Saturday, 13 December 2014

மகளுக்கு போதை மருந்து விற்றவரை தொண்டு நிறுவன உதவியுடன் பிடித்த தாய்

COMMENT (2)   ·   PRINT   ·   T+  
போதை மருந்து விற்ற போது பிடிபட்ட சுனில் ஷர்மா (வலது)
போதை மருந்து விற்ற போது பிடிபட்ட சுனில் ஷர்மா (வலது)
தன் மகளுக்கு போதை மருந்து விற்கும்போது, தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அவரின் தாய், அதை விற்பனை செய்தவரைக் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்திருக்கிறார்.
மும்பையில் 16 வயது கல்லூரிப் பெண் ஒருவருக்கு போதை மருந்துப் பழக்கம் இருந்தது. இதை அவரின் `வாட்ஸ் அப்' உரையாடல்கள் மூலம் அவரின் தாய் தெரிந்து கொண்டார். அந்தப் பெண் கடந்த காலத்தில் மூன்று முறை போதை மருந்து பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது.
மேலும், மீண்டும் போதை மருந்து வாங்க அதை விற்பனை செய்யும் ரகீப் எனும் வியாபாரி ஒருவருடன் தன் மகள் உரையாடல் நடத்தியிருப்பது தெரிய வந்தது. தவிர, அந்த போதை மருந்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் தர வேண்டும் என்றும், அவ்வாறு முடியாவிட்டால் தன்னுடன் ஓர் இரவைக் கழிக்க வேண்டும் என்றும் ரகீப் நிபந்தனை விதித்ததும் தெரிய வந்தது.
அதற்கு அந்தப் பெண் பணத்தைக் கொடுத்து போதை மருந்து பெற்றுக்கொள்வதாகவும், அதைக் கொடுக்க தன் கல்லூரிக்கு வெளியே காத்திருக்கும்படியும் ரகீப்பிடம் சொல்லியிருக்கிறார்.
இதைத் தெரிந்துகொண்ட அவரின் தாய் தன் பெண்ணை இந்தப் பழக்கத்தில் இருந்து மீட்க முயற்சி செய்தார். அதற்காக மகிளா விகாஸ் சமிதி எனும் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டார்.
அந்தத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறியபடி, பணத்தைத் தன் மகள் கண்ணில் படும்படி வைத்தார். அதை எடுத்துக்கொண்டு அந்தப் பெண் கல்லூரிக்குச் சென்றார்.
அந்தப் பெண்ணை தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பின் தொடர்ந்தனர். கல்லூரிக்கு வெளியே ரகீப் அந்தப் பெண்ணிடம் போதை மருந்து விற்கும்போது அவனைக் கையும் களவுமாக அவர்கள் பிடித்தனர்.
ஆனால் பிடிப்பட்டது ரகீப் அல்ல என்பதும், அது அவன் அனுப்பிய டெலிவரி ஆள் என்பதும் அவன் பெயர் சுனில் ஷர்மா என்பதும் தெரிய வந்தது. அவனிடமிருந்து 18 பாக்கெட் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, ரகீப் ஒரு கல்லூரி மாணவர் என்றும், அவருக்கு நிறைய கல்லூரி மாணவர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அந்தத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நீதா ரஷீத் கூறும்போது, "இப்படியான நபர்கள் எல்லாம் பேஸ்புக்கில் பார்டியில் கலந்து கொள்ளும் புகைப்படங்களைப் பதிவேற்றியிருக்கும் பெண் களுக்கு நட்பு விண்ணப்பம் கொடுப்பார்கள். பின்னர் பேஸ்புக் மூலம் கைப்பேசி எண்களைப் பரிமாறிக் கொள்வார்கள். பிறகு அவர்களுக்கு போதை மருந்தை அறிமுகப்படுத்துவார்கள். இவற் றைப் பயன்படுத்தும் பிரபலங் களின் படங்களைக் காட்டி மாணவர்களை ஊக்குவிப்பார்கள். இந்த போதைப் பொருட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் தங் களுக்கு புது உத்வேகம் கிடைப் பதாக இளைஞர்கள் கருதுகிறார் கள். ஆனால் உண்மையில், அது அவர்களின் உயிரை எடுத்துவிடும்" என்றார்.

No comments:

Post a Comment