இளைஞனைத் தேடும் இறைவன்
----------------------------------------------
( தேசோபகாரி - கிறிஸ்தவ இதழில் வெளியான கட்டுரை )
விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள். ஒரு மீன் தொட்டியின் நடுவே ஒரு கண்ணாடித் தடுப்பை வைத்து அதை இரண்டு பாகமாகப் பிரித்தார்கள். ஒரு பக்கம் ஒரு சண்டைக்கார ஃபைட்டர் மீனையும், மறுபக்கம் ஒரு சாதாரண மீனையும் போட்டார்கள். சண்டைக்கார மீன் மற்ற மீனைத் தாக்குவதற்காக அதிவேகமாய் ஓடி வந்தது. ஆனால் இடையில் இருந்த கண்ணாடி தடுப்பில் மோதி நின்றது. மீண்டும் முயன்றது, மீண்டும் மோதியது. தொடர்ந்து மேலும் பல நாட்கள் அந்த முயற்சியைச் செய்து கொண்டே இருந்தது. எப்போதுமே தோல்வி தான். பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது நிலையை மாற்றிக் கொண்டது. வேகமாக ஓடி வரும் ஃபைட்டர் மீன் கண்ணாடிக்கு முன் ஒரு மில்லி மீட்டர் இடைவெளியில் தானாகவே நின்று திரும்பி நீந்தத் துவங்கியது.
இப்போது விஞ்ஞானிகள் நடுவே சொருகப்பட்டிருந்த கண்ணாடித் தடுப்பை விலக்கினார்கள். இப்போது தொட்டி ஒரே தொட்டி, ஒரு புறம் ஃபைட்டர் மீன். மறு புறம் சாதாரண மீன். விஞ்ஞானிகள் எதிர்பார்த்தது நடந்தது. ஃபைட்டர் மீன் வேகமாக ஓடி வரும், முன்பு கண்ணாடி இருந்த இடத்துக்குப் பக்கத்தில் வந்ததும் நிற்கும், திரும்பி நீந்தும் ! இல்லாத ஒரு கண்ணாடித் தடுப்புச் சுவர் இருப்பதாகக் கருதிக் கொண்டு அந்த எல்லையைத் தாண்டிச் செல்லவே இல்லை ! அது தனது முயற்சியைக் கைவிட்டு நீண்ட நாட்களாகிவிட்டிருந்தது.
ஊரில் யானையைக் கட்டிப் போட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சின்ன வயதாக இருக்கும் போது யானையை ஒரு கனமான சங்கிலியால் கட்டியிடுவார்கள். அது அந்தச் சங்கிலியை உடைக்க பல முறை முயலும். ஆனால் முடிவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சோர்ந்து, சில காலத்துக்குப் பின், இனிமேல் அதை உடைக்க முடியாது எனும் மனநிலைக்கு வந்து விடும். அப்போது அதற்குச் சங்கிலி தேவைப்படுவதில்லை. ஒரு சின்ன கலயக்கண்ணி பொச்சம் போதும். காலில் கட்டி விட்டால், அதை உடைக்க முடியாது எனும் நினைப்பில் சாதுவாய்ப் படுத்துக் கொள்ளும்.
இன்றைய இளைஞர்களின் நிலையும் இப்படித் தான். உண்மையான வலிமையை அது முழுக்க புரிந்து கொள்வதில்லை. ஒன்றுகில் அந்த ஃபைட்டர் மீனைப் போல சூழ்நிலை சாதகமில்லை என தனது வட்டத்துக்குள் முடங்கிவிடுகிறது. அல்லது தன்னால் இயலாது என நினைத்து அடங்கிக் கிடக்கிறது !
இன்றைய இளைஞர்களின் நிலை கவலையளிக்கிறது. உலக அளவிலான குற்றங்களை வரிசைப்படுத்தினால் இளைஞர்கள் தான் முன்னிலையில் நிற்கிறார்கள் என்கிறது ஒரு சர்வே. உலக அளவில் தற்கொலை செய்து கொள்பவர்களிலும் இளைஞர்களே முன்னிலையில் என்கிறது இன்னொரு பகீர் புள்ளி விவரம் !
இளைஞர்களின் முன்னால் ஏராளமான சவால்கள் இருக்கின்றன ! அவை அவனை பாவத்தை நோக்கி இழுத்து கொண்டே இருக்கின்றன. " பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு." ( 2 திமோத்தேயும் 2 : 22) என்கிறார் பவுல். அதற்கான வழியை பிரசங்கி சொல்கிறது, "நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை "
யோசேப்பின் வாழ்க்கை ஒரு அழகான முன்னுதாரணம். தந்தைக்குப் பிரியமான மகனாக இருந்தவர் அவர். சகோதரர்களின் பொறாமை அவரை அலைக்கழிக்கிறது. முன் பின் தெரியாத எகிப்து தேசத்தில் தள்ளப்படுகிறார். பாவம் செய்வதற்கு ஏதுவான அத்தனை கண்ணிகளும் அவரைச் சுற்றி இருக்கின்றன. வசீகரமான பெண்ணொருத்தி வலிய அழைக்கிறாள். அவளுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் உயிரைக் கூட இழக்க நேரிடலாம் எனும் அச்சமூட்டும் நிலை. யோசேப்பு அச்சத்தையும், பால்யத்தின் இச்சையான சிற்றின்பத்தையும் தாண்டி விடுகிறார்.
வெறும் பதினேழு வயதான இளைஞனான யோசேப்பு கடவுளுக்கு முன்னால் வாழ்ந்த வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு மிக முக்கியமான ஒரு வாழ்க்கைப் பாடம் ! சூறாவளியாகவும், சுனாமியாகவும் சுழற்றியடிக்கப்படும் வாழ்க்கையில் கூட இறைவனை மட்டுமே அச்சத்துடனும், அன்புடனும் பற்றிக் கொண்டால் இறைவன் நம்மை மிக வலிமையாய்ப் பயன்படுத்துவார் என்பதே யோசேப்பின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம்.
மிரியம் பற்றி உங்களுக்குத் தெரியும். அவள் செய்த பணி மிகச் சிறிது போலத் தோன்றும். ஆனால் ஒட்டு மொத்த இஸ்ரேயல் மக்களின் மீட்புக்கும் முதல் சுவடாக இருந்தவர் அவர் தான் இல்லையா ? தண்ணீரில் மிதந்த குழந்தை மோசேயைக் கண்காணித்து, அவர் சென்று சேர்ந்த இடத்தை அறிந்து, அந்தக் குழந்தை மீண்டும் மோசேயின் தாயையே சென்றடையவும் ஒரே காரணம் மிரியம் தானே ! கடவுளின் அழைத்தல் மிகச் சிறியது போலத் தோன்றினாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள் மிகப்பெரிய செயல்களின் அச்சாணியாய் மாறிவிடுகிறார்கள் இல்லையா !
தாவீதின் வியப்பூட்டும் வாழ்க்கையில் கடவுளின் மீதான அசாத்தியமான நம்பிக்கையும், பக்தியும் நிரம்பி வழிகிறது. ஒட்டு மொத்த இஸ்ரயேல் மக்களின் வீரத்துக்கும், அவர்களுடைய இறை நம்பிக்கைக்கும் சவால் விட்ட பெலிஸ்தியருக்கு எதிராய் தாவீத நிமிர்ந்த போது அவன் இளைஞன். ( 1 சாமுவேல் 17 : 33 ). தாவீது கவணில் இருந்த கல்லின் மேல் நம்பிக்கை வைக்கவில்லை. மனதில் வைத்த கடவுள் மேல் நம்பிக்கை வைத்தார். கடவுளின் மீது நம்பிக்கை வைத்தால் சிறிய கல் கூட மலையைச் சாய்க்கும் எனும் பாடமல்லவா அங்கே போதிக்கப்பட்டது !
யோசியா மன்னன் இளம் வயதில் செய்த செயல்கள் வியக்க வைக்கின்றன. எட்டு வயதில் அரியணை ஏறி, பதினாறு வயதில் கடவுளைத் தேடி வாலிபப் பருவம் வந்தபோது அன்னிய தெய்வங்களின் தீட்டுகளையெல்லாம் அழித்து, கடவுளின் பாதையை தூய்மையாக்குகிறார். ஆண்டவரின் ஆலயங்களை செப்பனிடுகிறார்.
இயேசுவின் தாயான மரியாள் இளம் வயதில் கடவுளின் சித்தத்துக்காய் தேர்ந்தெடுக்கப்பட்டார். மானுடம் மீட்புப் பெற்றது ! அவமானங்களைச் சுமக்க வேண்டிய அழைப்பு மரியாளுடையது. இறைவனின் அங்கீகாரமே மனிதரின் விமர்சனங்களை விட முக்கியம் எனும் மிக உயரிய பாடமல்லவா அவர் நமக்குச் சொல்லித் தந்தார் !
மோசேயின் வலது கரமான யோசுவா, எரிகோ உளவாளிகள், தானியேல், பவுல், அவருடைய தோழர் திமோத்தியு என இந்தப் பட்டியல் ரொம்ப நீளமானது ! இந்த விவிலிய இளைஞர்களின் பணியின் பின்னணியில் சில சிந்தனைகளை மனதில் நடுவோம்.
1. நமது ஹீரோ இயேசு என்போம்.
ஹீரோ என்பவர் அன்பிற்கும், மரியாதைக்கும், துதிக்கும், வழிகாட்டலுக்கும் உரியவர் இல்லையா ? அத்தகைய ஹீரோவாக இயேசுவை மனதில் கொள்வோம். இயேசுவில் நமது பார்வை இருக்கும் போது, நமது கண் பாவத்தின் பாதையில் செல்வதில்லை. வெறுப்பின் பணிகளைக் கைகள் செய்வதில்லை. அப்போது ( மத் : 5 - 27 - 29 ) சொல்வது போல கண்ணையும், கை யையும் வெட்டி விட வேண்டிய தேவை இல்லை ! நம் வாழ்க்கையின் ஒரே நல்ல வழிகாட்டி இயேசு மட்டுமே. தந்தை, தாய், ஆசான், அரசியல் தலைவர், மதத் தலைவர் என எவருமே அந்த இடத்தை நிரப்பவே முடியாது !
2. நமது வாழ்க்கையில் இயேசுவைப் பிரதிபலிப்போம்
"பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அவற்றையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" எனும் இயேசுவின் வார்த்தைகள் நமது ஒட்டு மொத்த செயல்களையுமே சலவை செய்ய வல்லவை. ஒரு கிறிஸ்தவன் என்பதை நாம் எப்படிப் பிரதிபலிக்கிறோம் ? தொங்கவிடும் ஒரு காலண்டரிலா ? ஒரு ஃபேஸ்புக் டைம்லைனிலா ?, ஒரு புகைப்படத்திலா ? ஒரு துண்டுப் பிரசுரத்திலா ? இயேசு எதிர்பார்ப்பது இதைத் தானா ? இவற்றைத் தான் "கனிகள்" என இயேசு சொல்கிறாரா ? இல்லை என்பதை பைபிளே சொல்கிறது தெளிவாக. நமது செயல்களை வைத்து, "இவன் கிறிஸ்தவன்" என பிறர் கண்டுகொள்வதே உண்மையான சாட்சி வாழ்க்கை. ஒட்டு மொத்த இருட்டுக்கு இடையே ஒரு சின்ன வெளிச்ச வால் போதும், அது மின்மினி என்பதை உலகம் புரிந்து கொள்ள !
3. ஆன்மீகத்தில் நிலைத்திருப்போம்.
கிறிஸ்தவர்களிடையே உள்ள மிகப்பெரிய பலவீனம் இது தான். அறிவில் வளர வளர, ஆலய விஷயங்களில் நிறைய செயல்பட செயல்பட, கொஞ்சம் கொஞ்சமாக செபத்தை விட்டு விலகிப் போகும் நிலை. இது நமது ஆன்மீக செழிப்பை உலரவைத்து, சருகாக்கி விடும். இயேசுவைப் போல ஆன்மீகத்தின் உயர்நிலையை அடைந்தவர் இல்லை. அத்தகைய இயேசுவே செபித்தார். தனிமையான இடங்களில் செபித்தார். மரணத்துக்கு முன்பும் செபித்தார், மரண விளிம்பிலும் செபித்தார். தந்தையோடான செப உறவை விட்டு விலகாத வாழ்க்கை இளைஞர்கள் நிச்சயம் பற்றிக்கொள்ள வேண்டிய ஒன்றாகும் ! அத்தகைய செபம் எனும் நல்ல விதைகளை, குடும்பம் எனும் நல்ல நிலங்களில் விதைக்கவும் வேண்டும்.
4. சிந்தனையை சரியான இடங்களில் வைப்போம்.
இன்றைய இளைஞர்களின் சிந்தனை எதில் இருக்கிறது. பெரும்பாலும் பொருளாதாரம் சார்ந்த ஒரு வேலை, முன்னேற்றம், புகழ், பெருமை, நல்ல திருமணம், அந்தஸ்து, பொழுதுபோக்குகளுடன் கூடிய ஒரு ஆடம்பர வாழ்க்கை ! "உங்களுடைய செல்வம் எங்கே இருக்கிறதோ அங்கேயே உங்கள் உள்ளமும் இருக்கும்". இயேசுவின் சிந்தனைகள் இவற்றைச் சுற்றி இருக்கவில்லை. அன்பு, மகிழ்ச்சி, சமாதானம், பொறுமை, இரக்கம், தாழ்மை, மன்னிப்பு, உண்மை, தன்னடக்கம் போன்ற உயர்ந்த குணங்களின் மேல் இருந்தது. அதனால் தான் இயேசுவின் வாழ்க்கை உற்சாகமாகவும், கடவுளுக்குப் பிரியமானதாகவும் இருந்தது. இயேசுவும் தச்சு வேலை செய்தார், வாழ்க்கையை நடத்த. ஆனால் ஒரு சர்வதேச கார்ப்பென்டர் ஆகவேண்டுமென அவர் ஆசிக்கவில்லை. இந்த வேறுபாட்டை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
5. இயேசுவின் துணிச்சலை அணிந்து கொள்வோம்.
இயேசு தாழ்மையின் சின்னம். ஆனால் என்றுமே கோழையின் சின்னமாக அவர் இருந்ததில்லை. தனக்கு முன்னால் நிற்பவர் எத்தகைய பெரிய அதிகாரியாய் இருந்தாலும், அல்லது எத்தனை நெருங்கிய நண்பராய் இருந்தாலும் அவர் தயங்கியதில்லை. அதனால் தான், ஆலயத்தில் சாட்டை எடுக்கவும், சீடரிடத்தில், "சாத்தானே" என்றழைக்கவும் அவரால் முடிந்தது. உலகின் வலிமையான செயல்களைச் செய்ய மென்மையான இதயங்களே தேவைப்படுகின்றன, அன்னை தெரசா போல ! இயேசுவின் வழியில் நடந்த அன்னையின் துணிச்சல் தாழ்மையின் படிகளில் தான் அமர்ந்திருந்தது. துணிச்சல் என்பதைப் புரிந்து கொள்ள இயேசுவின் வாழ்க்கையே முன்னுதாரணம். அவர் ஆலய உச்சியிலிருந்து கீழே குதிக்கவில்லை, துணிச்சலுக்கும் முட்டாள்தனத்துக்கும் இடையேயான வேறுபாட்டை அவரைப் போல நாமும் புரிந்து கொள்ள வேண்டும்.
பாவங்களில் தடுமாறாத மனிதர்கள் இருப்பதில்லை. ஆனால் தொடர்ந்து அந்தப் பாவங்களைப் புறந்தள்ளி மீண்டும் இயேசுவில் பார்வையை வைக்கும் மனம் இருக்க வேண்டும். மழைக்காலத்தில் காரில் பயணம் செய்திருக்கிறீர்களா ? கண்ணாடியில் தண்ணீர் வழிந்து பார்வை மறைக்கும் போது டிரைவர் வைப்பரைப் போடுவார். அது கண்ணாடியின் மேலிருக்கும் தண்ணீரை வெளியே தள்ளிவிடும். மீண்டும் மழை விழும், மீண்டும் வைப்பர் ஆடும். இப்படித் தான் பாவத்தின் மீதான எதிர்ப்பும் இருக்க வேண்டும். தொடர்ந்து விழும் பாவங்களை, தொடர்ந்து தள்ளி விட்டுக் கொண்டே இருந்தால் பயணம் இனிதாய் அமையும் ! இந்த சிந்தனையை மனதில் இருத்துங்கள்.
வாலிப வயதில் இறைவன் தரும் பொதுவான அழைத்தல் ஒரு நல்ல வாலிபனாய் வாழ்வதே !
செவிமடுப்போம்,
முடிவெடுப்போம்,
கனிகொடுப்போம் !
ஃ
சேவியர்

No comments:
Post a Comment