய்யை ஊண்டுகோளாக கொண்ட மார்க்கமே கிறிஸ்தவம் என்பது தெளிவாகும். இதனை பிரபல தத்துவ அறிஞர் ஆர்.சி.ரௌல் கீழ்க்கண்டபடி கூறினார்.
"உயிர்த்தெழுதலே கிறிஸ்தவத்திற்கு அடித்தளம். கிறிஸ்து உயிர்தெழுந்தது உண்மை எனில் அவரே பிற போதகர்களைக் காட்டிலும் நற்சான்றும் நம்பகத்தன்மையும் உடையவர் ஆகிறார். ஏனெனில் புத்தம் புத்தர் இறந்தார் என்கிறது, யூதம் மோசே இறந்தார் என்கிறது, இஸ்லாம் முகமது இறந்தார் என்கிறது ஆனால் கிறிஸ்தவத்தை பொறுத்த வரை கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்"
இந்த கட்டுரையில் இயேசு உயிர்த்தெழுந்தாரா என்ற தலைப்பில் தேடல் முடிவுகள் எழுதப்பட்டுள்ளது.   உண்மை என்ன?

முன்னறிவித்தல்:
சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பே, தான் மறுதலிக்கப்பட்டு,  கைது செய்யப்பட்டு, சிலுவையில் மரணமடைந்து மூன்று நாட்களில் உயிர்த்தெழ வேண்டும் என்று தன் சீஷர்களிடம் இயேசு முன்னறிவித்தார்.
"அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப் போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்க வேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்" - மத்தேயு 16:21
இது ஒரு வியக்கத்தக்க முன்னறிவிப்பு. இந்த வார்த்தையை இயேசு செயல்படுத்த  தவறினால் நிச்சயமாக அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்பது அவரது சீஷர்களுக்கு புரிந்துவிடும். பைபிள் ஆராய்ச்சியாளர் வில்பர் ஸ்மித் இவ்வாறு கூறினார்,
"சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று ஏசுநாதர் கூறியது ஒரு முட்டாளின் கூற்று போல உள்ளது. சீடர்களிடம் இருந்து நம்பிக்கையை எதிர்ப்பார்க்கும் ஒரு நபர் எப்படித் தான் இத்தகைய வார்த்தையை துணிவுடன் கூறினார் என்பது புரியவில்லை. இந்த சொல்லை நிறைவேற்ற தவறினால் நிச்சயமாக ஒரு ஏமாற்றுக்காரனாவாரே. எந்த சமய போதகரும் இது போன்ற சொற்களை கூறியதில்லை"
கொடுமையான சிலுவை மரணம், அதன் பின்?
படத்தயாரிப்பாளர் மெல்கிப்சன் 2004-இல் வெளியிட்ட 'தி பேஷன் ஆப் தி க்ரைஸ்ட்' திரைப்படத்தைக் கண்டால் ஏசுநாதரின் இறுதி நேரங்கள் எவ்வளவு கொடுமையாக சென்றன என்பது புரியும்.

சீடர் யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுத்த பின் இயேசு கைது செய்யப்பட்டு யூதகுரு காய்பா முன் நிறுத்தப்படுகிறார். காய்பா அவரை ரோம ஆளுநர் பிலாத்துவிடம் குற்றப்படுத்த பிலாத்து ஏசுநாதருக்கு கசையடிகள் கொடுக்க உத்தரவிடுகிறார். இயேசுவின் சரீரம் அடிகளால் கிழிக்கப்படுகிறது. யூதர்கள் திருப்தி அடையாததால் இயேசுவை சிலுவையில் அறைய பிலாத்து ஒப்புக் கொண்டார். இதனால் இயேசு கொடூரமாக சிலுவையில் அறையப்பட்டார். பல்வேறு நிந்தனைகளும் வேதனைகளும் அனுபவித்து இறுதியில் "எல்லாம் முடிந்தது" என்று கூறி இயேசு ஜீவனை நீத்தார். அப்பொழுது பூமி இருண்டு நிலநடுக்கம் உண்டாகிறது. அதனால் அனைவரும் அஞ்சுகின்றனர்.

பிலாத்து இயேசு இறந்துவிட்டாரா என்று உறுதி செய்யும் படி உத்தரவிட போர்ச்சேவகர்கள் அவரது சரீரத்தை ஈட்டியால் குத்துகின்றனர். இறப்பு உறுதி செய்யப்பட்ட பின் இயேசுவின் உடலை அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பின் கல்லறையில் வைத்து அதனை முத்தரையிட்டு 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

இறைவனால் அனுப்பப்பட்ட மேசியா கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்ததை சீடர்களால் ஏற்க முடியவில்லை. இயேசுவின் மீது அவரது சீடர்கள் கொண்டிருந்த நம்பிக்கை அன்றே மறைந்தது. அவரது சீடர்கள் மீண்டும் சிதறி சென்றனர்.

என்ன நடந்தது?
ஆனால் அது முடிவல்ல. இயேசுவின் ஊழியப்பாதை முடியவில்லை, இன்றும் கிறிஸ்தவமே உலகின் முதல் மார்க்கமாக உள்ளது. எனவே இயேசுவின் சிலுவை மரணத்திற்கு பின் என்ன நடந்தது என்று உற்று நோக்க வேண்டியது அவசியம். நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் பீட்டர் ஸ்டீன்பெல்ஸ் என்ற எழுத்தாளார் கீழுள்ளவாறு எழுதுகிறார்,
"இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்பு அவரது சீஷர்கள் திடீரென ஒரு கூட்டமாக திரண்டு ஊர்ஊராக சென்று இயேசுவை குறித்து போதித்தனர். அச்செயல் தங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடியது என்று அறிந்தும்  அவர்கள் அவ்வாறு போதிக்க காரணம் என்ன? அவர்களது செயலால் ஒரு சாம்ராஜ்யமே தடம் புரண்டுள்ளது. என்ன நடந்திருக்கும்?"
இதற்கு புதிய ஏற்பாடு தரும் பதில் - இயேசுவின் உயிர்த்தெழுதல். உயிர்த்தெழுதல் நிகழ்ந்ததா என்ற வினா எழும்போது ஐந்தே பதில்கள் தான் உள்ளன. அந்த ஐந்து விடைகள் கீழே.
  1. இயேசு சிலுவையில் இறக்கவில்லை
  2. உயிர்த்தெழுதல் செய்தி ஒரு சதித்திட்டம்
  3. சீடர்களுக்கு பிரம்மை பிடித்திருக்கிறது
  4. உயிர்த்தெழுதல் காலப்போக்கில் எழுந்த கட்டுக்கதை
  5. உயிர்த்தெழுதல் உண்மையாக நடந்த சம்பவம்
இந்த ஐந்து பதில்களை சிறிது ஆராய்ந்தாலே உண்மையான பதில் வெளிப்பட்டுவிடும்.

1) இயேசு சிலுவையில் இறக்கவில்லை
சிலர் "இயேசு சிலுவையில் இறக்கவில்லை, அவர் உயிரோடு இருந்ததை அறியாமல் ரோமச் சேவகர்கள் அவரை கல்லறையில் வைத்துள்ளனர், கல்லறை துளைகள் வழியாக சென்ற காற்றோற்றத்தால் இயேசு சுவாசித்து பிழைத்திருக்க கூடும்" என்கின்றனர். இதனை மூர்ச்சை கோட்பாடு என்பர்.

மூர்ச்சை கோட்பாடு சாத்தியமற்றது. ஏனெனில் இயேசு இறந்துவிட்டாரா என்று உறுதிசெய்ய அவரது விலாவில் குத்திய போர்ச்சேவகன் வலது நுரையீரல் தாண்டி இதயமேலுரை வரை ஈட்டியை அழுத்தி இருக்கிறான். தண்ணீரும் இரத்தமும் குத்தப்பட்ட காயத்தில் இருந்து புறப்பட இதயமேலுரை வரை ஈட்டி ஏறவேண்டும். (தண்ணீர் என்பது இதயத்தின் மேலுறையில் இருக்கும் நீர் போன்ற திரவம்)
"ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது" - யோவான் 19:34
மருத்துவர்கள் மூர்ச்சை கோட்பாடை ஏற்பதில்லை. கசையடிகளால் காயப்படுத்தப்பட்டு சிலுவையில் பலமணி நேரம் தொங்கி இதயத்தை எட்டும் அளவிற்கு ஈட்டி ஏறி காயம் பட்ட நபர் பிழைக்க வாய்ப்பில்லை. மேலும் ரோம சேவகர்கள் அவரது மரணத்தை உறுதி செய்ததை சுவிசேஷ நூல்கள் கூறுகின்றன. இறந்ததை உறுதி செய்வதில் ரோம போர்ச்சேவகர்கள் அனுபவமிக்கவர்கள்.

அதுமட்டும் அன்றி கிறிஸ்தவர் அல்லாத சரித்திரவான்களாகிய ஜோசபஸ், லூசியன், தாதிசு ஆகியோரும் இயேசு இறந்தார் என்று எழுதியுள்ளனர். இதுவரை நம்மிடம் உள்ள அனைத்து கிறிஸ்தவ, ரோம, யூத கையேடுகளும் இயேசு இறந்து அடக்கம் செய்யப்பட்டார் என்றே கூறுகின்றன. இயேசு இறந்தார் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை.

2) உயிர்த்தெழுதல் செய்தி ஒரு சதித்திட்டம்
எந்த சரித்திர ஆசிரியரும் இயேசு இறந்தார் என்பதில் ஐயம் கொள்வதில்லை. இருந்தாலும் இயேசுவின் சரீரம் அரிமத்தியா யோசேப்பின் கல்லறையை விட்டு காணாமல் போனதை குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

அரிமத்தியா யோசேப்பு யூதர்களின் தலைமை சங்கத்தை சேர்ந்த ஒரு உறுப்பினர் என்று சுவிசேஷ நூல்கள் குறிப்பிடுகின்றன. அக்காலத்தில் இஸ்ரேலில் தலைமை சங்க உறுப்பினர்கள் அனைவராலும் அறியப்பட்டு இருந்தனர். அரிமத்தியா யோசேப்பு என்பவர் உண்மை நபராக இருந்தே ஆக வேண்டும். இல்லாவிடில் இல்லாத யோசேப்பு என்ற நபரை தலைமை சங்க உறுப்பினர் என்று கூறி கிறிஸ்தவர்கள் பொய்யுரைத்ததை யூதர்கள் அம்பலமாக்கி எளிதாக இயேசுவின் உயிர்தெழுதலை பொய் என்று நிரூபித்திருப்பர். தலைமை சங்க உறுப்பினர் ஒருவரால் கட்டப்பட்ட கல்லறை உள்ள இடம் யூதர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இயேசுவின் உடல் கல்லறையில் வைக்கப்பட்ட பின்பு சேவகர்களால் கல்லறை முத்திரை இடப்பட்டு காவல் வைக்கப்பட்டது. ஆக கல்லறைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இயேசுவின் உடலை மறைத்திருக்கவும் வாய்ப்பில்லை. எனவே தலைமை சங்க உறுப்பினரான அரிமத்தியா யோசேப்பின்  கல்லறையில் இயேசுவின் உடல் வைக்கப்பட்டது உண்மை சம்பவம்.

மூன்றாம் நாளிலே இயேசு உயிர்த்தெழுந்தார் என்று ஆதிகால கிறிஸ்தவர்கள் செய்திகளை பரப்பலாயினர். அதற்கு யூதர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

"இயேசுவின் சீடர்கள் கல்லறையில் இருந்த அவரது உடலை திருடி விட்டு இயேசு உயிர்த்தெழுந்து விட்டார் என்று பொய்யுரைக்கின்றனர்" என்பது யூதர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு எதிராக இடும் குற்றச்சாட்டு. யூதர்களின் குற்றச்சாட்டில் இருந்தே கல்லறை காலியாக இருந்தது உண்மை என்பது தெளிவாகிறது.

மாரிசன் என்ற ஆங்கில எழுத்தாளர் , இயேசுவின் உயிர்த்தெழுதல் ஒரு கட்டுக்கதை என்று நிரூபிக்க புத்தகம் ஒன்றை எழுத தொடங்கினார். அப்பொழுது அவருக்கு பெரிதும் இடித்த கேள்வி - "ஏன் இயேசுவை எதிர்க்கும் யூதர்களும் கல்லறை காலியாக இருந்த செய்தியை ஏற்றுக் கொண்டனர்?" என்பதே!

இதுவரை உயிர்த்தெழுதலுக்கு கிடைத்த மறுப்பு கையேடுகள் எல்லாம் இயேசுவின் உடலை சீடர்கள் திருடிவிட்டனர் என்பதே. அந்த கூற்றிலே கல்லறை காலியாக இருந்தது உண்மை என்பது உறுதியாகிறது.

அடுத்ததாக, சீடர்கள் உடலை திருடினர் என்பதை ஏற்க முடியாது. ரோம சேவகர்கள் காவலில் ஈடுப்பட்டிருக்கும் போது உறங்கினாலோ வேறிடம் நகர்ந்தாலோ கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். காவலில் கவனம் சிதறும் சேவகர்களை ஆடைகளை அகற்றி தீயில் தள்ளி உயிரோடு எரித்து கொலை செய்ய வேண்டும் அல்லது சிலுவையில் தலைகீழாக அறைய வேண்டும் என்பது அக்கால ரோம அரசின் சட்டம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே விளங்கிய அத்தகைய ரோம சட்டங்கள் எழுதப்பட்ட பழங்கால ஓலைகள் இன்றும் நம்மிடம் உள்ளன, ரோம சேவகர்களை மீறி 2 டன் இடையுள்ள ஒரு கல்லை நகர்த்தி உடலை சீடர்கள் திருடினர் என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது.

மேலும் அனைத்து சுவிசேஷ நூல்களும்  உயிர்த்தெழுந்த இயேசுவை முதலில் மகதலேனா மரியாள் என்ற பெண் கண்டதாகவே கூறுகின்றன. இந்த கூற்றில் சுவிசேஷ நூல்களுக்குள் எந்த முரண்பாடும் இல்லை. மாரிசன் போன்ற மறுப்பாளர்கள் வியக்கும் இன்னொரு இடம் - "ஏன் அனைத்து சுவிசேஷ ஆசிரியர்களும் ஒரு பெண்ணை உயிர்த்தெழுதலிற்கு முதல் சாட்சியாக முன்வைக்கின்றனர்?" என்பதே.  ஏன் எனில் அச்சமூகத்தில் அக்காலத்தில் பெண்கள் சமமாக கருதப்படவில்லை. பெண்களின் சாட்சியங்கள் எல்லாம் முக்கியமானதாக கருதப்படவில்லை. பொய்யாக எழுதப்பட்ட கதைகள் என்றால் ஆசிரியர்கள் ஒரு ஆணை முதல் சாட்சியமாக எழுதியிருப்பர். இருப்பினும் ஒரு பெண்ணை முதல் சாட்சியாக சுவிசேஷ நூல்கள் எடுத்துரைக்க என்ன காரணம்? என்ற கேள்வி மாரிசனிற்கு இடித்தது.

அது மட்டும் அன்றி, சுவிசேஷ நூல்கள் உயிர்த்தெழுந்த இயேசுவை பலர் பலமுறை கண்டதாக, அவரை தொட்டதாக, அவருடன் உணவு உண்டதாக, நாற்பது நாட்கள் அவரோடு சீடர்கள் செலவிட்டதாக கூறுகின்றன. கி.பி 54-இல் அப்போஸ்தலர் பவுல் கிட்டத்தட்ட 500 பேர் உயிர்தெழுந்த இயேசுவைக் கண்ணால் கண்டதாக எழுதுகிறார். பவுல் ஆதிகால கிறிஸ்தவ வட்டாரத்தில் மிகவும் மதிக்கப்பட்டவர், பலரை கிறிஸ்தவத்திற்கு அழைத்து வந்தவர். துணிகரமாக ஒரு பொய்யை பவுல் கூறினால் அவருக்கு உள்ள மதிப்பு மரியாதை நிச்சயமாக பறிபோகும். இருப்பினும் பவுல் கீழுள்ள படி எழுதுகிறார்.
"அதன் பின்பு அவர் ஐந்நூறு பேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரே வேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள் வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்"- 1 கொரிந்தியர் 15:6
பேதுரு, தானும் மற்ற சீடர்களும் இயேசு உயிரோடு இருப்பதை மனப்பூர்வமாக ஏற்பதாக பொது மக்களிடம் கூறுகிறார்.
"யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகள் எல்லாவற்றிலும் நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலை செய்தார்கள். மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார்" - அப்போஸ்தலர் 10:39,40
மாரிசனின் புத்தகத்திற்கு விளங்கிய இன்னொரு பெரிய தடை சீடர்களின் நடத்தை. மாரிசன் மட்டும் அல்ல அனைத்து சரித்திர ஆசிரியர்களுக்கும் மனோத்தத்துவ மருத்துவர்களுக்கும் மறுப்பாளர்களுக்கும் உள்ள விளக்க முடியாத ஒரு இடம் இயேசுவின் சீஷர்களின் நடவடிக்கைகளே. உயிருக்கு பயந்து சிலுவைப்பாடுகளின் போது இயேசுவை விட்டு ஓடிய 11 கோழைகள் என்ன காரணத்தினால் தைரியமாக வெளியே வந்து இயேசு உயிர்த்தெழுந்தார் என்று போதித்தனர்? ஒரு சீடரை தவிர்த்து மீதமுள்ள 10 பேரும் கிறிஸ்தவத்தை போதித்த காரணத்தினால் கொடூரமாக கொலையுண்டனர். ஒரு பொய்க்காக இத்தனை துணிகரமாக இறக்கும் அளவிற்கு 10 பேருக்கு எப்படி மனம் வரும்?

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நினைவு இருக்கிறதா? உலக வர்த்தக மையம் அல்கொய்தா தற்கொலை படை தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட நாள். அந்த தீவிரவாதிகளுக்கு தங்கள் உயிரை விட தாக்குதலே முக்கியமாக தெரிந்ததன் காரணம் என்ன? அவர்களது நம்பிக்கை. தங்களது இறப்பிற்கு பின் இறைவன் தங்களை ஏற்று கொள்வார் என்ற நம்பிக்கை. நிச்சயமாக நம்பும் ஒரு எண்ணமே அத்தகைய செயலிற்கு அவர்களை தூண்டியது.

சீடர்கள் இயேசுவின் உடலை எடுத்து ஒளித்துவிட்டு "அவர் உயிர்த்தெழுந்தார் நாங்கள் அவரை கண்டோம், தொட்டோம், அவரோடு உண்டோம், 40 நாட்கள் அவரோடு தங்கியிருந்தோம்" என்று பொய் கூறினர் என்றே எடுத்துக் கொள்வோம். இயேசு உயிர்தெலவில்லை என்பதை மறைத்து யாரை வேண்டுமானாலும் அவர்களால் ஏமாற்ற இயலும், ஆனால் தங்கள் சொந்த மனதை ஏமாற்ற முடியாது. அத்தகைய நிலையில் ஒரு பொய்க்காக எப்படி உயிரை விடும் அளவிற்கு அவர்களுக்கு மனம் வரும்?

மேலும் அவர்கள் "இயேசு உயிர்தெழுந்தார்" என்று கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக போதித்து வந்தனர். எந்த நிலையிலும் எத்தகைய கொடுமைகளை அனுபவித்த நேரங்களிலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட சமயத்திலும் கூட அவர்கள் தங்கள் கூற்றில் இருந்து பின் வாங்கவே இல்லை. 10 மனிதர்களால் மனம் அறிந்த பொய்யை 40 ஆண்டுகளாக ஒரு முறை கூட பின் வாங்காமல் எப்படி கூற முடியும்? பலமுறை கொடுமைகளை அனுபவித்து உயிர் பறிபோகும் நிலை வந்த போதும் மனம் அறிந்த ஒரு பொய்யை காக்க எப்படி 10 பேருக்கு மனம் வரும்?

இந்த கேள்விக்கு பதில் கூற முடியாமல் இயேசு உயிர்தெலவில்லை என்று நிரூபிக்க எழுத துவங்கிய தன் நூலை இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற முடிவுரையோடு முடித்துவிட்டார் ஆங்கில எழுத்தாளர் மாரிசன்!

3) சீடர்களுக்கு பிரம்மை பிடித்திருக்கிறது
மனோத்தத்துவ விதிகள் படி ஏதேனும் ஒரு சம்பவத்தால் ஒருவரது மனம் பாதிக்கப்பட்டு ஏங்கி தவித்தால் அவர் ஏங்கும் காரியம் உண்மையில் நிகழ்வது போலவும் நிகழ்ந்து விட்டது போலவும் பிரம்மைகள் ஏற்படும். இதனை 'ஹாலுசிநேசன்' என்பர். ஏசுநாதரின் மரணத்தால் அவருக்காக அழுது புலம்பிய சீடர்களின் மனம் அதிர்ச்சிக்குள்ளாகி அதன் காரணமாக அவர்களுக்கு இயேசு உயிர்த்தெழுந்தது போல பிரம்மைகள் ஏற்பட்டு இருக்கலாம் என்பது சிலர் கூறும் மறுப்புரை. இதில் என்ன ஒரு சிக்கல் என்றால், ஒரே பிரம்மை ஒரே சமயத்தில் 11 பேருக்கு நேரிட வாய்ப்பில்லை என்பதும் மனோதத்துவ விதி!

4) உயிர்த்தெழுதல் காலப்போக்கில் எழுந்த கட்டுக்கதை
சிலர், "முதலில் யாரேனும் இயேசு உயிர்த்தெழுந்தார் என்று பொய் கூற அந்த செய்தி காலப்போக்கில் பரவி உண்மை சம்பவமாக மக்கள் மனதில் பதிந்திருக்கலாம்" என்கின்றனர்.

இது சிந்திக்க தூண்டுகிறது. ஆனால் சில முரணப்பாடுகள் உள்ளன.

1) இயேசுநாதருடன் வாழ்ந்த சீடர்களும் அவரது உறவினர்களும் உயிரோடு இருக்கும் போது அத்தகைய கட்டுக்கதை எழ வாய்ப்பில்லை. ஏன் எனில் அத்தகைய கட்டுகதைகளுக்கு மறுப்பு தெரிவிக்க அவர்கள் அக்காலத்தில் உயிரோடு தான் இருந்தனர்.

2) ஏசுநாதர் உயிர்த்தெழுந்தார் என்று கூறி அடி உதை வாங்கி உயிர் இழந்தவர்களுள் ஏசுநாதரின் சீடர்களும் உறவினர்களும் உள்ளனர்

3) உயிர்தெழுதல் செய்தி காட்டுத்தீ போல் வேகமாக பரவி இஸ்ரேலில் இருந்து இத்தாலி வரை எட்டியது. குறுகிய காலத்திற்குள் பல நூல்கள் உயிர்தெலுதல் குறித்து எழுதப்பட்டன.

4) எல்லாவற்றிலும் முக்கியமாக இந்த கணிப்பு காலியான கல்லறை குறித்தும் சீடர்களின் நடத்தை குறித்தும் விளக்கமளிக்க தவறுகிறது.

5) உயிர்த்தெழுதல் செய்திதான் குறுகிய காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தையே கவிழ்த்து போட்டது. எந்த நாட்டினர் இயேசுவை கொலை செய்தனரோ அவர்களே இயேசு உயிர்த்தெழுந்தார் என்று கூவினர். கிறிஸ்தவமே எங்கள் நாட்டின் மார்க்கம் என்று அதிகாரப் பூர்வமாக முதன்முதலாக அறிவித்தனர்.

5) உயிர்த்தெழுதல் உண்மையாக நடந்த சம்பவம்
மாரிசன் தன் நூலில் எழுதினார்,
"20 ஆண்டுகளுக்குள் கலிலேயர்களின் போதனை யூத மார்கத்தையே சிதைத்து விட்டது, 50 ஆண்டுகளுக்குள் ரோம சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே அசைத்து விட்டது!  இவைகள் எல்லாம் உலக வரலாற்றின் புரியாத புதிர்கள்! எதனால் வெற்றி பெற்றனர்?"
இதற்கு பவுல் தரும் விடை இதுவே,
"கிறிஸ்து எழுந்திருக்கவில்லை என்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா" - 1 கொரிந்தியர் 15:14
சீஷர்கள் தங்கள் உயிரை நீத்து நமக்கு ஊட்டிய உண்மையே உயிர்த்தெழுதல்! 

http://ivaryaar.blogspot.in/2013/02/blog-post_16.html

"20 ஆண்டுகளுக்குள் கலிலேயர்களின் போதனை யூத மார்கத்தையே சிதைத்து விட்டது, 50 ஆண்டுகளுக்குள் ரோம சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே அசைத்து விட்டது!  இவைகள் எல்லாம் உலக வரலாற்றின் புரியாத புதிர்கள்! எதனால் வெற்றி பெற்றனர்?"
இதற்கு பவுல் தரும் விடை இதுவே,
"கிறிஸ்து எழுந்திருக்கவில்லை என்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா" - 1 கொரிந்தியர் 15:14
சீஷர்கள் தங்கள் உயிரை நீத்து நமக்கு ஊட்டிய உண்மையே உயிர்த்தெழுதல்!

மாரிசன் தன் நூலில் எழுதினார்,

Thursday, 28 September 2017

நிசேயா விசுவாசப் பிரமாணம்

வானத்தையும் பூமியையும் காணப்படுகிறதும் காணப்படாததுமான எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன்.
ஒரே கர்த்தருமாய், தேவனுடைய ஒரே பேறான குமாரனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்; அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே தமது பிதாவினாலே ஜெனிப்பிக்கப்பட்டவர்; தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர், மெய்த்தேவனில் மெய்த்தேவனானவர், உண்டாக்கப்படாமல் ஜெனிப்பிக்கப்பட்டவர், பிதாவோடே ஒரே தன்மையுடையவர், சகலத்தையும் உண்டாக்கினவர்; மனிதராகிய நமக்காகவும் நமக்கு இரட்சிப்பு உண்டாகவும் பரமண்டலத்திலிருந்து இறங்கி, பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் அவதரித்து மனிதனானார்; நமக்காக பொந்தியுபிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, அடக்கம் பண்ணப்பட்டார்; வேத வாக்கியங்களின் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்; பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க மகிமையோடே திரும்ப வருவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை.
கர்த்தருமாய் ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும்கூட தொழுது தோத்தரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பொதுவான அப்போஸ்தல திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும் மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன். ஆமென்.


நிசேயா விசுவாச அறிவிக்கை:
நிசேயா விசுவாச அறிக்கைக்கும் ஒரு வரலாறு உள்ளது. லிபியாவைச் சேர்ந்தவர் ஆரியுஸ் என்பவர். இவர் ஒரு போதகர். ஆரியுஸ், இயேசுவின் கடவுள் தன்மையை மறுத்தார். இயேசு தெய்வந்தான். இருப்பினும் கடவுளால் படைக்கப்பட்டவர். இயேசு இல்லாத காலம் ஒன்று இருந்தது. இயேசு பிதாவைவிட குறைவானவர். இப்படிப்பட்ட தவறான போதனையை அரியூஸ் சொல்லிவந்தார்.

நிசேயா பேரவை:
ஆரியுஸின் தவறான போதனை அன்றைய திருச்சபையில் பெரிய கொந்தளிப்பினை ஏற்படுத்தியது. எனவே நிசேயா பெருநகரில் திருச்சபைகளின் ஐக்கியப் பேரவை கூடியது.
கி.பி.325ல் கூடிய பேரவை இயேசுவின் தெய்வீகத்தை நிலைநாட்டியது. இயேசு, கடவுள் என்ற வார்த்தையை பயன்படுத்தியது. இந்த முதல் கூடுகையில் தொகுக்கப்பட்ட விசுவாச அறிக்கை, பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறேன் என முடிந்தது. அதன்பின்பு அதோடு சில சாப வார்த்தைகள் சேர்க்கப்பட்டிருந்தன. இந்த விசுவாச அறிக்கையின் பின்னணியில் பற்றி பல மரபுகள் உள்ளன. அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த போப் அதனாசியஸ்-1 தான் இதன் ஆக்கியோன். இது கோப்டிக் என்ற திருச்சபையின் மரபு. ஆதிகால கிறிஸ்தவர்களுக்கு செசரியா முக்கிய இடமாக இருந்தது. இங்குள்ள திருச்சபை இந்த விசுவாச அறிக்கையை ஏற்கனவே பயன்படுத்தி வந்தது. இதனை செசரியாவின் யுசிபியஸ் என்பவர் இப்பேரவையில் சமர்ப்பித்தார் என்பது மற்றொரு மரபு.
நிசேயா- கான்ஸ்டாண்டிநோபிள் விசுவாச அறிக்கை -கி.பி.381.
  ரோமப் பேரரசராக இருந்தவர். கான்ஸ்டன்டைன். இவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். திருச்சபையில் நிலவிவந்த இப்படிப்பட்ட விசுவாச குழப்பத்தை நிவிர்த்திச் செய்திடபாடுபட்டார். 325ல் கூடிய பேரவையில் தனது செல்வாக்கை பயன்படுத்தினார்.
  கி.பி.381ல் திருச்சபைகளின் ஐக்கியப் பேரவை மறுபடியும் கூடியது. நாங்கள் பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறோம் என்ற வாசகம் அதில் இருந்தது. ஆனால் இதில் மைந்தனும் என்ற சொல் இல்லை. கடைசியாக பேரவை 431ல் மூன்றாவது முறையாக கூடியது. இது கி.பி.325ல் எபேசுவில்கூடி ஏற்கனவே தீர்மானித்த சொற்களையே உறுதி செய்தது.
  ஆறாவது நூற்றாண்டில் லத்தீன் திருச்சபைகள் குமாரனிலிருந்து (Filioque) பரிசுத்த ஆவியானவர் புறப்பட்டு வருகின்றார் என்பதை விசுவாச பிரமாணத்தில் சேர்த்தது.
சிறப்பு: நிசேயா விசுவாச அறிக்கையை விசுவாசத்தின் அடையாளம் (Symbol of Faith) எனக் கூறுவர். இந்த விசுவாச அறிக்கை உண்மையான கிறிஸ்தவ விசுவாசத்தின் உரைக்கல் எனவும் குறிப்பிடுவர். பொதுவாக ஞானஸ்நானம் நடைபெறும் சமயத்தில் அப்போஸ்தல விசுவாச அறிக்கையைதிருச்சபைகள் பயன்படுத்துகின்றன.
  திருவிருந்து (நற்கருணை) வழிபாட்டுவேளையில் நிசேயா விசுவாச அறிக்கையை திருச்சபைகள் உபயோகிக்கின்றன.