தேவனின் வைராக்கியம் (சாது சுந்தர் சிங் அவர்களின் வாழ்வில் நடந்த அற்புத சம்பவம்)
சாது சுந்தர் சிங் அவர்களின் வாழ்வில் நடந்த அற்புத சம்பவம்
1908ம் ஆண்டு, திபெத்திற்கு (Tibet) 19 வயதுள்ள இளைஞனாய் ஊழியம்செய்ய சென்றார் சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) அவர்கள். திபெத்தில்புத்த மதமே பிரதானமாக இருந்ததால், அம் மதம் நலிந்து போய்விடக்கூடாது என்பதற்காக பிறமத மிஷனரிகள் திபெத்திற்குள் நுழைய கூடாதுஎன்று கடுமயான சட்டமிருந்தது. இருப்பினும் துணிந்து அங்கு சென்றார்.ஒரு முறை லாசா பட்டணத்திற்குள் நுழைந்தார். அம்மக்களிடையேசுவிஷேசத்திற்கு வரவேற்பு இருக்வில்லை. அவர்கள் சுந்தரை பிடித்து,அவ்வூர் பிரதம லாமாவிடம் கொண்டு வந்தனர். அனுமதியின்றி ஊருக்குள்நுழைந்த குற்றத்திற்காகவும், வேறு மதத்தை பிரசங்கித்தகுற்றத்திற்காகவும், லாமா அவருக்கு மரண தண்டனை விதித்தார்.
திபெத்தில் மரணதண்டனை கொடுக்கும் முறைப்படி, சுந்தர் ஒருகிணற்றுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடைகளைஉரிந்து விட்டு, எலும்பும், குப்பையும் நிறைந்த இருண்ட கிணற்றிற்குள்தூக்கி எறிந்தார்கள். விழுந்த வேகத்தில் வலது கை தோள்பட்டையில்அடிபட்டு மயக்கமுற்றார். மயக்கம் தெளிந்து எழுந்த போது, எங்கும்இருளாகவே இருந்தது. இவருக்கு முன் இந்த கிணற்றில் எறியப்பட்டபலரது அழுகிய மாம்சமும், எலும்புகளும் எங்கும் நிறைந்து தாங்கமுடியாததுர்நாற்றம் வீசியது.
கை வைத்த இடமெல்லாம், அழுகிய மாம்சமும், எலும்புகளுமிருந்தன.தோளில் அடிபட்ட இடம் தாங்க முடியாத வலியை கொடுத்தது.அப்பொழுது இயேசு இரட்சகர் வேதனையடைந்து உச்சரித்தவார்த்தைகளை தான் அவர் நாவிலும் வந்தன். ”ஏன் என்னை கைவிட்டீர்?”துர்நாற்றம், பசி, தாகம், வேதனை இவைகளின் மத்தியில் சுந்தருக்குதூக்கம் வரவில்லை.
முன்றாம் நாள் இரவில் ஜெபித்து மரணத்தை எதிர்பார்த்திருந்தார். திடீரெனகிணற்றின் வாயை மூடியிருந்த கதவின் பூட்டை யாரோ திறக்கும் சத்தம்கேட்டது. பேராவலோடு அண்ணார்ந்து பார்த்தார். மேலேயிருந்த மனிதர்”கீழே விடப்படும் கியிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள்” என்றார்.அதன்படி செய்தார். மேலே வந்ததும் அவர் சுந்தரை தூக்கி கிணற்றிற்குவெளியே விட்டார். நல்ல காற்றை சுவாசித்து, கர்த்தருக்கு நன்றிசெலுத்தும் வேளையில், மறுபடியும் கதவு மூடப்படும் சத்தம் கேட்டது.தனக்கு உதவிய நண்பருக்கு நன்றி செலுத்தும்படி திரும்பினார், என்னஆச்சரியம்! அங்கு யாருமில்லை. அவருடைய தோள்பட்ட வலியும்மறைந்து போனது. அப்போது தன்னை காப்பாற்றயது கர்த்தர் என அறிந்துதேவனுக்கு நன்றி செலுத்தினார்.
பிரியானவர்களே! நாம் ஆராதிக்கின்ற தேவன் சர்வ வல்லமையுள்ளவர்.தம்மை நம்புகிறவர்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதத்தைசெய்து அவர்களை விடுவிக்க வல்லவர். தமக்காக வைராக்கியம்பாராட்டுகிறவர்களுக்காக வைராக்கியம் பாராட்டும் தேவன் நம் தேவன்.தேவனுக்காக வைராக்கியம் பாராட்டின தானியேலை காப்பாற்றசிங்கங்களின் வாயை கட்டிய தேவனல்லவா நம் தேவன்!
அந்த மூன்று எபிரேய வாலிபர்கள் நேபுகாத்நேச்சார் செய்துவைத்தசிலையை வணங்காதபடி வைராக்கியம் பாராட்டியதால் அவர்களை ஏழுமடங்கு எரியும் சூளையில் தூக்கி எறிந்த போது, தேவன் அவர்களுக்காகவைராக்கியம் பாராட்டி, நான்காவது ஆளாக, அவரே இறங்கி வந்துஅவர்கள் நடுவில் உலாவி, நெருப்பின் வாசனையும் அவர்கள் மீதுவீசாமல், அவர்களை வெளியே கொண்டுவந்த தேவன் அல்லவா நம்தேவன்!
ஆம் நாம் ஆராதிக்கும் தேவன் சர்வ வல்லமையுள்ள தேவன். நமக்காகயுத்தம் செய்கிறவர். ஆம், அவராலே செய்யக்கூடாத அதிசயமான காரியம்ஒன்றுமே இல்லை. அவரை ஆராதிக்கிற நாம் நிச்சயமாக பாக்கியவான்கள்தான்.
No comments:
Post a Comment