Thursday, 26 December 2013

Song History - I have decided to follow Jesus - இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன்.....




இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்

இந்த பாடல் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். 

இப்பாடல் ஒரு இரத்தசாட்சி தன் மரண தருவாயில் இயற்றிய பாடல் ஆகும். எத்தகைய பாடுகளும் கிறிஸ்துவின் அன்பை விட்டு தன்னை பிரிக்க முடியாது என்ற தைரியத்துடன் விசுவாசத்துக்காக வாழ்ந்து மரித்த ஒருவரின் கதை இது.

சுமார் 150 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்து ஜெர்மனி போன்ற தேசங்களிலிருந்து இந்தியாவிற்கு நற்செய்திப் பணிக்காக பலர் வந்தனர். அவர்களில் வெல்ஷ் தேச மிஷனெரி ஒருவர் வடகிழக்கு இந்தியாவில் ஒரு கிராமத்தில் இரு பிள்ளைகளடங்கிய ஒரு சிறிய குடும்பத்தை ஆண்டவருகாக ஆதாயப்படுத்தினார்.

கிறிஸ்தவராக மாறிய அந்த மனிதனின் விசுவாசம் அந்த கிராமத்திலுள்ள மற்றவர்களையுயும் அசைத்தது. இதனால் கோபமடைந்த அந்த கிராமத்தலைவர் எந்த கிராமத்திலுள்ளவர்கள் எல்லாரையும், அந்தக் கிறிஸ்தக் குடும்பத்தையும் கூட்டி " நீங்கள் எல்லாருக்கும் முன்பாக உங்கள் விசுவாசத்தை விட்டு விலகுங்கள்- இல்லையெனில் நீங்கள் அழிக்கப்படுவீர்கள் " என் எச்சரித்தான்.

அச்சமயத்தில் பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு அந்த மனிதன் ஒரு பாடலை இசைத்துப் பாடினார்,

" இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்"

I have decided to follow Jesus
No turning back No turning back

இதனால் கடுங்கோபமுற்ற அந்தக் கிராமத்தலைவன் அந்தக் கிறிஸ்தவனின் இரு பையன்களையும் கொல்லுமாறு தன் வில்வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

அந்த இரு சிறுவர்களும் வில் அம்பினால் குத்தப்பட்டு கீழே விழுந்து கிடக்கையில்,அந்த கிராமத்தலைவன் அக்கிறிஸ்தவனை நோக்கி,

" இப்போதாவது நீ உன் விசுவாசத்தை விட்டு விட மாட்டாயா? பார் உன் இரு பையன்களும் நீ இழந்து விட்டாய். நீ உன் விசுவாசத்தை விட்டு விலகா விட்டால் நீ உன் மனைவியையும் இழந்து விடுவாய்" என கர்ஜித்தான்.

அப்போது அந்த மனிதன்,

"யாரில்லயெனினும் பின் தொடர்வேனே
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்"

Though no one joins me still i will follow
No turning back No turning back

என்று பாடினார்.

கடுங்கோபமுற்ற கிராமத்தலைவன் அவனுடைய மனைவியையும் கொல்ல உத்தரவிட்டான். ஒரு சில நிமிடங்களில் அவனுடைய மனைவியும் தன் இரு பிள்ளைகளைச் சாவில் சந்தித்தாள்.

கடைசியாக அந்த கிராமத்தலைவன், " நீ உயிர் பிழைப்பதற்கு ஒரு கடைசி தருணம் தருகிறேன், இப்போது இந்த உலகத்தில் உனக்கென்று யாருமே இல்லை. என்ன சொல்கிறாய்?" என்று வினவினான்.

அந்த கிறிஸ்தவ மனிதன் காலத்தால் அழியாத கடைசி கவியைப் பாடினான்:
"சிலுவை என் முன்னே உலகம் என் பின்னே
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்

The Cross before me The World behind me
No turning back No turning back

இந்த மனிதனுடைய மரணத்தோடு கிறிஸ்தவம், நம் கிராமத்தில் ஒழிந்து விடும் என்று அக்கிராமத்திலுள்ள எல்லாரும் நினைத்தனர்.

ஆனால் அந்த மனிதனின் மரணம் ஒரு துவக்கமே. பரிசுத்த ஆவியானவர் அங்குள்ளவர்களின் மனதில் கிரியை செய்தார். இந்த மனிதன்,அவனுடைய மனைவி மற்றும் பிள்ளைகள் 2000 வருடங்களுக்கு முன் வேறொரு தேசத்தில் வாழ்ந்து மரித்த ஒரு மனிதனுக்காக ஏன் மரிக்கவேண்டும்?" என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்ட அந்தக் கிராமத்தலைவன், "அந்தக் குடும்பத்தினரிடம் ஏதோ ஒரு இயற்கைக்கப்பாற்பட்ட அற்புத சக்தி இருந்திருக்க வேண்டும். நானும் அந்த அற்புதத்தை பெற விரும்புகிறேன்" என்று தன் மனதில் நினைத்தான்.

உடனடியாக தன் விசுவாசத்தை அறிக்கையிட்ட அந்த கிராமத்தலைவன், " நானும் கிறிஸ்துவைச் சேர்ந்தவன் தான்" என்று கூறினான். தங்கள் தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட அந்த கிராமத்தவர்கள் அனைவரும் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment