டெல்லி பாலியல் சம்பவம்: சர்ச்சைக்குரிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் அருண் ஜெட்லி
Posted Date : 14:07 (22/08/2014)Last updated : 14:07 (22/08/2014)
![]() டெல்லியில் நடைபெற்ற மாநில சுற்றுலாத்துறை அமைச்சர்களுடன் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, "பாலியல் பலாத்கார சம்பவங்கள், சட்டம்- ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டில் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற ஒரு சிறிய பாலியல் பலாத்கார சம்பவம் உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டு சுற்றுலாத்துறையில் இழப்பை ஏற்படுத்த போதுமானதாக உள்ளது" என்று தெரிவித்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அதுபற்றி அருண் ஜெட்லி இவ்வாறு பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து அவரது இந்த கருத்து அரசு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் அருண் ஜெட்லியின் கருத்துக்கு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி உயிரிழந்த டெல்லி மாணவியின் தந்தை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஜெட்லியின் இந்த பேச்சு பொறுப்பற்றதாகவும், மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது என்று கூறினார்.
இதுபோன்ற கருத்துக்கள் பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஊக்கமளிப்பதாக
![]() மேலும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நிர்மலா சாமந்தும், அருண் ஜெட்லியின் கருத்துக்கு கண்டனம் வெளியிட்டிருந்தார். ஜெட்லியின் கருத்து அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும், இது மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும் கூறினார். இவ்வாறு பல்வேறு மட்டங்களிலிருந்தும் கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து, ஜெட்லி தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
தாம் எந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தையும் சுட்டிக்காட்டி கூறவில்லை என்றும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக தாம் கூறிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் தனது வார்த்தைகளுக்காக தாம் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும் ஜெட்லி கூறியுள்ளார்.
|
No comments:
Post a Comment