ஆன்லைனில் மலர்ந்த உறவுக்கு ஆயுசு குறைவு: ஆய்வு
Buy Kitchen Utilities - Shop Best of Kitchen Utility Products @ Upto 80% Off. Buy Now!fashionandyou.com/KitchenUtility
நீங்கள் சமூக வலைதளங்களில் வாழ்க்கைத் துணையை தேடுபவரா? ஆன்லைன் துணையுடன் மலர்ந்த உறவு அதிவேகமாக முறிவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நிஜ உலகில் சந்தித்து ஜோடி ஆனவர்களைவிட, இணைய உலகில் சந்தித்து ஜோடி ஆனவர்கள் இடையே சீக்கிரம் பிரிவு நேரும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சமூக வலைதளங்கள் மூலம் புதிய நபர்களைத் தேடி, நண்பர்களாக்கி, அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்வது சகஜமாகி வருகிறது. மேலும் இதற்கென பல புதிய இணையதளங்களும், மொபைல் செயலிகளும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
ஒரு ஆன்லைன் சந்திப்பின் மூலம் உருவான ஜோடிகளுக்கும், நிஜவுலக சந்திப்பின் மூலம் உருவான ஜோடிகளுக்கும் நடுவில் ஏற்படும் பிரிவுகளைப் பற்றி புத்தம்புது ஆய்வு ஒன்றை பெல்ஜியமில் அமைந்துள்ள வெர்சுவல் ரியாலிட்டி மெடிகல் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த பிரெண்டா தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
எங்கு சந்திக்கிறார்கள் உள்ளிட்ட சில கூறுகளை வைத்து, அந்த ஜோடி முறியுமா, ஒன்றாக இருப்பார்களா என்பதை கணிக்க முடியும் என பிரெண்டா தெரிவிக்கிறார்.
இந்த கணிப்புகள் திருமணம் செய்தும், திருமணம் செய்துகொள்ளாமலும் ஒன்றாக இருப்பவர்கள், மேலும் எவ்வளவு நாட்கள் அந்த உறவு நீடித்துள்ளது என்பதைப் பொருத்து மாறுபடும்.
"எப்போதுமே, நம்பகத்தன்மை மற்றும் நெருக்கம் ஆகிய இரண்டும் ஒரு ஜோடி ஒன்றாக இருப்பார்களா இல்லையா என்பதை முடிவு செய்யும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. அது ஆன்லைன் மூலம் ஒன்றான ஜோடியாக இருந்தாலும் சரி. நிஜவுலகில் சந்தித்து ஜோடியானவர்களாக இருந்தாலும் சரி" என்று கூறுகிறார் பிரெண்டா.
No comments:
Post a Comment