கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 8 மாதத்தில் 361 தற் கொலைகள் நடந்துள்ளது. தனிமனி தனின் வாழ்வியல் போக்கை மாற்றும் இந்த அவலபோக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கற்றவர்கள் அதிகம் இருந்த போதும், தொழில் வாய்ப்புகள் இல் லாததால், பிற மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்புத் தேடிச் செல்லும் அவலம் தொடர்கிறது. இதனால் பல முதியவர்கள் பாதுகாப்பின்றி அவதிப்படுகிறார்கள்.
இடம்பெயரும் அவலம்
இந்த மாவட்டத்தில் உள்ள படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நோக்கத்துடனும், ரப்பர் விவசாயிகளை வாழவைக்கவும், ‘ரப்பர் தொழிற்சாலை கொண்டுவர வேண்டும்’ என்கிற கோரிக்கை கிடப்பிலேயே உள்ளது.
படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக் காத விரக்தியில் சமீப காலமாக சில இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதை யாகி வருகிறது. 2014 ஜனவரி தொடக்கத்தில் இருந்து இன்றுவரை தீக்குளித்தல், தூக்கிட்டுக்கொள் வது, விஷம் குடிப்பது உள்ளிட்ட தவறான முடிவுகளால் இறந்தவர் களின் எண்ணிக்கை 361. இதில், 50 சதவீதம் பேர் 60 முதல் 70 வயது வரை உள்ளவர்கள்.
தற்கொலையின் நிலை
தற்கொலைகுறித்த காவல் துறை ஆவணங்களில், ‘பராமரிப்புக்கு யாரும் இல்லாத நிலையில், நோயின் தாக்குதலில் அவதிப் பட்டவர் தற்கொலை’ என்றே பதிவாகி உள்ளது.
“பெரும்பாலான வயோதிகர் களுக்குக் குடும்பத்தில் ஆதரவும், அன்பும் கிடைக்காத நிலைதான் அவர்களை தற்கொலை முடிவுக்கு உந்தித் தள்ளுகிறது” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கூட்டுக் குடும்ப சிதைவு
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன நலத் துறை இணை பேராசிரியர் டாக்டர் அருள்பிரகாஷ் இது குறித்து கூறியதாவது:
“குமரி மாவட்டத்தில் பாதுகாப் பற்ற மனநிலை, கூட்டுக் குடும்ப சிதைவு ஆகியவைதான் அதிக அளவிலான தற்கொலைகளுக்கு காரணமாக உள்ளன. முன்பெல் லாம் கூட்டுக் குடும்ப கலாச்சாரத்தில் வீட்டில் யாருக்கேனும் பிரச்சினை என்றால் குழுவாக இருந்து அது குறித்து விவாதிப்பார்கள்.
இப்போது கூட்டுக் குடும்ப கட்டமைப்புகள் அரிதாகிவிட்டது. இளையவர்களை வழி நடத்த தாத்தா, பாட்டிகள் வீட்டில் இல்லை என்கிற குறை ஒருபக்கம் இருந்தா லும், முதியோர்கள் தங்களை பாதுகாக்க யாரும் இல்லை என்கிற நிலையில் மனச்சிதைவு அடைந்து தற்கொலை செய்துகொள் கின்றனர். இதுவும் ஒரு வகையில் சமூக தீங்குதான்.
நட்பு பாராட்டல்
சமூக வலைதளங்களில் முகம் தெரியாதவரிடம் நட்பு பாராட்டி, அன்பை வாரி இறைத்து அதில் ஏமாற்றம் மிஞ்சும்போதும், சிறு சிறு குடும்பச் சண்டைகளுக்கு உணர்ச்சி வசப்பட்டும் இளைஞர்கள் மத்தியில் தற்கொலைகள் நடக்கின்றன. ஆனால், அதைவிட முதியவர்கள் தற்கொலை செய்துகொள்வதுதான் பரிதாப நிலை’’ என்றார்.
அடுத்த நொடி, ‘உயிருடன் இருக்க மாட்டோம்’ எனத் தெரிந்தும் தற்கொலை செய்துகொள்ள துணி வோருக்கு, வாழ்க்கையில் எது எதிர்வந்தாலும், ‘போராடி வெல் வோம்’ என்ற தைரியத்தை கொடுக் கக்கூடிய வாழ்வியல் போக்கு இல் லாமல் இருப்பதும் இந்தத் தற் கொலைகளுக்கு காரணமாகிறது.
முதியோர்களை மதித்து பாது காக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உள்ளது. குழந்தையாக இருக்கும்போது வாரி அணைத்து வழிகாட்டிய பெற்றோரை, முதுமை காலத்தில் அவர்களை குழந்தையாக பாவித்து, காத்தால் தற்கொலை எண்ணிக்கை குறையும் என்பதுதான் யதார்த்தமான உண்மை.